Tuesday, April 20, 2010

செல்லமே 'செல்'லம்!

நல்ல அழகு. நல்ல கலர். பார்த்தால் நிச்சயம் திரும்பி பார்க்கத் தூண்டும் தோற்றம். நேற்றுதான் லக்மேயில் பேஃசியல், பெடிகியூர், மேனிகியூர், ஐ ப்ரோ எல்லாம் முடிந்திருக்க வேண்டும். அப்படியொன்றும் பெரிய சர்வ அலங்கார பூஷினியாக இல்லை. வெள்ளை கலர் நிகே டீ-ஷர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் அவ்வளவுதான். சற்றைக்கொருதரம் என்னைப் பார்த்து அழகாக சிரித்தது அந்த நிலவு. நாமோ ஒரு குடும்பஸ்தன். எப்போது பார்த்தாலும் நம்மை பார்த்து சிரித்தால் என்ன செய்வது என்று ஒரே கலக்கம். மிகவும் வெட்கத்துடனும்(?), கூச்சத்துடனும் "அம்மாடி, எனக்கு கல்யாணம் ஆகி புள்ள குட்டி எல்லாம் இருக்கு. ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாலன்னா ஒ.கே" அப்படீன்னு சொல்லலாம்னு பார்த்தா, சங்கீத சானல்களில் வரும் 'தமிள்' பேசும் மங்கையர் போல் காதை மறைக்கும் கார்குழலை ஒதுக்கும்போது அந்த "நீலப் பல்" (Blue Tooth) அந்தப் பெண்ணின் பெரிய வளையம் மாட்டிய  காதை  நிறைத்திருந்தது. அந்தக் காது வளையத்திற்குள் ரோடில் வித்தை காண்பிக்கும் பெண் நுழைந்து வரலாம். அவ்வளவு பெருசு அந்த வளையம்.
போன வாரத்தில் ஒரு நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை ஐந்து நாற்பத்தைந்துக்கு  நடந்த சம்பவம் இது.

மேற்கண்ட சம்பவம் போல், இரு சக்கர வாகனத்தில் தனக்கு தானே பேசிக்கொண்டு போவது, பேருந்திலோ, மின்சார ரயிலிலோ ஏதோ ஒரு மூலையை பார்த்து பேசிக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ இருப்பது, பக்கத்தில் இருக்கும் சுற்றத்தையும், நட்பையும் மறந்து கட்டை விரலால் அமுத்து அமுத்து என்று அழுத்தி (அதற்க்கு வாயிருந்தால் அழும்) மெசேஜ் அனுப்புவதையும்,இன்ன பிற மொபைல் சேஷ்டைகளை அன்றாடம் நாம் கண்டு களித்து வருகிறோம். இந்த கைபேசி பற்றிய சில  சுவாரஸ்யமான  செய்திகள் கீழே வரைபடமாக..... 
 

Cell Phone Features
Via: Cell Phones

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails