Saturday, October 2, 2010

கமான்! லெட் அஸ் ப்ளே

இந்தப் பதிவை படித்து முடிக்கும் போது இப்போது நீங்கள் பார்க்கும் இந்த வலைப்பக்கம் ஒரு விளையாட்டு மேடையாகப் போகிறது. தீராத விளையாட்டு பிள்ளைன்னு பேரு வச்சுட்டு உங்களுக்கும் விளையாட ஒரு சான்ஸ் தரலைன்னா எப்டீங்க? அதனாலதான் இந்தப் பதிவு.

அஸ்டெராய்ட் கேம் யாருக்கும் முன்னபின்ன தெரியுமா? இது நம்ம சின்ன தாஸ் ஆப்பரேடிக் சிஸ்டம் காலத்து ஒரு தொன்மையான விளையாட்டு. ஆதி காலத்து கம்ப்யூட்டர்களில் உங்கள் அண்ணன்மார், அக்காமார், மாமிமார், மாமாமார் என்று சென்ற தலைமுறை கேமர்கள் விளையாடியிருக்கலாம். ஸ்பேஸ் பார் தட்டி பீரங்கி வெடிச்சு சுட்டுகிட்டே இருக்கலாம். எவ்வளவு சுடரோம அவ்வளவுக்கு ஸ்கோர். தாசுக்கு அப்புறம் பில் கேட்ஸோட ஜன்னல்ல கூட இதே விளையாட்டை வச்சுருந்தாங்க. ஆனா இப்போ ஒரு புண்ணியவான் அந்த விளையாட்டை ஒரு சின்ன ஸ்கிரிப்ட்ல கொண்டு வந்துட்டாரு. இந்த ப்ரவுசர்லயே அதை விளையாடலாம். புரியலையா... கீழே கொடுத்துள்ள லிங்க்ஐ கிளிக் பண்ணுங்க... ஸ்பேஸ் பாரை தட்டுங்க. அப்புறம் பாருங்க... பீரங்கி சுடும். வலது பக்க கடைக்கோடியில ஸ்கோர் தெரியும். 

விளையாடும் முறை.
ஏரோவை அழுத்தி முனையை திருப்பலாம்.
மேல் ஏரோ அழுத்தினால் முனை உள்ள பக்கம் பறக்கலாம்.
ஸ்பேஸ் பார் தட்டினால் பீரங்கி சுடும். இந்தப் பக்கத்தில் உள்ள சுட்டிகளை வார்த்தைகளை சுட்டால் வலது கடைக்கோடியில் தெரியும் ஸ்கோர் ஏறும்.
மௌஸ் கொண்டு கிளிக்கினால் ஆட்டம் முடிந்துவிடும்.

கீழே இருக்கும் விளையாட்டு-வை கிளிக்கி கேமாடவும். ஞாபகம் இருக்கட்டும், ஸ்பேஸ் பார், ஏரோ கீ, வலது மூலை ஸ்கோர் ஓ.கே

உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த தீராத விளையாட்டு பிள்ளை!!! எங்கே இந்த பேஜை சுத்தமாக காலி செய்யுங்கள் பார்க்கலாம். பார்த்துங்க உங்க பாஸ் வந்து பின்னாடி நின்னு கேம் ஆடற கையோட பிடிச்சுடப் போறாரு.
இது மாதிரி இந்த விளையாட்டை வலைக்கு தக்கபடி வடிவமைத்த சூத்ரதாரியின் நெட் முகவரி இதோ..  http://erkie.github.com/
-

21 comments:

பத்மநாபன் said...

அம்புக்குறியை ஒடி ஆடி வெடிக்கவச்சு பார்த்துவிட்டேன்...வார்த்தைகளை அழிக்க வைக்க முடியவில்லை..என்னுடய வலையின் வேகமோ அல்லது எனக்கு ஒழுங்காக விளையாட்டு தெரியவில்லையோ ... பாயிண்டெல்லாம் எடுக்கமுடியவில்லை.

மென்னாளன் என்பதை நிருபித்து விட்டீர்கள்

RVS said...

ஆடி ஓஞ்சு போயிட்டீங்களோ பத்து .. ;-)

ரிஷபன் said...

விளையாட்டா போச்சு..

ஸ்ரீராம். said...

சின்னப் புள்ளையா மாற வச்சிட்டீங்களே...

மோகன்ஜி said...

பத்து, நானும் உங்க மாதிரி 'தோத்தாங்குள்ளி
தோல்புடுங்கி' கட்சி தான்.சரியா வரல்லை ஆர்.வீ.எஸ் !
லொட்டாங்கையால் கிட்டிப் புள் அடித்தது,
உடைத்த மைசூர்பாகின் உட்புறம் போல் 'உக்கு' வாங்கிய பம்பர விளையாட்டு,கோலியில் லாக்,ஆடு குதிரை,குச்சிப்ளே..நினைவில் அலைமோதுகிறது.
பின்னர் தானே வந்தது கிரிக்கட்டும் காதல் விளையாட்டும்.. இந்த விளையாட்டுகளுக்கெல்லாம் முன்னர், இன்னமும் புகையாய் நினைவிருக்கும் ஒரு விளையாட்டு ஒன்று உண்டு.அது பெண் பிள்ளைகள் ஆடும் ரைட்டா தப்பா என தரையில் போட்ட ஆறு கட்டங்களில் ஒட்டாஞ்சில்லை எறிந்து,கட்டம் தாண்டி ஆடும் ஆட்டம் தான். பையன்களோடு சேராமல் இந்த ஆட்டத்தில் தான் கலந்து கொள்வேன். யார் என்ன சொன்னார்களோ.. என் அம்மா அந்த ஆட்டம் நான் விளையாட 144 போட்டு விட்டாள். நான் அடம்பிடிக்க, அடுத்த குண்டைப் போட்டாள் ..
'பெண்டுகளோடு விளையாடினால் காது அறுந்து விடும்"
ரொம்பவே கலவரமாகிவிட்டது எனக்கு,"ஐயோ அம்மா! இவ்வளவு நாள் அவர்களோடு விளையாடினேனே!என்னாகும் எனக்கு?"
"பயப்படாதே!இன்னையிலிருந்து ஆடினால் தான்!"

இரண்டு நாள் வாயிற்குறடில் சோகமாய் வேடிக்கை மட்டும் பார்த்தேன். மூன்றாம் நாள் தோழிகளின் தொடர் அழைப்பு,"வாயேண்டா.. வாயேண்டா!"
களமிறங்கி விட்டேன்.. ஆனால், காதுகளை மூடிய படி..

RVS said...

ஆடாத ஆட்டமாக இருந்ததா ஸ்ரீராம் மற்றும் ரிஷபன். ;-)

பத்மநாபன் said...

ஆட்டம் வந்திருச்சு ஆர்.வி.எஸ்...மரியாதைக்கு உங்க போட்டோவ தவிர மத்தத போட்டுத்தள்ளியாச்சு...4000 பாயிண்ட் காட்டுச்சு...

மோகன்ஜி.. ஒட்டாஞ்சில்...கில்லி...கொம்பாரம் (கோவை பம்பரம் ) பச்சக்குதிரை, நொண்டி, ஆத்துல ஒன்னு சேத்துல ஒன்னு ...சேம் சேம் ப்ளட்...நேர்ல பார்த்த ரத்தம் வர நாம கிள்ளிக்கலாம்...

RVS said...

"காது காது லேது லேது" வயது வந்தாலும் கூட அதே இள வயது காது ரூல்ஸ் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

பெண்களோடு விளையாடினால் காதறந்து போகிறதைக் கேட்டதும்.. இது போல சிறு வயதில் விளையாடும் போது ஒட்டுக்கேட்டால் காது நீளமாக வளர்ந்துவிடும் என்று சொல்லி "ராஜா காது.. கழுதைக் காது..." என்று கோரஸாக கிண்டல் ஸ்வரம் பிடிப்பார்கள்..

விளையாடுவதற்கு வயதைவிட மனதுதான் ரொம்ப ஒத்தாசையாக இருக்கிறது...
பக்கத்து கிராமத்தில் பொங்கலுக்கு கிரிக்கெட் டோர்னமென்ட் விளையாடும் போது ஐம்பது வயது பார்த்தா மாமா பவுண்டரி லைனில் பந்துக்கு ஒரே இடத்தில் ஓடி துரத்தும்போது... ஸ்லிப்பில் இருக்கும் கோந்து மாமா திரும்பி கையை தூக்கி "பார்த்தா...தா..தா..... பாலை பாஞ்சு புடிடா...." என்று கிரவுண்ட் காது கிழியும்படி கதறும் போது பார்த்திருக்கிறேன்... விளையாட வயதில்லை... மனது போதும் என்று...என்ன.. உடம்பு தான் கொஞ்சம் சண்டித்தனம் பண்ணும்.. ராத்திரி மாமியை கால் பிடிச்சுவிடச் சொன்னா எல்லாம் சரியாயிடும்.

பாண்டி ஆடிய மோகன்ஜி இப்போது காதுகள் நலமா?

ஹேமா said...

அட கொஞ்சநேரம் குழந்தையாவே மாத்திட்டீங்க ஆர்.வி.எஸ்.ஆனால்புள்ளிகள் ஏதும் வரவில்லை.

என் சிநேகிதியின் குழந்தைகளுக்கும் அனுப்பி வைத்தேன் உங்கள் இந்தப் பதிவை.அவள் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறாள்.நான் நீங்கள்தான் என்று கை காட்டிவிட்டேன்.அதுவும் விடுமுறை நாட்கள்தானே இப்போ.கணணி தூள்பறக்குது.

அதுசரி...மோகன்ஜி க்கு இப்போ காது இருக்கா இல்லையா !

RVS said...

6+4=பத்து
நாலாயிரம் திவ்யமாக அடித்த பரமாத்மா பத்துவுக்கு ஜே!
ஆடிய பொற்க்கரங்கள் வாழ்க!!
முயற்சி தன் மெய்வருத்த பாய்ண்ட்ஸ் தரும். கிரேட்.

RVS said...

இதுக்கெல்லாம் நெட் ப்ராக்டீஸ் வேணும். பத்து டென் ஹவர்ஸ் கோச்சிங் கிளாஸ் போயிட்டு வந்து தன்னுடைய விடாமுயற்ச்சியில் ஆயிரம்...ரெண்டாயிரம்....மூவாயிரம்..... நாலாயிரம் பாயிண்ட் எடுத்திருக்கார். ஹேமா உதவி தேவை என்றால் அவரின் எக்ஸ்பெர்ட் அட்வைஸ் எடுத்துக்கொள்ளவும்.

பலரின் வேண்டுகோளுக்கிணங்க.. உயர்திரு. மோகன்ஜி அவர்களே... தங்களுடைய தற்போதைய காது படம் ஒன்றை உங்களது பதிவில் போட்டு உங்களுக்கும் சுயகாது உண்டு என்று நிரூபிக்க வேண்டுகிறேன்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே.. (இவர் எங்கயா இங்க வந்தாரு.... நாம இங்க சும்மா விளையாண்டுகிட்டு தானே இருக்கோம்!)

மோகன்ஜி said...

ஹேமா!என் காதா? இருக்கும்மா இருக்கு.. ரொம்பவே பத்திரமா இருக்கு..என் பாகம்பிரியாளின் பவிழ விரல்களுக்கிடையில்!!
அப்போது என்னோடு பாண்டி ஆடிய கல்யாணி,கொஞ்சம் பருமனாய் இருப்பாள்... ஏழாம் கிளாஸ் படிக்கும் போது அவளை ஒரு பாட்டுபாடி கிண்டல் செய்து வீட்டில் மாட்டிக்கொண்டேன்..(என்
முதல் பாடல் முயற்சியோ! நடிகர் திலகம் பாட்டின் உல்ட்டா!)"பாவாடை தாவணியில்'பருத்த' உருவமா?" பல வருஷம் கழித்து அவளைப் பார்த்தேன் அவள் கணவரோடு ..இந்த மேட்டரைச் சொல்லி தான் அறிமுகம் செய்து வைத்தாள்.சங்கடத்தில் நெளிந்தேன்..
ஹும்.. காது இருக்கு ஹேமா! இப்பத்தான் நான் சமத்தாயிட்டேனே!!

RVS said...

காதும் காதும் வச்சா மாதிரி "காதே என் காதே" அப்படின்னு ஒரு பதிவு எழுதிடுங்க மோகன்ஜி!! நல்லாத்தான் இருக்கு பாவாடை தாவணி... பருத்த உருவமோ...

'பரிவை' சே.குமார் said...

சின்னப் புள்ளைய விளையாட்டா போச்சு..

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ், நீங்கள் கேட்டபடி ஒரு 'காது' பதிவைப் போட்டுவிட்டேன்.

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

RVS said...

நன்றி டெனிம். அதென்ன டெனிம்? பேன்ட் பேரு மாதிரி... வருகைக்கு நன்றி.

RVS said...

ஆமாம் குமார். ஒரே விளையாட்டுதான்.

RVS said...

அதை நான் பார்த்துட்டேன் மோகன்ஜி ஐயா... விரிவான பின்னோட்டம் இட்டுள்ளேன்.

அப்பாதுரை said...

pacman விளையாடியிருக்கிறேன், அனியாயத்துக்கு. இது புது.

RVS said...

அப்பா சார். விளையாண்டு முடிக்கற வரைக்கும் கையெல்லாம் துரு துருன்னு இருந்ததா?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails