Friday, October 29, 2010

செலுத்தப்பட்ட கால்கள்

dark cloudsமூளைக்குள் இருந்து "போ.. போ.." என்று விடாமல் யாரோ விரட்ட விலுக்கென்று உடம்பு உதற எழுந்தேன். தெருவில் ஜன நடமாட்டம் இல்லாத அந்த பொழுதில் சத்தம்போடாமல் இறங்கி அப்படியே அந்த தார்ச்சாலையின் மேல் நடக்க ஆரம்பித்தேன். மழை விட்டு சுத்தமாக அலம்பிவிடப்பட்ட அந்த ரோடில் செருப்பில்லாத வெறுங்கால் பட "ச்சீலீர்" என்று உடம்பிற்குள் பாய்ந்தது. பாம்பு போல விறுவிறுவென வேகமாக ஏறி நரம்பு மண்டலத்தை தாக்கி மூளையில் போய் இறங்கியது. குண்டலினி சக்தி பாய்ந்தது போலிருந்தது. இரண்டொரு நிமிட அவகாசத்தில் அந்தக் குளிர் தோற்றுப்போனது. ஜெயித்த மேனி பழகிக்கொண்டது. அப்படியே அந்த கருவானம் தரை இறங்கிய திக்கில் நடக்க ஆரம்பித்தேன். மூளைக்கும் காலுக்குமான தொடர்பு இப்போது முற்றிலும் விடுபட்டிருந்தது. கால் அது போக்கிற்கும் மூளை அதன் விருப்பத்திற்கும் தத்தம் கடமையை கடனே என்று செய்துகொண்டிருந்தன. மழைக்கு ஈரத்துணியை இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆடை நனைந்த இரண்டு வாளிப்பான பெண்கள் எதிரே கடந்து போகையில் கண் மட்டும் தானாக அவர்கள்பால் சென்று திரும்பியது. மூளையை தூண்டில் போட்டு இழுக்கும் பெண்மை அது. பச்சை நரம்பு படரும் பாதங்களும், பளீர் என்ற நெற்றியும், பளபளக்கும் கண்ணும், வாயை திறந்தால் மனதை மயக்கும் சுகந்தமும் நிறைந்தவளை எங்கோ தூரத்தில் தெறிக்கும் மின்னல் பின்னல்கள் அவளை நினைவுக்கு கொணர்ந்தது. அந்த மின்னல் வெளிச்சத்தில் வானம் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டது. மாரிக்கால கருமேகங்கள் இது இரவா பகலா என்று தெரியாத ஒரு அரைப்பகல் பொழுதை பூமிக்கு வழங்கியிருந்தது. நினைவு தப்பி நிஜத்துக்கு வருகையில் அதை சரி பார்த்துக்கொள்ளலாம். இப்போது ஒரே இலக்கு. போ போ இன்னும் போ. சீக்கிரம் போ. மூளை அதிகாரமாக விரட்டியது.

வானம் விட்டும் தூவானம் விடாமல் லேசாக தூறிக் கொண்டிருந்தது. ஐப்பசியில் அடை மழையாம். ஒவ்வொரு மழைத்துளியும் முகத்தில் பட்டு கீழே தெறிக்கும் போதும் அவளுடைய தேஜஸான முகம் தரையெங்கும் பரவி இருந்தது. சொட்ட சொட்ட நனைந்த தேகத்தில் முகத்தின் தண்ணீரை வழித்து  தரையில் தெளிக்கும் போது என் உள்ளங்கைத் தண்ணீரில் பன்னீராய் சிரிக்கிறாள். இப்போது மழை கொஞ்சம் கொஞ்சமாக வலுக்கிறது. புவி மீது தொடுக்கும் படையெடுப்பு போல பெரும் தூற்றலாக போடுகிறது. பக்கத்து குடிசையில் இறங்கிய மழை படபடத்தது. மேகத்தில் உள்ளே மறைந்தது சூரியனா அல்லது முழு நிலவா என்று தெரியவில்லை. கருத்த அனாதை மேகங்கள் வானத்தில் போக்கற்று திரிந்தது. பாவம் காற்றின் பிடியில் அவர்கள். இது இரவா அல்லது இது பகலா. அண்ணாந்து பார்த்து நடக்கும் போது ஒவ்வொரு மழைத்துளியிலும் வந்து வந்து கையால் வாய் பொத்தி பிம்பமாக சிரிக்கிறாள். காலம் காலமாக என் போன்ற ஒற்றையர்கள் நடந்து போய் உருவாக்கிய அந்த ஒத்தையடிப்பாதை ஆரம்பமாகியது. மழையில் நனைந்த ஆட்டுக்குட்டிகள் உடலை சிலுப்பி உதறிக்கொண்டு அந்த பூவரசு மரம் கீழ் நின்றிருந்தன. குட்டியும் பெரிதுமாய் நிற்கும் இதுகள் என்ன ஒன்றுக்கொன்று உறவுகளா? யார் அப்பா யார் அம்மா. ஆட்டுக்கு காதல் உண்டா.  அன்பிற்கும் உண்டோ ஆடும் மாடும். அன்பும் காதலும் எல்லா ஜீவராசிக்கும் பொதுவன்றோ.

முகத்தை தடவும் லேசான காற்று இப்போது மழையோடு சேர்ந்து பிடித்துக்கொண்டது. காற்று மழையுடன் ஒட்டி உரசி சரசமாடி சல்லாபம் செய்துகொண்டு வெட்கமில்லாமல் வெட்ட வெளியில் திரிகிறது. பூமியில் சேர்ந்த தேங்கிய நீரை தொட்டு அசைக்க முற்பட்டு தடவி கொடுத்து குட்டி அலை எழுப்பிக்கொண்டிருந்தது காற்று. பார்க்க பார்க்க மனதில் நினைவலைகள் ஓடியது. எவ்வளவு தேர்ச்சியாக கண் தொடும் பொழுதும் கை தொடும் பொழுதும் வரையறுத்திருந்தேன். மாட்டுக் கொட்டகை பின்னால் ஆளரவமற்று இருந்த மாமர மறைவு கைதொடவும், வாசலில் நூறு ஜோடிக் கண்கள் மத்தியில் கண் தொடவும் அல்லவா பழக்கியிருந்தேன். கால் ஒரு முள் குத்தியும் கவலையொழித்து யாதொன்றையும் பற்றி பற்றில்லாமல் நடையை கட்டியது. அந்தப் பாதை ஆற்றை நோக்கி போனதாகதான் நினைவு. எனக்கு நினைவு அழிந்து வெகு நாட்கள் ஆகிறது. வெளிச்சமற்ற கருத்த அறையில் கருவறை போல பலதினங்கள் இருந்தாயிற்று. எவ்வளவு பகல் எவ்வளவு இரவு கடந்திருக்கும் என்று தெரியாது. உத்தரத்தில் என்னைப்போல் அம்போ என்று தனியாக அடித்துவிடப்பட்டு உட்கார்ந்திருந்த அந்த திருகாணிக்கு தெரிந்திருக்கலாம் தினங்களா வருடங்களா என்று. 

rainஆற்றின் அருகில் வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆஹா. அணையிலிருந்து வெளியேறும் புதுப்புனலின் "ஹோ....." என்ற பேரிரைச்சல் காற்றில் கேட்கிறது. சட்டையின் பட்டன்களை காற்று ஏற்கனவே திறந்துவிட்டிருந்தது. ஒத்தையடிப் பாதையில் ஏதோ அரவம் போன்ற ஒன்று காலில் ஏறி அந்தப் பக்கம் ஊர்ந்து சென்றது. இப்போதும் காலைப் பற்றிய பிரக்ஞையே இல்லை மூளைக்கு. கால் விரல் இடுக்களில் புகுந்த சேறு ஐவிரல்களையும் இறுக்கமாக ஒன்று சேர்த்திருந்தது. தவளை ஒன்று பாதத்திற்கு அடியில் மிதிபட்டிருக்கலாம். என் காலடியில் விழுந்து தற்கொலை பண்ணிக்கொண்டதோ? காலுக்கும் மூளைக்குமான உறவு தான் எப்போதோ விட்டுப்போய் விட்டதே. இப்போது அதுபற்றி நமக்கென்ன கவலை. போ போ போ இன்னும் போ. இந்த விரட்டும் வேலையை மட்டும் செவ்வனே செய்கிறது மூளை. ஆற்றங்கரை அரசமரத்தின் இலைகள் பழுத்தது பழுக்காதது என்ற வேறுபாடின்றி ஒவ்வொன்றாக மரத்தின் அடிமைத் தனத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக காற்றில் பறக்கின்றன. சுதந்திரக் காற்று கொடுத்த சுகமான விடுதலை. "சட...சட.... சட..." என்று கிளைகள் அசைந்தும்  ஆடியும் விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் அரசமரத்தில் இருந்து இரண்டு காகங்கள் நனைந்து மழையில் கரைந்து பறந்தன.

கரையேறி மேலே நின்று பார்க்கிறேன். முழு ஆறும் நிரம்பியிருந்தது. இப்போது காற்று இன்னும் பலத்துடன் தாக்கியது. பாதி கழன்ற சட்டையை அபகரித்து. சட்டசபை காரியம் போல் வேஷ்டியையும் உருவியது. எதையும் அடக்கவில்லை. பிடிக்கவில்லை. அடக்கிய அப்பாக்களிடம் இருந்து தன்னை முண்டியடித்து விடுவித்துக் கொண்டு கலப்பு மனம் புரிய எத்தனிக்கும் பெண்களைப் போல அணைத் தண்ணீர் அடங்கா வெள்ளமாக பீரிட்டு பாய்ந்துகொண்டிருந்தது. ஆற்றுக்கு அப்பால் அந்தக் கரையில் எதிர்காற்றிலும் மழையிலும் போராட முடியாமல் சைக்கிளை தள்ளிக் கொண்டு ஒரு கிழவன். அணை மேலே ஏறியாயிற்று. ஆங்காங்கே காரை பெயர்ந்து மஞ்சள் வர்ணப்பூச்சு போயிருந்த அணைச் சுவர்களில் காதல் காவியங்கள் கண்ட கண்ட கிறுக்கல்களாய். சிரிப்பு வருகிறது. மதகு மீறி வரும் அந்தத் தண்ணீர் போல பொங்கி பொங்கி வருகிறது. சிரிக்கிறேன். தண்ணீரின் "ஹோ.." என்ற பாட்டிற்கு எதிர் பாட்டாய் என் சிரிப்பொலி. இன்னும் சத்தமாய் சிரிக்கிறேன். காற்றை கிழித்து ஊடுருவுகிறது என் ஒலி. அங்கே ஒரு ஒலி யுத்தம் மூண்டது. இவ்வளவு நேரம் வெறுமே வேடிக்கை பார்த்த வானம் அதன் பங்கிற்கு இடியாய் சேர்ந்து கொண்டது. ஆடைகள் இல்லா ஆதி மனிதனாக இருந்த என்னை இயற்கை ஜெயித்தது. என் சப்தம் அந்த சத்தக் கூட்டணியில் தோற்றுப்போனது.

தோற்றுப்போனது அந்த சப்தம் மட்டும் அல்ல. எவ்வளவு காதல், எவ்வளவு நட்பு, எவ்வளவு ஆசை, எவ்வளவு மணித் துளிகள், எவ்வளவு சிரிப்பு, எவ்வளவு சந்தோஷம், எவ்வளவு ஸ்பரிச சுகம், எவ்வளவு பொருள், எவ்வளவு வாழ்க்கை, எவ்வளவு கோபம், எவ்வளவு உறவுகள் இன்னும் இன்னும் எவ்வளவோ எவ்வளவு. இதில் நான் தோற்கக் கூடாது. சிரி. இன்னும் சத்தமாய் சிரி. இவ்வளவு நேரம் காலுக்கு கட்டளை இட்ட மூளை இப்போது வாய்க்கு வேலை கொடுக்கிறது. இந்த ஊர் அறிய சிரி. அண்டம் அதிர சிரி. சிரி. அந்தக் கடவுள் அறிய சிரி. அந்தப் பிசாசு அறிய சிரி. சிரித்தேன். ஆளுயர சாவி கொண்டு திறக்கும் அணைப் பூட்டின் மேலேறி அடித்த காற்றுக்கு ஆடாமல் கை பரப்பி நின்றேன். மழை விட்டிருந்தது. தலை காய்ந்து முடி பறந்தது. வானத்திற்கும் எனக்குமான தூரம் இன்னும் சற்று குறைந்தது. திரும்பவும் மூளை கட்டளையிட்டு சிரிக்கச் சொன்னது. சிரி. கண்ணை மூடி சிரித்தேன். கண் திறக்க மறுபடியும் குட்டி மூளை எட்டிப்பார்த்தது. அந்த வெள்ளக்காடான ஆற்றை பார்த்ததும் குளிப்பதற்கு பாட்டி சொல்லிக்கொடுத்த ஸ்லோகம் சொல் என்று கட்டளை.
விஸ்வேசம்  மாதவம் துண்டிம்
தண்ட பானிஞ்ச பைரவம் 
வந்தே காசிம் குஹாம் கங்காம்........
வாய் சத்தமாக ஜெபித்தது. எதிர்க்கரை சைக்கிள் கிழவர் வாய் பிளந்து என்னை பார்த்ததில் வேகமாய் சென்ற லாரிக்காரன் மழை நீரோடு சேற்றையும் வாரி அவர் வாயில் அடித்தான். அவர் வாயிலும் மண். அடுத்த முறை நிமிர்ந்து அவர் என்னை பார்ப்பதற்குள்........... மீண்டும் போ போ என்று கோஷமாக கேட்கத் துவங்க.....

கீ
.
.
.
ழே

கு
தி
த்
தி
ரு
ந்
தே
ன்.....

காவிரி நதி புனித கங்கை போல என்னை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டது. மூளை அதற்குமேல் கட்டளை இட முடியாமல் அடங்கியது. காவிரி  தன் விருப்பத்திற்கு என்னை உடல் பிடித்து இழுத்து அழைத்துக்கொண்டு போயிற்று.  அதோடு கலந்து புனிதமடைந்த நான் அது போகும் இடமெல்லாம் போய்க்கொண்டே இருக்கிறேன். எங்காவது ஒரு கரையில் என் காவேரி தென்படுவாளா என.........

பட உதவி: http://www.morguefile.com/archive/display/539743 மற்றும் web.ncf.ca

-

42 comments:

எல் கே said...

மிரள வைக்கிறீர்கள். அருமையான வார்த்தைகள்.

//என் காலடியில் விழுந்து தற்கொலை பண்ணிக்கொண்டதோ?//

வித்தியாச சிந்தனை...
நல்ல நடை வெங்கட்

மதுரை சரவணன் said...

good...

பொன் மாலை பொழுது said...

இன்னைய தேதிக்கு இப்படி காவேரியில் குதித்தால் கைகால்கள் முறிந்து போகும் அம்பி. ஆற்றில் மணல் கூட இல்லை உம் உடல் பலம் தாங்கி உம்மை காப்பாற்ற. எலாவற்றையும் சுரண்டிவிட்டர்கள். வெறும் கட்டாந்தரை தான் இருக்கிறது.
(இப்படிஎல்லாம் எழுதினால் உங்களுக்கு பிடிக்காது. வேறு நான் என்ன செய்ய? )

பத்மநாபன் said...

உண்மை காதல் உடல், மனம் , உயிர் தாண்டும் என்பதற்கு அத்தாட்சியாய் வார்த்தை பிரயோகங்கள்..இப்படி ஒரு அழுத்தமான் காதல் ததும்பும் ஆர்.வி.எஸ் ஒழிந்து கொண்டிருப்பது இன்றுதான் தெரிந்தது .

உசுரே போகுது, உசுரே போகுது உன்னை நெனைக்கியிலே பாட்டும் நினைவுக்கு வந்தது...

Chitra said...

சரிங்க..... சரிங்க... சரிங்க.....

அப்பாதுரை said...

புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும்..

RVS said...

நன்றி எல்.கே. இது ஒரு சோதனை முயற்சி. ;-)

RVS said...

@மதுரை சரவணன்
Thanks ;-)

RVS said...

கக்கு கமென்ட் பிடிக்காமல் போகுமா? இது இப்போ நடந்ததுன்னு யார் சொன்னா? ;-) ;-)

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி. ச்சும்மா ஒரு ட்ரை பண்ணினேன். எவ்ளோ நாள் தான் கிரிக்கெட், ஜோக் அப்படின்னு எழுதறது.. ;-);-)

RVS said...

@Chitra
அதான் மேலேர்ந்து விழுந்து சரிஞ்சுட்டானே.. ;-) ;-)

RVS said...

@அப்பாதுரை
அவன் குணா கமல் அப்பாஜி! ;-) ;-) ட்ரை நல்லா இருந்ததா? உங்கள் கருத்து ப்ளீஸ். ;-)

சைவகொத்துப்பரோட்டா said...

குறும்படம் பார்த்த மாதிரி இருக்கு!

ஸ்ரீராம். said...

புதிய முயற்சி...நுரை பொங்கும் காவேரியை கற்பனையில் கொண்டுவந்ததற்கு நன்றி.

Unknown said...

தமிழ் சும்மா துள்ளி வெளையாடுது !

சிவராம்குமார் said...

\\பச்சை நரம்பு படரும் பாதங்களும், பளீர் என்ற நெற்றியும், பளபளக்கும் கண்ணும், வாயை திறந்தால் மனதை மயக்கும் சுகந்தமும் நிறைந்தவளை எங்கோ தூரத்தில் தெறிக்கும் மின்னல் பின்னல்கள் அவளை நினைவுக்கு கொணர்ந்தது.//

நல்ல எழுத்து நடை!!! அருமை!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான வார்த்தை பிரயோகங்கள். கலக்கிட்டீங்க.

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
நன்றி ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
ஆமா எங்க ரொம்ப நாளா காணோம். ;-(
பாராட்டுக்கு நன்றி. ;-)

RVS said...

@kurumbukuppu
பாராட்டுக்கு நன்றி. கு.கு. ;-) ;-)

RVS said...

@சிவா
ரொம்ப நன்றிங்க.. ;-) ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றி மேடம். ;-) ;-)

க.பாலாசி said...

மனதைத்தொட்டு பயணிக்கிறது இக்கதை...காட்சியமைப்புகளும் கச்சிதம்..

RVS said...

@க.பாலாசி
நன்றி ;-)

suneel krishnan said...

உங்கள் புதிய முயற்சி பட்டய கெளப்புது பாஸ் :) வாழ்த்துக்கள்

suneel krishnan said...

உங்கள் புதிய முயற்சி பட்டய கெளப்புது பாஸ் :) வாழ்த்துக்கள்

RVS said...

டாக்டரே... நன்றி.. ;-)

Anonymous said...

அண்ணா செம!
இவ்வளவு உக்கிரம் உங்களிடமா?!
தூள்...

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி ;-)

சாய்ராம் கோபாலன் said...
This comment has been removed by the author.
மோகன்ஜி said...

நல்ல முயற்சி ஆர்.வீ.எஸ்.. ரசித்தேன்..

RVS said...

@மோகன்ஜி
நன்றி.. ஆணி அதிகமா? அயர்ச்சி தெரியுதே கமெண்டுகளில்..;-) ;-)

மோகன்ஜி said...

உண்மை ஆர்.வீ.எஸ்! இன்னும் ஒரு வாரம், எக்சூச்மீ பிள்ளைவாள் தான்!

RVS said...

@மோகன்ஜி
ஓ.கே ஹாப்பி ஆணியிங்... ;-) ;-)

சாய்ராம் கோபாலன் said...

சாய் said...

//மழைக்கு ஈரத்துணியை இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆடை நனைந்த இரண்டு வாளிப்பான பெண்கள் எதிரே கடந்து போகையில் கண் மட்டும் தானாக அவர்கள்பால் சென்று திரும்பியது. //

ஒக்..ளி "பாப்பா" நன்றாக இருந்தால் திரும்பிப்பார்க்கவில்லை என்றால் அவர்களுக்கு அசிங்கம் இல்லை ! அப்படி பார்க்காமல் இருக்க நாம் என்ன சாமியா - ஆசாமி தானே !

RVS said...

@சாய்
மலைக்கு மாலை போட்டாச்சா? இல்லையா? ;-) ;)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை நண்பரே. புதிய முயற்சியாயினும் அற்புதமான வார்த்தை பிரயோகங்கள். பகிர்வுக்கு நன்றி.

RVS said...

@வெங்கட் நாகராஜ்
இதுபோல் இன்னும் முயல உத்தேசம். வாழ்த்துக்கு நன்றி. ;-)

சாய்ராம் கோபாலன் said...

//RVS said...

சாய், மலைக்கு மாலை போட்டாச்சா? இல்லையா? ;-) ;)//

ஆசாமி தான் !!

மாலை டிசம்பர் மாதம். அதுவரை நான் ஜொள்ளு சாமியார் ! நித்தியே நெத்தியடியாக இருக்கும்போது நான் என்ன ஆர்.வி.எஸ் !!

RVS said...

@சாய்
ஓ.கே ஓ.கே டபுள் ஒ.கே

தக்குடு said...

பயங்கரமா லெவல் மாட்டரேள் அண்ணா!!..:) மன்னார்குடி,கும்பகோணக்காராளுக்கு காவேரி மேலயும், நெல்லைக்காராளுக்கு தாமிரபரணி மேலயும் எப்போதுமே ஒரு காதல் உண்டு!!..;) அருமையான முயற்சி!

RVS said...

@தக்குடுபாண்டி
நன்றி.. இனிமேல் இதுபோல் மிரட்டல் தொடரும்.. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails