Monday, February 14, 2011

லலிதபிரபாகர்

thin
திண்ணையில் உட்கார்ந்து திருடன் போல எக்கிப் பார்த்தால் பக்கத்தில் அவள் வீட்டு நிலைவாசல் தெரியும். தலைவாசல் தலையில் கட்டியிருக்கும் காய்ந்த மாவிலைத்தோரணம் காற்றுக்கு சடசடத்து அசைந்தாடுவது மிகத் தெளிவாக காதுக்கு தெரியும். அந்தக் காலத்து முஹலாய பாதுஷாக்கள் ஒய்யாரமாக வீற்றிருக்கும் திண்டு போல இருக்கும் சாய்ந்த திண்ணை அது. சிமென்ட் பால் ஊற்றி வழுவழுவென்று சலவைக்கல் தோற்றதுபோல பளபளவென்று ஜொலிக்கும். மார்கழில் உட்காரும் இடம் ஜில்லிட்டு குளிர் தலைக்கு ஏறும். மேற்கு பார்க்கும் வீட்டிற்கு வெளியே இலவச இணைப்பு மாதிரி இடது புறத்தில் வடக்கு பார்த்த சிங்காரத் திண்ணை அது. குறைந்தது நான்கு எஸ்.பி.பிக்கள் தாராளமாக உட்கார்ந்து கொண்டு சிரம பரிகாரம் செய்யும் அளவிற்கு விசாலமான திண்ணை. பாஸ்கி, விக்கி, ஆனந்த், பாச்சு ஆகியோருடன் ஸ்டாண்ட் இல்லாத சைக்கிளை அந்தத் திண்ணையின் ஓரத்தில் சாய்த்துவிட்டு ராத்திரி பத்து மணி கணேசா ரோட்வேய்ஸ் பஸ் ஸ்டாண்ட் போகும் வரை உட்கார்ந்து கதை அளந்துவிட்டுதான் வீட்டிற்கு போவான் பிரபாகர். அப்பவும் பாச்சு அப்பா வந்து வைஷ்ணவ சிம்மமாய் "போங்கோடா.. கோட்டான் மாதிரி கொட்டகொட்ட முழிச்சிண்டு..." என்று விரட்டியபின் கலைவார்கள். நல்ல தங்கமான பையன். வெள்ளை உள்ளம் படைத்தவன். மேனி நிறம் மட்டும் விவியன் ரிச்சர்ட்ஸ் கலர். கார்மேக வண்ணன். அட்டக் கரி. தொட்டு திருஷ்டிப் பொட்டு வைத்துக்கொள்ளலாம். கருப்பை சிகப்பாக மாற்ற பெண்கள் உபயோகப்படுத்தும் ஏழுநாட்களில் சிகப்பழகு க்ரீம் ஒன்று உபயோகிக்கையில் ஒரு விஷமக்காரன் "மாப்ள.. அப்புறம் நீ மொழுக்குன்னு லேடீஸ் மாதிரி ஆயிடுவே.. மீசை எல்லாம் மொளைக்காது.. எல்லோரும் உன்னை ஒம்போதுன்னு கூப்பிடுவானுங்க.." என்று கயிறு திரித்ததில் ஆண்மையின் அடையாளத்தை இழக்க விரும்பாமல் அந்த உபாயத்தையும் கைவிட்டான். கையில் கட்டியிருக்கும் சிகப்பு முடிச்சுபோட்ட முடிகயிறு மணிக்கட்டு அருகில் ஒரு திராவிடக் கட்சியின் கொடியை ரிஸ்ட் பான்ட் ஆக சுற்றிக் கட்டியிருப்பது போல காட்டும். கிராமத்துப் படங்களில் வரும் மனோரமா ஆச்சியின் பிள்ளையாக வரும் கார்த்திக் காஸ்ட்யூமில் இருப்பான்.

அது ஒரு ப்ரீ-டேலி காலம். கம்ப்யூட்டர் அப்போதுதான் சந்தைகளில் தனது கடையை பிளாட்ஃபாரத்தில் விரித்திருந்தது. பிரபாகர் ஒரு லோக்கல் அரிசி மண்டியில் ஆயுதபூஜைக்கு சந்தனகுங்குமம் அட்டையில் வைத்த லாங் ஸைஸ் தடியட்டை அக்கௌன்ட் புத்தகத்தில் கோடு போட்டு உச்சியில் "லாபம்" எழுதி புள்ளையார் சுழி கிறுக்கி மாசக் கூலிக்கு வியாபாரக் கணக்கு எழுதிவந்தான். ஆமாம். அவனே அதை சம்பளம் என்று சொல்லமாட்டன். டாண்ணு எட்டேமுக்காலுக்கு கடைக்கு போகலைன்னா "என்னா தம்பி.. கலெக்டர் உத்தியோகமா.. நினச்ச நேரத்துக்கு ஆட்டிகிட்டு வரே...." என்று பூங்கொத்து கொடுத்து வரவேற்காத குறையாக பட்டையும் சொட்டையுமாக வெள்ளை அண்டு வெள்ளையில் மொதலாளி வாசலில் நின்று முகமன் கூறி வரவேற்பார். காலை ஒன்பது மணிக்கு ஸ்கூல் மணி அடிக்கும் நேரத்தில் இருந்து மாலை ஆறு மணிக்கு ஃபிசிக்ஸ் டியூஷன் போகும் வரை அவனுக்கு ஆஃபிஸ் உண்டு. சே.சே. அதை ஆபிஸ் என்று சொன்னால் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். அவனுக்கே நாம் கிண்டல் செய்கிறோம் என்று கோபம் வரும். யாருக்கு ஸ்கூல் மணி அடிக்கும்... யார் பிசிக்ஸ் டியூஷன் போவார்கள் என்று புருவம் நெறித்து கேட்கிறீர்கள். இல்லையா? இந்தக் கதையின் முதல் வரியில் ஒரு வீட்டு நிலைவாசப்படி தெரியப் பக்கத்து வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள் அல்லவா? அந்த நிலைவாசல் வீட்டுப் பெண். லலிதா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பருவச் சிட்டு. போனவாரம் ஈரெட்டு முடிந்தவள். மேலும் கீழும் பார்ப்போருக்கு மூவெட்டாய் மூச்சடைக்க தெரிபவள். மான் விழி. தேன் மொழி. "படிச்சாலும் படிக்கலைன்னாலும் இன்னொருத்தன் கையில் அவளை பிடிச்சுக் கொடுக்க வேண்டியதுதானே" என்று அவள் பாட்டி அவள் அப்பா "மண்டு.. மக்கு ப்ளாஸ்த்ரி... ஆயி மாதிரியே இருக்கியே....." என்று அவளுக்கு அர்ச்சனை செய்யும்போது சப்போர்ட்டுக்கு வருவாள். அவர் திட்டுவது நூற்றுக்கு ரெண்டு மார்க் குறைத்து எடுத்த புத்திசாலிப் பெண்ணை. முன்னோர்கள் சூரியனைப் பார்த்து நேரம் அறிந்து கொண்டது போல இந்த லலிதாவின் நித்யபடி காரியங்களைப் பொறுத்துதான் நாளின் நேரம் கணிக்கக் கற்றுக்கொண்டான் பிரபாகர்.

"கர்..கர்..கர்.." என்று செயின் தன் கார்டோடு உரஸும் அவள் குட்டை சைக்கிளை இழுத்துக்கொண்டு அவன் கடைத் தாண்டி ஃபிசிக்ஸ் டியூஷன் போகும் போது அது "பிரபா..கர்.. பிரபா...கர்.. கர்..." என்று செல்லமாக கூப்பிடுவது போல இருக்கும் அவனுக்கு. அவன் நோட்டை மூடி பேனாவை சட்டையில் சொருகுவதர்க்கும் அவள் கடந்து போவதற்கும் நேரம் துல்லியமாக இருக்கும். கடைத் தெருவில் இருந்து நேராக கீழத் தெரு திண்ணைக்கு தஞ்சம் அடைவான். விக்கி வீட்டில் யாரும் இல்லை என்றாலும் அந்த திறந்தவெளி திண்ணையில் ஏறி சொகுசாக உட்கார்ந்துகொள்வான். அவன் துணைக்கு சைக்கிள் பக்கத்து சுவற்றில் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். தனியாக உட்கார்ந்திருந்தால் அப்படியே சூட்சும உடம்போடு லலிதாவும் அவனும் கிளம்பி ஆகாயமார்க்கமாக வெள்ளை ட்ரெஸ் தேவதைகள் இருகைகளையும் இறக்கையாக்கி பறக்க பல தேசங்களுக்கும் சென்று டூயட் பாடிவிட்டு சோர்வின்றி திரும்பி வருவான். வானத்தையே பார்த்துக்கொண்டு அக்காடான்னு உட்கார்ந்திருந்தான் என்றால் அண்ணன் தனது ட்ரீம் கேர்ள் உடன் கனாலோகத்தில் டான்ஸ் ஆடி சஞ்சாரிக்கிறார் என்று அர்த்தம். இரண்டு வருடங்களாக கடுமையான உழைப்பினால் அவளை நிழலெனப் பின்தொடர்ந்ததில் ஏதோ கிரிக்கெட் பிளேயர் மனோஜ் பிரபாகர் போல நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு லேடியின் பெயரை முன்னால் ஒட்டவைத்து லலிதபிரபாகர் என்றாகியிருந்தான்.

விக்கி வீட்டு சுவற்றில் மாட்டியிருந்த ஆங்கிலேயர் காலத்து ரொலெக்ஸ் "டிங்..டாங்" என்று ரெண்டு தட்டு தட்டி ஏழரை சொன்னதும் சைக்கிள் கர்கருக்க லலிதா வீட்டு வாசலில் ஒரு சின்ன குதி குதித்து பாவாடையில் கிரீஸ் ஒட்டாமல் ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டு இறங்கினாள். நுழையும் முன் மின்னலென ஒரு பார்வையை தூக்கி அவன்மேல் வீசிவிட்டு அதே வேகத்தில் உள்ளே போய்விட்டாள். பார்வை பட்டதும் அருள் வந்த பூசாரி போல பிரபாகர் உடம்பு ஜன்னி கண்டு ஆட "டேய். மாப்ள.. பார்த்துட்டு போறாடா... டேய்....யேய்..." என்று பல வினோத சப்தங்கள் எழுப்பி ஆனந்த கூத்தாட ஆரம்பித்தான். "பின்னாடி ஒரு தெரு நாய் தொரத்துச்சு... வீட்டுக்கு வந்தவுடனே ஒரு பயத்தல அது தொரத்துதான்னு திரும்பி பார்த்தாடா..உன்னைன்னு நினச்சுகிட்டியா" என்று கைகொட்டி சிரித்து நக்கலடித்தான் ஆனந்த். மறுநாள் அரிசி மண்டியில் கணக்கு எழுதிவிட்டு சைக்கிள் எடுக்கையில் "டிங்.டிங்.டிங்." என்று தொடர்ந்து மணியோசை எழுப்பி பார்வையாலும் கண்ணெறி போர் நடத்தினாள். அதோடு மட்டுமல்லாமல் இதழ்கள் எனும் சிப்பிகளை லேசாக திறந்து உள்ளே இருக்கும் முத்துக்களை வெட்கத்தோடு காண்பித்தாள். பிரபாகருக்கு பித்தம் தலைக்கேறியது. ரத்தம் உடம்புக்குள்ளே தாறுமாறாக ஓட ஆரம்பித்து தலை சுற்றியது. காதலியரின் கடைக்கண் பார்வை படும் எல்லோருக்கும் ஏற்படும் அந்த உன்னத நிலைமையை அடைந்து ஒன்றும் புரியாமல் சித்தப்ரமை பிடித்தவன் போல் கொஞ்ச நேரம் முயக்கமுற்றான். மீண்டும் ஒருவாராக நினைவுக்கு வந்து மனோவேகத்தில் அவளை சைக்கிளில் பின்தொடர்ந்து இருவரின் வேதியலும் ஒர்க் அவுட் ஆக அவளை இயற்பியல் சிறப்பு வகுப்பிற்கு ஆண் துணையாய் கொண்டுபோய் பத்திரமாக விட்டான்.

அன்றிலிருந்து தெருத் திண்ணைக்கு வருவது சுத்தமாக நின்று போயிற்று. சாயந்திரம் கடையில் இருந்து நேராக இ.வகுப்பு அப்புறம் கைலாசநாதர் கோயில் முச்சந்தியில் அற்பசங்கைக்கு ஒதுங்கும் இடத்திற்கு ஒரு பத்தடி விட்டு இரண்டு சைக்கிளையும் முட்டி நிறுத்திவிட்டு காதல் மொழி பேசி தினமும் வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்தான் பிரபாகர். ஏழரைக்கு வந்து கொண்டிருந்த லிலிதா எட்டு அடித்து வர ஆரம்பித்தாள். மார்க் ஆசை பிடித்த லலிதாவின் தகப்பன் கூடுதல் நேரம் மகள் விழுந்து விழுந்து படிக்கிறாள் என்று சந்தோஷப்பட்டான். காதலில் விழுந்து டியூஷனுக்கு போகிறேன் என்று ஆறுமணிக்கே ஊர் எல்லையில் இருக்கும் பேச்சியம்மன் கோயில் தாண்டி இருக்கும் அந்த நூறு வயது நிரம்பிய தொந்தி பெருத்த புளியமரத்தின் பின்னால் சிரித்தார்கள், கொஞ்சினார்கள், கெஞ்சினார்கள், திட்டினார்கள், வாழ்த்தினார்கள், முத்தமிட்டார்கள். வாலிபம் இழுத்த இழுப்புக்கெல்லாம் போனார்கள்.

*********
அன்று ராத்திரி பத்துமணிக்கு அரட்டை கச்சேரி முடித்து விக்கி, ஆனந்த் எல்லோரும் நடையை கட்டுகையில் லலிதாவின் அப்பா கை வைத்த பனியனோடு வெளியே வந்து துண்டால் வாய்பொத்தி சின்னக்குழந்தை போல கேவிக் கேவி அழுதார்.  "என்ன சார் ஆச்சு?" என்று கேள்விக்கு நேற்று இரவு வீட்டில் நடந்த ரகளையையும் லலிதா பிரபாகர் பற்றியும் விவரமாக சொன்னார். "இப்போல்லாம் பிரபாகர் இங்க வரது இல்லை சார்! ரோட்ல எங்களைப் பார்த்தாலும் பேசறதில்லை..." என்று சொன்ன விக்கியிடம் நேரம் காலம் தெரியாமல் எப்போதோ படித்த ஷேக்ஸ்பியர் இங்லிஷில் "வாட்? பார்டி Elopedஆ?" என்று அவருக்கு நேராகக் கேட்டு எல்லோரையும் நெளியவைத்தான் ஆனந்த்.
**********

தினமும் காலையில் உயிரியல் டியூஷன் போகும் கலா அந்த ஞாயிற்றுக்கிழமை லலிதா வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்கள் வீட்டில் காதல் துக்கம் விசாரித்து விட்டு வரும்போது வாசலில் பாச்சாவுடன் நின்று வேடிக்கைப் பார்த்த விக்கியிடம் "பாவிப்பய... காலையில என்கூடவும்... சாயந்திரம் இவகூடவும் சந்தோஷமா இருந்துட்டு போயிட்டானே.. இவன் நாசமாப் போக" என்று சபித்துவிட்டு அழுது வயிற்றெரிச்சலுடன் போனாள். இப்படி பல பெண்களைக் கவிழ்க்கும் கலையில் கில்லாடியாக திகழும் அவன் லலிதப்ரபாகரா? அல்லது கலாப்ரபாகரா? என்று புரியாமல் தவித்தான் விக்கி. கலா தன் களையிழந்து போய்க்கொண்டிருந்தாள். "லலிதா எப்போ திரும்பி வருவாள்?" என்று பாச்சா விக்கியின் தோளைச் சுரண்டி கேட்டுக்கொண்டிருந்தான்.

திண்ணைப் பட நன்றி: http://muralikkannan.blogspot.com/

-


38 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//திண்ணையில் உட்கார்ந்து திருடன் போல எக்கிப் பார்த்தால் பக்கத்தில் அவள் வீட்டு நிலைவாசல் தெரியும். தலைவாசல் தலையில் கட்டியிருக்கும் காய்ந்த மாவிலைத்தோரணம் காற்றுக்கு சடசடத்து அசைந்தாடுவது மிகத் தெளிவாக காதுக்கு தெரியும்//
ஐம்புலன்களுக்கு நல்ல வேலை போல இருக்கே...:)

//ராத்திரி பத்து மணி கணேசா ரோட்வேய்ஸ் பஸ் ஸ்டாண்ட் போகும் வரை உட்கார்ந்து கதை அளந்துவிட்டுதான் வீட்டிற்கு போவான் பிரபாகர்//
ச்சே...நான் கூட சொந்த கதைன்னு நெனச்சு கலாய்க்க ஆரம்பிச்சுட்டேன்... :)

இது உண்மை கதையா... அப்படினா உங்க கேரக்டர் இதுல எங்க வருது? ஜஸ்ட் அ கொஸ்டின்... நோ டென்ஷன்...:)

எல் கே said...

// லலிதா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பருவச் சிட்டு. போனவாரம் ஈரெட்டு முடிந்தவள். மேலும் கீழும் பார்ப்போருக்கு மூவெட்டாய் மூச்சடைக்க தெரிபவள். மான் விழி. தேன் மொழி//


அட்டகாசம்....

எல் கே said...

எந்த வகையில் எடுத்து கிட்டாலும் இப்ப லலிதப்ரபாகர்கள் அதிகம். ஆனால் கவலைப் படவோ இல்லை திட்டவோ கலா யாரும் இல்லை. இதுதான் நிதர்சனம்

எல் கே said...

@அப்பாவி

இது கூட தெரியலை சீக்கிரம் கண்டுபிடி

பொன் மாலை பொழுது said...

//கவிழ்க்கும் கலையில் கில்லாடியாக திகழும் அவன் லலிதப்ரபாகரா? அல்லது கலாப்ரபாகரா? என்று புரியாமல் தவித்தான் விக்கி.//

மன்னார்குடி மைனர் நம்ம R V S தான் அந்த விக்கி! சரியா மைனரே?!
போட்டி ஒன்னும் வைகல . ஆனாலும் R V S ஐ தேடும் வேலை அவ்வபோது வருகிறதே !

Unknown said...

நல்லா எழுதி இருக்கீங்க!

பத்மநாபன் said...

லலிதபிரபாகரும் இல்லை ..கலாபிரபாகரும் இல்லை ....கில்லாடி பிரபாகர் ...

உங்க எழுத்து வேகம் படிக்கற எங்களுக்கே மூச்சு வாங்குதே , எழுதன உங்களுக்கு எப்படி இருக்கும் ...
( ஒரே பத்தியா இருக்கறதை இரண்டு மூணு பத்தியா பிரிச்சா , இன்னமும் படிக்க எளிதா இருக்கும் )

Vidhya Chandrasekaran said...

நல்லா எழுதியிருக்கீங்க..

தலைப்புக்கு இன்ஸ்பிரேஷன் நீங்கதானே:))

sathishsangkavi.blogspot.com said...

/// லலிதா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பருவச் சிட்டு. போனவாரம் ஈரெட்டு முடிந்தவள். மேலும் கீழும் பார்ப்போருக்கு மூவெட்டாய் மூச்சடைக்க தெரிபவள். மான் விழி. தேன் மொழி//

Nice...

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

raji said...

இம்மாதிரி ஏமாறும் லலிதாவும் கலாவும் இப்பொழுது இல்லை.
எல்லாரும் நல்ல உஷார்.
அப்படியே ஏமாந்தாலும் கவலைப்படும்
விஷயமாக இது இருந்த நிலை மாறி
துடைத்துப் போட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்

தக்குடு said...

//பார்வையாலும் கண்ணெறி போர் நடத்தினாள். அதோடு மட்டுமல்லாமல் இதழ்கள் எனும் சிப்பிகளை லேசாக திறந்து உள்ளே இருக்கும் முத்துக்களை வெட்கத்தோடு காண்பித்தாள்//

எழுத்து நடை எழுந்து உட்கார வைக்கிறது! என்ன ஒரு வர்ணனை!! அட அட அட! ரசித்தேன் மைனரே!!..:)

Anonymous said...

ஒரே நேரத்தில ரெண்டு லட்டு தின்னுருக்கார் பிரபாகர்! ;)

RVS said...

@அப்பாவி தங்கமணி
கதையில வந்த எல்லாக் கேரெக்டருமே என்னோடதுதான்.. ஏன்னா இந்தக் கதையை எழுதினது அடியேன் தான். ;-) ;-)

RVS said...

@எல் கே
மிக்க நன்றி எல்.கே.. ;-)

RVS said...

@எல் கே
நூறு சதவிகிதம் உண்மை.. கதை ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி நடந்ததா எழுத முயற்சித்தேன். ;-) ;-)

RVS said...

@எல் கே
ஏம்பா கிளப்பி விடறீங்க... ரொம்ப சந்தோஷமா இருக்குமே!! ;'-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மாணிக்கம்... வெங்கடசுப்ரமணியன் விக்கி ஆயிட்டான் அப்படின்னு கெஸ்சு பண்ணிட்டீங்க! ரைட்டா.. இது கதைங்க... புனைவு... எவ்ளோ தடவை சொன்னாலும் நம்ப மாட்டேன்கறாங்ப்பா... ;-) ;-);-)

RVS said...

@விக்கி உலகம்
நன்றி விக்கி உலகம். உங்களுடைய வியட்நாம் பதிவு படித்தேன். அருமை.. ;-)

RVS said...

@பத்மநாபன்
டெம்ப்ளேட் மாறிட்டுது.. நடுவில பத்தி கட் பண்ண முடியாத மாதிரி ஒரு ஃப்ளோ. ஸாரி! அடுத்த முறை கண்களுக்கு விருந்தளிக்கப் பார்க்கிறேன் பத்துஜி! ;-)

RVS said...

@வித்யா
தங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி ;-) ;-)

RVS said...

@சங்கவி
நன்றிங்க.. அடிக்கடி வாங்க சங்"கவி"! ;-) ;-)

RVS said...

@sakthistudycentre-கருன்
வாழ்த்துக்கு மிக்க நன்றி கருன். ;-)

RVS said...

@raji
ஆமாம். நீங்க சொல்றது சரிதான். யாருக்கும் எதைப்பற்றியும் கவலையில்லை! ;-) ;-)

RVS said...

@தக்குடு
கல்லிடையின் கடைக்குட்டியே! ரசித்ததற்கு நன்றி..
நான் மைனர் (minor) தான்... நீ தான் மேஜர்! ;-) ;-) ;-)
(அப்பாடி... மேட்டரை திருப்பியாச்சு... )

RVS said...

@Balaji saravana
அருமையான கமெண்ட்டு பாலாஜி! ரெண்டு லட்டு ..... ;-) ;-)

வெங்கட் நாகராஜ் said...

Good One! Thanks!! :)

இராஜராஜேஸ்வரி said...

இரண்டு சைக்கிளையும் முட்டி நிறுத்திவிட்டு காதல் மொழி பேசி தினமும் வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்தான் பிரபாகர். ஏழரைக்கு வந்து கொண்டிருந்த லலிதா//

சிம்பாலிக் ஷாட்டா??

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையின் வர்ணனைகள், பேச்சுக்கள், கிண்டல்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. ஆங்காங்கே பத்தி பத்தியாகப் பிரித்து விட்டால், படிப்பவர்களுக்கு, சிரமம் இல்லாமல் இருக்கும். வாழ்த்துக்கள்.

இளங்கோ said...

கதை நல்லா இருக்குங்க.. இது என்ன காதலர் தின ஸ்பெசலா?

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ஹி...ஹி.. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
Thank You Boss!!!

RVS said...

@வை.கோபாலகிருஷ்ணன்
எப்போதும் செய்வேன். நேற்று தங்குதடையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.. அப்படியே பதிந்துவிட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். (பத்துஜிக்கும்..) ;-)

RVS said...

@இளங்கோ
பாய்ண்ட் இளங்கோ! காதலர் தின ஸ்பெஷல் தான். பாராட்டுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ;-)

அப்பாதுரை said...

பிரபாகரலலிதாக்களைத் தெரியும். இப்போ தான் முதலா லலிதபிரபாகரைத் தெரிந்து கொண்டேன். படிச்சதும் எனக்குத் தோன்றின கேள்வியை பின்னூட்டமா கேட்கலாம்னு பாத்தா முதல்லயே கேட்டுடாங்க அ.

rajiன் கமென்ட் ரசித்தேன். எனக்குத் தெரிந்தவரை கலாலலிதாக்கள் என்றைக்குமே அப்படித்தான் :) பிரபாகரன் செஞ்சா பரவாயில்லை; லலிதா செய்யக்கூடாதா என்ன? பொதுவில் வைப்போம்.

அது சரி, ஏதோ ஒரு தைரியத்துல இவரு "எல்லா கேரக்டருமே என்னது தான்'னு சொல்றாரே....

RVS said...

@அப்பாதுரை
//அது சரி, ஏதோ ஒரு தைரியத்துல இவரு "எல்லா கேரக்டருமே என்னது தான்'னு சொல்றாரே..//

தல. கிளப்பி விடாதீங்க.. அடிக்க ஆட்கள் ரெடியா இருக்காங்க.. ;-) ;-)

அப்பாதுரை said...

பவீமா தான் செஞ்சாங்கனு சொல்ல வேண்டியது தானே?
>>>ஹோம் மினிஸ்டரின் கவன ஈர்ப்புத் தீர்மான கேள்விக்கு

'நிலையான' :) முகவரிக்கு வாழ்த்துக்கள். இதனால் என்ன பயன்?

RVS said...

@அப்பாதுரை
பவீமாவை எதுக்கு எல்லாத்துக்கும் 'இழுக்கு'ரீங்க! அறுபதை தொட்டுகிட்டு இருக்காங்க அவங்க. ;-)
பலன் ஒன்றும் இல்லை ஜி! புதுசா கார் வாங்கி வீட்டுல உள்ள எல்லோர் பேரையும் கண்ணாடியில ஸ்டிக்கர் அடிச்சு ஒட்டிக்கிட்டு போறா மாதிரி!! ஹி..ஹி..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails