Sunday, February 27, 2011

சுஜாதா எழுதிய எழுதாத கதை

1
என் பெயர் முருகன். இதைவிட தமிழ்த்தனமாகப் பெயர் இருக்க முடியாது. நான் பங்களூரில் மூன்றாவது தலைமுறைத் தமிழன். என் தாத்தா கோலாரிலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர். அல்சூர்ப் பகுதியில் கையகலத்துக்கு நிலம் வாங்கி ஒரு ஒட்டு வீட்டையும் கட்டிவிட்டார். என் தந்தை, ஒரே மகன், அதில் வாழ்ந்தார். வாழ்ந்ததைத் தவிர வேறு ஒன்றும் உருப்படியாகச் செய்ததாகத் தெரியவில்லை. வெஸ்ட் எண்டு ஓட்டலில் வேலையில் இருந்ததாகவும் வெள்ளைக்காரர்களுடன் பழகியதாகவும் கதை பண்ணுவார். இங்கிலீஷ் தப்புத் தப்பாகப் பேசுவார். என்னுடன் எட்டுச் சசோதர சசோதரிகளை ஒரு மால்தூசியன் அவசரத்தில் படைத்துவிட்டு அம்பத்தி ஐந்தாம் வயதில் காலமானார். எங்கள் சிறிய ஒட்டு வீட்டில் அவரைக் கிடத்துவதற்கே இடமின்றி நாங்கள் நிறைந்திருந்தோம். அவசரத்தில் அவரை எரித்துவிட்டு வீட்டுக்கு வந்து யார் இருப்பது என்று சண்டை போட்டோம்.

2
"கொஞ்சம் அப்படியே சாஞ்சுக்கங்க!" 
"இப்படியா ஸார்"
"இல்லை. கொஞ்சம் இடது பக்கமா, தட்ஸ் இட், அப்புறம் மார்ல அந்த சாரியை லேசா.. ஒ எஸ் போதும்! ப்யுட்டிஃபுல். கொஞ்சம் சிரிங்க! என் இடது கையைப் பாருங்க! ரிலாக்ஸ்! தட்ஸ் இட்!"
அப்பெர்ச்சர் எப் 8.
காமிராவின் கழுத்தைத் திருக அந்தப் பெண் என் வ்யுஃபைண்டரில் தீட்டப்பட்டாள். அவளை நிறையவே பார்க்க முடிந்தது.
க்ளிக்!
"தாங்க்ஸ்! நீங்க ட்ரெஸ் சேஞ்ச்  பண்ணிக்கிட்டு வாங்க"
"நீச்சல் உடை இருக்குதுங்க. நல்லா இருக்கும்னு பேபி சொல்லிச்சு."
"போட்டுக்கிட்டு வாங்களேன்."
உள்ளே சென்றாள்.

வீட்டுக்குள் மாடி அறையில் நீச்சல் உடையில் பாய்ச்சல் காட்டுகிற மாதிரி போட்டோ எடுத்துக்கொள்ள இவர்கள் எல்லோருக்கும் ஆசை. நம் நாட்டுப் பெண்களுக்கு உடம்பு வாகு கிடையாது. இடுப்பு பெரிசாக இருக்கும். கால்கள் குட்டையாகவும் தொடைகள் ஒன்று சேர்ந்தும் இருக்கும். எனெக்கென்ன! காசு கொடுக்கிறார்கள்; எடுத்துடறேன்.

3
அந்த எண்ணம் என்னை மின்னல் மாதிரிதான் தாக்கிச்சு. இந்தப் பொண்ணு என்னைப் பார்க்கிறதில வெறும் பார்வை மட்டும் இல்லை. கொஞ்சம் ஆசைகூட இருக்கு. ஆசை மட்டும் இல்லை. கொஞ்சம் காதல்கூட கலந்திருக்குன்னு எனக்குத் தோணிப்போச்சு. இப்பவும் அவ என்னைக் கண் கொட்டாம நான் போட்ட சட்டையை எனக்கு சைஸ் சரியா இருக்கான்னு அழகு பார்த்துக் கிட்டுத்தான் இருக்கா. உனக்கும் எனக்கும் ஒரே சைஸுன்னு சொல்லிவிட்டு கலகலன்னு சிரிக்கிறா. நான் இந்தப் பொண்ணுக்கு மனசுக்குள்ள பிரியமுள்ள நிம்மின்னு ஆரம்பிச்சு கடிதம் எழுதிக்கிட்டிருக்கேன். அந்தக் காதல் கடிதத்தை நாள் பூரா எழுதினேன். குளிக்கறப்போ ரெண்டு வரி, நாஷ்தா பண்றப்ப ரெண்டு வரி. அப்புறம் கறிகா வாங்க மார்க்கெட்டுக்குப் போனப்ப, போஸ்ட் ஆபிஸ் போய் தபால் இருக்குதான்னு பார்த்தப்ப பாதிக் கடிதத்தை எழுதிட்டேன். மனப்பாடமாத்தான். சாயங்காலத்துகுள்ள இதைக் கடிதமாவே எழுதி நிம்மிகிட்ட கொடுத்துவிட்டு ஓடி வந்துரப் போறேன். அவ என்ன செய்வா? படிப்பா. படிச்சு அவளுக்கும் எங்கிட்ட இஷ்டம்னா பதில் எழுதுவா. இல்லை, அம்மாகிட்ட சொல்லிட்டு என்னை வேலையை விட்டுத் துரத்திருவாங்க. ரெண்டு விதத்திலும் சௌகரியம்தான். நிம்மிக்கு எம் பேர்ல இஷ்டம்னா அந்தப் பழக்கத்தை சுலபமா விட்டுருவேன். அவங்க கோவிச்சுகிட்டாங்கன்னா வேலையை விட்டுருவேன். எப்படி?

4
ராத்திரி சினிமாவுக்கு போறாங்க. இந்தச் செய்தி கூட என்னை வந்து எப்படித் தற்செயலா சேருது பாருங்க. நேத்துத்தான் பகவான் சொல்றான். இன்னிக்கு சினிமா போறேங்கறாங்க! என்ன ஒரு பொருத்தம் பாருங்க! எனக்குத் தீவிரமான நம்பிக்கை வந்துருச்சு. நம்ம கையில ஏதும் இல்லை. என்னவோ நடக்க வேண்டியது நடந்துகிட்டு இருக்கு!
"அவங்கெல்லாம் சினிமாக்குப் போறாங்க"ன்னு வத்சலா கொஞ்சம் அழுத்தமா சொல்லிச்சு, நான் திரும்பி பார்த்தேன். புதுசா நைலான் கட்டியிருந்தது. நெத்திப்  பொட்டு, பவுடர், பெரிசா மை எல்லாம் சோக்காத்தான் இருந்திச்சு. சன்னமா ரவிக்கை போட்டிருந்ததில உள்ளே கருப்பா பாடி போட்டுக்கிட்டு இருந்தது தெரிஞ்சுது.
ஒரு நிமிஷம் வேற பிளான் யோசிச்சேன். பகவான்கிட்ட சொல்ல வேண்டாம். இன்னிக்கி சொல்ல வேண்டாம்.

இதுவரைக்கும் என் கதையைப் பொறுமையாப் படிச்சுகிட்டு வந்தீங்களே, இந்த இடத்தில நிறுத்தி உங்ககிட்ட ஒன்னு கேக்க விரும்பறேன். இத்தனை சம்பவங்கள்ள ஏதாவது ஒரு திருப்பம் மட்டும் வேற மாதிரி ஆயிருந்ததுன்னா? இவங்களுக்கு ஏன் சினிமா டிக்கெட் கிடைக்கலை? கிடைச்சிருந்ததுன்னா..
பெட்ரூம்ல நுழைஞ்சேன். அம்மா எங்க கிடந்தாங்களோ அங்கதான் இன்னம் கிடக்கறாங்க. அவங்க பக்கத்தில சைடால ரத்தம் மெல்ல குழம்பி ஒரு சின்ன குளமா சேர்ந்துகிட்டு இருக்குது. கையால தடுத்திருக்காங்க போல. கைல பெரிய வெட்டு அப்புறம் கழுத்தில இருந்து ஆரம்பிச்சு முகத்தில எல்லாம் சுமார் பதினாறு பதினேழு வெட்டு, மூஞ்சியை அடையாளமே கண்டுக்க முடியாத படி, அப்புறம் படிக்கைக்கடியிலிருந்து நிம்மியுடைய காலுங்க தெரியுது "ஐயோ நிம்மி!  நிம்மி"ன்னு குனியறேன்.

"பாவிங்களா, கொன்னுட்டீங்களா!"
"வேற என்ன செய்ய! வாடா கிளம்பலாம். பேசாம சினிமாப் பார்த்துக்கிட்டு இருக்கிறவங்க எதுக்காகத் திரும்பி வரணும்? எதுக்காகத் திரும்பி வரணும்?" மயிர் எல்லாம் ரத்தக் கொத்தாகியிருந்தன. நடு மண்டையிலே அடிச்சுருக்கான். அவளை இழுத்துக் கட்டிலுக்கடியில தள்ளியிருந்தது ரத்த ரோடு போட்டிருந்தது.
*****************************
vaathiyaar

பின்குறிப்பு: இன்று வாத்தியாரின் நினைவு நாள். பெரும் எழுத்தாளர்களோ இலக்கிய விற்பன்னர்களோ தமிழறிஞர்களோ சொல்லின் செல்வர்களோ எழுதி பாராட்டுவது போல என்னால் முடியாது. எனக்கு அவ்வளவு தமிழ்த் திராணியில்லை. அஞ்சாறு படத்தைக் கோர்த்து கொலாஜ் பண்றா மாதிரி இது ஒரு கொலாஜ் கதை. வாத்தியாரின் இரண்டு மூன்று நாவலில் இருந்து இப்படி அவரின் வார்த்தைகளை தோரணமாக தொடுத்து ஒரு கதை தயாரித்தேன். கொஞ்சம் டயலாக். கொஞ்சம் வர்ணனை. கொஞ்சம் மர்மம். வார்த்தை மாறாமல் வரி பிசகாமல் ஈயடிச்சான் காப்பி செய்தது இது. இதன் மூலம் என் நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். வாத்தியாருக்கு ஜே!

சென்ற வருடத்திய அஞ்சலி இங்கே.

பட குறிப்பு: இந்த மாதிரி கதைக் கலப்பு பண்ணியதற்கு "கொன்டே போடுவேன்"ன்னு விரல் நீட்ரா மாதிரி இருக்குல்ல...

பட உதவி: ஹிந்து.காம் 

-


33 comments:

பத்மநாபன் said...

//வந்து யார் இருப்பது என்று சண்டை போட்டோம்.//

//அவளை நிறையவே பார்க்க முடிந்தது. //

//குளிக்கறப்போ ரெண்டு வரி, நாஷ்தா பண்றப்ப ரெண்டு வரி. அப்புறம் கறிகா வாங்க மார்க்கெட்டுக்குப் போனப்ப //
//இதுவரைக்கும் என் கதையைப் பொறுமையாப் படிச்சுகிட்டு வந்தீங்களே, இந்த இடத்தில நிறுத்தி உங்ககிட்ட ஒன்னு கேக்க விரும்பறேன்.//

இப்படி ஜெர்க் விட்டு எழுதும் எழுத்தாளரை மூணு வருஷமா தேடிட்டு இருக்கேன் ..கிடைக்கவில்லை..
வாத்தியார் என்றும் நினைவில் இருப்பவர்.... இன்று பதிவு போட நானும் மறக்கவில்லை....

RVS said...

@பத்மநாபன்
வாத்தியார் பதிவுக்கு நீங்கதான் கமெண்ட்டு திறப்பு விழா.. என்ன ஒரு பொருத்தம்.. ;-))))

அப்பாதுரை said...

வித்தியாசமான முயற்சி.

தக்குடு said...

நல்ல முயற்சி மன்னார் குடியின் மைனரே!!..:P

எல் கே said...

http://lksthoughts.blogspot.com/2011/02/blog-post_28.html


உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்

எல் கே said...

நல்ல முயற்சிதான்.. முழுசா குடுத்தா நல்லா இருக்கும்

R. Gopi said...

அருமை

VISA said...

அட!!!!

Chitra said...

பெரும் எழுத்தாளர்களோ இலக்கிய விற்பன்னர்களோ தமிழறிஞர்களோ சொல்லின் செல்வர்களோ எழுதி பாராட்டுவது போல என்னால் முடியாது. எனக்கு அவ்வளவு தமிழ்த் திராணியில்லை.


....தமிழ் திராணி - ஆஹா... இந்த மாதிரி புதுமையாக சொல்வதே எவ்வளவு நல்லா இருக்குதுங்க...

ஸ்ரீராம். said...

புதிய முயற்சி. நினைவு கூர்ந்த விதம் அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

அடடே கலக்குங்க கலக்குங்க...

ADHI VENKAT said...

புதுசா நல்லா இருக்கு.

Anonymous said...

அண்ணே அடிச்சு தூள் பறத்திட்டீங்க! :)

இளங்கோ said...

வாத்தியார்.. வாத்தியார்தான்..

இராஜராஜேஸ்வரி said...

எங்கேயோ படித்த வரிகள்..
நினைவூட்டி அஞ்சலி செலுத்திய தோரணை சுஜாதாவிற்கு நினைவஞ்சலி

வெங்கட் நாகராஜ் said...

புதிய முயற்சி நன்று!

மோகன்ஜி said...

உங்கள் பதிவு சுஜாதாவுக்கு ஒரு அருமையான நினைவஞ்சலி..ONE AND THE ONLY SUJATHA!

RVS said...

@அப்பாதுரை
நன்றி அப்பாஜி! ;-)

RVS said...

@தக்குடு
பாராட்டுக்கு நன்றி.. அதென்ன குடியை தனியா எழுதற பழக்கம்.. உம்.... ;-))))))))))

RVS said...

@எல் கே
சிரமேற்கொண்டு எழுதியாச்சு.. ;-)))))))))

RVS said...

@எல் கே
முழுசாத்தான் இருக்கு எல்.கே. ;-))))))))

RVS said...

@Gopi Ramamoorthy
நன்றி ;-))

RVS said...

@VISA
ரைட்டர் விசாவை அட போட வைத்துவிட்டதா.. பேஷ் பேஷ்.. ;-))))))))

RVS said...

@Chitra
பாராட்டுக்கு நன்றிங்க.. சும்மா வார்த்தைகளை கோர்த்துப் பார்த்தேன்.. ஏதோ வந்திருக்கு.. ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்! ;-)

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றி மனோ.. கலக்கறேன்... ;-)

RVS said...

@கோவை2தில்லி
வாழ்த்துக்கு நன்றிங்க.. ;-)

RVS said...

@Balaji saravana
பாராட்டுக்கு நன்றி தம்பி!

RVS said...

@இளங்கோ
ஆமாம்.. ஸ்டுடென்ட் ஸ்டுடென்ட் தான்.. ஹி..ஹி.. ;-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
புரியலை.. எங்க படித்த வரிகள்... ;-))))))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றுக்கோர் நன்றி. ;-)

RVS said...

@மோகன்ஜி
பாராட்டுக்கு நன்றி அண்ணா!

அப்பாதுரை said...

இப்ப படிச்சா முன்னைவிட சுவாரசியமா இருக்காப்ல..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails