Friday, March 11, 2011

ஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை - II

இப்போதுதான் இந்தப் பக்கத்திற்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் ஒரு எட்டு இந்த தெருவிற்குள் போய் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். ப்ளீஸ்.

**************************** அத்தியாயம் இரண்டு ***************************

காப்பியை ருஜித்து குடித்துவிட்டு "அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன்..." என்று பவ்யமாக கிட்டு மாமாவிடம் விடைபெற்றுக் கொண்டு "மாமீ! காப்பி ஏ கிளாஸ். நா வரேன்..." என்று உள்ளே பார்த்து மாமிக்காக நாலு வீட்டுக்கு கேட்கும்படி கூவிவிட்டு அவரைக்காட்டிலும் வயதான அந்த சைக்கிளில் காலால் உந்தி ஏறி கடைத்தெருவிற்கு புறப்பட்டார் சந்தானம். வழிநெடுகிலும் ஒரே விஜி-மதி பற்றிய பலத்த சிந்தனை மின்னல்கள் மூளைக்குள் பின்னின. அவன் பல்லிளிப்பிர்க்கு இவளின் பதில் சிரிப்பு அவரை அப்படியே அடித்து போட்டுவிட்டது. விஜியா இப்படி? ஆபிஸிலேயே கிட்டு ஒரு சின்னக் குழந்தை மாதிரி. எப்பவும் யாரைப் பார்த்தாலும் "ஹே.." என்ற இளிப்பு. பியூன் கூட அவரை வேலைவாங்குவான். ரொம்ப வெகுளி. "இன்னிக்கி போட்ருக்கிற ஷர்ட் நல்லா இருக்கு கிட்டு சார்! ஹீரோ மாதிரி இருக்கீங்க.." என்று கோரஸாக துதிபாடி ஏத்திவிட்டு ஆபீசில் எல்லோரும் ரெண்டு நாள் டீ வாங்கி குடித்திருக்கிறார்கள். கிட்டுவை நினைக்க நினைக்க பாழும் மனசு அடியாய் அடித்துக்கொண்டது. நினைவு முழுக்க விஜியும் மதியும் நிறைந்து மாறி மாறி நம்பியார் சிரிப்பு சிரித்தார்கள்.

தேர்முட்டி தாண்டும்போது மலையாளத்தான் டீக்கடை வாசலில் மதி சைக்கிள் நின்றிருந்தது. போகிற போக்கில் கடை உள்ளே கண்களால் துழாவியதில் ஒரு கையில் டீ கிளாசும் மறுகையில் சிகரெட்டும் புகைய தன் சகாக்களோடு அரட்டைக்கச்சேரியில் மதி இருந்தது அரசல்புரசலாக தெரிந்தது. அவனுடைய எள்ளல் குரல் எட்டூருக்கு கேட்டது. சந்தானத்திற்கு மனசு படபடத்தது. மதியின் சேர்மானம் சரி கிடையாது. கூட்டாளிகள் ஒவ்வொருத்தனும் கடைந்தெடுத்த ரவுடிகள். கைலியை மடக்கி நெஞ்சு வரை கட்டிக்கொண்டு லஜ்ஜையே இல்லாமல் தெருவில் உலா வருவார்கள். ச்சே. இந்தப் பெண் போயும் போயும் இந்தப் பயல் வலையில் விழுந்துவிட்டதே! கிட்டுவுக்கு இப்படி ஒரு அவமானம் வேண்டாம் என்று உள்ளுக்குள் குமைந்து மிகவும் வருத்தப்பட்டார்.

போன வாரம் இரவில் பஸ்ஸ்டாண்ட் தாண்டி அந்த மூத்திரவாடை ஆளை அடிக்கும் இருட்டு சந்தில் நடந்த ஏதோ கிராமத்துப் பெண் சம்பந்தப்பட்ட களேபரத்தில் இவனும் இருந்தான். ஒரே கைகலப்பு ஆகிவிட்டது. ஆம்படையாளுடன் தன் ஷெட்டகர் வீட்டு கல்யாணத்திற்கு தஞ்சாவூர் சென்றுவிட்டு இரவு ஒன்பது மணி வாக்கில் தனியாக திரும்பிய சந்தானம் சார் இந்த அடிதடி கூட்டத்தில் இவனை கவனித்துவிட்டார். இவரைப் பார்த்து கூட்டத்தில் இருந்து நழுவியவனை நெருங்கி வந்து பிடித்து "என்னப்பா? என்னாச்சு?" என்று விஜாரித்ததில் "சும்மா இந்தப் பக்கம் ஃப்ரண்ட பஸ் ஏத்திவிட வந்தேன்" என்று சரடு விட்டான். இவனது சகாக்களில் ஒருவன் ஏதோ கெட்டவார்த்தை சொல்லி ஏகவசனத்தில் அன்பாக இவனை கூப்பிட்டது சிவராமன் சாரின் காதை அறுத்தெறிந்தது. மரியாதையை காப்பாற்றிக்கொள்ள சட்டென்று அந்த இடத்தை காலி செய்தார்.


kadatheruஇப்படி பல யோசனைகளில் மிதந்தபடி வந்தவர் சரேலென்று திரும்பிய பஸ்சிற்கு உடனடி கவனம் திருப்பி கஸ்தூரி லாட்ஜ் பக்கம் ஒதுங்கி கால் ஊன்றினார். லாட்ஜில் பகலிலேயே புருஷர்களுக்கு தேவையான வாடகை பொண்டாட்டிகள் ரூம் ரூமாக உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள். தூரத்தில் "டான்..டான்" என்று கைலாசநாதர் கோயில் மணி உச்சிகாலத்திர்க்கு ஆடியது. கோடி புண்ணியம் கிடைப்பதற்கு தலையை தூக்கி தூரத்தில் தெரிந்த கைலாசநாதர் கோயில் கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டார். கோபுர பொற்கலசங்கள் வெய்யிலில் மினுமினுத்து கண்ணைப் பறித்தது. பெரிய கடைத்தெருவில் நுழைந்தார் சந்தானம். வெயில் அனலாக கொளுத்தியது. சற்று முன் நடந்த சம்பவத்தால் உள்ளம் எரிந்தது. தற்போது உடம்பு எரிந்தது. மேல்துண்டால் வியர்வை வழியும் முகத்தை துடைத்துக்கொண்டு செட்டியார் அரிசிக்கடை வாசலில் போட்டிருந்த ஸ்டூலில் போய் "ஈஸ்வரா.. முருகா. என்னப்பனே..." என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே  உட்கார்ந்தார்.

"என்ன சந்தானம் சார்! வூட்டுக்கு ஒரு மூட்டை பொன்னி அனுப்பிடட்டுமா..." என்று உட்காரும் முன்பே வியாபாரம் பேசியவனிடம்
"ஏம்பா.. அப்பா இல்லையா?" என்று வினவினார் சந்தானம்.
"வூட்டுக்கு போயிருக்காருங்க..காலமே வந்துட்டாங்க.. கொஞ்ச நேரம் மிந்தி தான்  போனாங்க."
"போன தடவை குடுத்த மூட்டேல எவ்ளோ சொக்கான்... கல்லு... ஒரே குப்ப.. ஒன்னும் சரியில்லேயப்பா.. தரமே இல்லாம ரேஷன் அரிசியை விட மோசமா இருந்துதே... எங்கயாவது ரேஷன் கடையிலேர்ந்து சல்லிசா தூக்கிட்டு வந்துட்டீங்களா..உம்...." என்று குரலை உசர்த்தினார் சந்தானம்.
"ச்சே.ச்சே.. என்ன சார் இப்படியெல்லாம் பேசறீங்க.. இந்த தடவை குடுக்கும் போது மூட்டையை பிரிச்சு பார்த்து வாங்கிகிட்டு போங்க. வீட்ல மூட்டையை கொஞ்சம் ஈரம் படர மாதிரி வச்சா சொக்கான் நிச்சயம் வரும் சார்! நம்மள மாதிரி அதுக்கும் வயித்த களுவ ஏதாவது வேணும் பாருங்க....." என்று நகைச்சுவை கலந்து அவரை குளிர்ப்படுத்தினான். கல்லா பக்கத்தில் வெட்டிவேர் கலந்து வைத்திருந்த  மண் குடத்தில் இருந்து ஒரு லோட்டா தண்ணீர் கொடுத்து
"சூடா இருக்கீங்க.. இந்தாங்க இதைக் குடிங்க... மோரு கீறு  எதுவும் வேணுங்களா..." என்று உபசரித்து அவரை சரிகட்டினான்.

கடையைத் தாண்டி விஜி நடந்து போவது ஏழெட்டு செவ்வக கண்ணாடிகளை வட்டவடிவத்தில் சொருகிய செட்டியார் கடை அதிர்ஷ்ட கண்ணாடியில் தெரிந்தது. தலையை திருப்பாமல் கடைக்கண்ணால் அந்தப் பக்கம் பார்த்தார். ஒரு ஐந்தாறு கடைகளை தாண்டியிருக்க மாட்டாள் பின்னாலையே மதி சைக்கிளில் ரோந்து போய்க்கொண்டிருந்தான். உலக அளவில் ஸ்லோ ரேஸ் வைத்தால் நிச்சயம் ஜெயித்து மெடல் வாங்கி குத்திக்கொள்வான். அவளின் அன்ன நடையை சைக்கிளில் பயின்றான். இவனிடம் இந்தப்பெண் மதியிழந்து விட்டாளே என்று மீண்டும் ஆதங்கப்பட்டார் சந்தானம். செட்டியார் மகன் சந்தானம் சாரின் பார்வை போன போக்கையறிந்து, அவரின் மனதைப் படித்தான்.

"ரொம்ப நாளா நடக்குது சார் இது..." என்றான்.
"எதுப்பா?" என்று புரியாதமாதிரி புதிராகக் கேட்டார் சந்தானம்.
"நம்ம கிட்டு சார் பொண்ணை மதி சைட் அடிக்கிறது. காலையில சாயந்திரம்ன்னு பொழுதன்னைக்கும் நிழலா சுத்தரானே! எஜமானன் பிஸ்கட்டுக்கு பழக்கப்பட்ட நாய் போல அவன் சைக்கிளும் அவ பின்னாலேயே எப்போதும் மணியடிச்சுகிட்டுப் போகுது.."
"அப்டியா?!" என்று புதிதாக கேள்விப்பட்டது போல பொய்யாக ஆச்சர்யப்பட்டார்.

"நம்ம அக்கா மவன் அந்த கம்ப்யூட்டர் சென்டர்ல படிக்கறான். பொண்ணு நல்ல சூட்டிகை. ரொம்ப நல்லா சொல்லிகொடுக்குதாம். ஆனா, ராத்திரி ஏளு மணிக்கு மேல கைலாச நாதர் கோயில் வெளிப் ப்ராகாரத்ல இந்த மதி பயலோட இருட்ல உட்கார்ந்து கூத்தடிக்குதாம். நிதமும் நடக்கிற இந்த அசிங்கத்தை பார்த்த கோயில் கூர்க்கா ஒருநாள் ஏம்மா இது நல்லா இருக்கான்னு அந்தப் பொண்ணை கேட்டுட்டு இவனைக் கண்டபடி திட்டி விரட்டியிருக்கான். அந்த வஞ்சத்தை மனசில வச்சுகிட்டு கூர்க்கா பொண்ணு டூஷன் முடிச்சு ஊருக்கு போகும்போது நாலஞ்சு காலிப்பசங்க கூட சேர்ந்துகிட்டு பஸ் ஸ்டாண்ட் கிட்ட வம்பு பண்ணி கையை பிடிச்சு இழுத்துருக்கானுங்க. அந்தப் பொண்ணோட மாமன் டவுன்ல சோலியை முடிச்சுட்டு அஞ்சாம் நம்பர் பஸ் ஏறும்போது இதைப் பார்த்துட்டு இறங்கி நாலு சாத்து சாத்தியிருக்கான். இவனுங்க எல்லாப் பயலும் சேர்ந்து அவனை அடிக்க ஒரே அமளி துமளியாப் போயிட்டுது." மூச்சு விடாமல் சொல்லி முடிக்கையில் சுனா பானா ஒரு அரை அரிசிமூட்டையாய் வளர்ந்த தொந்தியோடு வந்திறங்கினார்.

"சந்தானம் சாரா... வரணும்..வரணும்... காலமே நம்ம கொளத்தாங்கரை பக்கம்  வந்தேனே.. சொல்லியிருந்தா பையனை அரிசிமூட்டையோட வூட்டுக்கு அனுப்பியிருப்பேனே.." என்று உபசாரம் செய்தார்.
"செட்டியார்! போன தடவை கொடுத்தது ரொம்ப மோசம். இப்பதான் உங்க பையன் கிட்ட சண்டை பிடிச்சுண்டிருந்தேன். நீங்களே வந்துட்டேள். சாதம் போடும்போதெல்லாம் ஆத்துக்காரி வையறா.. ஒரு அரிசி வாங்கக் கூட துப்பு கெட்டுப் போயிட்டேன்னு.. நீங்கதான் என்ன காப்பாத்தணும்.."
"நம்ம கடை சரக்கு அப்படி இருக்காதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேம்பா" என்று முந்திக்கொண்டான் பையன்.
"இல்ல சார்! இந்த முறை நல்லா செக் பண்ணி மூட்டையை அனுப்பறேன். கவலைப் படாதீங்க. நான் உத்தரவாதம்." என்று வாணிபத்தில் அரசனான அவர் சொன்ன சொல் தவறமாட்டார் என்றறிந்த சந்தானம் சார் "பார்த்து செய்யுங்க செட்டியார்வாள்!" என்று விண்ணப்பித்துவிட்டு விஜி சென்ற திசையில் சைக்கிளை விட்டார்.

அவர் நினைத்தது போலவே கம்ப்யூட்டர் சென்டர் வாசலில் இருந்த குல்மோஹர் மரத்தின் கீழே சைக்கிளோடு கண்கள் பூத்து தேவுடு காத்து நின்றுகொண்டிருந்தான் மதி. எதேச்சையாக அவனை பார்த்தது போல
"என்னப்பா மதி.. இங்க நின்னுன்டுருக்கே!" என்று "கே" வை கொஞ்சம் ஒரு மாத்திரை நீட்டிக் கேட்டார் சந்தானம்.
"என் பிரண்ட் ஒருத்தன் கம்ப்யூட்டர் கத்துக்கறான் சார்! இப்ப கிளாஸ் முடிஞ்சுடும் அதான் வெயிட் பண்றேன்"
"உனக்கு இன்னிக்கி ஆபிஸ் இல்லே?" என்று மடக்கினார் சந்தானம்.
"சொன்னேனே சார்! காலையிலேயே கொளத்தாங்கரையில.. கொஞ்சம் டல்லுன்னு. சாயந்திரம் கலெக்ஷனை பார்த்துப்பேன்..." என்று சமாளித்தான் மதி.

சென்டர் மாடி ஜன்னலில் இந்த மதிக்கு ஒளி கொடுக்கும் சூரியனாய் விஜி நின்றுகொண்டிருந்தாள். சந்தானம் சாரைக் கண்டதும் சடுதியில் உள்ளே மறைந்தாள். சந்தானம் சார் ஒரு முடிவு எடுத்துவிட்டார்.....

(கண்டிப்பாக அடுத்த பதிவில் முடியும்)

பின் குறிப்பு: இந்த எபிசோடில் முடிக்கலாம் என்றிருந்தேன். ரமணி சார் போன்றோர் கதையோட்டத்தை தடுக்காதீர்கள் என்று கூறியதாலும் துடிப்பாக(?!?) சென்றதால் சட்டென்று முடிக்க இயலவில்லை. பெரியோர்கள் இன்னொருமுறை ஷமிக்கணும்.  வரும் பதிவில் கட்டாயம் முடித்துவிடுகிறேன்.

பட உதவி: ஏதோ ஒரு கடைத்தெரு கிடைத்த இடம். https://picasaweb.google.com/bdlearned

-

43 comments:

RS said...

me the first!

படிச்சுட்டு வரேன்.

ஸ்ரீதர்

RS said...

தொய்வு இல்லாத இடுகை.

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

Unknown said...

Dei.. muddikkarathukku ennada avasaram? Nanna poindrukku.. continue pannuda.

Unknown said...

that comment was posted by Me (Shekar)from her ID.

Anonymous said...

எளிய நடை! தொடருங்கள்.

Sivakumar said...

/ /கூட்டாளிகள் ஒவ்வொருத்தனும் கடைந்தெடுத்த ரவுடிகள். கைலியை மடக்கி நெஞ்சு வரை கட்டிக்கொண்டு லஜ்ஜையே இல்லாமல் தெருவில் உலா வருவார்கள்//

கூட்டணி தலைவர்களை கிண்டலடிக்க இதைவிட சிறந்த வார்த்தை பிரயோகம் கிடைப்பதரிது. நடத்துங்க!

G.M Balasubramaniam said...

இரண்டு அத்தியாயமும் படித்தேன்.கதை நன்றாகப் போகிறது.முடிந்த பிறகு அபிப்பிராயம் கூறுகிறேனே.வலையில் சிறுகதை எழுதினால் வரவேற்பு இருக்கிறதா. ?

எல் கே said...

ஹீரோவும் ஹீரோயினும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா ? இல்லை வில்லன் நடுவுல எதாவது பண்ணிட்டாரா ?? மீதியி விரைவில் வலைத் திரையில் காண்க

RVS said...

@RS
முதலாவதாகவும் முதல் வருகைக்கும் நன்றிங்க.. வாழ்த்துக்கும் நன்றி. அடிக்கடி வந்து எட்டிப் பாருங்க.. ;-))

RVS said...

@Kiru
தேங்க்ஸ் சேகர். அடுத்ததோட முடிச்சுடறேன். ரொம்ப இழுத்தா போர் அடிச்சுடப் போறது.. ;-))

RVS said...

@"குறட்டை " புலி
முதல் வருகைக்கு நன்றிங்க.. பாராட்டுக்கும்தான்.. அடிக்கடி வந்து போங்க பாஸ். ;-)))
உங்க பேரு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. ;-))

RVS said...

@! சிவகுமார் !
நீங்க ஒரு முடிவோடதான் இருக்கீங்க.. எப்படியும் என்னை மாட்டி விடறதுன்னு.. ;-)))))
அரசியல் நையாண்டி பதிவு ஒன்னு அப்புறமா போடறேன்.. படிச்சுட்டு சொல்லுங்க.. ;-)))

RVS said...

@G.M Balasubramaniam
முதல் வருகைக்கு ஒரு வந்தனம்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
சிறுகதை எழுதிப் பார்க்கிறேன்.. படிக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்.. ;-)))

Ashwin-WIN said...

படிச்சுட்டு வாறன்.. வெயிட்.

Yaathoramani.blogspot.com said...

மிக அருமை
சந்தானம் சாரின் படபடப்பும் துடிப்பும்
இப்போது என்னுள்ளும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Ashwin-WIN said...

கதை சுவாரசியமா போயிட்டிருக்கு.. வசன நடையில் காட்ச்சிகள் அக்குவேறு ஆணிவேறாக கண்முன் கொட்டுது. அருமை. அடுத்த பதிவுல கெட்டிமேளம் கேக்குமா?

:அஷ்வின் அரங்கம்:
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கதை களை கட்டுது...பைனான்ஸ் மாப்பிள்ளை கிட்டு ஆத்து மாப்பிள்ளை ஆவாரா இல்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்...:)

Madhavan Srinivasagopalan said...

சீர்காழி நாடி ஜோசியர் சொன்னாரு..
இந்த வரன் கூடாதாம்.. ம்ம் பாப்போம், காலம் என்ன சொல்லுதுன்னு..

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! ஒரே மூச்சுல இரண்டு பதிவையும் இப்போத்தான் படிச்சேன்.. நல்ல கதையோட்டம். அவசரமாய் முடிக்கணும்னு ஒண்ணும் கட்டாயமில்லை.. அதன் போக்குல கதையை விட்ருங்க பாஸ்! அந்தப் பொண்ணை நெனைச்சு கவலையா இருக்கு.. சுபமாய் முடிசீங்கன்னா ஈசான்ய மூலை சுகவாசி பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன் சாரே!

பொன் மாலை பொழுது said...

நல்ல Flow வில் இருக்கும் பொது குறைத்து,சுருக்கி கெடுத்து விடாதீரும் மைனர் வாள். தொடரட்டும்.
தி.ஜா.ரா. சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் கலந்தது போன்ற ஒரு கதம்ப மாலை.

sriram said...

நல்ல ஃப்ளோ வெங்கிட்டு, அடுத்த பாகத்துக்கு மீ தெ வெயிட்டிங்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

raji said...

பீச் ரோட்டில போற வண்டி மாதிரி கதை நல்லா சல்லுனு
போயிண்டிருக்கு.காரோட்டம் கதை ஓட்டம் ரெண்டுமே
உங்களுக்கு அமைஞ்சிருக்கு(ஆமா!புது கார் வந்தாச்சா?சொல்லவே இல்லை?)

சிவகுமாரன் said...

தொடர் சூப்பரா போகுது RVS சார்.
என்னுடைய புதிய வலைப்பக்கம் கொஞ்சம் வாங்க ராகமணி சார்

Chitra said...

நல்லா போகுதுங்க... வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

காதல் குறுந்தொடர்…? இரண்டு பகுதியையும் இப்போதுதான் படித்தேன். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன். வார்த்தைப் பிரயோகங்கள் அருமை.

Anonymous said...

சூப்பர் அண்ணே! :)

Unknown said...

no no mee the first...
and late..(sorry anney)

RVS said...

@Ramani
நன்றி ரமணி சார்! ஏதோ ஆரம்பிச்சேன்.. இழுக்குது இப்போ.. ;-))

RVS said...

@Ashwin-WIN
உஹும்.... கெட்டி மேளம் கேக்கலையே! முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடருங்கள்... நன்றி. ;-))

RVS said...

@அப்பாவி தங்கமணி
ஒரு பெரிய சஸ்பென்சு வச்சுருக்கேன்.. கதையா அப்படி கொண்டுபோகுது.. கருத்துக்கு நன்றி அப்பாவி. தொடர்ந்து வாங்க.. ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா. சங்கேத பாஷைல அடிச்சு தள்ற.. நன்றி.. ;-))

RVS said...

@மோகன்ஜி
உங்களைக் காணாம கலக்கத்தில் இருந்தேன். ஏற்கனவே அப்பாஜி மிஸ்ஸிங். பத்துஜிக்கு நிச்சயம் ஏதோ ஒரு அவசர வேலை இருக்கலாம். சுகவாசி பிள்ளையார்... எடுத்துக்கிட்டீங்க பாருங்க... ;-)))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
உங்களது பாராட்டு என்னை பண்படுத்தட்டும். நன்றி கக்கு-மாணிக்கம். ;-))

RVS said...

@sriram
நன்றி பாஸ்டன் மாகாணத் தலைவரே.. . அடுத்த பார்ட்டும் போட்டாச்சு... ;-)))

RVS said...

@raji
வண்டி சல்லுன்னு வழுக்கிண்டு போறதா.. நன்றி நன்றி...
புது வண்டி மூணு மாசம் வைட்டிங் டயம். இன்னமும் காத்திருக்கிறேன்... வந்தவுடன் எல்லோருக்கும் பதிவு மூலம் சாக்லேட்டு.. ;-))))

RVS said...

@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன். அருட்கவியில் இறைகவிதையாக நீங்கள் இட்டது அனைத்தையும் ரசித்து படித்து பக்தி வெள்ளத்தில் மிதந்தேன். நன்றி. ;-))

RVS said...

@Chitra
வாழ்த்துக்கு நன்றிங்க.. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல.. இன்னும் ரெண்டே ரெண்டு பார்ட்டோட முடிச்சுப்பேன்னு நினைக்கிறேன். ;-)))

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி தங்கக் கம்பி... ;-))))

RVS said...

@siva
நோ ப்ரோப்ளம். படித்ததற்கு நன்றி சிவா! ;-)))

மாதேவி said...

தொடர்கிறேன்... நன்றாக இருக்கிறது.

RVS said...

@மாதேவி
தொடருங்கள் நன்றி... ;-))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வேண்டாம் ஸார்..விஜியை விட்டுடுங்க..அந்த அப்பாவி கிட்டு சாருக்காவது....பாவம்..அவர்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails