Friday, November 4, 2011

மக்கு நான் கொக்கல்ல


சலனமற்ற காடு தனிமையில் ஆழ்ந்திருந்தது. பட்சிகளின் பண்ணிசையும் காற்றின் ”ஹோ” என்ற ஓசையையும் தவிர்த்து நிசப்தமாக இருந்தது. ஜடாமுடியுடன் ஒரு தவஸ்ரேஷ்டர் ஏரிக்கரையில் நின்று நித்யானுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார். “க்ரீச்..க்ரீச்” என்ற பறவையின் சப்தத்தைத் தொடர்ந்து ’சொத்’தென்று அவர் சூரியனை நோக்கி ஏந்திய கையில் ஏதோ விழுந்தது. அது பறவையின் எச்சம். கோபாவேசமாக அண்ணாந்து அக்னிப் பார்வையை விண்ணில் செலுத்தினார். அவரது பார்வையில் அங்கே பறந்து கொண்டிருந்த எச்சமிட்ட கொக்கு பஸ்பமாகி செத்துக் கீழே விழுந்தது.

பொசுக்கியவர் பெயர் கௌசிகன். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். வயதான தாய் தந்தையரின் சொல்லைக் கேளாமல், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காமல் "தவமே சிறந்தது” என்று கங்கணம் கட்டிக்கொண்டு காடுகளில் கௌசிகன் பன்னெடுங்காலமாக கடும் தவம் புரிந்தார். கௌசிகனுக்கு கொக்கு பொசுங்கியதில் ஆச்சர்யம். ஆஹா. நமக்கு தவப்பலன் பூரணமாகக் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தார். புதிய சக்திபெற்ற சந்தோஷம் மற்றும் சுடுபார்வை ஒரு அப்பாவி ஜீவனைக் கொன்றுவிட்டதே என்ற வருத்தம் என்று கலவையான எண்ணத்தில் காட்டை விட்டு பக்கத்துக் கிராமத்திற்கு பிக்ஷைக்கு கிளம்பினார்.

நாளுக்கொரு வீடு பிக்ஷை எடுத்து உண்பது என்று முடிவு செய்தவராய் “பவதி பிக்‌ஷாம் தேஹி” என்று இருகையையும் ஏந்தி நின்றார். மூன்று முறை கேட்டு ஒரு வீட்டிலிருந்து பிக்‌ஷை அரிசி வரவில்லையென்றால் அன்றைக்கு பட்டினி தான். உள்ளுக்குள் கோபம் ஆறாக ஊற்றெடுக்கத் தொடங்கியது. மீண்டும் ஒருமுறை “பவதி பிக்ஷாம் தேஹி” என்று உரத்தக் குரலில் பிக்ஷை கேட்டார். இவரைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டின் இல்லத்தரசி கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இப்பவும் பதில் வரவில்லை. கௌசிகனுக்கு முகம் ஜிவ்வென்று சிவந்தது. கோபத்தின் உச்சிக்கு சென்று இன்னும் சப்தமாக “பவதி பிக்ஷாம் தேஹி” என்று குரலை உயர்த்தினார்.

அச்சந்தர்ப்பத்தில் அப்பெண்மணியின் கணவனார் வேலையிலிருந்து வீடு திரும்பினார். கொல்லைப்புறத்தில் இருந்தவள் போட்டது போட்டபடி ஓடிடோடி வந்தாள். வாசலில் கையேந்தி நின்றவரைப் பார்த்து “கொஞ்சம் பொருங்கள்” என்று கையால் சமிக்ஞை செய்துவிட்டு கணவனுக்கு சிஸ்ருஷ்டை செய்யலானாள். இவருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவளுக்காக காந்திருந்தார்.

கோபம் எல்லைமீறிப் போய் சபிக்கலாம் என்று நினைக்கும் வேளையில் அந்த வீட்டின் குலஸ்திரீ கையில் அரிசியுடன் பிட்சையிட வந்தாள். அவளை சுட்டெரித்துவிடும் பார்வையை அவள் மேல் வீசினார் கௌசிகன். அப்பெண்மணி கற்புக்கரசி. மாதரசி. சிரித்த வண்ணம் சாந்தமாக “உன் கோபப்பார்வையில் சுட்டுப் பொசுக்கிவிடுவதற்கு என்னை அந்தக் கொக்கென்று நினைத்தாயோ?” என்று கேலியாகக் கேட்டாள்.

ஆளரவமற்ற பகுதியில் தான் கொக்கை எரித்தது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று கௌசிகனுக்கு மிகுந்த ஆச்சரியம். 

“அம்மா! நீங்கள் உத்தமமான பெண். நான் காட்டில் கொக்கை எரித்தது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று பணிந்து கேட்டார் கௌசிகன்.

 ”முனிவரே! நான் என் இல்லத்து தேவைகளனைத்தையும் குறையில்லாமல் நிறைவேற்றுகிறேன். எனது வயதான மாமியாரையும், மாமனாரையும் சொந்த தாய் தகப்பன் போல போற்றிக் காத்து வருகிறேன். மேலும், எனது கணவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் குறையில்லாமல் செய்கிறேன். என்னுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு அவர்கள் மனம் கோணாமல் தாராளமாக பொருள் தருகிறேன். என் கணவருக்கு சேவை செய்தபின் நேரமிருப்பின் மற்றவர்களுக்கு உபகாரமாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய தர்மம். உங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமென்றால் மிதிலையில் தர்மவியாதரன் என்றவரிடம் போய் தர்மத்தின் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினாள்.

அம்மாதருள் மாணிக்கத்தை வணங்கி விடைபெற்று மிதிலை மாநகரத்திற்கு சென்றார் கௌசிகன். இவ்வளவு பெரிய நகரத்தில் தர்மவியாதரனை எங்கு தேடுவது என்ற யோசனையில் அங்கு கடைவீதியில் விசாரித்தார். ஒரு மாமிசம் விற்கும் கடையைக் காட்டி அங்கிருப்பவர் தான் தர்மவியாதரன் என்றார்கள்.

கசாப்புக்கடை வைத்திருப்பவரிடன் என்ன தர்மத்தை நாம் எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணத்தோடு அந்தக் கடையை நெருங்கினார் கௌசிகன்.

மிகவும் தயக்கத்தோடு “தர்ம வியாதரன்....” என்று சங்கோஜமாக கேட்ட கௌசிகனுக்கு “வாருங்கள்.. வாருங்கள்... நீங்கள் கொக்கை எரித்ததை ஞானக்கண்ணால் கண்ட பதிவிரதையான பெண்மணி சொல்லி என்னிடம் தர்ம விளக்கம் பெற வந்திருக்கிறீர்கள். வரவேண்டும். வரவேண்டும். எனது வீட்டிற்கு சென்று பேசலாம்” என்று அன்போடு அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே கொக்கை எரித்ததை எங்கிருந்தோ கண்டுகொண்ட அந்த பதிவிரதை பற்றிய ஆச்சரியத்துடன் வந்தவர் இங்கே தர்மவியாதரரின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனார்.

வீட்டில் தனக்கு அநேக உபசாரங்களைச் செய்த தர்மவியாதரரிடம் “எங்கோ நடைபெற்ற சம்பவங்களை இங்கிருந்தே அறிந்த நீர் பல தர்மங்களை தெரிந்தவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் இந்த மாமிசம் விற்கும் தொழிலை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது என்னுடைய குலத்தொழில். என்னுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இத்தொழிலை செய்துவருகிறோம். இது கொஞ்சம் மோசமான தொழில் தான். ஆனால் முன் பிறவில் நான் செய்த வினையை இப்போது அனுபவிக்கிறேன். இப்புவியில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றிர்கொன்று உணவாக அமைகிறது. இயற்கையை ஒட்டியும் நேர்மையாகவும் நான் செய்யும் இத்தொழில் மோசமானது அல்ல.”

இதன் பின்னர், பல தர்ம விளக்கங்களை கௌசிகனுக்கு எடுத்துக் கூறலானார் தர்மவியாதரன்.

“பொய் பேசுவதை மனிதர்கள் விட்டுவிட வேண்டும். நன்மைக்கு அளவுகடந்த இன்பப் படுவதும், தீமைக்கு துன்பக்கடலில் வீழ்வதும் முற்றிலுமாக தவிக்கவேண்டிய குணங்கள். தர்மம் மிகவும் நுட்பமானது. இக்கட்டான வேளைகளில் தர்மம் காக்க பொய் சொல்லலாம். ஆபத்தில் சொன்ன பொய்யை மற்றவர்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பின்னர் பிரிதொசொல்வது பாபத்தை விளைவிக்கும்.

இவ்வுலகத்தில் கெட்டவன் சுகிப்பதும், நல்லவன் நலங்கெட்டுப் போவதும் தத்தம் முன்வினைப்பயனே! அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் வாழ்கிறார்கள்.

அதற்கு கௌசிகர், “இன்னார் பிறந்தார், இறந்தார் என்றால் அது அந்த ஜீவனைப் பற்றித்தானே, அப்படியிருக்கையில் ஜீவன் அழிவற்றது என்று எப்படிக் கூறலாம்?” என்று கேட்டார்.

“ஒருவர் இறக்கும்போது அழிவது சரீரம்தானே தவிர ஜீவன் அல்ல. ஜீவன் ஒரு உடலை விடும் பொழுது இறப்பு என்றும் இன்னொரு உடலை அடையும் பொழுது பிறப்பு என்றும் கூறுகிறார்கள். சரீரம்தான் அழிகிறதே தவிர ஜீவன் அழிவற்றது. ஜீவன் அமரத்தன்மை வாய்ந்தது.” என்றார் தர்மவியாதரர்.

மேலும் அவர் கூறினார்: “மனிதன் மூவகைக் குணங்களோடு படைக்கப்பட்டிருக்கிறான். தமோ, ரஜஸ், சத்வ என்று அவை வகைப்படும். தமோ குணம் படைத்தவன் சோம்பேறியாகவும், முட்டாளாகவும் இருப்பான். ரஜஸ் படைத்தவன் பொருள் ஈட்டுவதிலும், சக்தி உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் அவனிடம் தான் என்ற அகந்தையும் இருமாப்பும் இருக்கும். சத்வ குணம் படைத்தவன் சாந்தமாகவும், பற்றற்றும் இருப்பான். பொருள் ஈட்டுவதில் அவன் மனம் செல்லாது”.

இப்படி பல தர்மங்களை கௌசிகருக்கு எடுத்துரைத்து தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து புண்ணியம் பெற்றுக்கொள்ளுமாறு தர்மவியாதரர் உபதேசித்தார்.

பின்குறிப்பு: மகாபாரதத்தில் மார்க்கண்டேய மகரிஷி தர்மபுத்திரருக்கு வனபர்வத்தில் சொல்லும் இக்கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய வழக்கமான மொழியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அடக்கமாக எழுதினேன். போரடித்திருக்கலாம். இருந்தாலும் காலை வாக்கிங்கில் கசாப்புக்கடை பார்த்ததும் ஞாபகம் வந்ததால் எழுதினேன்.

பட உதவி: mbp.photoshelter.com

-

37 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

முன்பே தெரிந்த கதை என்றாலும், அதை மீண்டும் ஒரு முறை உங்களது நடையில் படித்ததில் இன்பம்.

ஸ்ரீராம். said...

'பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்' பாடல் இடம்பெற்ற படத்தின் பெயரை நினைவுக்கு வந்திருக்கும் கௌசிகருக்கு...(அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டு நடந்திருப்பாரே, அதனால் எதிர்காலமும் தெரிந்திருக்குமே...)
நான் தமோவாக இருப்பதால்தான் சத்வனாக இருக்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் நீதிக்கதை. காலையில் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

Ponchandar said...

”கொக்கென்று நினைத்தாயோ ? கொங்கனவா” - அப்படின்னு பாட்டியிடம் கதை கேட்டது நினைவுக்கு வருகிறது....

சக்தி கல்வி மையம் said...

போர் எதுவும் அடிக்கல, தெரிந்த கதை உங்கள் நடையில் இன்னும் சுவாரஸ்யமாய்..

Yaathoramani.blogspot.com said...

தெரிந்த கதைதான் என்றாலும் சொல்லிச் செல்லும் விதத்தால்
முழுவதையும் சுவார்ஸ்யமாக படிக்க முடிந்தது
தங்கள் பாணி கதை சொல்வதில் இல்லை என்றாலும்
தலைப்பில் இருக்கிறதே
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்

RAMA RAVI (RAMVI) said...

அருமையான பதிவு.தெரிந்த கதைதான் என்றாலிஉம் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.
அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.நன்றி

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என்றைக்கும் திகட்டாத ஞானப்பால் பருகக் கொடுத்த உம்மைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை ஆர்.வி.எஸ்.

தர்மத்தின் போதனைகள் எத்தனை முறை எத்தனை வாயால் கேட்கப்படும்போதும் அலுப்பதில்லை.

உமது மொழிக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு.அடிக்கடி இப்படி எதிர்பார்க்கிறேன்.

சிவகுமாரன் said...

உங்கள் மொழியில் " கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா " கேட்க சுவையாக இருந்தது.
அருமை RVS

ஹ ர ணி said...

ஏற்கெனவே படித்த கதை என்றாலும். எத்தனைமுறை படித்தாலும் ஞானத்தைப் பெருக்கிக்கெர்ள்ளும் ஆர்வத்தையும் நம்மை நாம் எடைபோடவும் உதவுகிற கதை ஆர்விஎஸ். நன்றி. உங்கள் மொழிநடை நேர்த்தியாக செய்தியை மனதிற்குள் அனுப்புகிறது.

ரிஷபன் said...

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா.
அருமை.

பொன் மாலை பொழுது said...

காலை வாக்கிங் போனபோது கண்ணில் பட்ட கசாப்பு கடையினால் நமக்கும் ஒரு அறிதான கதை கிடைத்தது.
சரி , மீன் கடையும்தான் கூடவே உள்ளதே ! அதையும் வைத்து ஒன்று எடுத்துவிடலாமே மைனரே.
உங்களிடம் வம்படித்து நீண்ட நாளாகிறது ராஜா.

பொன் மாலை பொழுது said...

// 'பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்' பாடல் இடம்பெற்ற படத்தின் பெயரை நினைவுக்கு வந்திருக்கும் கௌசிகருக்கு...(அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டு நடந்திருப்பாரே, அதனால் எதிர்காலமும் தெரிந்திருக்குமே...//

-------ஸ்ரீ ராம் .


கொஞ்ச நாளா வரமுடியல. என்னமோ நடந்திருக்கு. வல்லவனுக்கு வல்லவன் படத்தில் வரும் பாட்டல்லவா அது? என்னைய்யா ஆச்சு? ஸ்ரீராம் நீங்களாவது சொல்லுங்க.

Thozhirkalam Channel said...

நீதிக் கதைகள்...

தேடியதில் சில மட்டுமே கிடைத்தது.. அதில் சிறப்பாக உங்கள் பதிவு அமைந்தது...

R.SOLAIYAPPAN said...

ungal pathivukalai puthakama pooduvirkala? enakku avasiyam vendum

R.SOLAIYAPPAN said...

unkalathu pathivai patipavargal meeting pottal enna ?

அப்பாதுரை said...

:ஸ்ரீராமு என்ன சொல்றாரு?
:தெரியலியே பரட்டை.

Anonymous said...

மகாபாரதம் குறித்து சுமாராக தெரிந்து வைத்திருக்கும் எனக்கு இக்கதை புதிது. சோலையப்பன் சொன்னதை நினைவில் கொள்க. It will sell like a hotcake.

RVS said...

@-தோழன் மபா, தமிழன் வீதி
மிக்க நன்றி! படித்த நினைவிலிருந்து எழுதியது. :-)

RVS said...

@ஸ்ரீராம்.
தமோவிற்கும் சத்வத்திற்கும் நிறைய வித்யாசம் பெரியவா தெய்வத்தில் குரலில் சொல்கிறார்.:-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல! :-)

RVS said...

@Ponchandar
குட். பட்டப் படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி கதையை மறக்காதே!! :-))))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
போர் அடிக்கலைன்னு சொல்லி நீங்களே பிரச்சனையில மாட்டிக்கிறீங்க.. நா பாட்னுக்கு வரிசையா இது போல எழுதினா தாங்குவீங்களா? :-))))

RVS said...

@Ramani
தலைப்பில நான் தெரியறேனா? நல்லா உன்னிப்பா பார்க்கிறீங்க சார் நீங்க.. :-)

RVS said...

@RAMVI
நன்றி மேடம்! :-)

RVS said...

@சுந்தர்ஜி
தர்மத்தின் போதனைகள்... வார்த்தையை நீங்கள் கோர்க்கும் விதமே அபாரம் ஜி! வாழ்த்துக்கு நன்றி! :-)

RVS said...

@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன். மன்னையில் சேர்ந்துவிட்டீர்களா? :-)

RVS said...

@Harani
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி. இது மென்மேலும் நான் இதுபோல எழுதுவதற்கு உதவும். :-)

RVS said...

@ரிஷபன்
நன்றி சார்! :-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மாணிக்கனாரே எங்க போனீங்க? ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் காத்தடிச்சு. சௌக்கியமா? மீன் கதை இருக்கு. இன்னொரு சமயம் எழுதறேன். நன்றி. :-)

RVS said...

@Cpede News
நன்றி! :-)

RVS said...

@R.SOLAIYAPPAN

// ungal pathivukalai puthakama pooduvirkala? enakku avasiyam vendum//

மன்னார்குடி டேஸ் என்று ஒன்று எழுதிவருகிறேன். பத்திரிக்கை நண்பர் ஒருவருக்கு அது மிகவும் பிடித்துப்போய் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். :-)

RVS said...

@R.SOLAIYAPPAN said...

// unkalathu pathivai patipavargal meeting pottal enna ?//

பயமா இருக்குங்க.. :-)))) உங்கள் அன்புக்கு நன்றி! :-)

RVS said...

@அப்பாதுரை
எனக்கும் ஒன்னும் புரியலை சார்! :-)

RVS said...

@! சிவகுமார் !
ஹா..ஹா. சி........வா.................. :-))))

நன்றி! :-)

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

இல்லை. இன்னும் அந்த Project நிலுவையில் உள்ளது

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails