Saturday, April 3, 2010

புரட்சி எழுத்தாளன்

ரெண்டு நாளா ஒண்ணுமே எழுதலை. என்ன பண்ணுறதுன்னு புரியலை. ஏப்ரல் ஒண்ணாம் தேதி முட்டாள் தினம். முட்டாள் தினத்தை பத்தி எழுதலாம்னா யாராவது உன் தினத்தைப் பத்தி நீ எழுதலைன்னா தான் அதிசயம் அப்படின்னு ஒரு கமெண்ட் அடிச்சா என்ன பண்றதுன்னு கப்சிப்ன்னு ஆயிட்டேன். இந்த இலக்கிய பணி ஆற்றுவதற்கு வந்த பின்னே எழுதாம எப்படி இருக்கறதுன்னு ஒரே கவலையோட சேர்ந்து மனசு பூரா  நெகிழ்ச்சி வேறு. இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல.

இன்றைக்கு என்ன எழுதறதுன்னு பார்த்தா, இன்னைக்கும் ஒன்றும் இல்லைதான். ரெண்டு மூனு பேர் போன் பண்ணி
"என்ன சார் சைட் அப்டேட்டே ஆவல. என்ன பண்றீங்க. உங்களோட எழுத்தை படிச்சுட்டு யாராவது ஆள் செட் பண்ணி அடிச்சிட்டாங்களா?" என்று ஒரே நக்கலும் நையாண்டியுமாக  கேள்வி வேற.
"இல்லைங்க மனசுல கிரியேட்டிவ் ஐடியா எதுவும் தோணலை. அதான்..." இப்படி கொஞ்சம் உண்மையைச்   சொன்னாலும்,
"ரெண்டு நாள் முன்னாடி சல்லாப சாமியார் பத்தி எழுதினீங்களே.. அவர்தான் உங்களுக்கு ஆள் உட்டாருன்னு நெனச்சோம்..."
"சேச்சே..." என்ற என்னுடைய பதிலை லட்சியம் செய்யாமல் ...
"ஸார் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... இப்பெல்லாம் ரௌடின்னு சொல்லிக்கிறவன் கூட இவ்வளோ தில்லாலங்கடி வேலை செய்யறது கிடையாது. காவி டிரஸ் போட்டுக்கிட்டு இவனுங்க பண்றது தான் ஊர்ல பெரிய அயோக்கியத்தனமா இருக்கு... "
"உங்க அட்வைஸ்சுக்கு  நன்றிங்க..." என்று போனை கட் செய்யப்போகும் போது "
நீங்க ஒரு பெரிய எழுத்தாளர்... உங்களோட நடை நிறைய பேருக்கு அப்படியே அவுங்க மனசை  உங்களுக்கு கொடுக்கனும் போல இருக்குன்னு என்கிட்டயே சொல்லி இருக்காங்க...குறிப்பா பொண்ணுங்க..."  என்று சொல்லி மீண்டும் என்னை உசுப்பேத்தினார் அந்த வாசக அன்பர். ஒருவழியாக தப்பித்து சரி உலக மகா எழுத்தாளனாயிட்டோம் இப்படி ஏதாவது இரண்டு பேர் கிளப்பிவிட்டுகிட்டுதான் இருப்பாங்க என்று நினைத்து உடம்பை ரணகளம் பண்ணிக்கொள்ளாமல் மூன்று நாள் முடிந்த தேய்பிறை பௌர்ணமி நிலவின் வெளிச்ச வானத்தைப் பார்த்துக்கிட்டு சும்மா வெட்டியா உக்காந்திருந்தேன்.

தேமேன்னு உட்கார்ந்திருந்த நேரம் வாசலில் நிழலாடியது. ரெண்டு பேர் வாசலில் நிற்பது தெரிந்தது. வெள்ளை ஜிப்பாவும், வேட்டியும் கண்டபோதே ஒரு சந்தேகம் இருந்தது. கையில் அந்த "நித்ய பிரம்மச்சாரி" புத்தகத்தை பார்த்ததும் சந்தேகம் ஊர்ஜிதமானது. அந்த புத்தகத்தில் என் எழுத்தின் சக்தியால் அவரால் தென் தமிழகத்தில் ஒரு அஞ்சாறு ஆசிரமம் அமைத்து கொஞ்சம் சில்லரை பார்க்க முடிந்தது.
"சாமி ரொம்ப வருத்தப்பட்டாரு.."
"ஏன்?"
"நீங்க பன் டி.வில கொடுத்த பேட்டி..."
"ஆமா... கொடுத்த வாக்கை காப்பாத்தனும்னு இருக்காயா அவனுக்கு. என்னமா எல்லார்ட்டயும் வெட்டி நாயம் பேசுறான்.."
"நிச்சயம் காப்பாத்துவாருங்க. இந்த இக்கட்டு நேரத்தில போயி....இப்படி கன்னாபின்னான்னு வாய்க்கு வந்தபடி..... "
"என்னய்யா வந்து போயி... இக்கட்டுன்னு பார்தானாயா அவன்... எல்லாத்தையும் பொதுப்படையா பண்ணிக்கிட்டு திரியறான்...நம்மால வெளியில தல காட்ட முடியுதாயா?"
சத்தம் கொஞ்சம் அதிகம் ஆனதும் என் பக்கத்துக்கு வீட்டு பேங்க் மேனேஜர் சம்சாராம் ஏதோ போல பார்த்துவிட்டு தன் பதின்ம வயது ஜீன்ஸ் அணிந்த  பெண்ணை அவசரவசரமாக உள்ளே இழுத்து அழைத்துச் சென்றது.
"நீங்க கையிலே வச்சிரிக்கீங்களே... இந்த புத்தகம்.. என்னோட உழைப்புயா... இதுல இருக்கிற மாதிரியா இருக்கான் அவன்....பொறுக்கி.. பொம்பளை பொறுக்கி.." இன்னும் பி.பி ஏறி உரத்த குரலில் கத்த ஆரம்பித்தேன்.
"இதை கொடுத்துட்டு வரச்சொன்னாரு.... மீதியை அப்புறமா.." என்று தயங்கி தயங்கி இழுத்தார்கள். பின்னாலிருந்து ஒரு பெட்டியை எடுத்தார்கள்.
ப்ரீப்கேஸ்சை பார்த்ததுமே சற்று புரிந்தது போல் இருந்தது.  அதை திறக்க முற்றிலும் புரிந்து வாயடைத்து விக்கித்து நின்றேன். எல்லாம் சலவை ஆயிரம் ரூபாய் நோட்டாக மாயாவதிக்கு போட்ட மாலை போல இல்லாமல் உதிரிக் கட்டுகளாக  பெட்டியில் படுத்திருந்தது. இதை முன்னமே பார்ததிருந்தால் இவ்வளவு சத்தமே  போட்டிருக்க மாட்டேன். நமக்கே இவ்வளவு என்றால், போலீஸ், கவர்ன்மெண்ட், பெரும்புள்ளி, கரும்புள்ளி, கூட்டாளி, எதிராளின்னு எவ்வளோ பேருக்கு பல சைஸ்ல பெட்டி போயிருக்கும்ன்னு நினைத்தேன்.
"சரி சரி... அதை அங்க  வச்சிட்டு போங்க...அப்புறமா வந்து பார்கிறேன்னு சொல்லுங்க..." என்று வழியனுப்பி வைத்தேன்.

"அவர் ஒரு மகான். தீர்க்கதரிசி. அவர் கை பட்டால் தகரம் தங்கமாகும். அவருக்கு ரசவாதம் தெரியும். ஸ்தூல சரீரமாக ஓரிடத்தில் ஒரு பெண்ணுடன் இருந்தாலும் சூட்சும சரீரமாக ஒரே நேரத்தில் அவரால் பல இடங்களில் அவதாரம் எடுத்து தோற்றமளிக்க முடியும்.............." என்று "நித்ய பிரம்மச்சாரி - II" புத்தகத்தை எழுதுவதற்கு ஆரம்பித்திருந்தேன் மறுநாள் மாலையில் என்னுடைய புது மடிக்கணினியில்.பாங்கிலும் என் கல்லா நிரம்பியிருந்தது.

பின்குறிப்பு: இது ஒரு கதை, கதை , கதை தான்  என்று உங்கள் தலையில் அடித்து சத்தியமாக கூறிக்கொள்கிறேன்.

9 comments:

ramanindia_I luv India said...

மன்னை மன்னா!! நான் இருப்பது இளித்தவாயர்கள் பட்டியலிலா அல்லது சிடுமூஞ்சிகள்
பட்டியலிலா- என்று பிறகு சொல்லுங்கள்! இட்லிவடை பக்க அழை பிலிருந்து வந்திருக்கேன் !! உங்கள் பக்கங்கள் பலமா இருக்கு -- அனால் ரொம்ப நீளமா இருக்கு, அதனாலே கிறிஸ்ப் கம்மி மாதிரி தோன்றுகிறது!!மீண்டும் முதல் வாக்கியம் படித்து பதில் சொல்க!!
- அன்புடன் ரோமிங் ராமன்.

ramanindia_I luv India said...

மன்னை மன்னா!! நான் இருப்பது இளித்தவாயர்கள் பட்டியலிலா அல்லது சிடுமூஞ்சிகள்
பட்டியலிலா- என்று பிறகு சொல்லுங்கள்! இட்லிவடை பக்க அழை பிலிருந்து வந்திருக்கேன் !! உங்கள் பக்கங்கள் பலமா இருக்கு -- அனால் ரொம்ப நீளமா இருக்கு, அதனாலே கிறிஸ்ப் கம்மி மாதிரி தோன்றுகிறது!!மீண்டும் முதல் வாக்கியம் படித்து பதில் சொல்க!!
- அன்புடன் ரோமிங் ராமன்.

பெசொவி said...

//பின்குறிப்பு: இது ஒரு கதை, கதை , கதை தான் என்று உங்கள் தலையில் அடித்து சத்தியமாக கூறிக்கொள்கிறேன்.
//

நல்ல "கதை"யா இருக்கே, நான் நம்பத் தயாராய் இல்லை.

இளைய கவி said...

தாங்கள் எழுதியது மிகவும் நன்றாக உள்ளது

இளைய கவி said...

ggyboy

RVS said...

ராமண்ணா! நீங்கள் இருப்பது நிச்சயமாக இளித்தவாயர்கள் பக்கமே. பல் தெரியாதவர்களிடம் நான் பேசும் வழக்கமே இல்லை.
வருகைக்கு நன்றி, ரோமியோ ஸாரி, ரோமிங் ராமன் அவர்களே....

நம்பினோர் கைவிடப்படார், ஆனால் இதை நிச்சயமாக நம்பக்கூடாது பெயர் சொல்ல விருப்பமில்லை....

ggyboy அப்படீன்னா என்ன இளைய கவி. உங்களோட profile படத்துல உங்களுக்கு முத்தா குடுக்கறது உங்க அத்தைப் பொண்ணு தானே!

வந்து கதை படிச்சுட்டு போனதுக்கு எல்லோருக்கும் ஒரு வணக்கமுங்கோ....

Madhavan Srinivasagopalan said...

"சாமியார் மேட்டர வச்சு எவேவனோ பொழப்பு நடத்துறான்.. எதோ நம்மாலா வலைப்பூல பதிவாது எழுதலாமே"ன்னு உன்னோட உள்மனசு சொல்லுறது.. புரியுது தலைவா... நடத்துங்க நடத்துங்க..

மன்னார்குடி said...

மன்னை மன்னா - இந்த டைட்டில் நல்லா இருக்கே.

RVS said...

மன்னை மன்னா நல்லாத்தான் இருக்கு.. ஆனா யாரோ கூப்பிடற மாதிரி இருக்குல்ல...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails