மணி என்னிலேர்ந்து ஜூன் 18 முதல் அப்படின்னு விளம்பரம் போட ஆரம்பிச்சாரோ அன்னிலேர்ந்து நானும் டிக்கெட் பிச்சை எடுத்துப் பார்க்கிறேன் ஒன்னும் பேர மாட்டேங்குது. பல பிரஸ் நண்பர்கள் கிட்ட கூட திருவோடு ஏந்தி பார்த்துட்டேன். என்னிக்கு வேணும் அப்படின்னு கேட்டுட்டு, எந்த நாளுக்கு கேட்கறோமோ அன்னிக்கி கிடைக்கறது கஷ்டம், ஆனா பார்க்கலாம் அப்படின்னு ஒரு ஸ்டாண்டர்ட் டயலாக் விடும் போது ஒரு பாணம், ஒரு மனைவி, ஒரு சொல் அப்படின்னு வாழ்க்கைல இருக்கணும்னு எ.கா இருந்துட்டுப்போன த்ரேதா யுக ராமன், பத்து தலை ராவணனுக்கு மேலோக டிக்கெட் கொடுத்தவண்டதான் சினிமா டிக்கெட் கேட்கணும் போலருக்கு. நவீன ராம, ராவணாதிகளை பெரிய ஸ்க்ரீன்ல பார்க்கலாம்னா முடிய மாட்டேங்குதே. எஃப்.எம் ரேடியோக்கல்ல பாடல்களுக்கு நடுவில் விக்ரம் "ஏலே, ராவணன்லே...." என்று அடித்தொண்டையில் கமறி பேசும்போது "ஏலே, கிடைக்கலலே...." என்று சொல்லி பார்த்துக்கொள்கிறேன்.
என் கிட்ட ஹை ஸ்பீட் இன்டெர்நெட் இருக்கு, சிரிக்கிற காந்தி படம் போட்ட தாள் இருக்கு, சத்யத்ல போய் பார்க்கறத்துக்கு ஒரு நாலு கால் வண்டி இருக்கு, நாக்கை தொங்க போட்டு நாலு மணி நேரம் ஸ்க்ரீன் நோக்க கொள்ளை ஆசை இருக்கு. இவ்வளவு "இருக்கு" இருக்கிற இந்த பரம ஏழைக்கு டிக்கெட் மட்டும் தான் இல்லை, படம் பார்ப்பதற்கு. நான் பெரிய எழுத்தாளன் இல்லை, ஆகையால் யாரும் ஒசியில் டிக்கெட் ஏற்பாடு செய்யவேண்டாம் என்று வலது கை ஆள் காட்டி விரலை நீட்டி முன்னும் பின்னும் ஆட்டி கேட்டுக்கொள்கிறேன்.
சுகாசினி வசனம், சிவன் கேமரா, பிரம்மாவும் பெருமாளும் தயாரிப்பு அப்புடி இப்புடின்னு பதிவுலக ஜாம்பவான்களின் பட விமர்சனங்களை படித்து பார்க்கிறபோது, படம் பப்படமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் ரெண்டு நாள் போனா சத்யம் தியேட்டர்லேர்ந்து ஆந்த்ரா பக்கத்துல இருக்கிற பட்டாபிராம் வரை வீட்டுக்கு வந்து கதவை தட்டி டிக்கெட் கொடுப்பாங்க போலிருக்கு. இடைத்தேர்தல்ல ஓட்டுபோட காசு கொடுக்குற மாதிரி. பார்க்கலாம் பாலம் கட்டின D. ராமன் B. E (நம்ம சீதா புருஷன் தான்), காதில் விழுந்ததான்னு.
இதுல என்ன உண்மை ரிப்போர்ட்ன்னு கேட்டா, நான் இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்த பின்பு என்னுடைய கலை விமர்சனம் பதிவேற்றம் செய்யப்படும்.
பட உதவி: www.behindwoods.com
3 comments:
உங்க 'உண்மையான' ரிபோர்ட்டு புல்லரிக்க வேச்சுட்டுதுங்க..
We can see this once. Modern Ramayanam!
pattabiram appadinna pattabishega ramannu artham. adhanala ravananukkum ramanukkum epodhume ezham porutham than
Post a Comment