Thursday, September 2, 2010

டைம் பாஸ்

templetankரமா பார்க்க பளபளவென்று துடைத்த பழுத்த தக்காளிப்பழம் போன்று இருப்பாள். "ஏ கொஞ்சம் முக்கு கடை வர போய்ட்டு வரியா?" என்று புன்னகைத்து கை நீட்டி வேலைக்கு ஏவும் அவள் கையிலிருந்து காசு வாங்கிக்கொண்டு அரைத்துணி அவிழ வேகமாக ஓடிப்போய் சேவகம் செய்தவர்கள் அநேகம் பேர் தெருவில் உண்டு. வலது கையால் அவ்வப்போது மேலாக்கை சரி செய்துகொண்டு இடது கையால் முன்னால் விழும் கேசத்தை ரஜினி போல் ஒதுக்கும் அவளது அளப்பரிய ஸ்டைல் அந்தத் தெரு பெண்மணிகளுக்கே பார்க்க அவ்வளவு இஷ்டம். அவள் அன்பாய் இட்ட கட்டளையை யாரும் தட்டினதே இல்லை. வாசல் தெளித்து இரு கால் பரப்பி கோலமிடும் அவள் கோலத்தை பால்காரனிலிருந்து பேப்பர்க்காரன் வரை "ய...ம்...மா..டி.." என்று இரண்டாம் முறை திரும்பி வாய் பிளந்து பார்க்காமல் சென்றதும் இல்லை. தெருவில் செல்வோருக்கு அதிகாலை சூடான ஸ்ட்ராங் ஃபில்ட்டர் காபி அவள். தெருமுனையில் இருக்கும் குளக்கரை வரசித்தி விநாயகர் கோயிலுக்கு போகும் போது கூட தன் விசாலமான பார்வையை நாலாபக்கமும் வீசியபடி செல்வது அவளுக்கு வாடிக்கை.

"பத்து ரெண்டு நாள் ஊருக்கு போயிருக்கான், கிழம் வச்ச கண்ணை எடுப்பேனாங்கிறது.." என்று உரசியபடி வந்த லக்ஷ்மியின் கைமுட்டி இடித்து சொன்னாள் உமா. ஒரு மஞ்சள் கலர் பாவாடை அரக்கு கலர் தாவணியை கோயிலுக்கென்று யூனிஃபார்மாக வைத்திருந்தாள். பத்து நாலு வீடு தள்ளி இருக்கும்  ஒரு அந்நியன் அம்பி. பரம சாது. ஆனால் "நாட்டில் நியாயம் செத்துண்டிருக்கு. பகவானே யாருக்குமே அக்கறையில்லையா.." என்று அடிக்கடி வீதிகளில் நாலு பேரோடு பேசி வெட்டி ரோஷம் காண்பிப்பவன். அவன் இருக்கிறானா என்று நோட்டப் பார்வையில் சிக்கியவர் அந்தக் கிழவர்.
"அந்த பாம்பே மாப்பிளையை நீ கட்டிண்டிருக்கலாம்" என்று சொன்ன லக்ஷ்மியை பார்த்து இதழோரம் புன்னகை பூத்து "அவனுக்கு தலையிலே முடியே இல்லைடி...அவனைப் பார்த்தாலே சிரிப்பு சிரிப்பா வருதுடி.." என்றாள்.

"முடி இல்லைனாலும் அவனுக்கு மூளை நிறைய இருக்கு. நல்ல உசந்த பதவி, கார், பங்களா, பாங்க்ல பாலன்ஸ்ன்னு எக்கச்சக்கம் வச்சுருக்கான். மனுஷன் செய்யாததையா தலை மேலே இருக்கும் ம** செய்யப்போவுது?" என்று நறுக்கென்று கேட்டாள் லக்ஷ்மி.

"ஒரு கிராமத்து பைங்கிளியைதான் தாலி கட்டி கையோட கூட்டிண்டு போவேன்னு குரங்கா அலையறான். இப்ப சொல்லு நீ கட்டிக்கிறியா? அவன் இன்னும் ஊருக்கு போகலை. நாலாந்தெரு வெங்கடேச வாத்தியார் ஆத்துலதான் டேரா போட்ருக்கான். பொண்ணு இருக்குன்னு யாராவது கூப்பிட்டா தாவி குதிச்சு "ஆட்ரா... ராமா" அடிச்சு வந்து நிப்பான்".

லக்ஷ்மிக்கு என்னவோ போல் இருந்தது. ரொம்பவும் நோண்டிவிட்டோமோ. "எனக்கு எங்கப்பா அக்கரை சீமையிலிருந்து மாப்பிள்ளை தேடிக் கொண்டு வராராம். என்னை ஆளை விடும்மா." என்றாள் லக்ஷ்மி.  கோயிலில் கூட்டம் ஒன்றும் அதிகம் இல்லை. சதுர்த்தி அர்ச்சனை செய்ய ஒரு பாட்டியும் பேத்தியும் மூஞ்சுறு வாகனம் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். லக்ஷ்மி இடது புறம் திரும்பி குருக்களை தேடியபோது தான் கவனித்தாள். தேன் குடித்த வண்டாக டிரைவர் கோபால் தம்பி பிரபாகர் பிள்ளையார் கோயில் பிரகாரத்திலேயே சுற்றி சுற்றி வருவது தெரிந்தது. பிள்ளையார் என்றால் "பிள்ளை யார்?" என்று சந்தேகமாக புருவம் உயர்த்துபவன்  பயபக்தியோடு கற்பூரம் எடுத்து இருகைகளாலும் கண்களில் ஒற்றிக்கொள்வதும், "வீபுதி.." என்று கேட்டு வாங்கி இடது கையில் மாற்றி நெற்றியில் இட்டுக் கொள்வதும்....கணேச குருக்கள் மந்திரத்தையே மறந்துவிட்டார்.

"ஏண்டிம்மா.. ரமா.. சௌக்கியமா... ஆத்துல எல்லோரும் நன்னா இருக்காளா.. நோக்கு பாம்பே மாப்பிளை பார்க்கறதா சொன்னாளே... என்னாச்சு" என்று பாதி உதிர்ந்த ஒரு ஜான் மல்லிப்பூ பிரசாதம் கொடுத்துக்கொண்டே குசலம் விஜாரித்தார் குருக்கள். 

அபிஷேகத் தண்ணீர் காலில் படாமல் கருத்த கொலுசும் கணுக்காலும் தெரிய பாவடையை லேசாக உயர்த்தி பிடித்தபடி ரமா பிரகாரம் சுற்ற சென்றவுடன், "ஏம்மா லக்ஷ்மி ஒரு மாசமா நீ எங்க போயிட்டே. பிரபாகர் தன் மேல ஸ்வாமி வராத குறையா இந்த கோயில சுத்தறான். ரமாக்கு ரெண்டடி விட்டு பின்னாலேயே அடி பிரதக்ஷணம் போறான். நம்ப பக்கத்ல வரும் போது புள்ளையாருக்கு நேரா காக்க காக்க கனகவேல் காக்கன்னு ஷஷ்டி கவசம் படிக்கறான். பாக்கறதுக்கு ஒன்னும் நன்னா இல்லையே. நீ சொல்லப்படாதோ? " என்றார்.

"மாமா, இதைப் பார்க்கதான் ரமா அம்மா என்னை இன்னிக்கி இவ பின்னாடி அமிச்சா. லக்ஷ்மி உன் ஃபிரென்ட் சரி இல்லை. எங்களை எல்லாம் அவமானப் படுத்திட்டு ஓடிப்போயிடுவாளோன்னு பயமா இருக்கு. நாங்க பார்க்கிற எந்த வரனையும் வேண்டாம்ங்ரா. நீ செத்த சொல்லி பாரேன்...  ஏதாவது விஷயம் தெரிஞ்சுதுன்னா சொல்லு. அப்படின்னா....இப்ப கோயிலுக்கு வரும்போது கூட கல்யாணம் பத்தி கேட்டேன். ஆனா அவ திரும்ப கிண்டலா பேசறா. சரின்னு விட்டுட்டேன்.. இப்ப புரிஞ்சுடுத்து.." 

"ஏண்டி நான் மூனு சுத்து சுத்திட்டேன். குருக்கள் மாமா கூட அப்டி என்னடி பேச்சு?" என்ற ரமாவை ஒரு கேள்விப் பார்வையில் "ஏண்டி... உனக்கும் பிரபாகருக்கும் எதாவதா..உன் தாவணியை பிடிச்சுண்டே சுத்தறான். சொல்லுடி" என்று தோள்பிடித்து ஆளை திருப்பி கேட்டாள் லக்ஷ்மி. "உஹும்.. அதெல்லாம் ஒன்னும் இல்லை.... அதானே பார்த்தேன் கோயிலுக்கு கூப்பிட்டா கூட வரமாட்டியே என்னிக்கும் இல்லாத திருநாளா இன்னிக்கி வந்துருக்கியேன்னு... வேவு பார்க்க அமிச்சாளா எங்கம்மா.." என்று குரலை உசத்தி ஏறியவளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து "அதெல்லாம் இல்லை.. நீ இப்படி இருந்தா.. அவளுக்கும் மனசு வலிக்காதா... ஃபிரென்ட்ஸ்ட்ட சொல்லிவியோன்னு நினைச்சுண்டு என்னை கேட்டா... அதான் ஒத்துண்டு வந்தேன்...பிடிக்கலைனா சொல்லவேண்டாம்.." என்றாள் லக்ஷ்மி.

"உனக்கே தெரியும் லக்ஷ்மி, பண்டம் பாத்திரம் சீர் செனத்தின்னு எல்லாம் செஞ்சு பெரியவளை அப்பா கரையேத்தினார். பெரிய இடம், நிறையா சொத்து ஆவூன்னு எல்லாரும் சொன்னா.. ஏதோ மகாராஜா மாதிரி டெல்லி மாப்பிளைன்னா... அவன் ஒரு சுத்த சைக். மார்கழி மாச குளிர்ல ஐஸ் தண்ணிய அவ மேல ஊத்தி ஏ.சி. போட்டு ஒரு நாள் பூரா நிக்க வச்சான். ஜன்னி கண்டு சாகறத்துக்குள்ளே ரெண்டே மாசத்துல அறுத்துண்டு திரும்பி வந்துட்டா... இன்னொரு முறை அப்பாவுக்கு அந்த மாதிரி வலிய நான் கொடுக்கமாட்டேன். இனிமே அதை தாங்கற சக்தியும் அவருக்கு கிடையாது. ஆம்பளைகளுக்கு பொம்னாட்டி ஒரு போகப் பொருள். ஆயிரத்தில் ஒருவனில் "ஆடாமல் ஆடுகிறேன்..." என்று அந்த கருப்பனின் சாட்டையடிக்கு ஆடும் ஜெயலலிதா மாதிரி தான் எல்லோரும். படத்தில் சாட்டையடி நிஜத்தில் வார்த்தையடி பலருக்கு. அதனால நான் டிசைட் பண்ணிட்டேன். இந்த ஜென்மத்ல கல்யாணமே பண்ணிக்கபோறதில்லைன்னு ...பிரபாகர், ஆனந்த், செல்வக்குமார், குமரேசன், கட்டை சேகர்... இப்படி இருக்கவே இருக்கு நம்ம தெருவில நிறைய ஜொள்ளு பார்ட்டிங்க. பொழுது போலைன்னா குமுதம், ஆனந்த விகடன் படிக்கறதில்லையா அந்தமாதிரி நான் இதெல்லாம் டைம் பாசா வச்சுண்டேன்..நீ ஒன்னும் கவலைப்படாதேன்னு உங்க பொண்ணு சொன்னான்னு என்னை பெற்ற தெய்வத்துட்ட போய் சொல்லு." என்று அசால்ட்டா சொல்லிட்டு கைவீசி ரோடில் நடந்தவளை பாவமாக பார்த்தபடி நின்றிருந்தாள் லக்ஷ்மி. இதையெல்லாம் காதில் வாங்காத பிரபாகர் நடந்து போகும் ரமாவை பார்த்தபடி கோயில் வாசலில் கால் மாற்றி செருப்பை போட்டுக்கொண்டிருந்தான்.

பின் குறிப்பு: சும்மா நக்கலும் நையாண்டியுமாதான் கதை எழுதுவியா... நெஞ்சை நக்கற மாதிரி கதை எழுத வராதா.. என்று யாரும் கேக்கலை. கேட்ருவாங்களோங்ரத்துக்காக இந்த கதை. உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகிறது.

பட உதவி: travel.sulekha.com

19 comments:

பொன் மாலை பொழுது said...

ஆணாய் பிறந்தவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள், கயவர்கள். இல்லையா?
இப்படி எழுதுவதுதான் ' பாஷன் ' என்றால் உங்கள் கதை பிரமாதம் போங்கள்!

மோகன்ஜி said...

நெஞ்சைத் தொட முயற்சி பண்ணியிருக்கீங்க.. தொடவும் தொட்டுட்டீங்க...பின்குறிப்ப பார்த்தப்பிறகு seriousness போயிடுச்சு RVS. கதை அம்சமாகவே இருக்கிறது.ரசித்தேன் பாஸ். ஞொய்யாலு தொடர்பதிவுக்கு தயாராயிட்டீங்களா?பட்டைய கிளப்புங்க.பத்மநாபன் சார் பதிவுல என் பின்னூட்டம் கூடப் பாருங்க!

க ரா said...

நல்லா இருக்குங்க :)

Chitra said...

பின் குறிப்பு: சும்மா நக்கலும் நையாண்டியுமாதான் கதை எழுதுவியா... நெஞ்சை நக்கற மாதிரி கதை எழுத வராதா.. என்று யாரும் கேக்கலை. கேட்ருவாங்களோங்ரத்துக்காக இந்த கதை. உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகிறது.


....நான் கேக்கல.... நான் கேக்கல.....

Chitra said...

பின் குறிப்பு: சும்மா நக்கலும் நையாண்டியுமாதான் கதை எழுதுவியா... நெஞ்சை நக்கற மாதிரி கதை எழுத வராதா.. என்று யாரும் கேக்கலை. கேட்ருவாங்களோங்ரத்துக்காக இந்த கதை. உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகிறது.


........நான் கேக்கல.... நான் கேக்கல.....

RVS said...

கக்கு.. பாதிக்கப்பட்ட ரமாவுக்கும் அவள் அக்காவிற்கும் ஆண்கள் அயோக்கியர்களே... விட்ருப்பா... கதை தானே.... நீங்களும் நானும் ரொம்ப நல்லவர்கள். :-) :-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

மோகன்ஜி பாராட்டுக்கு நன்றி. நம்மலால நக்கல் இல்லாம முடிக்க முடியலை... ஞொய்யாலு இன்னும் ஸ்டார்ட் ஆக மாட்டேங்கறாரு... பின்னூட்டம் அளவிற்கு தான் ரெடியா இருகாரு. பதிவு அளவிற்கு கொண்டு வரணும். மன்னிக்கணும் ப்ளீஸ்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இராமசாமி கண்ணன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

சித்ரா... அடுத்தது ஒரு இளமை கலாட்டா எழுதிருவோம்.. விட்ருங்க...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

கதை நெஞசை நக்கற மாதிரி இருந்தாலும் காமெடித்தூவல் இல்லாமல் இல்லை.

டைம் பாஸ் என்று சொன்னாலும்,உள்ளூர இருக்கும் சோகம் கொடுமையானது

பழைய டைம் பாஸ் நாயகிகளை நினைக்க வைக்குது.

RVS said...

உங்க கமென்ட்டை ஆவலா எதிர்ப்பாத்திருந்தேன் பத்மநாபன்... நன்றி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

சுருக்னு தைக்குது.
'பளபளவென்று துடைத்த பழுத்த தக்காளிப்பழம்', 'மார்கழி மாச குளிர்ல ஐஸ் தண்ணிய அவ மேல ஊத்தி' - lines to savor.

RVS said...

அப்பாதுரை சார்... புலிட்சர் அவார்ட் வாங்கின மாதிரி இருக்கு.. நன்றிகள் கோடி...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

அருமையா எழுதியிருக்கீங்க... படிச்ச நாங்க தான் தேங்க்ஸ் சொல்லணும்.

குளம் எந்த கோவில்? பம்மல் சிவன் கோவில் குளம் மாதிரி இருக்கு? ஆனா ட்ரேட்மார்க் எருமை மாட்டைக் காணோமே?

RVS said...

எல்லாம் கூகிள்ல எடுத்தது அப்பாதுரை சார்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹப்பா....என்னய்யா கதை இது? அந்த ரமாவோட அப்பாவைப் பார்த்து இப்பவே பேசணும் போல இருக்கு?
’ஸ்வாமின்னு அதிர்ஷ்ட லக்‌ஷ்மியே உமக்குப் பொண்ணா பொறந்திருக்கா’ன்னு !!

RVS said...

ஆர்.ஆர்.ஆர். சார் வந்ததற்கும் கமென்ட்டியதர்க்கும் மிக்க நன்றி. ரொம்ப நாளா கொஞ்சம் சீரியஸ் கதை எழுதிப் பார்க்கனும்ன்னு ஆசை. சும்மா ட்ரை பண்ணினேன். ஆனா நீங்க கமென்ட்ல போட்ட வசனம் சூப்பர்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

நம்பி said...

நெஞ்ச நக்கிட்டீங்க ஐயா...

RVS said...

சரி நம்பி... துடைத்துக் கொள்ளுங்கள்.. எச்சப் பண்ணிட்டேன்.. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails