Monday, September 27, 2010

சின்ட்டூ ஜில்லு

"ஸ்கூட்டர்ல  போகும் போது யாரும் என் பேரை சொல்லி கூப்பிட்ரதில்லை தெரியுமா நோக்கு. எல்லாரும் உன் பேரைத்தான் சொல்லி கூப்பிடறான். இப்டித்தான் நேத்திக்கு போய்ண்டிருந்தபோது 'திருப்பு.. திருப்பு.." ன்னான், நான் ஸ்கூட்டர திருப்பி, இடிச்சு..." என்பது மை.ம.கா.ராஜனில் கமல் முட்டியை ஊர்வசிக்கு காண்பித்து பேசும் புகழ் பெற்ற வசனம். ஊரில் சமையலுக்கு உதவிக்கு வரும் ஒரு மாமியின் பெயர் "லெங்க்த்" மாமி. மாமாவை விட மாமி ஒன்னரை அடி உயரம் அதிகம். ஒரு அற்ப பதரை பார்ப்பது போல கீழே குனிந்து மாமாவை ஒரு லுக் விடுவார். பேச்சுரிமை இல்லாத அந்த குள்ள மனுஷனுக்கு நிமிர்ந்து மூஞ்சியை பார்க்கும் பாருரிமை கூட இல்லாமல் போய்விட்டது. பாவம்.

பொதுவாக யாருக்கும் இட்ட பெயர் பிடிப்பதில்லை அல்லது மனதில் நிற்பதில்லை. அரசியல் மற்றும் சினிமா இரண்டிலுமே எக்ஸ்ட்ரா டைட்டில் ரொம்பவே ஜாஸ்தி. நடிகர் திலகம் என்று ஒரு இமயத்திற்கு கொடுத்துவைத்த காரணத்தால் முதல் படத்திலேயே டைட்டிலுடன் தான் உள்ளே வருகிறார்கள். சில பேர் நியூமராலாஜி பார்த்து வைத்துக்கொள்வதாக வேறு கேள்வி. 'இளம் புயல்' ஜெயம் ரவி என்று கார்டு போடுகிறார்கள். ஏற்கனவே ஜெயம் ஒரு முன் சேர்க்கை  அதற்க்கு முன் இன்னொரு முன் முன் சேர்க்கையாக இளம் புயல். ஆனால் பார்க்க மிகவும் தென்றலாக இருக்கிறார். 'பேராண்மை'யில் கூட. சில சமயம் யார் இந்த மாதிரி பட்டப் பெயர் எப்படி வைக்கிறார்கள் என்று பார்த்தால் விநோதமாக இருக்கும். ரெண்டு மூனு முறை தெருவில் நின்று உரக்க கூப்பிட்டால் அந்தப் பெயர் அவர்களோடு பச்சென்று ஒட்டிக்கொண்டுவிடுகிறது. இவ்வளவு ஏன் பிறந்த குழைந்தைக்கு பெயர் வைத்தபின்னர் கூட எல்லோரும் "ஜில்லு" , "சின்ட்டு", "பிண்டு", "பம்ப்ளி" என்று ஆசையாக கூப்பிடுவார்கள். எங்கள் உறவில் ஒருத்தர் தன்னுடைய செல்லமகளை "பப்பி" என்று செல்லமாக கூப்பிட ஆரம்பித்து, கல்லூரியில் "சு.சூ.ச்.ச்.சூ" என்று நாய்க்குட்டியை அழைப்பது போல கூப்பிட்டு ரகளை செய்து விட்டார்கள்.
pattam
 சாயங்காலம் ஐந்து மணிக்கு அரட்டை கச்சேரிக்கு மதில் சுவற்றில் வந்து உட்கார்ந்தால் ராத்திரி ரெண்டு மணி மூன்று வரை எல்லோருக்கும் கம்பெனி கொடுக்கும் ராஜாவுக்கு 'ஆந்தை' என்று ஊரில் பெயர் வைத்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான். கூப்பிட்டு முடிப்பதற்குள் தெருமுனை திரும்பிவிடும் அளவிற்கு பெரிய பெயர் வைத்தவர்களை சுருக்கி கூப்பிடலாம். உதாரணத்திற்கு ஆர்.வி.எஸ் ஆகிய நான். இல்லையென்றால் எஸ் ஆகிவிடுவார்கள். ஆனால் கொஞ்சம் முயற்ச்சித்தால் ஈசியாக கூப்பிடக்கூடிய பெயர்களை கூட கண்டமேனிக்கு வெட்டி விடுவது கொஞ்சம் அதிகம்தான். உதாரணத்திற்கு கருணாஸ். ஆறடி இருக்கும் வாசுதேவன் பத்தாவது படிக்கும்போதே எங்கள் கிராமத்தில் வாயை சுழித்து அமெரிக்க ஆங்கிலம் பேசுவான். கொஞ்சம் பொறுத்து பார்த்த சக மாணவர்கள் முடியாமல் அவனுக்கு "ஊஸ்..." (OOZZZ) வாசு என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.  கொஞ்சம் குண்டாக மற்றும் குள்ளமாக இருந்த முரளி "அப்பு"வாக்கப்ட்டான். திருஞானம் "நரி" ஆன கதை எப்படி என்று கொஞ்சம் கூட விளங்கவில்லை. கால்களின் ஐந்து விரல்களை ஊன்றி குதித்து குதித்து நடந்து வரும் (ஊனம் ஏதும் இல்லை) "ஸ்ப்ரிங்" விஜய் (தற்போது கேட்ஸ் பக்கத்தில் மைக்ரோசாஃப்ட்டில் இருக்கிறான்), "அனுராதா" பத்ரி (அரை டிராயரில் பார்க்குபோது அந்தக் கால கவர்ச்சி கன்னி ஞாபகார்த்தமாக), "கொண்டை" பாலாஜி( பின்னந்தலை சற்று பெருத்து இருந்ததால்)  என்று பல நண்பர்கள் அவர்கள் இயற்பெயர் இழந்தவர்கள்.

"கடாரம் கொண்டான்" என்று ராஜேந்திர சோழனை அழைத்ததால் அதைப் பார்த்து அரசியலில் 'குதித்து' அடிபடாமல் ஈடுபடும் மக்களுக்கு பட்டப் பெயர் மேல் ஒரு ஈர்ப்பு வந்திருக்கலாம். அரசியலில் பொது சேவை புரியும் எல்லோருக்கும் இந்நாட்டு மன்னர் பெருமான் என்ற நினைப்பு. கணக்கிலடங்காத பெயர்களில் ஏதாவது ஒரு அரசியல் பட்டப் பெயரை இங்கு எழுதிவிட்டு வீட்டிற்கு ஆட்டோ அழைப்பு விடுவதற்கு எனக்கு தெம்பு இல்லை. த்ராணியும் இல்லை. ஆகையால் அந்த ஏரியாவிற்கு போகவேண்டாம். ஹைலி டேன்ஞ்சரஸ் கைஸ். 

ரெண்டு ரமேஷ்கள் எம்.சி.ஏ படிக்கும் போது இருந்ததால், கருப்பாகவும், K  என்று இனிஷியல் இருந்த ரமேஷ் "கானா" ரமேஷாகவும், இளநரை இருந்த அடுத்தவன் "தாத்தா" ரமேஷாகவும் பெயர் மாற்றம் பெற்றனர். எப்போது கேட்டாலும் "பித்த நரைடா மாப்ள.." என்பான். எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேறாத நண்பனுக்கு சோமாலியாவின் ஷார்ட் "சோம்ஸ்" என்ற பெயரே நிலைத்துவிட்டது. இப்போது கூட அவனுக்கு காது குத்தி மொட்டை அடித்து வைத்த பெயர் என்னவென்று தெரியவில்லை. ஒரே ஒரு முறை மலையாள "பிட்" படம் பார்த்து வந்து நாகாவிர்க்கு டி.பி என்ற பெயர் வந்து ஒட்டிக்கொண்டது. என்னவென்றால் படத்தின் பெயர் திருட்டு புருஷன். எதை எடுத்தாலும் தனக்கு தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளும் பாஸ்கர், "போஜா" பாஸ்கர் ஆனான். குட்டியாக இல்லாமல் இருந்தாலும் வரதராஜன் "வரதுக்குட்டி" என்றானான். மை.ம.கா.ராஜன் எஃபெக்ட்.

இடைச்செருகல்: திருப்பு கேட்டு ஸ்கூட்டர் திருப்பி காலில் அடிபட்ட கமல் கீழே(6:35). "நேக்கா. நோக்கா.. நேக்கும் நோக்குமா..." அட்டகாசம்.


போன பதிவில் சேப்பன் கறுப்பி எழுதியவுடன் ந்யுரான்களில் வந்த பட்டப்பெயர்கள் லிஸ்ட் இது. எங்கள் ஊரில் "மொக்கு" என்று ஒருவருக்கு பெயர். அவருக்கு மொத்தமே மூன்று தமிழ் எழுத்துகளில் அடங்கும் ரத்னசுருக்கமான பெயர் தான். ஆனால் MOGGU ஆனார். அது என்ன பெயர் என்று சொல்லுங்கள் பார்ப்போம். கொஞ்சம் கெக்கே பிக்குன்னு தான் இருக்கும்!
பட உதவி: guardian.co.uk
-

24 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

ம்....மலரும் நினைவுகள்!!

பொன் மாலை பொழுது said...

எனக்கும் இப்படித்தான். ஆனால் ஒரு சந்தோஷம். உர்காரர்கள், நண்பர்கள் இடாமல், கைக்குழந்தையாக இருந்தபோதே அம்மா இட்ட பெயர் அது. அதனால் தான் அதுமுன்னேயே ஒட்டிக்கொண்டுள்ளது. எனக்கு மிக நெருகியவர்கள் என்னை இப்படி அழைப்பதில் விருப்பம். எப்படியா????? ..........................அதன் இந்த அய்யர் வாளுக்கு தேரியுமோன்னோ!?

RVS said...

ஆமாம் சை.கொ.ப.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

கக்கு... கக்கு... கக்கு நோக்கு இப்ப ஓ.கே வா.. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

இளங்கோ said...

என்னோட ப்ரேண்ட்சுகளோட பட்டப் பெயர்களை சொல்லக் கூடாது. சொன்னால் அடிக்க வருவார்கள்.
எனக்கு கூட உண்டு.. என்ன செய்ய :)

RVS said...

இளங்கோ எல்லோருக்கும் உள்ளது தான் அது. ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வெங்கட் நாகராஜ் said...

மலரும் நினைவுகள்..... இங்கே தில்லியில் வைக்கும் பெயர்களைப் பற்றி தனியே ஒரு பதிவே போடலாம்.... பகிர்வுக்கு நன்றி...

வெங்கட்.

RVS said...

தில்லி நேம்ஸ் பதிவு போடுங்க வெங்கட். படிப்போம். ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஹேமா said...

பாடசாலைப்பருவ நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள் ஆர்.வி.எஸ்.பட்டம் வைக்கப்படாதவர்கள் யார் இந்தப் பருவத்தில் !

RVS said...

ஆமாம் ஹேமா.. ஒரே Nostalgia..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

suneel krishnan said...

கண்ணாடி போட்டா காந்தி , நர முடி இருந்தா தாத்தா, அப்புறம் இன்னும் என்னென்னமோ பேரு !! அதிகமாக வைக்க பட்டு நிலைத்த பேரு பேபி , பப்பி , பின்கி இத்வாக தான் இருக்கும்

RVS said...

ஆமாம் டாக்டர். ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

எலே.. எந்த பேரு சொல்லிடா என்னைப்பத்தி பேசிகிட்டீங்க (நா இல்லாத பொது)..?

---அன்புடன், உனது பள்ளி-கல்லூரி நண்பன்..

RVS said...

நீ என் நன்பேண்டா.. .. அப்படியெல்லாம் ப்ளாக்ல போடறமாதிரி பேர் வச்சு உன்னை கூப்பிடலை மாதவா... நேர்ல பார்க்கும்போது சொல்றேன். ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி said...

பட்டப் பேர் வைப்பது பெரிய கலைங்க.என் பிள்ளைகளும் மனைவியும் சீசனுக்கு சீசன் எனக்கு செல்லப் பேர் வைப்பது வழக்கம். எனது மிக சமீபத்திய பட்டப் பெயர் "வலையாபதி" யாம். வலைப்பூவுக்கு அடிக்ட் ஆனதாலாம்...
என் பதிவுகளில் உங்கள் பின்னூட்டம் அதிகம் வருவதால் "பின்னூட்டப் பெருமாள்" எனப் பட்டப் பெயர் வைக்கப் போகிறேன்!!

RVS said...

அது சரி மோகன்ஜி ஸாரி வலையாபதி ... அப்ப பத்துக்கு... "அரேபிய அரிஸ்டாட்டில்" ரைட்டா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

பட்ட பெயர்கள் ஜோர்.....இதில் நாமகரணப்படுபவர்கள் அதிகம் நமது பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தான்..... கொக்கரவெட்டி என்று எங்கள் தமிழாசிரியர்க்கு பெயர் .டெய்சி டீச்சருக்கு ஜான்சிராணி பட்டபெயர் அப்பெல்லாம் முதல் நாளே பேர் வைத்துவிடுவார்கள்....

காமேஷ்வரன்....திரிபுரசுந்தரி .... அமர்களமான படகாட்சிக்கு சிறப்பு தேங்க்ஸ்,,,

பாலக்காட்டு பக்கதிலே ஒரு குக் கிராமம்..கிராமமும் குக்கா....
யூ மீன்... ஐ மீன்.... மீன் ..மீன்னு பேசிண்டுபோறாளே....தெரிஞ்சுடுத்தா....

RVS said...

பின்னூட்டப் பெருமாள் அப்படின்னு மோகன்ஜி எனக்கு பேர் வச்சசுக்கு பதிலா உங்களுக்கு வச்சாதான் அது சாலச் சிறந்தது. உங்களை "பதிவூக்க பத்மநாபன்" அப்படின்னு சொன்னாக் கூட தகும். ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Aathira mullai said...

பின்னூட்டப் பெருமாள், அரேபிய அரிஸ்டாட்டில், வலையாபதி..இணையத்தில் நகைஉலா வரும் மும்மூர்த்திகளுக்குப் பட்டப்பெயர்கள்(உண்மையான பட்டம்) பொருத்தமாக அமைந்துள்ளன.

மோகன் ஜி உங்கள் மனைவி குழந்தைகள் பெயர் செலக்‌ஷனில் கில்லாடிகள் என்று தெரிகிறது..

RVS புதுப்புதுச் சிந்தனைகள்.. என்ன ரூம் போட்டு (போட்டு) சிந்திப்பீர்களா? மனசை லேசாக்குகிறது தங்கள் விளையாட்டு (பதிவு)

RVS said...

பாராட்டுக்கு நன்றி ஆதிரா.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

R.Gopi said...

ஆஹா....

பட்டையை கிளப்பும் பட்டப்பெயர்கள்....

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் :

அந்த கருவாடு / மீன் சாம்பாரில் விழுந்ததும், அதை கோதண்டம் பரிமாறுவதற்கு எடுத்துக்கொண்டு போய் பரிமாறியதும் வரும் இந்த உரையாடல் சூப்பர்...

”என்னங்காணும்....சாப்டாம தக்ளி நூத்துண்ட்ருக்கீர்” என்று உசிலைமணி டைப்பிஸ்ட் கோபுவிடம் கேட்கும் போது, குபீரென்று சிரிப்பு வரும்...

RVS said...

நன்றி கோபி ;-) மை.ம.கா.ராஜன் படம் முழுக்க சிரிப்பு வெடிகள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

மோகன்ஜி.... நான் ரொம்ப லிட்டில் ஜி...நிங்களேல்லாம் மேலாளருக்களுக்கே மேல் மேலாளரா நின்னு பாடம் எடுக்கரவரு .... சென்னை வகுப்பு எதாவது எடுக்கும்பொழுது சொல்லுங்க ..பெஞ்சு ஓரத்திலெ ஒரு இடம் பிடித்து நாலு நல்ல விஷயங்கள கேட்டுக்கிறோம் ( விடுப்பு தோதா அமைந்தா )..

ஆதிரா, பெரியாளுக லிஸ்ட் அது...சும்மா ஒரமான கும்மி மட்டும் நம்மளுது... நன்றி...

ஆர்.வி.எஸ்....சூரியன் மாதிரி தினம் தவறாமல் பதிவிடும் உங்களுக்கு ``சூர்யபதிவர்`` ன்னு பெயர் சூட்டி மகிழலாம்...உங்கள் ஆர்வமும் உழைப்பும் பாராட்டுக்குரியது.... நமக்கு நாலைந்து நண்பர்களை சந்திப்பதற்க்குள் கண் கட்ட ஆரம்பிச்சிறுது...

RVS said...

நான்கு வார்த்தைகளில் பின்னூட்டமிட்டாலும் நறுக்கென்று இடுபவர் நீங்கள் பத்மநாப ஸ்வாமி! நாளெல்லாம் நாங்கள் பதிவு எழுதினாலும் அதற்க்கு ஒப்பாகுமா?

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails