Sunday, September 12, 2010

ஸ்வர்ணலதாவுக்கு ஒரு கீதாஞ்சலி

swarnalathaபோவோமா ஊர்கோலம் என்று திரை வானில் உலா வந்தவர் ஸ்வர்ணலதா. 37 வயதே நிரம்பிய ஸ்வர்ணலதா சென்னையில் இன்று நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்தார். தனது தனித்துவமான வசீகரக் குரலால் நிறைய ரசிக நெஞ்சகளை கட்டிப் போட்டவர். எந்தப் பாட்டிலும் உச்ச ஸ்தாயியிலும் பிடி நழுவாமல் பாடுபவர். போவோமா ஊர்கோலம், ஆட்டமா போன்றவை அவரை எடுத்த உடனேயே புகழின் உச்சாணிக் கொம்பிற்கு இட்டு சென்ற பாடல்கள். ஹிந்தியில் ரங்கீலாவிர்க்கு இவர் பாடியதன் மூலம் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வந்தார்.  ரகுமானுக்கு பாடிய போறாளே பொன்னுத்தாயி மூலம் ஒரு தேசிய விருதும் பெற்றார். அவர் பாடிய சில பாடல்களை இங்கு நினைவு கூர்ந்து அதன் மூலமாக ஒரு அஞ்சலி செய்ய விழைகிறேன். 

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்...... வள்ளியில்


மாலையில் யாரோ மனதோடு பேச..... சத்ரியனில்...


வீராவில் ... மலைக்கோயில் வாசலில்.....


தேசிய விருது பெற்றுத் தந்த போறாளே பொண்ணு தாயி.. கருத்தம்மா..குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளம் மானே....


அந்தியிலே வானம்.. சின்னவரில் மனோவுடன்......


காட்டுக்குயில் பாட்டு சொல்ல......


நன்றி சொல்லவே உனக்கு... என் மன்னவா.... உடன் பிறப்பில்.....


ராக்கம்மா கைய தட்டு.... தளபதிக்காக....


மிஸ்டர் ரோமியோவில் .. மெல்லிசையே......அலைபாயுதேவில்... எவனோ ஒருவன்......


காதலெனும் தேர்வெழுதி.... காதலர் தினப் பாடல்....


சொல்லாயோ சோலைக்கிளி .. எஸ்.பி.பியுடன்....


புதுப்பட்டி  பொன்னுத்தாயி படத்தில் ஊரடங்கும் சாமத்திலே....


போதும்... போதும்.. இனி ப்ளாக் தாங்காது. ஸ்வர்ணலதா என்றதும் நினைவுக்கு வந்த சில ஆளை இழுக்கும் பாடல்கள் இவை. ஹும்...இன்னும் நிறைய இருக்கிறது... இது ஸ்வர்ணலதாவிர்க்கு ஒரு கீதாஞ்சலி.

பட உதவி: hummaa.com

26 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்னங்க இது? முரளி போன துக்கம் கூட இன்னும் நெஞ்சுல காயல. அதுக்குள்ள ஸ்வர்ண லதாவா?
ம்..ஆண்டவனுக்கு ஆனாலும் இவ்வளவு அவசரம் கூடாது? FAST FOOD போல FAST DEATH ஆ இருக்கே?
ஈஸ்வரா?

Madhavan Srinivasagopalan said...

Very sad & bad to have two obituary tributes within a week..

What can we do ? We have limits.

May her soul remains in peace.

Madhavan Srinivasagopalan said...

Seems it was also 12th Sep, she born. ( http://en.wikipedia.org/wiki/Swarnalatha )

RVS said...

ஸ்வர்ணலதா ஒரு கிஃப்டட் சிங்கர்... ஆர்.ஆர்.சார்... ரொம்ப வருத்தமாயிருக்கு... :(:(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

மாதவா.... இசை உலகில் ஒரு தாரகையாக விளங்கியவர் ஸ்வர்ணலதா. அவரது இறப்பு இசைக்கு ஒரு இழப்பு. :(:(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chitra said...

lovely songs.


இசை உலகில் ஒரு தாரகையாக விளங்கியவர் ஸ்வர்ணலதா. அவரது இறப்பு இசைக்கு ஒரு இழப்பு. :(:(:(:(


..... so true!

RVS said...

பாட்டு பைத்தியங்களுக்கு நிஜமாகவே இது ஒரு இழப்பு. சமீப காலங்களாக இவரது பாடல்களை கேட்க முடியாதபோதே ஏதோ ஒன்று என்று நினைத்தேன். இதுபோல் ஆகும் என்று நினைக்கவில்லை. நல்ல பாடகியை இழந்துவிட்டோம் சித்ரா. :(:(:(

வருத்தத்தில் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

ஒவ்வோரு பாட்டையும் உயிர் கொடுத்து பாடிய பாடகி , இன்று உயிர் பிரிந்து ``போறாளே பொன்னுத்தாய் போகிற போக்கில் மனசத் தொட்டு `` எனும் வகையில் பல பாடல்கள் மனசை தொட்டு வருடும். தமிழ் திரை இசையுலகத்தில் இது மாதிரி அற்புதக்குரல் கிடைக்க எவ்வளவு காலம் ஆகுமோ..

ஹேமா said...

மறையாத மறக்கமுடியாத பாடல்கள் தந்தவர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஸ்ரீராம். said...

மாலையில் யாரோ பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல். மற்ற பாடல்களும்தான். வருத்தமாக இருக்கிறது. எங்கள் அஞ்சலி....

RVS said...

ராஜாவுக்கு நிறைய பாடினார். ரகுமானும் நல்ல வாய்ப்புகள் பல தந்தார். அல்ப ஆயுசில் போனது வருத்தம் தான் ஸ்ரீராம். :(:(:(

வருத்தத்துடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ரொம்ப வருத்தமாயிருக்கிறது பத்மநாபன். :(:(:(:(

ஆர்.வி.எஸ்.

RVS said...

நல்ல ஷார்ப் ஆன குரல் ஹேமா. சித்ரா, ஜானகி, ஸ்வர்ணலதாவுக்கு பிறகு இப்போது பாடகிகள் அவ்வளவாக கஷ்டப்பட்டு பாடுவதில்லை. அவரச உலகமல்லவா. மிகவும் வருத்தம் தான்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

CS. Mohan Kumar said...

Feel very sad; She has sung some ever lasting melodies.

RVS said...

ஆமாம் மோகன். மிகவும் வருத்தமாயிருக்கிறது. :(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.

R.Gopi said...

வித்தியாசமான குரலமைப்பு கொண்டவர்.. கேட்டவுடன் ஒரு ஈர்ப்பு வரும்..

மிக மிக நல்ல பாடல்களை நிறைய பாடியுள்ளார்...

பல பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனவை..

அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

அதென்ன, திரையுலகில், சமீபமாக இளம் வயதில் நிறைய இழப்பு ஏற்படுகிறது??

Anonymous said...

நன்றி சொல்லவே உனக்கு... என் மன்னவா.... உடன் பிறப்பில்.....

idhu mattum avar paattu illa, sunandha ...

RVS said...

ஆமாம் கோபி. மிக நல்ல பாடகர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். :(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

இல்லை அனானி.. அது ஸ்வர்ணலதா தான்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

suneel krishnan said...

உண்மைலயே அதிர்ச்சி தான் ..என்ன குரல் , அந்த வள்ளி பட பாடல் , எவனோ ஒருவன் பாட்டு இரண்டும் எனக்கு கேட்கும் போதெல்லாம் என்னமோ பண்ணும் , உயிரை உருக்கி பாடுவார்கள் என்று சொல்லுவாங்க அது இவங்க பாடல்களில் உண்மை ..எளிய மனிதர் ,நல்ல உள்ளம் கொண்டவர் என்று அறியபடுகிறார் .

RVS said...

ஆமாம் டாக்டர். வருத்தமாயிருக்கு :(:(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சாய்ராம் கோபாலன் said...

At 37, it is really sad.

Aathira mullai said...

போன அந்தப் பொன்னுத்தாயிக்கு உண்மையான இரங்கல் ஆர்.வெ.சு. இது. சுமையான மனத்துடன்... அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
உரிய நேரத்தில் உரித்தான நல்ல பதிவு.

RVS said...

ஆமாம் ஆதிரா.... மிகவும் வருத்தமாயிருக்கு... நிறைய சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பாடகி.. :(:(:(:(

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வெங்கட் நாகராஜ் said...

பெரிய இழப்பு. தமது குரல் வளத்தினால் பலபேரை ஈர்த்த அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

RVS said...

இசைக்கு பேரிழப்பு வெங்கட்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails