Saturday, October 16, 2010

ஆண்டாள் கோபால் - நவராத்திரி ஸ்பெஷல்

டைட்டில் பேச்சு: கொஞ்சம் புனைவு; கொஞ்சம் நினைவு சேர்ந்து செய்த கலவை இது. நிஜத்திற்கும் டூப்பிர்க்கும் ஆங்காங்கே விகிதாசார வித்தியாசங்கள் இருக்கும். இதில் உண்மை இல்லையா? என்று கேட்டால். இல்லை. அதாவது 100 சதம் உண்மை இல்லை. ஆனால் 100 சதம் பொய்யும் இல்லை. இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் டூப் கலந்து டுபாக்கூராக வெளியிடப்படுகிறது. இதில் நீ யார் அவன் யார் எந்த காலம் என்ன நேரம் என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படாது. மூச்.
(அப்பாடி அசரீரி பேசி ஒரு சுத்து சுத்தி விட்டாச்சு.. இனி மேலே படிங்க... மேலே படிங்கன்னா கீழே படிங்கன்னு அர்த்தம். ஸ்... அப்பா... தாங்கலையே டார்ச்சர்.......)
  
எம்ட்டன் ராயர் வீட்டு மூன்று படி, நாராயணன் வீட்டு ஐந்து படி, ரோஹினி வீட்டு ஏழு படி, டீச்சர் வீட்டு  ஒன்பது படி(எங்களது) என்று பல்வேறு தினுசு கொலுக்களை ஒவ்வொரு நாளும் கண்டு களிப்போம். ஒரே  கொலுவை ஒன்பது நாளும் வித விதமான சுண்டல்களுக்காக ரசிப்போம். கிழக்கு தெருவிற்கு நிகராக வடக்கு  தெருவிலும் கொலு இருக்கும். மாலை வேளைகளில் கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு பிரதக்ஷிணமாக  தென், மேல், வட கரைகளை சுற்றி வந்தால் இரவு சாப்பாடு நிச்சயம் தேவை இருக்காது. ஆனால் பாட்டி "என்னாடா, பிச்சைக்காரன் திருவோடு மாதிரி..." என்று நக்கலடிப்பாள்.

kolu1கொலு வைப்பது மிகவும் க்ரியட்டிவ் ஆக இருக்கவேண்டும். பரீட்சைக்கு படிப்பதை விட அதிக சிரத்தை தேவைப்படும். ஊரில் நிறைய தோட்ட தரணிகளும், சாபு சிரில்களும் அதிகம். நாராயணன் வீட்டு கொலு தோட்டா தரணி அமைத்த  செட் போல என்றால் வடகரை ராமன் அண்ணா ஆத்துது தேவதச்சன் மயன் எழுப்பியது போல இருக்கும். கொலு  வைப்பதற்கு பல வீடுகளுக்கும் எங்களுடைய சமுதாய சேவை தேவைப்படும். "நானா உங்கம்மா படி எறக்கிட்டாளா?" "கோந்து உங்காத்து ஸ்வாமி எல்லாம் பொட்டிய விட்டு எறங்கிட்டாளா ?" என்று பந்து அடித்தோ அல்லது கிட்டி  புல்லால் வலி கொடுத்த வீடெல்லாம் எங்களுடைய நவராத்திரி ஸ்பெஷல் கவனிப்பால் அல்லோல்படும். அட்டை டப்பாக்களை  வீடாக்கி  பார்க்கில் வைப்பது, தெர்மாகோல் கொண்டு பார்க் காம்பவுண்ட் சுவர் கட்டுவது, கலர் ஜிகினா பேப்பர்கள்  ஓட்டுவது உள்ளிட்ட சகல வேலைகளையும் செய்வோம். நாராயணன் வீட்டு கொலுவில் அரை வண்டி அளவிற்கு  கொலு பக்கத்தில் மண் அடித்து அண்ணாமலையையே செய்து உச்சியில் ஜீரோ வாட் பல்பில் கார்த்திகை தீபம் ஏற்றிவிடுவார்கள். ராமன் அண்ணா வீட்டில் ஹோமகுண்டத்தை குளமாக்கி மோட்டார் போட் விடுவார்கள்.  சென்னை மாதிரி ஷோ கேஸ்ஸில் கணேசர், லக்ஷ்மி, சரஸ்வதி மூவரையும் நிறுத்தி சிக்கன கொலு வைப்போரும் உண்டு.

சுண்டல் அவ்வளவு எளிதாக நிறைய கிடைக்காது. என்னதான் நாம்பளும் பரோபகாரியாக இருந்து கொலு வைத்திருந்தாலும், "ராமன் அண்ணா ஆத்து கொலு தான் நாலு கரையிலும் சூப்பர்" என்றால் இரண்டு கரண்டி புட்டு கூட கொடுப்பாள்  மன்னி. இந்த மதி ஆலோசனைகலுக்கெல்லாம் ஸ்ரீராம் தான் தலைவன். சூரன். அதி பயங்கர எக்ஸ்பெர்ட். அவனிடம் டிப்ஸ் வாங்கிக் கொண்டு தான்  கொலு ரௌண்ட்ஸ் புறப்பட வேண்டும். யார் யாரை எப்படி தன்ன கட்ட வேண்டும் என்று கோனார் நோட்ஸ் போடும் அளவிற்கு  அவனுக்கு தெரியும். வீட்டில் உள்ள வாண்டுகளை வித விதமாக மேக்கப் செய்து எல்லோர் வீட்டுக்கும் கொலு  அழைப்பு அனுப்புவார்கள். எவ்வளவு அலங்காரம் செய்தாலும் ஒப்புக்கு கூட கண்ணனை ஒத்து இராத  பசங்களை,
"மன்னி, உங்காத்து உப்பிலியை இந்த டிரஸ்ல பார்த்தால், கோகுலத்தில் இருந்து கிருஷ்ண பரமாத்மாவே நேரே இறங்கி  வந்தாப்ல இருந்தது"என்றால் புட்டு வைத்திருந்த பாத்திரத்தோடு கிடைக்கும். இது பத்தாதென்று, நாலு  கரைக்கப்பாலிருந்து திருமஞ்சன வீதி, விளக்காரத்தெரு பசங்களும் கொலு பார்க்க வருவார்கள். கொஞ்சம் புஜபலம்  மிக்கவர்கள். அவர்கள் நோக்கம் சுண்டல் வாங்கி தின்பது தான். ஆனால் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் நின்று
"கொலு இருக்கா?" என்று இரைவார்கள். எல்லோரையும் வரிசையில் நிறுத்தி ஆளுக்கு ஒரு கரண்டி சுண்டல்  கொடுத்து அனுப்புவார்கள்.
"கொலு இருக்கு ஆனால் சுண்டல் இல்லை" என்று தெனாவட்டாக பதில் சொன்ன பஸ் கண்டக்டர் லக்ஷ்மணன்  வீட்டின் ஓட்டின் மேல் ஒரு நாள் கல் எறி போராட்டம் நடந்தது. மிதவாதியான லக்ஷ்மணன் தீவிரவாதத்திற்கு அடிபணிந்து மறுநாள் வாசலில் சுண்டலோடு நின்றார். இந்த கோஷ்டியை என் பாட்டி "படை வர்றது" என்பாள். படைகளுக்கு  சுண்டல் இல்லையென்றால் பாட்டி பதறிவிடுவாள்.

ரோஹினி வீட்டிற்கு கொலு பார்க்க போவதென்றால் நாம் பாகவதராக வேண்டும். வடக்குத்தெரு ஸ்ரீராம் அண்ணன்  கோபால் ரோஹினி வீட்டின் ஆதர்ஷ நவராத்திரி ஹீரோ. எப்போதும் "ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா", "கற்பகவல்லி நின் பொற்பதங்கள்  பிடித்தேன்”, “மாணிக்க வீணை ஏந்தும் கலைவாணி” போன்ற பல பக்தி ஐட்டங்கள் கைவசம் வைத்திருப்பான். நவராத்திரி காலங்களில் ஐஸ்கிரீம் விரதமிருப்பான். மூடுக்கு ஏற்றார்போல சிலசமயங்களில் பெண்  குரலில் வேறு பாடி அசத்துவான். ஒரே இக்கட்டான விஷயம் என்னவென்றால் பாடும் பொழுது பெண்கள் யாரேனும்  வந்துவிட்டால், முகம் தகதவென்று சிவந்து, உள்ளங்கை உள்ளங்கால் குடம் குடமாக வேர்த்து, தலையை இரண்டு முழங்கால்களுக்கு இடையில் நுழைத்து வெளியே எடுக்கவே  அடம் பிடிப்பான். பெண்கள் முன்னால் அவ்வளவு வெட்கம் பிடுங்கி திங்கும். சரியான லஜ்ஜாவதன்.

கோபாலின் கொலு மோகம் தலைக்கேறி ஒன்பது நாளில் ஒரு நாள் ஆண்டாளாக வீட்டை விட்டு வெளியே  வந்தான். நிச்சயமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு பெண்ணுக்கு ஆண்டாள் வேஷம் போட்டது போல் இருந்தது. அரக்கு நிறச்சேலையை ஐயங்கார் மடிசாராக கட்டி, மேலாக்கை பின்னாலிருந்து முன்னால் இழுத்து சொருகியிருந்தான். நெற்றிக்கு ஸ்ரீசூர்ணம் அணிந்து, அதற்க்கு கீழ் சின்னதாக வெள்ளை கலரில் கீழ் நோக்கி அம்பு போட்டிருந்தான். அழகிற்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது அவன் போட்டிருந்த கொண்டையும், இதழ்களில் பூசியிருந்த உதட்டுச்சாயமும், கண்ணுக்கு எழுதிய மையும். கோபால் கோதையாகவே உருமாறியிருந்தான். எங்கிருந்தோ 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது. தெருவில் சைக்கிளில் சென்ற இரு முறுக்கு வாலிபர்கள் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தார்கள். சீட்டியடித்தார்கள். இன்ஸ்டிட்யூட் வீட்டு ஸ்ரீதர் வைத்த கண் வாங்காமல் ஆண்டாளையே பார்த்தான். அவளை  சீண்டினான்.
"ஏண்டி எங்கடி போரே?"
கண்கள் பளபளக்க கோபால் "வேணா விளையாடாதே " என்றான்.
ஸ்ரீதர், "நான் கண்ணன் வேஷம் போட்டா உன் கூட வரலாமா"
எங்களை துணைக்கு அழைத்து கோபால் "பாருங்கடா இவனை" என்று அன்றைக்கு முகாரி பாடினான்.
"ஸ்ரீதர். அவன் ஆசைக்கு வேஷம் போட்டுண்டு இருக்கான். விடுடா" என்றான் வாசு.
யார் எது சொன்னாலும் விடுவதாய் இல்லை ஸ்ரீதர். வடக்குத்தெரு முனை வருவதற்குள் இன்னும் பல முறை அவனை சீண்டி வெறுப்பேற்றி, கைகலப்பில் கொண்டு வந்து விட்டான்.
இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை தூரத்தில் இருந்து பார்த்து விலக்குவதற்கு நாங்கள் ஒடுவதர்க்குள், ஆண்டாளின் புடவையை, துச்சாதனன்  உருவுவது போல் வுருவினான் ஸ்ரீதர். பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஆண்டாள் பழனி முருகன் ஆவதை கண்டு திடுக்குற்றோம். அவனுக்கு உதவுவதற்கு நாங்கள் விரைவதர்க்குள், ஆண்டாளாக வீட்டை விட்டு வெளியேறி விஐபி ஜட்டியுடன் பழனி முருகனாக வீட்டிற்குள் ஓடிக்கொண்டிருந்தான் கோபால்.

நவராத்திரி கொலு பாடல்: ஜனனி ஜனனி ஜனனி... உங்கள் வீட்டு கூடத்திற்குள் வந்து உட்கார்ந்து பாடும் நித்யஸ்ரீ மகாதேவன்.



நவராத்திரி சினிமா பாடல்: அப்பப்பா... எவ்வளவு ராத்திரி பாடல் முழுக்க எழுதியிருக்கிறார் கவிஞர்.  "காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரி... ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி..". காளையர் என்றால் சிவபெருமான். சாவித்திரி கண்கள் சிமிட்டி சிமிட்டி தலையை ஆட்டி ஆட்டி பாடும் அழகே தனிதான்.



பின் குறிப்பு:  இதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரிய வேண்டும் என்றால் தயவு செய்து இப்பதிவின் லேபிளை பார்க்கவும். இந்த அழகான(?!) கொலு படம் கபாலி கோயில் குளத்தருகே இருக்கும் காதி சர்வோதயா கடையில் "சும்மா எடுத்துக்கோங்க சார்" என்று அவர்களின் அனுமதியோடு அடியேன் எடுத்த படம்.

சீக்ரெட் குறிப்பு: விடலையிலும், வாலிபத்திலும் கொலு கொண்டாடியது பற்றியும், திருமணம் புரிந்தபின் நவராத்திரி கொண்டாடிக்கொண்டிருப்பது பற்றியும் எழுதவதற்கு நிஜமாகவே நேரம் இல்லை. இல்லையென்றால் "நான் ரசித்த ராத்திரிகள்" என்று ஒரு முழு நீள பதிவு வரைய வேண்டி வரும். ஆகையால் இத்தோட இதை முடிச்சுக்கலாம்.


பதிவு குறிப்பு: (டைட்டில் பேச்சு, நவராத்திரி பாடல், பின் குறிப்பு, சீக்ரெட் குறிப்பு, பதிவு குறிப்பு.... சே சே.. ஒரே ரோதனையா போச்சுப்பா.. பதிவை விட சப் டைட்டில் நிறையா போடறாம்பா.. இன்னிக்கி ராத்திரி தூக்கம் வருமான்னு தெரியலை.....)

-

31 comments:

pichaikaaran said...

இந்த கொலு கலாச்சாரத்தில் எனக்கு அனுபவம் இல்லை.. ஆனாலும் ரசிக்க முடிகிறது

பத்மநாபன் said...

நவராத்திரியில்- நான்-ஸ்டாப் காமெடி. சிரிக்க வச்சே ஸ்டாப் பண்ணிருச்சு....மீண்டும் சாயங்காலம் வர்றேன் சுண்டலுக்கு...

bogan said...

ஒரு லஜ்ஜாவதியை வீதி என்றும் பாராது துகில் உரிந்த துச்சாதனர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.ஒரே உரில ஆண்டாளை ஆண்டியாகிட்டாளே...என்ன கொடுமை சார் இது!

RVS said...

இந்த தீராத விளையாட்டு பிள்ளையின் கிறுக்கலை ரசித்து பார்த்த பார்வையாளனுக்கு நன்றி. நிறைய கேம் வித்தியாசமா நடக்கும். அடிக்கடி வந்து பாருங்க.

RVS said...

பத்து அண்ணா, சாயந்திரம் நிச்சயம் வாங்கோ. இன்னிக்கி எல்லோரும் கொண்டக்கடலை சுண்டல் தான் பண்ணுவா.. கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது பண்ணச் சொல்லி IAS (Indian Aduppadi Service - courtesy உயர்திரு மோகன்ஜி) காரர்களிடம் சொல்லியிருக்கேன். பார்க்கலாம். ஒரு அற்புதமான பாரதியார் பாடல், நித்யஸ்ரீ பிரவாகமா பாடினதை எடுத்து வச்சிருக்கேன். அடுத்தது அது தான் நம்ம ஸ்டேடியம்ல ...

RVS said...

போகன் - அங்கே நடந்தது தான் நிஜ "உரி", "அடி" உற்சவம். ;-)

பொன் மாலை பொழுது said...

கொலு பாக்க வரும் பட்டாளங்கள் எல்லா ஊரிலும் ஒரேமாதிரிதான் போல! பார்த்து முடித்துவிட்டு வெளியில் வீதிக்கு வரும் போது வீட்டு நுழைவாசலில் கும்ப லாக நின்று கொண்டு ஊ.......ஒ....என கத்திக்கொண்டு, வீட்டுக்காரர் உள்ளே இருந்து ஓடி வருவதற்குள் ஓட்டம் பிடிப்பது. நாலு கட்டு வீடு என்றால் இது இன்னமும் மோசம். வானரங்களின் தொல்லை தாங்க முடியாமல் மாலை ஆறு மணிக்கே வாசலை மூடிவிடுவார்கள்.

பொன் மாலை பொழுது said...

படிகள் அமைப்பதும், சலவையிலிருந்து எட்டு முழ வெட்டி,பித்தளை தாம்பாளத்தில் குலம்,
ஸ்ட்ரீம் போட், மூட்டை ஆற்றுமணலை நடு கூடத்தில் கொட்டி குளக்கரை, சுற்றி தெருக்கள், பார்க்,வீடு, ஏர் போர்ட், காடு. போதும்..........

Madhavan Srinivasagopalan said...

நீங்கள் சொல்லிய ஒவ்வொரு பாத்திரமும் (சுண்டல் பாத்திரமல்ல, characters ) எனக்கு தெரிந்தவர்களாக இருந்ததால்.. என்னால் அன்றைக்கு என்ன நடந்திருக்குமென கற்பனை செய்து பார்க்க முடிந்தது..

முக்கியமாக..
1 ) வடக்கு வீதி 'மன்னி' .. ஹா.. ஹா... இவுலகில் புகழுக்கு எவர்தான் மயங்குவதில்லை.... இவர் எப்படி விதிவிலக்காவார்..
2 ) ஸ்ரீராமின் கொலு - சுண்டல் knowledge ..
3 ) கோபால் -- பாடும் பொது -- பெண்களை கண்டால் - சிவப்பு முகம் -- நாணம்.. -- ஹ. ஹ... ஹ..
4 ) ஸ்ரீதர் -- சான்ஸு கெடைச்சா கிண்டல் பண்ணாம விடுவாங்களா..
5 ) கோபால் - ஆண்டாள்.. -- நல்ல தமாஷ்..

btw -- ஏ.ஆர்.ஆர் மிஸ்ஸிங்..?

வழக்கம்போல அசத்திட்ட ஆர்.வி.எஸ்..

பெசொவி said...

நம்ம கோபால் இப்படி ஒரு வேஷம் கட்டியிருக்கான்னு இதுவரை எனக்குத் தெரியாது, RVS! தகவலுக்கு நன்றி!

எஸ்.கே said...

இனிய நவராத்திரி தின வாழ்த்துக்கள்!

RVS said...

உயர்திரு மாதவன் மற்றும் பெ.சொ.வி.....
தயவு செய்து மீண்டும் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் அசரீரி ஒன்று பேசியதை கேட்கவும். அனுபவித்ததற்கு நன்றி. இந்தப் பதிவின் பாத்திரங்கள் யாவும் கற்பனையே. கொஞ்சம் கொஞ்சம் உண்மை நிறைய நிறைய புனைவுப்பா... உட்ருங்கோ.. எஸ்கேப்....... (அப்டி போடு... "மன்னார்குடி டேஸ்" அப்படின்னு ஒன்னு எழுதலாம்னு இருந்தேன். இப்ப பயமா இருக்கே... என்ன எழுதட்டான் வேண்டாமா?)

RVS said...

//படிகள் அமைப்பதும், சலவையிலிருந்து எட்டு முழ வெட்டி,பித்தளை தாம்பாளத்தில் குலம்,
ஸ்ட்ரீம் போட், மூட்டை ஆற்றுமணலை நடு கூடத்தில் கொட்டி குளக்கரை, சுற்றி தெருக்கள், பார்க்,வீடு, ஏர் போர்ட், காடு. போதும்..........//
என்ன கக்கு அறுத்துட்டேன்னு சொல்ல வரீங்களா... ;-) ;-)

RVS said...

நன்றி எஸ்.கே. ;-)

Madhavan Srinivasagopalan said...

//"மன்னார்குடி டேஸ்" அப்படின்னு ஒன்னு எழுதலாம்னு இருந்தேன். இப்ப பயமா இருக்கே... என்ன எழுதட்டான் வேண்டாமா?//

என்ன ஆச்சு.. எதுக்கு பயம் ?
நா ஏதாவது தப்பா கேட்டுடேனா.. (அப்படி இருந்தா.. அடுத்த பதிவுல என்னையப் பத்தி ஏதாவது நல்லா எழுதுங்களேன்)..
தொடர்ந்து எழுதவும்.... ரசித்து படிக்கிறோம்..

ஸ்ரீராம். said...

சுண்டல் பதிவா...கிண்டல் பதிவா...

RVS said...

மாதவா.. எழுதறேன்... ஆனா நோ ரியல் லைஃப் கம்பேரிசன். ஓ.கே ;-) ;-) அலசி ஆராயக்கூடாது... ;-) ;-) ;-)

RVS said...

ஸ்ரீராம்... கிண்டலா ஒரு சுண்டல் பதிவு... ;-)

மோகன்ஜி said...

லேட்டா வந்துட்டேனேன்னு சுண்டல் கிடையாதுன்னு சொல்லிடாதீங்க.அட்டகாசமான பதிவு. மீண்டும் என் பால்ய நாட்களில் கொஞ்ச நேரம் சஞ்சாரம் செய்தேன்.
நானும் 'தேன்மொழி ஸ்டோர்' பையை எடுத்துக் கொண்டு ஒரு பட்டாளத்துடன் கடலூரில் சுண்டல்,புட்டு,தட்டை என்று வித விதமாய் சேகரித்து.பிள்ளையார் கோவிலில் பங்கு போட்டுக் கொள்வோம்.கொலு அமைக்கும் போது எனக்கு ஏக டிமான்ட் இருக்கும்.நான் 'பார்க் ஸ்பெஷலிஸ்ட்டாக்கும்!ரொம்ப பிகு பண்ணிக் கொண்டு 'ஸ்ரீசக்கர ராஜ சிம்மாசினியும்,அலை
பாயுதே'வும் பாடுவதும் உண்டு.என்னோடு அலைந்த மற்ற நண்பர்களில் பலர் இப்போது பெரும் பதவிகளிலும்,ஒருவன் சர்வராயும்...

Madhavan Srinivasagopalan said...

//"ஆனா நோ ரியல் லைஃப் கம்பேரிசன்." //

அப்ப ஒன்னு செய்யுங்க.. 'வாரமலர்' போல 'பசுநேசன்', 'கவுண்டர்பெல்லு', 'குண்டு நடிகை' அப்படீன்னு.. code-nameல எல்லா காரேக்டரையும் போடுங்க..
--- Just for laugh..

RVS said...

மாதவா... கேரெக்டர் பேர் மாத்த முடியாது... ஆனா சம்பவங்கள் கொஞ்சம் கற்பனை தூவலுடன் இருக்கும். ஓ.கே. ;-)

RVS said...

ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசநேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே... நித்யஸ்ரீ பாடினது கிடைக்காம ஜனனி ஜனனி போட்டேன்... ;-) "காக்டெயில் சுண்டல்" அப்படி ஒரு டேஸ்ட் இருக்கும். பங்கு போட்டு சாப்பிடுறதே ஒரு இன்பம் தான் மோகன்ஜி. ;-) ;-)

Aathira mullai said...

//கொலு வைப்பது மிகவும் க்ரியட்டிவ் ஆக இருக்கவேண்டும். பரீட்சைக்கு படிப்பதை விட அதிக சிரத்தை தேவைப்படும்.//
உண்மையிலே உங்க ஒவ்வொரு பதிவும் அப்படி சிரத்தையோட வருது RVS.
வேர்க்கடலை சுண்டல் உண்டா இல்லையா இந்த ஒன்பது நாளில் ஒரு நாள்?
மடிசாரெல்லாம் கட்டி வேஷம் போட்டு நீங்க சொல்ற மாதிரி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஷ்வரி, கற்பகவல்லி நின் இதெல்லாம் பாடியதை நினைவூட்டி விட்டீர்கள். மலரும் நினைவுகள் வருகிறது தங்களிடம் நன்றி கூற..மடிசாருடன்..சுவைத்து சாப்பிட்டேன். சுண்டலைப் போலவே..சுவையாக இருந்தது, இந்தக் கிண்டலும்..

RVS said...

மடிசார் கட்டிண்டு வந்து வெத்தலை பாக்கு பழம் சுண்டல் வாங்கிண்டதுக்கு நன்றி ஆதிரா... ;-)

பத்மநாபன் said...

வெள்ளந்தியான விளையாட்டு காலம்... அனுபவிச்சதனால தான் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறிர்கள். இப்ப அதெல்லாம் டி.வியும் வீடியோ கேமும் பாழ்படுத்திவிட்டது...

ராஜி அம்மா விட்டுக்கு கொலு சுண்டலுக்கு போய் ``பாடுவேன் பாடிடுவேன் `` மிரட்டியே சுண்டலை வாங்கி வந்த என்னுடைய ஞாபகங்கள் சிறகடிக்கின்றன....ஒரு நாள் சுண்டல் தாமதமாகவே `` கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் `` பாடியே விட்டேன். அதற்குபின் சுண்டல் வீட்டுக்கே வந்து விடும்.

நவராத்திரியாயிருந்தாலும் பாட்டெல்லாம் இங்க அர்த்த ராத்திரியில் தான் கேட்கமுடியும் ... கேட்டுக்கிறேன்..நன்றிகள் பல

RVS said...

பத்தண்ணே சங்கீத மிரட்டலில் சுண்டல் சம்பாதித்து விட்டீர்கள். அப்படியே ஆணி பிடுங்கும் இடத்திலும் பாடி சமாளித்து விட வேண்டியதுதானே...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..அற்புதம்!

RVS said...

நன்றி ஆர்.ஆர்.ஆர். சார்!!

அப்பாதுரை said...

இத்தனை பளபளக்குதே பொம்மைகள்னு பார்த்தேன்.. கடைச்சரக்கா? கொலுவில் பொம்மைகள் பளபளனு இருந்தாத் தான் அழகு (கொலு- பொம்மை வேறே எதையும் சொல்லலிங்க).
நல்ல நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க அனுபவங்களை. சில வீடுகளில் பாடு சுண்டல் தரேன் என்பார்கள். சில வீடுகளில் சுண்டல் தானே எடுத்துக்க, பாட்டு மட்டும் பாடாதே என்பார்கள். இரண்டு வகையும் பார்த்திருக்கிறேன்.

RVS said...

நீங்க எங்கயாவது கொலுவுக்கு பாடி மற்றவர்களை சந்தோஷப் "படுத்திய" அனுபவம் ஏதாவது இருக்கா அப்பா சார்!

balutanjore said...

dear rvs
fantastic
another dubukku madiri irukku
(suthi poda sollanumakkum}

balu vellore

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails