Friday, September 10, 2010

சீதா கல்யாண வைபோகமே....

SeethaKalyanam
இந்த சீதா கல்யாணப் படம் ஒரு வி.ஐ.பி வீட்டு கல்யாணப் பத்திரிக்கையிலிருந்து எடுத்தது. அந்த வி.ஐ.பி யார் என்பது பதிவின் முடிவில்.....


நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியாக இருந்தாலும் இந்த அரிய அழகிய படத்தை நம்ம ப்ளாக் சமூகத்துடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று இது கிடைத்த நாளிலிருந்து ஒரு எண்ணம். ரிஷிகள் முனிபுங்கவர்கள் சுற்றி நின்று வாழ்த்த, ஜனகர் தம்பதி சமேதராக ஜானகியை கரம் பற்றி ராமனுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் வைபவம். எனக்கு தெரிந்து லக்ஷ்மணனும் விஸ்வாமித்திரரும் உடனிருக்கிரார்கள். கல்யாண ராமனின் முகமும் சீதையின் முகமும் நல்ல எழிலுடன் தேஜஸாக வரையப்பட்டிருக்கிறது.

வழக்கம் போல், சீதா கல்யாணம் தொடர்பான சில பாடல்கள்....

அருணா சாய்ராம்


ஓ.எஸ். அருனின் இந்த கருட கமன பஜன் ஒரு அற்புதம்...



பால முரளி கிருஷ்ணாவின் சீதா கல்யாண வைபோகமே... சூப்பர். ராமாயணம் சித்திரங்களாக பின்னால் வருகிறது. நெட்டில் ஏற்றிய புண்ணியவானுக்கு நன்றி.



சித்ராவின் பாவயாமி ரகுராமம்... Tribute to MS என்ற ஆல்பம்...



உன்னி கிருஷ்ணனின் பெஸ்ட் சாங்...


ராமன் பெயர் வந்தவுடன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நினைவடுக்குகளில் வந்த சில திரைப்படங்களில் இடம்பெற்ற ராமன் பாடல்கள் சில.. "ராமா.. ராமா.." என்று நீங்கள் கதறுவது என் காதில் விழுகிறது. ஸாரி..

கொசுறு 1 : மலையாள மோகன்லால் யேசுதாசுக்கு வாயசைத்து பாடும் பரதம் படப் பாடல்.. சிபி மலையில் இயக்கம்..  ரவீந்திரனின் இசையில்....


கொசுறு 2: சினிமாப் பாட்டு இல்லாமல் பதிவு முடித்தால் இரவு எனக்கு கெட்ட சொப்பனங்கள் வரும் ஆகையால்... நெற்றிக்கண்ணிலிருந்து கிருஷ்ணாவதார ரஜினிகாந்த்துக்கு பிறந்த ராமாவதார ரஜினிகாந்த் பாடும் பாடல்...



கல்யாண பத்திரிக்கை செய்தி:
அந்த வி.ஐ.பி. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். சமீபத்தில் நடைபெற்ற அவரது மகள் சௌந்தர்யாவின் திருமணப் பத்திரிக்கையில் இருந்தது. (எனக்கு எப்படி இந்த அழைப்பு கிடைத்தது என்று நீங்கள் கேட்கவில்லை.. நானும் சொல்லவில்லை...)

அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்... என்ற பி.பி.எஸ் பாடிய அன்னை படப் பாடல் நெட்டில் கிடைக்கவில்லை.

30 comments:

ஸ்ரீராம். said...

ரீதிகௌளையில் ராமனின் கதை கேளுங்கள் ஏன் போடவில்லை? வர வர ஒரே பாட்டாகப் போட்டு வலைப் பக்கம் திறக்கவே நேரமாகிறது..!!

RVS said...

சரி. ஓ.கே ஸ்ரீராம்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எனக்கு எப்படி இந்த அழைப்பு கிடைத்தது என்று நீங்கள் கேட்கவில்லை.. நானும் சொல்லவில்லை...)//

ஆஹா... சூப்பர் ஸ்டார் பத்திரிக்கை வெக்கற அளவுக்கு நீங்க பெரிய ஆள்னு தெரியாம போச்சே... வணக்கம் சார்... (இப்பவே ஒரு வணக்கம் போட்டுடுவோம் எதுக்கு வம்பு...ஹா ஹா ஹா)

Lovely songs you shared here, thanks for sharing... very nice picture too

RVS said...

சூப்பர் ஸ்டார் வீட்ல இன்னொரு கல்யாணம் வந்தா உங்களையும் அழைச்சுகிட்டு போயிருப்பேன் அ. தங்கமணி. அதுக்கு சான்ஸ் இல்லை.. ஸாரி... :))))):))):)))))

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

I could the VIP while reading the first line itself... nothing so secret.. as the marriage happened just last week.

Chitra said...

கல்யாண பத்திரிக்கை செய்தி:
அந்த வி.ஐ.பி. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். சமீபத்தில் நடைபெற்ற அவரது மகள் சௌந்தர்யாவின் திருமணப் பத்திரிக்கையில் இருந்தது. (எனக்கு எப்படி இந்த அழைப்பு கிடைத்தது என்று நீங்கள் கேட்கவில்லை.. நானும் சொல்லவில்லை...)


.... :-)

RVS said...

ஓ.கே. மாதவா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

கடைசி ரெண்டு பதிவா ஒரே ஸ்மைலி மட்டும் தான் போடறீங்க சித்ரா... ஏதாவது கமெண்டு போடணும்... சொல்லிப்புட்டேன் ஆமா... :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

நீச்சல்காரன் said...

இது ரஜினி சார் பத்திரிகை தான் என்று எப்படி நம்புவது சார்?
நீங்க சொல்லாததால ..நாங்க நம்பல ...:)

நீச்சல்காரன் said...

எதுக்கும் நானும் ஒரு வணக்கம் போட்டுருறேன்

பிரகாசம் said...

Here is the link for Annai movie song

http://download.tamilwire.com/songs/Hits/P.b._srinivas/15-azhagiya_Mithilai.mp3

ஹேமா said...

படம் அழகு.உன்னிகிருஷ்ணனின் குரலில் ராமகீர்த்தனை கேட்டு ரசித்தேன்.

சாய்ராம் கோபாலன் said...

RVS

சூப்பர் ஸ்டார் பத்திரிக்கை வெக்கற அளவுக்கு அந்தா பெரிய ஆளா நீ - வணக்கம் அண்ணாத்தே !!

உஷாரா இருக்கணும் போலிருக்கே !

RVS said...

நீச்சல்காரன் அவர்களே... நீங்க நம்பமாட்டீங்க அப்படீங்கறதால... நானும் சொல்லலை.... :):):):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வணக்கத்துக்கு ஒரு பதில் வணக்கம் ஸ்விம்மர் ... :):):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வீடியோ லிங்க் கிடைக்கவில்லை.. தகவலுக்கு நன்றி பிரகாசம்... :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ஹேமா.. தங்களது கவிதை(வலைப்)பூ அட்டகாசம். :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

சாய் அண்ணா... நாம ஒன்னும் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லை... ஏதோ அழைப்பு கிடைத்தது... அவ்வளவுதான்.. ஆனால் போகத்தான் முடியவில்லை... ( ரொம்ப கோச்சுகிட்டாராம்... ஊர்ல எல்லாரும் சொல்லிகிட்டாங்க....) :):):):):)))))))))))

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

brilliant painting.
அருணா சாய்ராம் உங்க பதிவுல தான் முதலில் கேட்கிறேன்.

Thanks.

RVS said...

அப்பாதுரை சார்.. உங்க வலையில....ஒரு சாப்பாட்டு மேட்டர் ஆரம்பித்து என்ன மாதிரி அட்டகாசம் பண்றீங்க... சூப்பர் சார். அருணா சாய்ராம் துக்கடாசுக்கு பேர் போன ஆளு.. ரசித்ததற்கு நன்றி... :):):):):):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Aathira mullai said...

//சினிமாப் பாட்டு இல்லாமல் பதிவு முடித்தால் இரவு எனக்கு கெட்ட சொப்பனங்கள் வரும் //

அத்தனையும் செவிக்கின்பமே..குறிப்பாக என்போன்ற இசை விரும்பும் பைத்தியஙகளுக்கு...

சீதா கல்யாண வைபோகம் பாடும் இளைஞருக்கு அந்த வைபோகம் முடிந்ததா? அழகிய மிதிலையில் காத்திருக்கும் சீதை யாரோ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

'ஜகம் புகழும் புண்ய கதை அந்த ராமனின் கதையே!’
அந்த இரண்டு சின்ன குழந்தைகள் பாட்டு மனதில் ரீங்காரம் இட்டன உங்கள் பதிவு பார்த்ததும்!

பத்மநாபன் said...

பத்திரிக்கை கிடைத்தும் கல்யானத்துக்கு போகலையா..வடை மாத்திரமல்ல, சூப்பர் சூப்பர் இனிப்புகள் எல்லாம் போச்சே ( விகடன்,குமுதத்தில் இனிப்புகள் எவை எவை என போட்டிருந்தார்கள்.

சீதா- ராம கல்யாண படம் அருமை.

நெட் மெதுவாக இருப்பதால் பாடல் களை கேட்டு விட்டு மீண்டும் வாரேன்.

RVS said...

சீதை, லவ குசாக்கலாக இரண்டு பெண்கள் என்று ஒரு குடும்ப சாம்ராஜ்யமே உண்டு... ஆதிரா.... (எப்படியோ இந்த சாக்கில் நான் ராமனாகிவிட்டேன்! நன்றி இதுபோன்ற கேள்விக்கு...:):):):):):) )

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ஆமாம் ஆர்.ஆர்.ஆர் சார். அதுவும் ஒரு அமர்க்களமான பாடல்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

அன்னிக்கு நாம குப்பை கொட்டற இடத்தில ரொம்ப குப்பை வந்து அதிகமா கொட்ட வேண்டியதாப் போச்சு.. நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்... No Regrets பத்மநாபன்... "செய்யும் தொழிலே தெய்வம், கல்யாணம், சாப்பாடு எல்லாம்...." :):):):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மா said...

அருமை சார் .
நீங்கள் கூறியபடி அலுவலகம் இழுப்பதால் மாலை வந்து ருசித்து மீண்டும் பின்னூட்டம் இடுகிறேன்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல்களின் தேர்வு. முழுவதும் பார்த்து விட்டு திரும்ப வருவேன். :)

RVS said...

ஏற்கனவே ஆபிஸ் போன பத்மா இன்னும் திரும்பலை.. நீங்களுமா வெங்கட்... ஒ.கே ஒ.கே..... ;-) ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

இராஜராஜேஸ்வரி said...

சீதா கல்யாண படம் கண்களை நிறைக்கிறது.
பாடல்கள் காதுகளைக் குளிரச் செய்கின்றன.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails