Sunday, March 13, 2011

ஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை - IV

நேரடியாக இங்கு வருபவர்களுக்கு... இதுவரையில்.....
 
இனிமே உங்க இஷ்டப்படி தாராளமா தொடர்ந்து படியுங்க....

******************** கடைசி அத்தியாயம் *****************

velip praharam

......ஒன்றாக கலகலவென்று சிரித்து பேசிக்கொண்டு நான்கு விரக்கிடை இடைவெளியில் சிகப்பு கலர் துப்பட்டாவும் வெள்ளை சட்டையும் ஒன்றோடொன்று உரசஉரச நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அந்தக் கஜப்ப்ருஷ்ட விமானம் தாங்கிய பெரிய கோபுரம் கடந்து "ஹோ..." என்று அடித்த பேய்க் காற்று எதிரில் தென்படும் எல்லாவற்றையும் தொட்டுக் கலைத்து படபடக்க சரசரக்க வைத்தது. கண் முன்னே ஜோடியாக பார்க்க பார்க்க சந்தானம் சாருக்கு பற்றிக்கொண்டு வந்தது. இன்றைக்கு இவர்களை கையுங் களவுமாக பிடித்து இதற்கு இரண்டில் ஒன்று முடிவு கட்டிவிட வேண்டும் என்று மூச்சுக்காட்டாமல் பின்தொடர்ந்தார். ப்ரதோஷம், மாத சிவராத்திரி போன்ற விஷேஷமில்லாததால் சிவன் கோவிலில் பெரிய பக்தர் கூட்டம் ஒன்றும் இல்லை. தள்ளுமுள்ளு இல்லாத கோயில் இக்காலத்தில் காண்பதரிது. ஸ்வாமியை தரிசித்துவிட்டு நெற்றியிலும் கையிலும் விபூதி குங்குமமாக பக்திப் பழமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் திரும்பிக்கொண்டிருந்தார்கள். இன்று நிச்சயம் அர்த்தஜாம பூஜைக்கு சோமசுந்தரக் குருக்களும் கைலாசநாதரும் மட்டும் கோவிலில் தனியாக இருப்பார்கள்.

கோபுரவாசலை அடுத்த வெளிப் ப்ரகாரத்தில் நுழைந்தார்கள். ஒன்றிரண்டு பேர் நவக்ரஹத்தை நாய் துரத்தும் அவசரத்தில் ஓடியோடி கைகூப்பி வலம் வந்தார்கள், ஒரு குட்டிப்பையன் தன் அக்காவை துரத்திக்கொண்டு கீழே விழுந்து கருங்ககல் படியில் பல்லை உடைத்துக்கொள்ளும் வேகத்தில் தத்தக்கா பித்தக்காவென்று ஓடினான். கொடிமரத்து பிள்ளையாரை தலைவணங்கி குட்டிக்கொண்டாள் விஜி. இதிலெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று சந்தானம் சார் எரிச்சலுற்றார். அருகில் மதி கையில் கொஞ்சம் புஸ்தகங்களுடன் பவ்யமாக நின்றிருந்தான். கொடிமரம் தாண்டி நந்தி கழுத்தில் தோழமையுடன் ஆதரவாக கைபோட்டு காதில் சிலர் தங்கள் வேண்டுதல்களையும் வேதனைகளையும் ரகஸியமாக சொல்லிக் காத்து ரக்ஷிக்கக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்தது என்ன நடக்கும் என்ற நகம் கடிபடும் திகில் சினிமா காட்சி போல விழியகல போதிய இடைவெளி விட்டு அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார் சந்தானம்.

நேரே கோயிலுக்குள் செல்லாமல் எடுத்தவுடனேயே வெளிப் ப்ரகாரம் சுற்ற ஆரம்பித்தார்கள். "கைலாஸநாதரை மனசுல நிறுத்திண்டு ஆத்மசுத்தியோட ஒரு தடவ பிரதக்ஷிணம் வந்து ஈஸ்வரான்னு சாஷ்ட்டாங்கமா நமஸ்காரம் பண்ணினா அஸ்வமேத யாகம் பண்ணின பலன்" என்று பாட்டி கையை பிடித்துக்கொண்டு பிரகாரம் சுற்றியபோது அவள் சொன்ன பிரதக்ஷினப் பலன் அவருக்கு அப்போது ஞாபகம் வந்தது. இப்படி இவர்களைப் போல் கேடித்தனமான ஜோடியாக சுற்றினாலும் அந்தப் புண்ணியபலன் கிடைக்குமா என்று பாட்டி ஜீவித்து இருந்தால் சந்தேகம் கேட்டிருப்பார் சந்தானம். இன்னும் வேறு எந்த கருமத்தையெல்லாம் நாம் இன்று பார்த்துத் தொலைக்கவேண்டுமோ என்று ஒருவித கலக்கத்துடன் அவரும் வெளிப்ரகாரம் பிரதக்ஷிணம் வர ஆரம்பித்தார். தெற்கு திரும்பி மேற்கு திசை பிரகாரம் நோக்கி மெதுவாக ஊர்ந்து சென்றார்கள். தென்மேற்கு மூலையில் இருந்த தலவிருக்ஷம் வில்வம் மற்றும் நாக லிங்கங்கள் வீற்றிருந்த மேடை அருகில் இருக்கும் கட்டைச் சுவற்றில் எம்பி உட்கார்ந்தார்கள். மதிலோர உபயமாக வந்த டியூப் லைட் மங்கிய வெளிச்சத்தை துப்பிக் கொண்டிருந்தது.

"என்னாச்சு மதி.. சொன்னது புரிஞ்சுதா?" என்ற லோலாக்கு ஆடிய விஜியின் தலையாட்டிய கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மதி. மரத்தின் பின்னே நின்று இதைக் கள்ளத்தனமாக பார்ப்பதற்கு சற்று மெய் கூசினாலும் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன  என்பது முக்கியம் என்பதால் சந்தானம் வெட்கத்தை விட்டு அங்கே நின்றுகொண்டிருந்தார். நாகருக்கு விளக்கு போடவந்த ஒரு மாமி கேவலப் பார்வை ஒன்றை சந்தானம் சார் மீது உதிர்த்துவிட்டு பிரகாரம் திரும்பும் வரை கண்களை உருட்டி உருட்டி அசிங்கத்தை மிதித்தது போன்று முகத்தை வைத்துக்கொண்டு பார்த்துவிட்டு சென்றாள். அடுத்த ஐந்து நிமிட கவனிப்பில் இவள் ஏதோ சொல்லிக்கொடுப்பதும் அவன் அதற்கு பதில் சொல்லுவதுமாக கழிந்தது. சந்தேகப்பட்டது தவறோ என்று ஒருகணம் நினைத்தார் சந்தானம்.

மரத்தடியில் காலுக்கருகில் ஏதோ வழுவழுப்பாக ஊர்வதை உணர்ந்தார். என்னவென்று காலை தூக்குவதற்குள் அது சுழற்றிக்கொள்ள மரத்தை விட்டு "பா...ம்..பூ.... பா... ம்.. பூ.." என்று அலறியடித்து காலை உதறிக்கொண்டு மறைவிடத்திலிருந்து வெளியே ஓடி வந்தார். ஒரு ஆறடி நீள கட்டுவிரியன். அவர் கால் மேல் ஏறியதை தவிர வேறொன்றும் தீங்கு செய்யாமல் சிவனேன்னு விளக்கு வெளிச்சத்தில் முதுகு பளபளத்து வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. திடுக்கென்று அலறல் சத்தம் வந்த திக்கில் பார்த்த விஜியும், மதியும் விரைந்து உதவிக்கு ஓடி வந்தார்கள். மேடைக்கு அருகில் கிடைத்த உடைந்த கம்பை தூக்கிக்கொண்டு மதி அரவத்தை அடிப்பதற்கு விரைந்தான். பரமசிவன் கழுத்தில் இருந்தால் அதற்கு இருக்கும் மரியாதையே தனி. காலைச் சுற்றிவிட்டு தீண்டாமல் ஓடினாலும் அந்த சர்பத்தினால் வெலவெலத்து போய்விட்டார் சந்தானம். பயத்தினால் அடைந்த படபடப்பு அடங்கும் வரை அந்தக் கட்டைச் சுவற்றில் சற்று அமர்ந்தார்.

"நீங்க எங்க இங்க வந்தேள்ன்னு நான் கேக்க மாட்டேன் மாமா" என்று அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தாள் விஜி.
பதிலேதும் சொல்லாமல் கோபுரத்தையே பார்த்துக்கொண்டிருந்த சந்தானம் எப்படி என்பது போல அவளைத் திரும்பி பார்த்தார்.

"கோபுரவாசல் நுழையும் போதே நான் உங்களை பார்த்துட்டேன். நீங்க ஏதோ சி.ஐ.டிக்காரா மாதிரி துப்பறியர்துக்காக சந்தேகமா எங்களை பின்தொடர்றதா எனக்குப் பட்டது. காலையிலே சென்ட்டர் வாசல்ல மதி நின்னுன்டு இருந்தப்போ நீங்க அண்ணாந்து மேலே மாடியை பார்த்தேள். நானும் உங்களைப் பார்த்தேன். ஒரு பையன் பாடத்ல சந்தேகம் கேட்டான்னு சொல்லிக்கொடுத்துட்டு திரும்பி வந்து பார்த்தா உங்களைக் காணலை..." அவள் முடிக்க "நா கொளத்தாங்கரையில குளிக்கும் போது விஜி வீட்டையே பார்த்துக்கிட்டு இருந்ததும், மணியடிச்சு அதுகிட்ட சிரிச்சுட்டு போனதையும் பார்த்துட்டு நீங்க ஏதோ தப்புக் கணக்கு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்." என்று ஒரு ஸ்னேகப் புன்னகையுடன் கேட்டான் மதி.

இருவரும் மாறி மாறி தங்கள் கட்ஷி பேசியதை கேட்ட சந்தானம் சாருக்கு சட்டென்று ஒன்றும் விளங்கவில்லை. தீர விசாரிக்காமல் கெளரியிடம் பேசியதை நினைத்துப் பார்த்தார். பதிலுக்கு அவள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. நல்லவேளை கிட்டுவிடம் போய் எதுவும் உளறிவைக்கவில்லை என்று தனக்கு தானே பாராட்டிக்கொண்டார்.

"விஜி.. நோக்கு ரமாவோட நிலம தெரியும். இப்ப எப்டி அல்லாடறான்னும் தெரியும். உன்னோட புண்ணியாஜனத்துக்கு நான் தான் கிட்டுக்கு ஒத்தாசையா காய்கறி இல எல்லாம் வாங்கிண்டு வந்தேன், விறகடுப்பு புகையில கண்ண கசக்கிண்டு சமயக்கட்டை பார்த்துண்டேன், பரிமாறினேன். எம்பொண்ணு மாதிரிதான் நீயும். அச்சுபிச்சுன்னு ஏதாவது செஞ்சுண்டுடுவியோன்னு தான் பயந்தேன்." என்று தன் உள்ளக்குமுறலை கொட்டித் தீர்த்தார் சந்தானம்.

யார் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்றில்லாமல் அவருடைய அந்த தன்னமலற்ற அக்கறையை பார்த்து வியந்து போனான் மதி. "சார்! நானும் விஜியும் ஒன்னாம் வகுப்புலேர்ந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்னாப் படிச்சோம். அதுக்கப்புறம் அது வேற ஸ்கூல் போயிடுச்சு. காலேஜ்ல கம்ப்யூட்டர் அதுஇதுன்னு படிச்சு நல்லா வளர்ந்திருச்சு. நமக்கு அவ்ளோ வசதி இல்லை. மத்தியானத்துக்கு அப்புறம் கம்ப்யூட்டர் சென்ட்டர் ஓனர் ரெஸ்ட் எடுக்க வீட்டுக்கு போய்டுவார். அந்தக் கிடைக்கிற நேரத்துல கம்ப்யூட்டர்ல கொஞ்சம் பழகிப் பார்த்துப்பேன். சாயந்திரத்துக்கு அப்புறம் இந்தக் கட்டையில உக்கார்ந்து எனக்கு அக்கறையோட இன்னும் கொஞ்ச நேரம் சொல்லிக்கொடுக்குது..." என்று நன்றியுடன் விஜியையும் பார்த்துக்கொண்டு சந்தானம் சாரிடம் கண்கள் பனிக்க ஒப்பித்தான்.

ஒரு விதமான இனம் புரியாத சந்தோஷம் சந்தானம் சாரைப் பற்றிக்கொண்டது. "நீ நல்லப் பையன்.. தீர்க்காயுசா நன்னா இருக்கணும்.." என்று ஆசிர்வாதம் செய்துவிட்டு "கோந்தே இனிமே இங்கே வேணாமே.. ஆத்லையே சொல்லிக் கொடுக்கலாமே..." என்று அறிவுரை சொல்லிவிட்டு நகர்ந்தார். பிரதக்ஷணம் முடிந்ததும் நூறு அஸ்வமேத யாகம் பண்ணின பலனை உணர்ந்தார். வெளியே வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி பறந்தார். சைக்கிளின் க்ரீச் இந்த முறை சந்தோஷத்தில் குதூகலமாக விசிலடித்தது. அவர் மனதும் தானாக சீட்டியடித்து.

*********

 இரு மாதங்களுக்கு பின்னர்.....

"ஏன்னா...ரிடையர் ஆனவாளுக்கு சனி என்ன ஞாயிறு என்ன.... இன்னிக்கி நாயித்துக்கிழமைன்னா லேட்டா எழுந்துக்கனுமா என்ன... காலா காலத்ல எழுந்துருக்கப் படாதோ." என்று தார்க்குச்சி போட்டுக்கொண்டிருந்தாள் கௌரி மாமி.

"ஏன்னா.. உங்க ஃபிரண்ட் கிட்டு வந்துருக்கார். அவாத்து மாமியோட.. சுருக்க எழுந்து வாங்கோ..." என்று கூப்பாடு போட்டு கிளப்பி விட்டு கூடத்திற்கு வந்தாள் கௌரி மாமி.
"என்னாச்சு.. காலங்கார்த்தாலையே தம்பதி சமேதராய் ரெண்டு பெரும் வந்துருக்கேள்!!"
"ஏழு மணியாடுத்தே மாமி! நான் எழுந்துண்டு ரெண்டு மணி நேரம் ஆச்சு. குளிச்சு பூஜை பண்ணிட்டு, முதல் ஆம்மா உங்காத்துக்கு தான் வரோம்.." என்று புன்னகையோடு கிட்டு மாமா பதிலளித்தார்.
ஒன்றும் புரியாத முகத்தோடு சரஸ்வதி மாமியைப் பார்த்தாள் கௌரி மாமி. அதற்குள் சந்தானம் சாரும் மூஞ்சி கைகால் அலம்பிக்கொண்டு நெற்றியில் ஒற்றை விபூதி கீற்றலோடு தோளில் காசித் துண்டு சகிதமாக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார்.
"சொல்லுங்கோ... என்ன விசேஷம்.. ரெண்டு பேருமா காலமே வந்துருக்கேள்." என்று விஜாரித்தார்.
"விஜிய இன்னிக்கி பொண் பார்க்க வரா!" என்று கிட்டு மாமா சொல்ல கையில் இருந்த குங்குமச் சிமிழை கௌரி மாமியிடம் நீட்டி "அவசியம் ரெண்டு பேரும் வந்துடுங்கோ....நாலரை ஆறு ராகு காலமோன்னோ. அதனால சாயரட்சை ஆறு  மணிக்கு மேல தான் புள்ளையாத்ள வரேன்ட்றுக்கா.." என்றாள் சரஸ்வதி மாமி சந்தோஷத்தில்.
"பையன் என்ன பண்றான்..." என்று ஆர்வத்துடன் கேட்டார் சந்தானம் சார்.
"ஃபைனான்ஸ்ல.." என்று கிட்டு ஆரம்பித்தவுடன் சந்தானம் துணுக்குற்றார்.
"ஃபைனான்ஸ்ல??? வேலை பார்க்கிறானா? எந்தூர்ல?" என்று பதைபதைத்தார் சந்தானம்.
"இல்ல... சொந்தமா ஃபைனான்ஸ் கம்பெனி வச்சுருக்கான். பாஸ்கர் ஃபைனான்ஸ். கும்மோணத்ல!".
சுபம்

பின் குறிப்பு: பொறுமையாக முழுதும் படித்து பின்னூட்டம் அளித்து ஊக்கமூட்டி ஆதரவளித்த எல்லோருக்கும் பாரதிராஜா பட டைட்டில் போல நன்றி!!!

பட உதவி: http://www.panoramio.com/user/700128?with_photo_id=4733556 

-

46 comments:

RS said...

Last punch was Hilarious.

Kept the tempo till the end. Great

Yaathoramani.blogspot.com said...

கொஞ்சம் சந்தானம் மாதிரி நானும்
பயந்து பயந்துதான் படிச்சேன்
ஏன்னா நீங்கள் கொடுத்த பில்டப் அப்படி
நல்லவேளை பயந்தமாதிரி ஏதும் இல்லை
நல்ல வேளை பாரதிராஜாவைப் போல
ஏதோ புதுமை பண்ணுகிறேன் எனச் சொல்லி
ஏதோ முடிவைத் தராமல் நல்ல முடிவாகக்
கொடுத்தமைக்கு நன்றி
கதை உங்களுக்கு நன்றாகச் சொல்ல வருகிறது
தொடர வாழ்த்துக்கள்

மாதேவி said...

நன்றாக முடித்துள்ளீர்கள்.)) வாழ்த்துக்கள்.

எல் கே said...

இவ்ளோ பில்டப் கொடுக்கும் போதே தெரியும் இப்படி ஒரு முடிவு இருக்கும்.

நல்ல ப்ளோ மைனரே

ஆமாம். இதுல எதோ சொந்தக் கதை இருக்கறதா காத்து வாக்குல சேதி வந்துச்சு

பொன் மாலை பொழுது said...

நல்லாவே முடிசிட்டீர் ஒய். பாத்தேளா ரமணி சொல்றத? //கதை உங்களுக்கு நன்றாகச் சொல்ல வருகிறது//
அதான் சொல்லிபிட்டேனே ஆரம்பத்திலேயே தி.ஜா.ராவும், சுஜாதாவும், பால குமாரனும் கலந்த கலவை அய்யா நீர்.

ரிஷபன் said...

முடிவைப் பார்க்கிறவரை படக் படக்.. அப்பாடி.. என்ன சரளமா எழுதிண்டு போறேள்.. திருஷ்டி சுத்திப் போடணும் ஒமக்கு.

RVS said...

@RS
பொறுமையாக தொடர்ந்து படித்து என்னை ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி. ;-))

RVS said...

@Ramani
நீங்க சொல்லலைன்னா ரெண்டாவது எபிசோடோட முடிச்சுருப்பேன். மிக்க நன்றி ரமணி என்கிற வெங்கடசுப்ரமணியன். ;-)))))

RVS said...

@மாதேவி
தொடர் வாசிப்பிற்கு நன்றி மாதேவி.. உங்களது வலைத்தளைத்தை அடிக்கடி பார்வையிடுகிறேன். எல்லாம் நமக்கு ஒத்து வராத சப்ஜெக்ட். சாப்பிடத்தான் நான் லாயக்கு. அதனால் ஒன்றும் பின்னூட்டமிட முடிவதில்லை. ;-)))

RVS said...

@எல் கே
ஏன்.. புஸ்ஸுன்னு முடிச்சுட்டேனா?
எது எழுதினாலும் ஏனய்யா உள்குத்து குத்துறீங்க? இதில் சொந்தக்கதை பூஜ்யம் சதவிகிதம் கற்பனை நூறு சதவிகிதம்.. தொடர்ந்து படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி எல்.கே. ;-))))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மாணிக்கம்.. தங்களது புகழுரைக்கு நான் ஏற்றவனா என்று தெரியாது.. ஆனால் எனக்கு நீங்கள் மிகவும் தெம்பூட்டுகிறீர்கள்!! அன்புக்கு நன்றி.. ;-)

RVS said...

@ரிஷபன்
தன்யனானேன். மிக்க நன்றி ரிஷபன் சார்! நீங்கள்லாம் எழுதறதைப் பார்த்து, என்னுடைய வழக்கமான நையாண்டி பாணியை மாற்றி இதை எழுதினேன். ஹிட் ஆயிடுச்சோ? ;-)))

raji said...

//அருகில் மதி கையில் கொஞ்சம் புஸ்தகங்களுடன் பவ்யமாக நின்றிருந்தான்.//


இந்த இடத்துல கதையின் முடிவை ஊகிச்சுட்டேன்

கதையின் ஓட்டம் நன்றாக இருந்தது.முடிஞ்சுடுத்தேனும் இருக்கு.
இந்த குறையைத் தீர்க்க வேணும்னா புது ரிலீஸ் போட்டுடுங்களேன்

எல் கே said...

/இந்த குறையைத் தீர்க்க வேணும்னா புது ரிலீஸ் போட்டுடுங்களேன்//

நான் வழிமொழிகிறேன்

Madhavan Srinivasagopalan said...

அருமை.. அருமை.. நீ கதை சொல்லும் விதம் சூப்பர்.
வர்ணனைகளும், உவமைகளும் நன்றாக வருகிறது.

கதை பற்றி.. பொதுவாக ---------
ஒண்ணு நிச்சயம்..
கண்ணால் பார்ப்பது பொய்யாக இருக்கலாம்..
காதால் கேட்பது பொய்யாக இருக்கலாம்
தீர விசாரித்து மெய்பொருள்(நமது காலேஜ் 'பிரின்சிபால்' போன்ற தூய்மையான) காண்பதறிவு.. -- வள்ளுவன் வாக்கு..

சாட்சிக்காரன் கால்ல விழுறதா விட.. ( ஊர்ஜிதம் செய்யாத விஷயத்தை பரப்புவதை விட)
சண்டைக் காரன் கால்ல விழுறது பெட்டர் (சம்பந்தப் பட்டவர்களும் பக்குவமாய் பேசி மெய்பொருள் காண்பது 'அறிவு' )

உனது எழுத்துக்களுக்கு மீண்டும் ஒரு சல்யூட்...
அடிக்கடி இப்படி சல்யூட் வைக்க வேண்டி இருக்குமென நம்பும்
உனது நண்பன்
மாதவன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முடிவு! சீக்கிரமே முடிந்துவிட்டதே என்ற எண்ணமும் மனதினுள்! ராஜி மற்றும் கார்த்திக் சொல்வது போல அடுத்த குறுந்தொடர் ஆரம்பித்து விடுங்களேன்… :)

RVS said...

@raji
Excellent Observation!!!
புதுசா... ஒரு தீம் இருக்கு...
கொஞ்சம் அறிவியல்..
கொஞ்சம் காதல்...
கொஞ்சம் திகில்...
நிறைய இளமை கொண்டாட்டத்துடன்....
நமது ட்ரேட் மார்க் நக்கலுடன்....
கொஞ்ச நாள் ஆகட்டும்.. ஆரம்பிப்போம்.. ;-)))

RVS said...

@எல் கே
அண்ணாத்தே... மேலே ராஜிக்கான பதிலில் உங்களுக்கும் சேர்த்துதான் சொல்லியிருக்கேன்.. ;-)))

RVS said...

@Madhavan Srinivasagopalan
உனது மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி மாதவா...
உன் அன்பிற்கு ஒரு ராயல் சல்யூட். ;-)))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே!
ராஜிக்கான பதிலில் தங்களுக்கும் சேர்த்து சொல்லியிருக்கிறேன்.. பார்க்கலாம்.. ;-)))

raji said...

//கொஞ்சம் அறிவியல்..
கொஞ்சம் காதல்...
கொஞ்சம் திகில்...
நிறைய இளமை கொண்டாட்டத்துடன்....
நமது ட்ரேட் மார்க் நக்கலுடன்//

நம்ம ரேஞ்சுக்கு இறங்கி வந்து கதை சொல்லுங்க சார்.
நானெல்லாம் இன்னும் பாட்டி வடை சுட்ட காக்கா நரி
கதை ரேஞ்சையே தாண்டலை.

Madhavan Srinivasagopalan said...

கதையைப் படித்த அனைவரும் ஒட்டு போடவில்லை..
20 பேரு கதைப் படிச்சிட்டு
10 பேரு மட்டும் கருத்து சொல்லி இருக்காங்க
4-6 -- பேரு மட்டும் ஒட்டு போட்டிருக்காங்க..

ஏன் ?
தெரியுமே உங்கள் கதையை படித்து மெய் மறந்து போயிட்டாங்க..
அதனால தான் நேத்திக்கே கதையைப் படிச்ச
இன்னிக்குதான் ஒட்டு போட ஞாபகம் வந்து ஒட்டு போட்டேன்.

இளங்கோ said...

நல்லபடியா சுபமா கதைய முடிச்சுட்டிங்க.
அடுத்த கதையை நோக்கி... :)

Vidhya Chandrasekaran said...

மொத்த தொடரையும் இப்பதான் படித்தேன். அருமையா இருக்கு. சூப்பர்.

Aathira mullai said...

புது பிஸினெஸ் தொடங்கிட்டீங்களா.. பைனான்ஸ் கம்பெனியா? நாங்கள் ஜாக்கிரதை...

Aathira mullai said...

வராம இருக்க முடியலை. அப்பப்ப வந்து தலைப்பை மட்டும் பார்த்துட்டு போயிடுறேன். எல்லாத்தையும் சேர்த்து ஒரே மூச்சில் படிச்சிடுவோம்ல..அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாத்தான் இருந்தாகனும்.. இருக்கிறேன். என்ன செய்ய?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உஸ்..அப்பாடா...அந்த கட்டுவிரியனுக்கு நன்றி! மனசு இப்ப்த் தான் நிம்’மதி’ ஆச்சு..கிட்டு ஸாரோட வெள்ளை உள்ளத்துக்கு ஒண்ணும் வராதுன்னு, நினைச்சாலும், அந்த ஃபைனான்ஸ் மாப்பிள்ளைன்னு சொன்னதுமே,’சொரேர்’னு ஆச்சு.ஓய்!
கொஞ்ச(சு)ம் திஜா..கொஞ்ச(சு)ம் சாவி கலந்த கலவை இது! சபாஷ்!

RVS said...

@raji
நல்லாத்தான் எழுதறீங்க... ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா.... ;-)))

RVS said...

@இளங்கோ
ஆமாம்.. இளங்கோ.. அடுத்தது ஒரு ட்ராஜிக் கொடுப்போமோ... கொஞ்ச நாள் கழித்து இன்னொரு கதை எழுதறேன்.. ;-))

RVS said...

@வித்யா
முழுசாப் படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க... ;-))

RVS said...

@ஆதிரா
ஹி..ஹி.. நல்லா இருந்துச்சா.. ;-))

RVS said...

@ஆதிரா
பொறுமையா ஆற அமர படிச்சுட்டு சொல்லுங்க.... நன்றி ஆதிரா.. ;-))

RVS said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
ஸார் வாள்!!! உங்களோட பாராட்டு என்னை இன்னும் நன்றாக எழுத வைக்கட்டும்.. மிக்க நன்றி.. ;-))

Anonymous said...

எக்ஸலன்ட் அண்ணா! இதே போல இன்னொரு தொடர் சீக்கிரம் ஆரம்பிங்க! :)

RVS said...

@Balaji saravana
பாராட்டுக்கு நன்றி தம்பி! விரைவில் ஒரு ஜிலுஜிலு தொடர் ஆரம்பிக்கிறேன்.. ;-))

சாந்தி மாரியப்பன் said...

கடைசி நிமிஷ சஸ்பென்ஸ் நல்லாவே உடைஞ்சது :-)

RVS said...

@அமைதிச்சாரல்
ரசித்ததற்கு நன்றிங்க... ;-)))

இராஜராஜேஸ்வரி said...

சுபமான முடிவிற்குப் பாராட்டுக்கள்.
கடிக்காமல் ஓடிப்போன கட்டுவிரியனுக்கு நன்றி.

Unknown said...

வாவ் கிரேட் எண்டிங்
ரொம்ப நல்ல இருக்கு சுபமான முடிவு

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க... உங்களை மணிராஜ்ன்னு சொல்றதா... இல்லைன்னா ராஜேஸ்வரி அப்படின்னு கூப்பிடறதா.. ;-))

RVS said...

@siva
நன்றி சிவா!! இன்னொரு கதை எழுதலாம்ன்னு இருக்கேன்.. ;-)))

அப்பாதுரை said...

பைனான்ஸ் கம்பெனி முடிவு யூகிக்க முடிந்தது. இருப்பதிலேயே 'நாய் துரத்தும் நவகிரக சுற்று' குபீரென்று சிரிக்க வைத்தது. நன்றி (முடிச்சதுக்கு :).

அப்பாதுரை said...

கதைல ஆத்து பாஷை ரொம்ப ஜாஸ்திண்ணா.

RVS said...

@அப்பாதுரை
பாராட்டுக்கு நன்றி அப்பாஜி! இன்னொன்னு எழுதியிருக்கேன் பாருங்க.. ;-))

RVS said...

@அப்பாதுரை
கதைக்களம் அப்டிண்ணா!!! ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails