"உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன?"
(ஆறு விரலைக் காட்டினார் அவர்)
"ஆறு"
"அதோட கழுத்துக்கு மேல இருக்கறதைச் சேர்த்துக்கோங்க"
"தலையா?"
"உஹூம்.. அது இல்ல.. முன் தல.. இது...இது..."
"ஓஹோ...முகம்... உங்க வீட்டுக்காரர் பேர் ஆறுமுகம் சரிதானுங்களா?"
(ம. தொகை கணக்கெடுக்கும் அதிகாரி நெஞ்சு பத பதைக்க அந்தப் பதிபக்தி நிறைந்த பெண்மணி சொன்ன பதில் கடைசியில்.....)
*********
சைக்கிள் என்று ஆயிரமாயிரம் கால் உள்ள 'வலை'சைக்கிளில் எழுதுபவர் மிருணா. நிறைய கவிதைகள் எழுதுகிறார். "இங்கே எழுத்தாக நான்" என்று கவித்துவமாக அறிமுகம் செய்து கொள்கிறார். சமீபத்தில் பயணம் என்ற தலைப்பில் இவர் எழுதுவது அற்புதமாக இருக்கிறது. இவரது எழுத்து ஆளில்லா சாலையிலே சுகமான ஜன்னலோரப் பயணம்.
திரு காஷ்யபன் அவர்கள் தீக்கதிர் பத்திரிக்கையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தன் எழுத்துக்கு ஓய்வில்லாமல் தொய்வில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ், ஹிந்தி ஆங்கிலத்தில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பெரியவர். எனது சேஷ்டைகளை ஒதுக்கிவிட்டு மரியாதையாக நான் படிக்கும் ஒரு ப்ளாக். http://kashyapan.blogspot.com/
கென்யாவிலிருந்து ராகவன் எழுதும் வலைத்தளம் கூடல்கூத்தன்.ப்ளாக்ஸ்போட் .காம். வால்நட்சத்திரம் என்ற இவரது சமீபத்திய கதை அற்புதமாக இருக்கிறது. ரசிகன் என்ற தளத்திலிருந்து என்கிறார்....
பிரசன்னா ராஜன் ஒரு பயோ மெடிக்கல் பொறியாளர். ஒளியுடையோன் என்ற வலைப்பூவில் அவர் எழுத்துக்களால் ஒலியெழுப்பாமல் பிரசன்ன ஒளி எழுப்புகிறார். மாசத்துக்கு ஓரிருமுறை எண்ணங்களை பதிவாக பிரசவிக்கிறார். அற்புதமான நடையில் மிளிர்கிறார். ஒலக சினிமா நிறைய பார்க்கிறார். ட்ரான்சிஸ்டர், தேங்காய், வறுகடல என்ற இவரது சிறுகதையை மார்கோனி படிக்கவேண்டும். ரேடியோவின் பல பயன்பாடுகள் தெள்ளெனத் தெரிகிறது. நல்ல வாசிப்பனுபவம்.
சங்கப்பலகையில் எழுதிவருபவர் திரு. அறிவன். அல்லவை தள்ளி நல்லவை கொள்ள என்று உப தலைப்பு வைத்திருக்கிறார். பெண் எழுத்துப் பற்றி பொன் எழுத்தாக அவர் எழுதியதின் சுட்டி இங்கே. நிறைய அரசியல் எழுதுகிறார். தமிழில் நன்கு தேறியவர் என்பது அவரது தேர்ந்த எழுத்துக்களில் தெரிகிறது. ஒரு முறையாவது சங்கப்பலகையில் உட்கார்ந்து பாருங்கள். சுகமாக இருக்கும்.
இது என் ரஃப் நோட்டு என்று எழுதிவரும் பதிவர் டோடோ. ஜப்பானியப் பதிவரா என்று கேட்கிறீர்களா? இல்லை. அருந்தமிழ்ப் பதிவர். ஆங்கிலப் படங்களையும் பாடல்களையும் பற்றிக் கூட ஒரு பதிவு வைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் எழுதிய ஒரு கிளாஸ் அஞ்சலி நன்றாக இருக்கிறது. ஒரு கிளாஸ் சைசில் சிறிய சிறிய கவிதைகள் ரம்மாக. ச்சே. ரம்மியமாக எழுதுகிறார். திகட்டாமல் இருக்கிறது.
The Roots என்று தான் சுய விவரத்தில் போட்டிருந்தது. நல்ல ஆணி வேர். ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான தனது அப்பத்தா கதையை நமக்காக உண்மை புதிததன்று என்ற தனது வலைத்தளத்தில் ப்ரசூரித்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.கென்யாவிலிருந்து ராகவன் எழுதும் வலைத்தளம் கூடல்கூத்தன்.ப்ளாக்ஸ்போட் .காம். வால்நட்சத்திரம் என்ற இவரது சமீபத்திய கதை அற்புதமாக இருக்கிறது. ரசிகன் என்ற தளத்திலிருந்து என்கிறார்....
பிரசன்னா ராஜன் ஒரு பயோ மெடிக்கல் பொறியாளர். ஒளியுடையோன் என்ற வலைப்பூவில் அவர் எழுத்துக்களால் ஒலியெழுப்பாமல் பிரசன்ன ஒளி எழுப்புகிறார். மாசத்துக்கு ஓரிருமுறை எண்ணங்களை பதிவாக பிரசவிக்கிறார். அற்புதமான நடையில் மிளிர்கிறார். ஒலக சினிமா நிறைய பார்க்கிறார். ட்ரான்சிஸ்டர், தேங்காய், வறுகடல என்ற இவரது சிறுகதையை மார்கோனி படிக்கவேண்டும். ரேடியோவின் பல பயன்பாடுகள் தெள்ளெனத் தெரிகிறது. நல்ல வாசிப்பனுபவம்.
சங்கப்பலகையில் எழுதிவருபவர் திரு. அறிவன். அல்லவை தள்ளி நல்லவை கொள்ள என்று உப தலைப்பு வைத்திருக்கிறார். பெண் எழுத்துப் பற்றி பொன் எழுத்தாக அவர் எழுதியதின் சுட்டி இங்கே. நிறைய அரசியல் எழுதுகிறார். தமிழில் நன்கு தேறியவர் என்பது அவரது தேர்ந்த எழுத்துக்களில் தெரிகிறது. ஒரு முறையாவது சங்கப்பலகையில் உட்கார்ந்து பாருங்கள். சுகமாக இருக்கும்.
*********
"அந்த நாய எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க."
14 comments:
பத்மநாபன், எல்கே இருவருமே சூசி தான்.நேற்றே எனக்குத் தோன்றியது என்னவென்றால் நம் நண்பர்களிடம் நீங்கள் பார்க்கும் தளங்களில் சிறந்த சிலவற்றை எனக்கும் அறிமுகப் படுத்துங்களேன் என்று கேட்கவேண்டும் என்று தோன்றியது!
பச்சையா திட்டுனாலும் பதிபக்தைகள் பெயர் மட்டும் சொல்லமாட்டார்கள் என்பது நல்ல நகைச்சுவை ...
அது அந்த காலம் ... இப்பெல்லாம் சுஜ்ஜு... பிஜ்ஜு ன்னு நாய செல்லமா கூப்பிடற மாதிரியே தான் அழைக்கிறார்கள் .....
இன்றைய அறிமுகங்களும் தேர்ந்தெடுத்த அறிமுகங்கள் .... வாழ்த்துகள் ...
நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நல்லாதான் சுட்டிருக்கீங்க.பாராட்டுக்கள்.
@ஸ்ரீராம்.
கரெட்டுதான்... நன்றி ஸ்ரீராம்! ;-))
@பத்மநாபன்
நன்றி பத்துஜி! ;-))
@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி சார்! ;-))
@இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம்!
நன்றி திரு.RVS.
விட்டுப் போனவற்றையும் படித்திவிட்டேன். RVS . கீழிருந்து மரல் ஜோக் படிக்கும் போதே தெரிந்து விட்டது.
இந்தப் பதிவுகளை விட மோகன் அண்ணாவின் பின்னூட்டத்தில் நீங்கள் அடித்த ரகளை இன்னும் நினைத்து சிரித்துக் கொள்கிறேன்.
நேற்று ஊருக்கு சென்ற [போது கூட்டமாய் உட்கார்ந்து நாட்டாமை சீனை படித்து ரசித்தோம்.
I wonder your versatility.
@மிருணா
நன்றிங்க மிருணா! ;-))
@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன்!
அது ஒரு ஃப்ளோல வருதுங்க... நன்றி ;-))
சுவையான அறிமுகங்கள். ராகவனின் எழுத்து சில சமயம் சம்மட்டி, சில சமயம் கிணற்றில் ஏதாவது விழுந்துவிட்டால் சங்கிலி போல் ஒன்றைப் போட்டு எடுப்பார்களே, அது. நிறைய ரசித்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிப்பதில் சந்தோஷம்.
நல்ல ஜோக். நல்ல வேளையா விரலுக்கடங்காத பேர் அமைஞ்சு போச்சு!
அனைத்தும் அருமையான தளங்கள்.
இதில் நிறைய தளங்களை நான் படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.
Post a Comment