2007-ல் இந்த ப்ளாக்-ஐ தொடக்கி, மிக சீக்கிரமாக 2010-ல் எழுத ஆரம்பித்திருக்கும் நான், என்னவோ, என்னல்லாமோ, இப்படியோ, அப்படியோ, பார்கரதையோ, கேட்கரதையோ, படிக்கரதையோ, எதையோ எப்படியோ எழுதலாம்னு ஆசை. ஆசையே துன்பத்திற்குக்கெல்லாம் காரணம் என்றார் புத்தர். எழுத்துப் பித்து அதிகமாகி என்னுடைய இந்த ஆசையே மற்றவர்களின் துன்பத்திர்க்கெல்லாம் காரணமாக இல்லாமல் இருக்குமாறு எங்கும் நிறைந்த பரம்பொருளை வேண்டி ஆரம்பிக்கிறேன்.
பின் குறிப்பு: டைட்டிலை கண்டு மிரள வேண்டாம். மூளை பலகீனம், இருதய பலகீனம் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை படிக்காமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் முடிந்தால் படிக்க முயன்று பார்க்கவும்.
2 comments:
ஆமா ஆர் வி எஸ் - மூணு வர்சம் தமிழில் நல்லா எழுதப் படிக்கக் கத்துக்கிட்டு - 2010 பிப்பெட்டில எழுதுன இடுகையா இது - இத எழுத மூணு வருசம் ஆச்ச்சா ? ...... ம்ம்ம் நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
சரஸ்வதி சபதம் வித்யாபதி போல கொஞ்சம் வருதான்னு செக் பண்ணிப் பார்த்த பதிவு... நன்றி சார்! ;-))
Post a Comment