Sunday, August 8, 2010

ஃபுட்பால், பேஸ்பால், ஸ்கேட்போர்டு...

ஃபுட்பால் 
பள்ளிப் பருவத்திலும், அதற்குப் பின்னரும் புட்பால் ஒன்றும் எனக்கு பிடித்தமான விளையாட்டு இல்லைதான். ஆனாலும் அந்த சுறுசுறுப்பான ஓட்டமும், கோலடித்த பிள்ளையாண்டானை நாலைந்து பேர் ஆரத்தழுவி சட்டைகழற்றி கொடாடும் தருணங்களும் கட்டாயம் எல்லோரும் பார்த்து ரசிக்கக்கூடியது தான்.  பத்தொன்பது வயதிற்கு உட்பட்ட பிரிவு விளையாட்டு ஒன்றில் ஸ்பெயின் உதைப்பந்து வீரர் Ezequiel Calvente இத்தாலிக்கு எதிரான ஆடமொன்றில் கால் மாறி ஆடிய கனக சபேசர் மாதிரி, வலது காலுக்கு பதில் இடது கால் கொண்டு கோல் போஸ்ட்டின் எதிர் மூலையில் அடித்த கோல் கண்களிலேயே நிற்கிறது. உங்கள் பார்வைக்கு.



பேஸ்பால்
baseball

நாங்கள் பள்ளியில் இதை சாஃப்ட்பால் என்று சொல்வோம். நானும் விளையாடி இருக்கேன். ஆனால் இந்தப் சப்பை மூக்கு ஜப்பானியப்  பையன் பிடிக்கும் காட்ச் போல இனி ஸ்பைடர் மேன்  வந்துதான் பிடிக்கவேன்டும். ஜாக்கி சான் படங்களில் வருவது போல சரசரவென சுவர் ஏறி கீழே விழாமல் பதவிசாக பந்தை மட்டும் பிடித்துவிட்டான். பலே கெட்டிக்காரன்.



ஸ்கேட்போர்டு

கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுகிறான் என்று பிஸியாக வேலை பார்ப்பவரை பற்றி சொல்வதுண்டு. இங்கு வேலையே சக்கரம் கட்டி சுற்றுவதுதான் என்று சுற்றிக்காண்பிக்கும் இந்த வீடியோ நிச்சயமாக கண்களுக்கு விருந்து. நாம நடந்தாலே தடுக்கி விழறோம், தடுக்கி தடுக்கி சுத்தறாங்கப்பா... அப்பப்பா..



ஞாயிற்றுக்கிழமை விளையாட்டாக ஓடிவிட்டது. நாளைக்கு அலுவலகம் செல்ல வேண்டும். குட் நைட்.

1 comments:

Sweatha Sanjana said...

படிங்க படிங்க உங்களுக்கு பிடிச்சத படிங்க .. எழுதுங்க எழுதுங்க ஆக்கபூர்வமா எழுதுங்க
அப்படியே பரிசுகளையும் வெல்லுங்க !! ஜீஜிக்ஸ் .( www.jeejix.com )

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails