Tuesday, August 24, 2010

அரை டிக்கெட்டின் ஆங்கில கட்டுரை

vin1சின்ன வயசில் "வாழைமரம் பற்றி ஒரு பக்க கட்டுரை வரைக" என்று தமிழில் கேட்டாலே நமக்கு ததிகினதாம் போடும். வீட்டு கொல்லைப்புறத்தில் அவசரத்துக்கு ஒதுங்கும் போது பார்த்த வாழைமரத்தை ஞானக் கண்ணால் பரீட்சை எழுதும்போது அண்ணாந்து மேற்கூரையை பார்த்துட்டு தார் போடும், பூ, காய், கனி என்று எல்லாவற்றையும் சாப்பிடலாம், வாழையடி வாழை அப்படின்னு ஏதோ எழுதி வெள்ளை பேப்பரை நீலமாக்கி ஒப்பேற்றி கொடுத்துவிட்டு வருவோம். கட்டுரை எழுதுதல் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் (புலிநகக் கொன்றை) தன்னுடைய அக்ரகாரத்தில் பெரியார் (காலச்சுவடு வெளியீடு) புஸ்த்தகத்தில் சிறுவயதில் அவர் எழுதிய ஒரு ஆங்கில கட்டுரையில் A thief stolen my Bicycle என்று வந்த ஒரு வாசகத்தை பார்த்து அவர் அப்பா "திருடன் தான் சைக்கிளை திருடிண்டு போவான்,வேற யாரு வந்து திருடுவா?  தீஃப்ங்கற வார்த்தை தேவையே இல்லைன்னு சொல்லி சிரிச்சார்" அப்படின்னு எழுதியிருப்பார். நம்ம வாத்தியார் சுஜாதா கூட அப்பப்ப சிறந்த ஆங்கில கட்டுரைகளின் தொகுப்பு வெளிநாடுகளில் வெளியிடுவது போல் நாமும் வெளியிடவேண்டும் என்று சொல்வார். வாஸ்த்தவம்தான். பேசும்போது சுலபமாயிருக்கிற விஷயங்கள் வாசகமாய் எழுதும்போது முட்டிக்கும். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதியதாய் சரித்திரமே இல்லை. சில நேரங்களில் வார்த்தை தேடி தேடி எண்ணங்கள் சிதைந்து சிதறிப் போகும். எழுது. அடி. திருத்து. எழுது.....

Photobucketரொம்ப நீட்டி முழக்க வேண்டாம். என்ன சொல்ல வந்தேன்னா என்னுடைய சீமந்த புத்ரி ஐந்தாவது படிக்கும் ஒரு அரை டிக்கெட்டு. அவர்கள் பள்ளியில் ஒரு டாபிக் சொல்லி ஐந்து நிமிடத்திற்குள் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதச் சொல்லியிருக்கிறார்கள் . அப்படி அவசரகதியில் காமா சோமாவென்று அவள் எழுதிய இரண்டு கட்டுரைகளை கீழே தந்திருக்கிறேன்.

1. Happenings at Home (Last Sunday)
-----------------------------------------
Last Sunday my father my mother went out in the evening to buy for our house function and in my home me, my sister and my friends were playing and we ate delicious food and we were happy playing computer and my mother bought me chocolates and for me she bought pencil box. I was very excited in that day then I played carom board. And finally we went to sleep at night. Thank You!

2. Autobiography - Umbrella
Hi! I am umbrella people use me when it is hot and rainy and I have pink spots on me. I am made of rexin cloth and I am foldable. I am made in factory and I protect people from rain and my hand is made out of plastic. When grandma wants to go to the temple in a hot sun they also take me in that time. I worship god and I am used as granspa's walking stick and I am sold in shops. Please people buy me I will be useful for you everywhere and everytime in summar and in rainy days and even I come in designs and shape. Childrens open and sit on me in that time I cry but they enjoy it even for playing the children use me. Thank You!
மேற்கண்ட இந்த இரண்டு கட்டுரையிலும் நிறைய and போட்டு எழுதினாலும், தன்னுடைய பிஞ்சு நினைவோடையில் வந்ததை ஓரளவுக்கு மற்றவர்களுக்கு புரியும்படி எழுதியவளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக எனக்குப் பட்டது. ஏனென்றால் வீட்டில் முழுக்க முழுக்க தமிழில் சம்பாஷித்து பள்ளியில் மட்டும் ஆங்கிலம் பயில்வதால் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

4 comments:

பத்மநாபன் said...

உங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்...விரைவில் அப்பாவுக்கு போட்டியா வலையுலகத்தில் தூள் கிளப்பபோறங்க ....
அப்பா ஒரு நாளைக்கு 2பதிவுன்னா, பொண்ணு 4 பதிவு...

RVS said...

ஏதோ.. பெரியவங்க ஆசீர்வாதம் பத்மநாபன் சார்... நன்றி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அமைதி அப்பா said...

ஏதையோ தேடிக் கொண்டிருந்த பொழுது இந்தப் பதிவு என் கண்ணில்பட்டது.தங்கள் மகளின் எழுத்தைப் பதிவிட்டுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி.

நல்ல எதிர்காலம் தங்கள் மகளுக்கு உண்டு! எனது வாழ்த்துகள்.

RVS said...

@அமைதி அப்பா
மிக்க நன்றி. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails