Saturday, August 14, 2010

சனிக்கிழமை சங்கதி - கத்திக் குத்து கந்தன்

ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒரு வித்தியாசமான பரிசுப்போட்டி உண்டு.  என்னவென்றால் சைக்கிள் ஹான்டில்பாரில் இரண்டு சிறிய இரும்பு  கம்பங்களை நிறுத்தி ஒரு நூலிழை இரும்பு கம்பி ஒன்று கட்டி இருப்பார்கள். கிட்டத்தட்ட அந்தரத்தில் கயிறு மேல் கழைக்கூத்தாடிகள் நடக்க கட்டியிருப்பது போன்ற அமைப்பு. அதுவே சிறிய வடிவத்தில், கயிற்றுக்கு பதில் கம்பி. ஒரு ரப்பர் கைப்பிடி போட்டு சிறிய ஓட்டையுள்ள வட்டவடிவ தலை கொண்ட சாவி போன்ற இரும்பை  அந்த கம்பி உள்ளே நுழைத்து தொங்கவிட்டிருப்பார்கள். அந்த சாவியின் கைப்பிடியின் அடியில் இருந்து அது ஒரு சிறிய பாட்டரிக்கு இணைக்கப்பட்டிருக்கும். 

போட்டி என்னவென்றால் அந்த சாவி போன்ற இரும்பை ஒரு புறத்திலிருந்து எதிர்புறத்திர்க்கு அந்த கம்பி இழையில் இடிக்காமல் நகர்த்தி சேர்க்கவேண்டும். அப்படி அந்த கம்பியில் பட்டால் அது "கீக்... கீக்....." என்று கத்த ஆரம்பித்துவிடும்.  தோற்றுவிட்டதாக அர்த்தம். இதில் கலந்துகொள்ள ஒரு ரூபாய் கட்டவேண்டும். கெலித்தால் ஐந்து ரூபாய். டாஸ்மாக் பார்ட்டிகள், அக்னிஹோத்ரம் செய்பவர்கள், வாசனை புகையிலை போடுபவர்கள், கொம்பு ஊன்றி நடப்பவர்கள், வெல வெல என கை கால்கள் நடுங்கும் நரம்புத் தளர்ச்சி வந்தோர், எதைப் பார்த்தாலும் தவியாய் தவித்து ஒரு படபடப்பு அடைபவர்கள் போன்றோர் நிச்சயமாக இதில் ஜெயிக்கமுடியாது. சிறுவயதில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கண்ணயராமல் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்ததில் ஐம்பது போட்டியாளர்களில் இரண்டு மூன்று பேர் ஜெயித்தால் அதிகம். 

katthikuthu Davidநம்மாட்களுக்கு கை அசங்காமல் பிசகாமல் இதை செய்வதே பெரிய காரியம். இங்கே ஒரு ப்ரொஃபசர் தன் ஓதுவித்தல் பணியை பார்க்காமல் கத்தி கபடாவோடு திரிகிறார். அவர் பெயர் டேவிட் அடமொவிச். யார் பேச்சுக்கும் அடங்காமல் வேக வேகமாக  கத்தி எறிந்து உலகிலேயே இவர்தான் அதிவேக குத்து கத்தி வீச்சாளராம். ஒரு பெண்மணியை சிரிக்கச்சொல்லி ஒரு கட்டைக்கு முன் பொம்மை போல நிறுத்தி சின்ன கத்தி, பட்டாக் கத்தி, அருவாள், கோடாலி என்று சகலவிதமான ஆட்கொல்லி ஆயுதங்களை கையிலேந்தி பழைய புராண படங்களில் நடக்கும் தேவாசுர யுத்தம் போல "சர்...சர்.." என்று சகட்டுமேனிக்கு வீசுகிறார். அந்தப் பெண்மணியை சுற்றி ஆணி அடித்தாற்போல் அவ்வளவு இரும்பையும் வீசி இறக்குகிறார். ஏதோ குடும்ப தொல்லையில் ப்ராணஹத்தி பண்ணிக்கொள்ள வந்த பெண்ணை கொண்டு வந்து இலக்காக நிறுத்தியிருக்கிறார் போலிருக்கிறது. சிரித்தபடியே கட்டை முன் நிற்கிறது. வீச்சை பார்க்கவே நமக்குதான் சிலிர்த்துக்குது.



அந்த கத்தி குத்து கந்தனின் பேட்டி கீழே. அத்தனை தொழில் நுணுக்கங்களையும் அக்குவேறு கத்திவேறாக புட்டு புட்டு வைக்கிறார்.



இந்த ஆளை இங்கே அறிமுகப்படுத்தி பிரசுரித்ததில் ஏதோ சமூக பொறுப்பு இல்லாமல் கேவலமாக நடந்து கொண்டு விட்டேனோ என்று ஒரு வருத்தம் கலந்த பயம்.

பயம் 1 : பிள்ளைகளை எல்லா கலைகளிலும் தேர்ந்தவனாக்குகிறேன் பேர்வழி என்று திரியும் சில பெரும் புத்திக்கார பெற்றோர் டேவிட்டை கூப்பிட்டு, கராத்தே சொல்லிக்கொடுப்பது போல, கத்தி வீச சொல்லிக்கொடுங்கள் என்று மாதாந்திர டியூஷனுக்கு அனுப்பிவிடப் போகிறார்கள். ஜாக்கிரதை!.

பயம் 2 : ஆட்டோக்களில், ஸாரி, இப்போது ஸ்கார்ப்பியோ போன்ற பெரிய ஆடம்பர கார்களில் பவனி வரும், ஆட்களை போட்டுத் தள்ளும் தொழிலில் இருக்கும் வீரர்கள், மறவர்கள், டேவிட்டிடம் பயிற்சி பெற்று குறி தவறாமல் தூரத்தில் பின் கண்ணாடி திறந்து வண்டியில் உட்கார்ந்துகொண்டே தீர்த்துவிடலாம். இனிவரும் காலங்களில் டேவிட் கைப்பட கையெழுத்திட்ட சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமையும், சன்மானமும் அதிகம் என்றும் அறிவிக்கலாம்.

எச்சரிக்கை: இதில் வரும் ப்ரொஃபசர் இதில் மிகுந்த சாதகம் செய்து பாண்டித்தியம் பெற்றுள்ளதால், இதைப் பார்க்கும் யாரும் தயவு செய்து யாரும் டார்கெட் ஆள் கிடைக்கவில்லை என்று கல்யாணம் ஆன குடும்பஸ்த்தர்கள் பிராண்டும் தங்கள் மனைவியையும், கட்டை பிரம்மச்சாரிகள் செலவுக்கு காசு கொடுக்காத தங்கள் தகப்பனார்களையும் நிறுத்தி கத்தி வீசி பயிற்சி செய்ய வேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பட உதவி: www.tecnoculto.com

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails