Wednesday, March 2, 2011

ஓம் நமோ பகவதே ருத்ராயா!


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறைப்  பொய்கையும் போன்றதே 
 ஈசன் எந்தை இணையடி நீழலே.
- திருநாவுக்கரசர்

ஒரு அடர்ந்த வில்வ வனத்தில் இரவு முழுக்க ஒரு வேடன் வில்வ மரத்தில் அமர்ந்து விழித்திருந்தான். அவனை துரத்திய புலி அவனுக்காக பசியோடு கீழே காத்திருந்தது. கண் அயர்ந்தால் கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடுவோம் என்று தான் உட்கார்ந்திருந்த கிளையில் இருந்து ஒவ்வொரு வில்வ இலையாக பறித்து கீழே போடுகிறான். இரவு கழிந்து பொழுது புலர்ந்துவிடுகிறது. காத்திருந்த புலியும் வேறு வேலைப் பார்க்க கிளம்பிவிடுகிறது. புலிக்காக அந்த வேடன் தஞ்சம் புகுந்த வில்வ மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அவன் அந்த மரத்தில் தங்கிய இரவு சிவராத்திரி. துதிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இல்லாமலேயே, கீழே லிங்கம் இருப்பது தெரியாமலேயே, இறை ஸ்மரணையே இல்லாமல், வில்வார்ச்சனை செய்த அந்த வேடன் மிக நல்ல புண்ணியத்தை பெற்றான். பல பெரும்பேறுகளை அடைந்தான்.



vilvavaneswar

இந்த அருள் நிகழ்ச்சி நடைபெற்ற திருத்தலம் திருவைகாவூர். சுவாமிமலைக்கு அருகில் இருக்கும் தலம். இங்கு அருள்புரியும் ஸர்வஜனரட்சகி சமேத வில்வவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு இருவருடங்களுக்கு முன்னர் சென்று தரிசித்தேன். அப்போது பிடித்த படம். இந்த அம்பாளின் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஸர்வஜனரட்சகி. பணக்காரன், ஏழை, லோபி, அழகன், குரூபி, சந்நியாசி, சம்சாரி, முட்டாள், புத்திசாலி, கஞ்சன், வள்ளல் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் காத்து ரக்ஷிப்பவள். சிவ சொரூபங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அர்த்தநாரீஸ்வரர் மற்றும் தெட்சிணாமூர்த்தி. கீழிருக்கும் சுதை சிற்பத்தில் இருப்பவர் காமதகன மூர்த்தி. பக்கத்தில் மலர் அம்பு ஏந்தி காமன் நிற்கிறான். கொற்கை (திருக்குறுக்கை) சுவாமி சந்நிதி கோபுரத்தில் இருக்கும் சிற்பம் இது. கொற்கை மாயவரம் பக்கத்தில் இருக்கும் பாடல் பெற்ற சிவஸ்தலம். இறைவன் வீரட்டேஸ்வரர். இறைவி ஞானாம்பிகை. அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. மன்மதனை எரித்த இடம்.

kamathaganam


பதிவின் முதலில் கொடுத்தது மனப்பாடச் செய்யுளாக பள்ளிப் பருவத்தில் தமிழ்பாடத்தில் வந்தது. அர்த்தம் புரியாத காலத்தில் கூட சந்தங்களினால் உள்ளத்தை கொள்ளை கொண்டு போன தேவாராப் பாடல். ஈசனின் இணையடி எவ்வளவு குளிர்ச்சி மிகுந்தது என்று வர்ணிக்கிறார் திரு நாவுக்கு அரசர். குற்றமற்ற வீணையின் நாதமும், மாலையில் தோன்றும் நிலவின் தன்மையையும், தென்றலின் வருடலும், இளவேனிர்காலத்தைப் போன்றும், வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சி போன்றும் ஈசனின் திருவடி நீழல் இருப்பதாக பரவசப்படுகிறார். மன்னையில் ஈசான்ய மூலையில் கோயில் கொண்டிருக்கும் காசி விஸ்வநாதர் புனருத்தாரணம் கண்ட போது குறைந்தது ஐநூறு தேங்காய் சரிபாதியாக உடைத்துக்கொடுத்து கைங்கர்யம் செய்தேன். உழவாரப் பணிகளில் ஈடுபட்டேன்.  கோபுரத்தின் மேலேயும் சுவர்களிலும் முளைத்திருந்த தாவரங்களை அகற்றி சுத்தம் செய்தோம்.

சிறுவயதில் சிவராத்திரிக்கு கண் விழித்தோமா என்று தெரியவில்லை ஆனால் மகா சிவராத்திரிக்கு இரு வருடங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செய்தேன். அது ஒரு ஆனந்தமான அனுபவம். கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்ட லிங்கத்திர்க்கும் அபிஷேகம் நடக்கும். நெற்றி எங்கும் திருநீறு பூசிக்கொண்டு அந்த சுகந்த வாசனையோடு வம்பளக்காமல் மலையையே பார்த்துக் கொண்டு நடப்பது நிஜமாகவே மனதிற்கு இதமாக இருந்தது. பௌர்ணமி போல காலை மிதித்துக் கொண்டு நடக்கும்/ஓடும் கூட்டம் இருக்காது. "பக்கத்து வீட்டு குமாரோட அவ ஓடிப்போயட்டா... எம்  மாமியார் ஒரு பிசாசு..." போன்ற அக்கப்போர் பேச்சுகளுக்கு இடையே கிரிவலம் சுற்றும் அவல நிலை கிடையாது. நிறைய காவி உடை பிச்சைக்காரர்கள் லீவில் இருப்பார்கள். மனசுக்கு நிம்மதி உத்திரவாதம்.


முக்கண்ணனின் அருள் இந்த சிவராத்திரியில் பெற சிவமாலை என்ற ஒரு இசைத் தொகுப்பில் எஸ்.பி.பி பக்தி பாவத்தில் பாடி அருளிய இரு பாடல்கள் உங்களுக்காக..

அனலான தேகம் கொண்டு ....ஸ்ரீருத்ரத்தில் இருந்து நடுநடுவே கனபாடமாக சொல்லப்படும் இடங்கள்... அண்ணாமலையானை கண் முன்னே நிறுத்துகிறது...


அண்ணாமலை ஆளும் அம்பலத்தரசனே.... எஸ்.பி.பி. ஈஸ்வரன் பெயர் உச்சரிக்கும் போது.... அடடா...



ஓம் நம சிவாயா..

படக் குறிப்பு: அனைத்தும் அடியேன் கிளிக்கியது.

-

28 comments:

அப்பாதுரை said...

கிரிவல விவரம் ரசித்தேன்.
கோவில் படங்கள் பிரமாதம். சுவாமிமலை பக்கத்திலா? ஒரு ட்ரிப் அடிச்சுறுவோம்.

இளங்கோ said...

சொற்றுணை வேதியன் சோதிர் வானவன்
பொற்றுணைத் திருந்தடிப் பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே.

ஓம் நம சிவாயா..

Photos Nice :)

எல் கே said...

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி

Anonymous said...

ஓம் நமச்சிவாய! ரெண்டு பாட்டும் இப்பொழுதான் கேட்கிறேன். அருமை. நன்றி அண்ணா!

R. Gopi said...

திருவைகாவூருக்கு நான் 2006 ஆம் ஆண்டு சென்றிருந்தேன். பழைய நினைவுகள் வர இந்தப் பதிவு உதவியது. நன்றி.

@அப்பாதுரை, பக்கத்திலேயே ஆதனூர், புள்ளபூதங்குடி திவ்யதேசங்களும் உள்ளன. முடிந்தால் அங்கும் செல்லவும்.

Madhavan Srinivasagopalan said...

மஹா ருத்ராய நமஹா..

மோகன்ஜி said...

சிவராத்ரியில் அழகான பதிவிட்டு புண்ணியம் தேடிக் கொண்டு எங்களுக்கும் பெற்றுத் தந்தீர்கள். படங்களும் குறிப்புகளும் அருமை.

raji said...

அற்புத பதிவு.

நானும் அந்த மாசில் வீணைக்கும் மாலை மதியத்திற்கும்
சிறு வயதிலேயே மனம் ஒன்றியவள்

பகிர்வுக்கு நன்றி

தங்கள் அழைப்பிற்கு இணங்கி 'பெயர்க்காரண பதிவு' போட்டாயிற்று
பதிவின் பக்கம் வந்து படித்து பார்த்து பின்னூட்டம் போடவும்

ராம்ஜி_யாஹூ said...

நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே

பதிவிற்கு நன்றிகள்

தக்குடு said...

மாசில் வீணையும் மாலை மதியமும் சேர்ந்த குளுமையை உணருகிறேன்!னு அவர் சொன்ன போது அவர் இருந்த இடம் கொதிக்கும் சுண்ணாப்பு கால்வாய் அதுதான் இங்க முக்கியமான விஷயம்...:)

தோஹாவிலும் அருமையான சிவபூஜை நடந்தேறியது..:)

சாந்தி மாரியப்பன் said...

பதிவும் படமும் அருமை.. விமானத்தை முழுசும் கவர் செஞ்சுருந்தா டாப்க்ளாஸ் புகைப்படம் உத்தரவாதம் :-)))

தி. ரா. ச.(T.R.C.) said...

how i missed this good blog?

RVS said...

@அப்பாதுரை
தல.. இந்தப் பக்கம் வரும்போது சொல்லுங்க... போய்டுவோம்... ;-))))
ரசித்ததற்கு நன்றி.. ;-)

RVS said...

@இளங்கோ
Thanks Elango.. ;-))

RVS said...

@எல் கே
ஆமாம் எல்.கே. நானும் அதையே ரிபீட்டிகிறேன். ;-)))

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி.. இதுபோல இன்னும் கொஞ்சம் கலெக்ஷன் இருக்கு. நேரம் வரும்போது பகிர்கிறேன். ;-)

RVS said...

@Gopi Ramamoorthy
நன்றி கோபி. நான் மாயவரம், தஞ்சை, கும்பகோணம் பிரதேசங்களில் கோயில் கோயிலாக நிறைய சுற்றியிருக்கிறேன். ;-))))

RVS said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா... ;-)))

RVS said...

@மோகன்ஜி
நன்றி அண்ணா... ;-)))

RVS said...

@raji
நன்றி ராஜி! ராஜபாளையம் ராஜி! ;-))))))))

RVS said...

@ராம்ஜி_யாஹூ
ரொம்ப நாள் கழிச்சு திரும்ப வரீங்க...வாங்க..வாங்க..
தலைப்பில் இருந்து ருத்ரத்தை தொடர்ந்ததற்கு நன்றி.. ;-)

RVS said...

@தக்குடு
ஆமாம் தக்குடு.. சுண்ணாம்பு காளவாயின் வெப்பம் பொறுக்க முடியாமல் ஆலவாயனை துதித்து பாடியது இது... விளக்கத்திற்கு நன்றி. ;-)))))

RVS said...

@அமைதிச்சாரல்
கீழேயிருந்து முயற்சித்தேன். விமானம் நூறு சதம் இருக்கும்படியான படம் உள்ளது.. அதில் மன்மதன் சிவன் சரியாக வரவில்லை.. கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க.. ;-))))

RVS said...

@தி. ரா. ச.(T.R.C.)

Warm welcome Sir! Please do visit again. ;-))))

இராஜராஜேஸ்வரி said...

ஓம் நமச்சிவாயா.
நாங்கள் சங்கமேஸ்வரை வலம் வந்தோம்.சிவராத்திரியன்று.

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ரொம்ப நல்லதுங்க... சிவனருள் கிடைத்திருக்கும்... வாழ்வு வளம்பெறும்.. ;-))))))

ADHI VENKAT said...

நான்கைந்து நாட்களாக வலை பக்கம் வர முடியவில்லை. தாமதமாய் படித்தாலும் நல்லதொரு கோவிலை பற்றி தெரிந்து கொண்டேன். ஸ்ரவஜனரட்சகி அழகான திருநாமம்.

ரிஷபன் said...

கிரிவலம் அமாவாசைக்கு ரெண்டு நாள் முனாடி ஒரு தரம் போனோம்.. நிஜமாவே பாதையே வெறிச்சோடி.. ஒரு பைரவர் மட்டும் கூட துணைக்கு வந்தார்.. படங்களும் அழகு.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails