Saturday, August 28, 2010

சனிக்கிழமை சங்கதி - சின்ன வீடு

இது பாக்கியராஜின் சின்ன வீடு பற்றி இல்லை.

அப்ப, என்னோட சின்ன வீடு பற்றிய அறிவிப்பா என்று கேட்கிறீர்களா? ஒரு தடவை நமக்கு வாய்ச்ச இடத்திலேயே "வசமா" கவனிக்கப்படும் போது எப்படிங்க அந்த மாதிரி நினைப்பெல்லாம். அதுவும் இல்லை. 

எவ்வளோ பெரிய வீடு இருந்தாலும் சில பிரஜைகள் காலம் தள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். நொந்துகொள்கிறார்கள். ஆயிரம் ஸ்கொயர் ஃபீட் வீடு, 3BHK அப்பார்ட்மென்ட் என்று பல சைஸ் குடியிருப்புகள் கட்டிக்கொண்டு பெரு வாழ்வு வாழ்ந்தாலும், சாப்பிடும் மேஜையில் நாலு புத்தகம், டானிக் பாட்டில், ரெண்டு ஹேர் பின் கிளிப், மளிகை சாமான் ரசீது என்று எல்லா குப்பைகள் நடுவிலும் பந்தி விரித்து சாப்பிடவேண்டும். பங்களா மாதிரி வீடு இருந்தாலும், வீடு பூரா அஃறிணை பொருட்களை கடை பரப்பி வைத்துவிட்டு இரண்டு காலையும் "டாமி ஹாண்ட்ஸ் அப்" சொல்லும் போது செய்வது போல சேர் மேல் தூக்கி வைத்துக்கொண்டு டி.வி பார்ப்போம். ஷெல்ப், சோஃபா, டைனிங் டேபிள், சாய்வு நாற்காலி, ஸ்டடி டேபிள் என்று சகல விதமான ஐட்டங்களின் மேலும் சர்வ சுதந்திரமாக எல்லா பொருட்களையும் வீசி எறிந்துவிட்டு "இவ்வளோ பெரிய வீட்ல புழங்க இடமே இல்லைப்பா...." என்று எல்லோரிடமும் நீட்டி முழக்கி அங்கலாய்த்துக்கொள்வோம்.

சியாடெல் நகரத்திலே, 182 Sq. Ft பரப்பிற்கு ஒருவர் அல்லது மாக்ஸ்மிமம் இருவர் வாழும் ஆலயம் ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள். கீழே அண்ணன் டீ.வி பார்ப்பது காபி குடிக்கும் இடத்திற்கு கீழே..






டைனிங் டேபிள், கீழே ஒரு ப்ரிட்ஜ் உடன்



டி.வி. பொட்டி பார்க்கிற இடம்..


இன்னும் நிறையா படங்கள் சேதியுடன் கீழே உள்ள முகவரியில்...

http://tinyhouseblog.com/apartment-living/tiny-seattle-apartment/

பின் குறிப்பு: சின்ன வீடுன்னு தலைப்பு வச்சா உடனே நம்மளால இசை ஞானியின் இசையில் மலர்ந்த அந்த வீட்டின் இந்த மியூசிக்கை போடாமல் விட முடியலை. ஜொள் ஒழுக பாக்கியராஜ் பார்க்கும் அந்தப் பார்வையும், ஞானியின் இசையும் சீனை தூக்குது. அதையும் பார்த்துடுங்களேன்.  ப்ளீஸ். நித்தியோட 'அந்த' வீடியோவுக்கு நக்கீரன் இதைத் தான் யூஸ் பண்ணினாங்க என்பது ஒருக்கால் உலகறிந்த உண்மையாக இல்லாமல் இருக்கலாம். இதை நம்ம பெரிய வீட்டுக்கு தெரியாம போட்டுருக்கேன். யாரும் சொல்லிடாதீங்க. தேங்க்ஸ்.

 

20 comments:

பொன் மாலை பொழுது said...

படங்கள் அருமை. எவ்வளவு நேர்த்தியாக ,அழகாக, ஒழுங்கு முறையுடன் வைத்துள்ளனர் !
நம்மவர்களுக்கு எவ்வளவுதான் இடம் இருந்தாலும் இவ்வளவு நேர்த்தியுடன் ஏன் பயன்படுத்த தெரியவில்லை?
கேட்டால், கலாச்சாரம் அது என்று அடுக்குவார்கள். வெறும் 182 sq பட் ல் இவ்வளவுமா ? என்று வியப்பாக உள்ளது.

RVS said...

நம்மாட்களுக்கு 1800 கொடுத்தாலும் பத்தாது. அதற்க்கு மேலும் பரண் வேண்டும்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

எண்பத்தஞ்சு சதுரடில இந்த மாதிரி வீடெல்லாம் இப்ப வரத் தொடங்கிடுச்சு... பாக்கறதுக்குத் தான் அழகா இருக்கே தவிர உள்ளே ரொம்ப அசௌகரியம். எல்லாத்துக்கும் தனித்தனியா காசு எடுத்து வக்கணும். ஒத்து வராதுனு என்னோட தாழ்மையான கருத்துங்க. கீழே குப்பை கிடந்தாலும் அதைத் தாண்டிப் போய் சோபாவில் உட்கார்ந்து முறுக்கும் டீயும் சாப்பிடும் சுகம் முழங்கை இடிச்சுக்கிட்டு டி.வி பாக்கறதுல வராதுங்கோ.

அப்பாதுரை said...

பாக்யராஜ் படம் நல்லா இருக்கும் போலிருக்கே?
அவரோட ஆரம்பகால படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். கடைசியா பாத்தது மு.மு.

RVS said...

அப்பாதுரை அண்ணன் கருத்துக்களை அப்படியே தலையை ஆட்டி ஆமோதிக்கிறேன். ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஸ்ரீராம். said...

படிக்க, பார்க்க சுவாரஸ்யம். மற்றபடி அண்ணன் ஆறாம் ஸாரி, மூன்றாம் வட்டத் தலைவர் அப்பாதுரை அண்ணன் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

சாய்ராம் கோபாலன் said...

ஆர்.வி.எஸ்.

//அப்ப, என்னோட சின்ன வீடு பற்றிய அறிவிப்பா என்று கேட்கிறீர்களா? ஒரு தடவை நமக்கு வாய்ச்ச இடத்திலேயே "வசமா" கவனிக்கப்படும் போது எப்படிங்க அந்த மாதிரி நினைப்பெல்லாம். அதுவும் இல்லை. //

சொன்னாலும் ஒரு சொல்லு "சூ...விலே " வைச்சா மாதிரி என்று சொல்லுவோம். அதனோ இது !! கெளரவம் படத்தில் நாகேஷ் சார் நீலு அவர்களின் நெடு நாள் சிவாஜிகணேசன் / சௌகார் வீட்டில் இருப்பதை பற்றி சொல்லும் போது "எடேர்னல் பெயின்" என்பார் ! என் சித்தப்பா ஒருவர் "சாயி அது எப்படிடா நம் பெண்டாட்டி தவிர எல்லோரும் நல்ல இருக்காங்க என்பார்". "மனைவிகளும் அப்படி நினைப்பதில்" தவறு இல்லை !!

சரி, சரி - வீட்டை பத்தி ஒரு வார்த்தை சொல்லிடறேன். அருமை. வீட்டை பெருக்கும் நேரம் கம்மி ஆகும் ! எப்படி கட்டும் இவர்களே ஐந்து / பத்து பெட்ரூம் வீடும் வாங்கி தனியாக இருப்பார்கள் ? பெண்டாட்டி இரண்டு வருடத்தில் டைவோர்ஸ் வாங்கி போயிருப்பாள் !!

பாக்யராஜின் நல்ல படங்களில் "அந்த ஏழு நாட்கள்" ஒன்று.

RVS said...

ஸ்ரீராம் , மூன்றாம் சுழி பெரிய சுழி... ஆளை இழுத்துடுது...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வீட்டை காமிச்சா பெருக்கி மொழுகுறதை சொல்றீங்களே சாய்.... ஒ.கே ஒ.கே புரிஞ்சிகிட்டேன்... ;-) ;-)

பாக்கியராஜ் ஒரு சிறந்த திரைக்கதை ஆசாமி. கொஞ்சம் விவரமா பார்த்தோம்ன்னா அவர் படங்கள் பல சேதி சொல்லும்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Aathira mullai said...

RVS சார். இப்படி பதிவைப் போட்டு வீட்ல மாட்டிக்கப் போறிங்க..(ச்சும்ம்ம்ம்மாஅ)
உண்மையை அப்படியே சொல்லி இருக்கீங்க.. கொஞ்சம் கூட டெக்ரேஷன் சேர்த்து..

டெகரேஷனுக்குள்ள மாட்டிய குப்பையைப் பெறுக்குவது இருக்கே... (வீட்ல இருக்கிற டெகரேஷனைச் சொன்னேன்)

RVS said...

ஆதிரா எனக்கு சிலசமயம் தமிழ் புரியாது... ;-) ;-) நீங்க எதைப்பத்தி கமென்ட் அடிச்சீங்க... ஹி ஹி ஒன்னும் புரியலையே....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பண்ணை ’வைத்து’ள்ள ’சின்ன வீடோ’
சிலிர்ப்புடன் நாம் நுழைந்தால்,
தொன்னை சைசில் வீடொன்றைக் காட்டி,
என்னை நோகடிக்கலாமோ ஐயா?

RVS said...

ஊட்ல போட்டுக் குடுக்கட்டுமா ராமமுர்த்தி சார்... ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

சின்ன வீட்டு தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

பாக்யராஜ் நதர்தனா நகைச்சுவை ஜோர்.

நானும் மூனு வருஷமா சின்ன விட்டு வாசம் தான், உடனே தப்பர்த்தம் பண்ணிக்காதிங்க . பணிபுரியும் இடத்தில், பாலைவனத்தில் தங்கும் கேபின் அப்படி , சின்ன டி.வி, சின்ன ஃபிரிஜ்ஜு, சின்ன டேபிள், சின்ன பெட்..சின்ன பிரோ... பத்துக்கு பத்துக்குள்ள இந்த பத்து.

RVS said...

பத்மநாபன் சார்... நிறைய 'சின்ன' விஷயங்கள் சொன்னீங்க... அந்த 'சின்ன' மேடம் விஷயம்...... சொல்லிடுங்க ப்ளீஸ்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

geethappriyan said...

ரொம்ப அழகா எழுதிருக்கீங்க,
எனக்கும் இருக்கும் இடத்துக்குள்ள இண்டீரியர் செய்துகொள்ளவே பிடிக்கும்,300 ஸ்கொயர் ஃபிட்டில் கம்ஃபோராக இருக்க முடியும்,ஆனால் ப்ளான் செய்து கொள்ளவேண்டும்,

geethappriyan said...

ஃபாலோவர் ஆக முடியலை,எரர் காட்டுகிறது,அப்புறம் வருகிறேன்

RVS said...

நன்றி கீதப்ப்பிரியன் ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

தப்பர்த்தம் பண்ணிக்காதிங்க சொல்லித்தான சின்ன விஷயங்களை சொன்னேன்...

இங்க பொம்பள ஒட்டகத்துக்கு கூட தடைங்னா. அவ்ளவு ஸ்ட்ரிட்டு.

RVS said...

பத்மநாபன்...ஐயோ ஐயோ... விடுங்கன்னா.. சும்மா விளையாட்டுக்கு.. சும்மா லுலுலாய்க்கு சொன்னேன்... சீரியசா எடுத்துக்காதீங்கோ.... ;-) ;-)

அன்புடனும் நட்புடனும் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails