ஊர்ல இருக்கிற அத்தனை கெட்ட வார்த்தையையும் ஒரு அட்டவனையில் கட்டம் கட்டி கலர் அடித்து சாதாரண வார்த்தையிலிருந்து ஸ்பெஷல் ஆக திட்டும் வார்த்தை வரை வகைப்படுத்தி உடனடி தேவைக்காக பக்கம் புரட்டாமல் போட்டிருக்கிறார்கள். அட்டவணை போட்டது மட்டுமல்லாமல் அந்தக் கருமத்தை ஆன்லைனில் விற்க வேறு செய்கிறார்கள். எவ்வளவு பேர் வாங்குகிறார்கள் என்ற புள்ளி விவரம் கிடைத்தால் அவ்வளவு பேருக்கு திட்டுவதற்கு கூட வார்த்தை கிடைக்காமல் அகராதி தேவைப்படுகிறது என்ற பொதுஅறிவு நமக்கு புலப்படும்.
இதில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால் அறிவியல் பிரிவு எடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் Periodic Table படித்திருப்பார்கள். உலோகங்கள், வாயுக்கள் முதலானவற்றை அவற்றின் அணு எடை, நம்பர் கொண்டு அட்டவணைப் படுத்தியிருப்பார்கள். கெமிஸ்ட்ரியில் வரும். அதுபோல இதற்கும் Periodic Table என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் "அவங்களுக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி இல்லை. நமக்குள்ள கெமிஸ்ட்ரி மாட்ச் ஆனாதான் இது வொர்க் அவுட் ஆகும்." இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். அதோடு சேர்த்து இந்தக் கெமிஸ்ட்ரியும் மக்கள் தெரிந்துகொண்டு தங்கள் ஞானத்தை வளர்த்துக்கொள்ளட்டும்.
கெட்ட வார்த்தைகள் நன்றாக தெரிந்தவர்களும், ஒரு முறை கூட நாக்கு மேல பல் போட்டு கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று விரதமிருப்பவர்களும் தெரிந்தது போதும், என்று நினைப்பவர்களும் இந்த பாராவிற்கு மேல் கடந்து செல்லவேண்டாம். படித்துவிட்டு நீ அசிங்கம் அசிங்கமாய் எழுதுகிறாய் என்று சொல்லி கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை திட்டாதீர்கள். இந்த டேபிளில் உள்ளது படக் காட்சியாக சென்ற சில தினங்களுக்கு முன் நான் இட்ட பதிவு இங்கே உள்ளது.
மேற்கண்ட படத்தில் எழுத்துகள் கண்களுக்கு தெரியாமல் இருந்தால், படத்தின் மேல் அழுத்தி தெளிவாக தெரிந்தபின் உங்களுடைய அசிங்க வக்காபுலரியை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
மேற்கண்ட ஐட்டத்தை விலை கொடுத்து வாங்க இங்கே சொடுக்கவும். http://shop.moderntoss.com/?q=periodic+table ஆர்வமுள்ளவர்கள் வாங்கி பிரேம் போட்டு வீட்டில் நடுக்கூடத்தில் மாட்டி வைத்து அழகு பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 comments:
Post a Comment