அரை மணி ஒரு மணி நேரத்திற்கு வாடகைக்கு சைக்கிள் எடுத்து கற்றுக்கொண்டோம். பூபதி வாடகை சைக்கிள் கம்பனியிலிருந்து (லிமிடெட் மட்டும் தான் போட்டுக் கொள்ளவில்லை, அவ்வளவு பெரிய சைக்கிள் கம்பெனி. சைக்கிள் முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் பிரேக் இல்லாத பெல் இல்லாத சைக்கிள்தான் கிடைக்கும்) சிகப்பு கலர் கட்டை வண்டி வாடகைக்கு எடுத்து ஓட்டும்போது, அதற்க்கு பூட்டும் கிடையாது, ஸ்டாண்டும் கிடையாது. சைக்கிள் எடுத்து வீட்டு வாசலில் சுவற்றில் சார்த்தி வைத்து விட்டு தண்ணீர் குடிக்க வீட்டிற்குள் போனாலும் வெளியே பார்த்துக்கொண்டே குடிக்க வேண்டும். காரணம், இரண்டு அச்சுறுத்தல்கள், ஒன்று சைக்கிள் திருட்டு போய் விட்டால் வீட்டில் தர்ம அடி வாங்கி மீண்டும் சைக்கிள் ஒட்டவே முடியாது, இரண்டாவது காரணம் தெருப் பையன்கள் யாராவது எடுத்து சுற்ற ஆரம்பித்து விடுவார்கள். மணிக்கு ஒரு ரூபாய்க்கு சைக்கிள் எடுத்து கற்றுக்கொண்டோம்.
பக்கத்து வீட்டில் இருக்கும் கணேசன் வாத்தியார் எப்போதும் சைக்கிள் உடன் வரும் அழுத்துப் பூட்டு இருந்தாலும், வளையப் பூட்டு ஒன்று வாங்கி அதையும் பூட்டி அழகு பார்ப்பார். ஒரு நாள் பாங்கிற்கு போய் பணம் எடுத்த்க்கொண்டு வெளியே வந்து பார்க்கையில் சைக்கிள் அபேஸ். யாரோ எப்போதும் இவர் இரண்டு மூன்று பூட்டு போட்டு பூட்டி வைத்திருப்பதைப் பார்த்து வெறுப்பாகி, பேங்க்கிற்கு வந்தபோது தூக்கி சென்றுவிட்டார்கள். அதற்குப் பிறகு ஒரு பூட்டு போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். டைப் இன்ஸ்டிடுயூட் கண்ணன் மாஸ்டர் ஒரு தடவை பூட்டி விட்டு ஒன்பது முறை இழுத்துப் பார்த்துவிட்டு தான் வீட்டிற்குள்ளோ அல்லது கடைக்குள்ளோ செல்வார். அவ்வளவு ஜாக்கிரதை. அவசரமாக நம்பர் டூ வருகிறதென்று ஒரு நாள் மதியம் வீடு வாசலில் வைத்திருந்த வண்டியை எவனோ கிளப்பிக் கொண்டு போய்விட்டான். லபோ திபோ என்று அடித்துகொண்டார். எடுத்தவனை சகட்டு மேனிக்கு சபித்தார். போன சைக்கிள் போனது தான். மாவட்ட நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் மோகன் வண்டியை நாக்கால் நக்கி துடைப்பது போல் துடைத்து பள பள என்று கண்ணைப் பறிக்க வந்து நிறுத்துவார். ஒரு ஆயுத பூஜை முடிந்த பின் செந்தூர ஆஞ்சேநேயர் கோயில் வாசலில் வைத்துவிட்டு வடை மாலை பிரசாதம் வாங்குவதற்காக உள்ளே சென்றார். பக்தியை விட வடை மிக அவசரமாக உள்ளே இழுத்ததால் வெளியே நின்றிருந்த சைக்கிளை களவு கொடுத்துவிட்டு வெறும் வடைப் பிரசாதத்தோடு வீடு திரும்பினார்.
இவ்வளவு பேர் தொலைத்து விட்டதை இப்போது இழுத்து மடக்கி கம்பியோடு கட்டிவிட்டார்கள். பக்கவாட்டில் இருக்கும் ஒரு லிவரை இழுத்து மடக்கி தந்திக் கம்பத்தோடோ அல்லது ஈ.பி அல்லது ஏதோ ஒரு கம்பத்தோடு சேர்த்து மாடு காட்டுவது போல கட்டிபோட்டுவிடலாம். இருபத்தோறு வயதே நிரம்பிய இங்கிலாந்து கெவின் ஸ்காட் என்பவரது இந்த டிசைன் லண்டன் புதிய வடிவமைப்பாளர்கள் கண்காட்சியில் ஐநூறு பவுண்ட் ஸ்டெர்லிங் பரிசைத் தட்டி சென்றது. வாழ்த்துக்கள்.
கீழே சைக்கிளை வளைத்துக் கட்டுகிறார் ஸ்காட்.. தம்பி அசப்பில் பார்ப்பதற்கு ஹாலிவுட் பட ஹீரோ மாதிரி இல்லை..
சைக்கிளை வளைத்துக் கட்டுவது இருக்கட்டும், மாவீரன் திரைப்படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் ஹெலிகாப்டரையே கயிறு சுற்றி வளைத்துப் பிடித்து ஒரு கம்பில் கட்டுவார் பாருங்கள். அந்தக் காட்சியில் தியேட்டரில் அனைவரையும் கட்டிப் போட்டு விடுவார். அந்தக் காட்சியிலிருந்து மீள்வதற்கு எனக்குப் பல நாட்கள் பிடித்தது. அதோடு ஊரில் நிறைய கலர் கலராக கொடிகள் பல கம்பத்தில் கட்டி பறக்கவிட்டிருக்கிறார்கள். நமூருக்கு இந்த சைக்கிள் வந்தால் எல்லா கம்பத்திலும் மடக்கி கட்டிவிடுவார்கள். அதிலும் கட்சி பேதம் நிச்சயம் இருக்கும்.
தகவல் மற்றும் பட உதவி: http://www.engadget.com/2010/07/11/bendable-bicycle-wraps-itself-around-a-pole-in-a-good-way/
13 comments:
Good post. Very practical events are highlighted.. .. keep it up
திருட முடியாத சைக்கிள்..!
amaidhi appa,
Thalaippu superppaa!!!!
Thanks.
இதையே இன்னும் மேம்படுத்தி Bean மாதிரி ஒரு சக்கரத்தை மடக்கி கையில் எடுத்துபோகிறமாதிரி செய்திருக்கலாம்.
Yes Vaduvoor Kumar, Yosanai Nallaa Irukku.. Scot-tutta sollip paarppom. :) :)
Madhavaa Congrats-ukku thanks.
//அமைதி அப்பா said..."திருட முடியாத சைக்கிள்..! "//
திருடன் ரொம்ப அதிர்ஷ்டக் காரன்தான்..
இரும்புத் தூணோட சைக்கிள திருட முடிஞ்சுதுனா !
ரொம்ப அலட்டிக்கக் கூடாது. இன்னும் கொஞ்ச நாள்தான், ஏதாவது ஐடியா பண்ணி இதையும் லவட்டிக் கொண்டு போய்டுவாங்க. ஏன்னா, "பூட்டிக் கண்டுபிடிச்சவந்தான் திருட்டுக்கு வழி விடுறான்"னு ஒரு பழமொழி இருக்கு.
ஒரு படத்துல (Project A , I think ), ஜாக்கி ஜானை ஒரு போலிசு காராரு, தெருவுல ஓர் கம்பத்துல கைவிலங்கு போட்டுட்டுப் போயிடுவாரு..அப்போ ஹீரோ, கம்பத்து மேல ஏறி ஏறி, விளங்க கம்பத்தை விட்டு வெளியே எடுத்துட்டு தப்பச்சிட்டு போயிடுவாரு..
அது மாதிரி.......................?
ரொம்ப அலட்டிக்கக் கூடாது. இன்னும் கொஞ்ச நாள்தான், ஏதாவது ஐடியா பண்ணி இதையும் லவட்டிக் கொண்டு போய்டுவாங்க. ஏன்னா, "பூட்டைக் கண்டுபிடிச்சவன்தான் திருட்டுக்கு வழி விடுறான்"னு ஒரு பழமொழி இருக்கு.
கரெக்டுதான். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அப்படின்னு வாத்தியார் பாடியிருக்கார்.
மாதவன் திருடனுக்கு ஐடியா கொடுக்கறாரோ? :)
மாதவனுக்கும், பெ.சொ.விக்கும் நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Fold seythu kaila eduthu selvathu pola cycle ellam ullathu.
Intha link paarkkavum.
http://en.m.wikipedia.org/wiki/Folding_bicycle?wasRedirected=true
sonthama cycle vaithu irupathu appothellam romba perumaiyana vishayam,
palli paruvathil cycle vaanga nan adam seythathu ninaivukku varthu,bsa slr vaangittu nan adaintha anandam ipo
solla mudiyathu.
Cycle kanama pona sema kashtama irukkum.
Romba nal appuram cycle ota asaipattu last year gears vaitha sports model cycle vanginen,(4000 rs) 6 moths kooda use pannalai kaanamal poiduchu.
Ippavum thedikittu irukken.
[url=http://buyonlinelasixone.com/#21288]cheap lasix[/url] - buy lasix , http://buyonlinelasixone.com/#11289 lasix no prescription
Post a Comment