மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்றோரிடம் எந்தப் பொறியியல் கல்லூரி தொழில்நுட்பம் பயிலச் சாலச் சிறந்தது என்று கேட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கு பதிலாக, பல கல்லூரிகளில் பொறியியல் முடித்து வேலைக்கு சேர்ந்த இடத்தில் எந்தக் கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுத்த மாணவ மாணிக்கங்கள் நன்றாக தொழில் செய்கிறது என்று கேட்டு ஒரு இந்திய பொறியியல் கல்லூரிகள் ஆய்வு ஒன்றை நடத்தி Electronics For You என்ற தொழில்நுட்ப பத்திரிக்கைக் கம்பெனிகாரர்கள் ஒரு தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு இருக்கிறார்கள். அண்ணா பல்கலை மற்றும் தனியார் கல்லூரிகளின் நேர்காணல்கள் ஆரம்பித்த நிலையில், லகரங்களில் காசு கொடுத்து கல்லூரிகளை வாங்கும் மற்றும் அய்யா, அம்மா என்று சிபாரிசு கேட்டு சேரும் மாணாக்கர்கள் இருந்தாலும், இதை வெளியிடுவது ஒரு சூடான விஷயம் தான். இப்போது சில பேருக்கு இது உதவாவிட்டாலும் கல்லூரிகளின் தரம் என்றைக்கும் தேவைப்படும் அத்தியாவசியம் என்பதால் இதை வெளியிடுவது தேசத்துரோக குற்றம் ஒன்றும் இல்லை. ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுக்காமல் தொடங்கிய சங்கதிக்கு வருவோம்.
இந்திய அளவில் முதல் ஐந்து கல்லூரிகள் என்று வெளியிட கொஞ்சம் விசனப்பட்டுக் கொண்டு இந்தியாவை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நாற்க்கூறுகள் போட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் ஐந்து பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். ஐம்புலன்கள், ஐந்திணைகள், ஐம்பூதங்கள் போல முதல் ஐந்து இடத்தை பிடித்த ஐங்கல்லூரிகள் வரிசை மண்டலவாரியாக கீழே...
இந்தக் கல்லூரிகளை இந்த இடங்களுக்கு தேர்ந்தெடுக்க உதவிய கார்பொரேட் கம்பனிகள் விவரம் கீழே..
இதெல்லாம் நம்மோட கல்விப் பணி, இந்தப் பணி சிறக்க யாராவது கல்விக்காவலர் ஆர்.வி.எஸ் அப்படின்னு விருது குடுப்பாங்களான்னு ரோடைப் பார்த்துக்கிட்டு இரண்டு கையையும் கன்னத்திற்கு முட்டு கொடுத்து காத்துக்கிட்டு இருக்கேன். பார்ப்போம்.
தகவல் உதவி: http://www.efytimes.com/e1/fullnews.asp?edid=48006&ntype=mor
2 comments:
Nice information.. for students who seek the best higher education.
I also appreciate you acknowledgment in each of your posts these days.
btw.. what prevents you to visit my blog & pass on your comments there..
g0od post but these rankings all based on money and bribe.
I have observed that students of prince venkateswara, Rajalaksmi college chennai got more job offer than PSG & SRM.
IIT chennai is not good in software related engenering courses.
PSG in 1st place, I still cant' believe.
Post a Comment