Thursday, October 15, 2015

குழந்தைக் கவிஞர் “கவிதை பாடினியார்”


"அப்பா இங்க... பாரு..”

நீட்டிய பேப்பரில் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.
“அடுத்த Poem". காதருகே சிரித்தாள்.
“ஓ! என்னது டைட்டில் சம்மரா? இப்போ விண்டர்தானே வரப்போகுது?”
“இது வினயா கொடுத்த டைட்டில். மொதல்ல ஃபளவர்னு சொன்னா.. அப்புறமா சம்மருக்கு எழுதியாச்சு...”
“நல்லாயிருக்கே... அதென்ன கிஸா?”
“ஐயே.. தெர்ல?!?!.. இஜிப்ட்ல இருக்கிற ஒரு ஊர்ப்பா... பக்கத்துல பிரமிட்லாமிருக்கு.. அங்க உட்கார்ந்து சாப்பிடுவேன்னு எழுதியிருக்கேன்...”
“ கலக்கல் போ....”
சங்கீதா பென்சிலால் இரண்டு இடங்களில் காகிதத்தில் கை வைத்தார்கள். மாஸ்டர்ஸ் டச். இன்னும் ஜொலித்தது. ”ஏய்.. கரெக்ட் பண்ணாதே...குழந்தை எழுதினதை மாத்தாதே...” என்று சங்கீதாவின் கையைப் பிடித்து இழுத்த என்னை “அப்பா.. நீ சும்மாயிரு... அம்மா எழுதினது ரொம்ப நன்னாயிருக்கு.... அதுவே இருக்கட்டும்....” என்று சிபாரிசு செய்த எங்கள் வீட்டுக் ”குழந்தைக் கவிஞர்” மானஸாவிற்கு Poem எழுதப் பிடித்திருக்கிறதாம்.
”வேற எதாவது டைட்டில் சொல்லு....” என்று ஸ்கெட்ச்சும் கையுமாகப் பாட்டெழுத ஆளாய்ப் பறக்கிறாள். மூடிய பேனாவினால் கன்னத்தில் கோடு போடும் சிந்தனா சிற்பி போஸில் நச்செள்ளை (எ) காக்கை பாடினியார் போன்று என் பிள்ளை கவிதை பாடினியாராகத் தெரிந்தாள். புண்ணியம் செய்திருக்கிறோம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails