Saturday, May 9, 2015

7.83 ஹெர்ட்ஸ்

"மச்சி.... 92.7 வையேன்.. இளையராஜா ஹிட்ஸ் போய்க்கிட்டிருக்கு...”

“மொபைல்ல ஏற்கனவே நொய்யுநொய்யுன்னு ஹை ஃப்ரீக்குவென்ஸில வெறியேத்தறானுங்க... நீ வேற அத வெய்யி.. இத வெய்யின்னு...”

“மெலோடி கேட்டா மனசு அமைதியாயிடும் மச்சி... வைய்யி...”

“நானு 7.83 Hertzக்கு வந்துடுவேன்னு சொல்றியா?”

“என்னாடா திடீர்னு வேற அலைவரிசைக்கு ட்யூன் ஆயிட்டே.. அதுமாதிரியெல்லாம் ரேடியோ ஸ்டேஷன் கிடையாதுப்பா... “

“இல்ல மச்சி... சுதாகர் கஸ்தூரின்னு ( Sudhakar Kasturi ) ஒரு எழுத்தாளரு.... பேஜாரான மனுஷன்.. இந்த அலைவரிசை....கெமிஸ்ட்ரி... பயாலஜியெல்லாம் வச்சு ஒரு மிரட்டல் நாவல் எழுதியிருக்காரு....”

“ஆஹா.. அப்ப நடு நடுவுல ”உனக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.. நீயும் நானும் ஃபிஸிக்கலா ட்யூன்டு.. நாம ஒண்ணா சேர்ந்தா புது பயாலஜி...” அப்டீன்னு பாட்டெல்லாம் எழுதியிருக்காரா?”

“ச்சே.. திடீர் ரசம், திடீர் சாம்பார் மாதிரி திடீர் கவிஞனாயிட்டே மச்சி..... மதன் கார்க்கி தோத்தாரு...”

“கலாய்க்காதே... எனக்கு இப்போ பாட்டு கேட்கிற மூடு போயிடுச்சு.. அது என்னாபா கதே.... நம்பரை வச்சு? நொம்ப இண்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு... ”

“இப்போ வீட்ல உன்னை எப்படி வெறுப்பேத்துவாங்க...”

“வாசப்படியிலெ காலடி எடுத்து வச்சவுடனேயே வண்டான்டா தண்டச்சோறும்ம்பாங்க... சுர்ருன்னு நட்டுக்கும்...”

“உன்னோட ரெட்டை ஜடை ஜிகிடி உனக்கு எப்படி கொலவெறி ஏத்தும்?”

“ஃபோனைப் போட்டு.. டே பிரகாஸு... உன்னோட பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சுள்ளான் ஒருத்தன் வருவானே... நல்லமுத்துவா? நொள்ள முத்துவா? அவங்கூட சங்காத்தம் வச்சுக்காதே.. அவனொரு கூறுகெட்டவன்.. நீ கெட்டுப்போயிருவே...ன்னு உம் பேரைச் சொல்லி வெறுப்பேத்தும்...”

“போடா... @#$$%^!$#*(^%$”

“மச்சி.. திட்டாதே... ஃபோனைப் போட்டு வசவசன்னு பேசி வெறுப்பேத்தும்..”

“ஸோ, வூட்ல பக்கத்துல போனா காதுபடப் பேசி வெறுப்பேத்துவாங்க....இல்ல உன் ஆளு மாதிரி ஃபோனைப் போட்டும் வெறுப்பேத்தி உன்னை கொலவெறிக்கு தூண்டுவாங்க.. சரியா?”

“ஆமா..”

“அதுமாதிரி.. நமக்கும் ரொம்ப தூரத்துலேர்ந்து ஃபோனில்லாமலே ஆகாசத்துல சில சிக்னல் அனுப்பி மூளையைக் கொதிக்க வச்சு.. கொலவெறி ஏத்தி.... இன்னொருத்தரைக் கத்தியை எடுத்துக் குத்த வச்சுட்டு... பிற்பாடு வேற சிக்னல் அனுப்பி மூளைக்கடுப்பை இறக்கி...ரிலாக்ஸாக்கி.... சாந்தசொரூபியா காந்தி மாதிரி ரோட்ல நடக்கவிட்டுடலாம்.. யாரும் உன்னை துளிக்கூட கொலகாரனாச் சந்தேகப்படவே முடியாது... ஊருக்கே நல்லதம்பியா ஆயிடுவே...”

“கதை வுடறதுலே... இப்படியெல்லாம் இருக்கா... இதுதானே சைஃபி”

“இது சைஆப்ஸ்...”

“என்ன ஆப்பு?”

“ஆப்பு இல்லை மாம்ஸு.... சைஆப்ஸ் psyops அடக்கிய Scifi"

"எப்படி அப்படி தூண்டுவாங்க?”

“நாம பாட்டு கேட்கிற எல்லா அலைவரிசையுமே... ரேடியோ ஸ்டேஷன்லேர்ந்து அயனோஸ்ஃபியர் வரைக்கும் போய்த் தொட்டுட்டு திரும்ப தரை வரைக்கும் எதிரொலிக்கும். உன்னோட மொபைல்லையோ... ட்ரான்சிஸ்டர்லையோ.. ரேடியோ ஸ்டேஷன் ஒலிபரப்புற அலைவரிசைக்கு ட்யூன் பண்ணினா அந்தப் பாட்டு கேட்கும்.. சரியா?”

“சரி.. அதுக்கும் மூளையைத் தூண்டறத்துக்கும் என்னடா சம்பந்தம். ரொம்ப சரடு வுட்றாப்ல இருக்கே... எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு...”

“பொறுமையாக் கேளு.. ரேடியோக்கு உபயோகப்படறா மாதிரியில்லாம.. ஹார்ப் (haarp) மூலமா ஹை ஃப்ரீகுவன்ஸி அலைகளை.. அதாவது அதிக அதிர்வெண் அலைகளை உருவாக்கி அயனோஸ்ஃபியரைத் துளைச்சு.. அங்க இருக்கிற அயனிகளை மிகுந்த சக்தி கொடுத்து டான்ஸ் ஆட வைக்கலாம்...”

“அப்படி வச்சா நமக்கென்னா?”

“போடா ஃபூல்.. என்னாகும் தெரியுமா? இப்ப இங்க மழைக்காக கருமேகங்கள் கூடியிருக்குன்னு வெச்சுக்கோ... ஹார்ப் மூலமா அந்த கொண்டல் மேகங்களை வெரட்டி அடிச்சுப்பிடலாம்.. அவ்ளோதான் மழை ஹோ கயா.. இங்கே வறட்சி வந்துடும்.... அதே மாதிரி ஓஸோன் லேயர்ல ஓட்டை போட்டு அந்த ஏரியாவை வெய்யில்ல பொரிய விடலாம். இல்லே அல்ட்ரா வயலட் கதிர்களை ஊடுருவ வச்சு ஸ்கின் கான்ஸர் உண்டாக்கலாம்....”

“டேய்.. வெயிட்..வெயிட்.. என்னடா இப்படி பயமுறுத்துற... என்னான்னு சரியாச் சொல்லுடா.. அந்தாளு எழுதினது கதைதானே.. நெசம்மாலுமே இந்த மாதிரி பண்ணலாமா... கிலியைக் கிளப்பாதே....”

“தம்பி.. அசிமோவ் ரோபாக்களை வச்சு கதை எழுதினார். அதோட விதிகளைப் படைச்சார்... கடைசியில நெசம்மாவே செஞ்சுப்பிட்டானுங்கல்ல... அந்த மாதிரிதான்...”

“பயமுறுத்தாம மேலே சொல்லுடா.. நீ சொல்றதெல்லாம் மனுசங்களை ஒண்ணும் பண்ணாதே.. என்னை வச்சு ஒருத்தனைக் கொல்லலாம்னு சொன்னியே? அது எப்படின்னு சொல்லு....... மொதல்ல உன்னைக் கொல்றேன்...”

“பாயிண்டுக்கு வரேன்.. ஹை ஃப்ரீக்குவன்ஸி மாதிரி.. மிகக் குறைவான அதிர்வெண் அலைகளை அதாவது ELF வச்சு...”

“ELF ன்னா.. என்னை மாதிரி இளிச்சவாயர்கள் ஃப்ரீக்குவன்ஸியா?”

“இருடா.. ELF ன்னா Extremely Low Frequency.. இதையும் அயனோஸ்ஃபியர்ல எதிரொலிக்கச் செய்யலாம்...இதுதான் ரொம்ப டேஞ்சர்...”

”இதை வச்சு என்ன பண்ணலாம்?”

“அப்டி கேளு... பூமியிலே உயிரினங்களோட மூளை 1Hz-60Hz வரைக்கும் இருக்கும் அதிர்வெண் அலைகள் ரேஞ்சுல இயங்கும். இதுல 7.83 ஹெர்ட்ஸ் சாந்தமா மனசு அமைதியா இருக்கிற டயம்ல மனித மூளையின் அதிர்வெண்.”

“ஒ..இப்ப கோபப்படுத்தறத்துக்கு என்னடா நம்பர்.....”

“ஞானப்பழம்டா நீ... சட்டுன்னு பாயிண்ட்டுக்கு வந்துட்டே.... கோபத்துக்கு 16.7 ஹெர்ட்ஸ்... ஸோ.. ஒரு ஏரியாவுல ஹார்ப் மூலமா இந்த அதிர்வெண் அலைகளை பொழிய விட்டா... அங்கே நடமாடறவனுங்களுக்கெல்லாம் கோவம் பொத்துக்கிட்டு வரும்.. ஏற்கனவே மூளைக்கடுப்பெடுத்த ஆளாயிருந்தா இன்னும் தீவிரமாவே கோவம் வரும்.. அவ்ளோதான்.. கையில கிடைச்சதை எடுத்துக்கிட்டு அடிச்சிக்கிட்டு சாவானுங்க... இதையே ஒரு குறிப்பிட்ட ஆளை பார்த்தும் திருப்பலாம்.. இப்ப புரியுதா?”

“அடப்பாவி... இப்படியெல்லாம் இருக்கா?”

“இத வச்சு புத்தனையே கையில புல்லட் எடுக்க வைக்கலாம்... அவ்ளோ பவர்ஃபுல்...”

“ஃபுல் கதையும் சொல்லு... கேட்போம்....”

“எவ்ளோ கஷ்டப்பட்டு ஆராய்ச்சியெல்லாம் செஞ்சு கதை எழுதியிருக்காப்ல... ஓசியில கேக்கிற...புக்கை வாங்கிப் படிப்பா...”

“புக்கு பேரு..”

“அடக்கொடுமையே.. அதான் சொன்னேனே.. 7.83 ஹெர்ட்ஸ்... அதான் பேரு... “

“யாரு பதிப்பகம்?”

“வம்சி Bavachelladurai Bava”

“சரி மச்சி. தாங்க்ஸ்”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails