Showing posts with label ஞொய்யாஞ்ஜி. Show all posts
Showing posts with label ஞொய்யாஞ்ஜி. Show all posts

Monday, September 6, 2010

ஞொய்யாஞ்ஜியின் காதல் அனுபவங்கள்

பத்மநாபன் மற்றும் மோகன்ஜி ரெண்டுபேரும் ஞொய்யாஞ்ஜிக்கு மாமன் மச்சான்கள். பொழுது போகாமல் இவருடன் சேர்ந்து இவ்விருவரும் அடிக்கும் லூட்டி தாங்கவில்லை. நாலு நாள் முன்னாடி இந்த ஞொய்யாஞ்ஜியை என் தலையில் கட்டி, "எங்கே.. முடிஞ்சா சமாளிங்க பார்ப்போம்" ன்னு இவரை ஏவிவிட்டுட்டு தூர நின்னு வேடிக்கை பார்க்கறாங்க. அவரு பண்ற அட்டகாசத்தை பாருங்க...

ஞொய்யாஞ்ஜியாக......

 ஞொய்யாஞ்ஜியின் காதல்.

ஞொய்யாஞ்சியோட வயசுக்கு வந்த பசங்கெல்லாம் கல்யாணம் ஆகி புள்ளை குட்டிகளோட ஊர்ல உலாத்தரதைப் பார்த்தார். மிகவும் மனசு வெம்பி நொந்து எப்படியும் இந்த வருடம் கல்யாணம் கட்டவேண்டும் என்ற மண வைராக்கியத்தோடு வீதியெங்கும் பெண் தேடினார். இவரோட முக விசேஷத்திற்கு எதுவும் அகப்படவில்லை. ஊரில் ஒரு பெண்கள் கல்லூரி விடாமல் சுற்றி சுற்றி வந்து தனது அழகிய திருமூஞ்சியை திருப்பி திருப்பி காண்பித்து சைட் அடித்துப்பார்த்தார். எல்லோரும் சேர்ந்து நியூசன்ஸ் கேசில் உள்ளே தள்ளுவோம் என்று மிரட்டியவுடன் வேறு ஏரியாவிற்கு சென்று தனது கண்வரிசையை காட்ட ஆரம்பித்தார்.

ஒரு பாலர் பள்ளி வாசலில் நின்று நோட்டம் விட்டார். இவரையும் மனிதராக பாவித்து ஒரு ஆயாப் பெண் சிரித்து தொலைத்து விட்டாள். கிரகம் யாரை விட்டது. ஞொய்யாஞ்ஜி கொஞ்சம் நேரம் கடலை வறுத்து போட்டபின், நிதானமாக மிக அருகில் சென்று "எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. கட்டினா உன்னை தான் கட்டுவேன். வா நாம ரெண்டுபேரும் கல்யாணம் கட்டிக்கலாம்" என்றார். இவருடைய ஜாதக விசேஷம் அந்தப் பெண் "அய்யயோ ஞொய்.... நான் உங்களைவிட ஒரு வருஷம் பெரியவ..." என்றாள். அதற்க்கு ஞொய்யாஞ்ஜியின் பதில் கீழே...

"ஹி.. ஹி.. பரவாயில்லை... நான் அடுத்த வருஷம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்."

ஞொய்யாஞ்ஜியின் காதல் கை கூடிய கதை.

ஞொய்யாஞ்ஜி பல இடங்களில் அடிபட்டு, மிதிபட்டு கடைசியில் அவரும் ஒருத்திக்கு அழகாய் தெரிந்தார். பல இடங்களில் அந்தப் பெண் வாங்கிக் கொடுத்த சுண்டல், முறுக்கு என்று வாங்கி தின்று அந்தப் பெண்ணின் அரைக்கால் சைஸ் பர்ஸுக்கு ஆப்பு வைத்தார் ஞொய்யாஞ்ஜி. பாவம் அந்தப் பெண் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது. நம்ம ஆளு சகலத்தையும் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு வயிற்றை வளர்த்து வந்தது.

அவர்களுடைய காதல் கைகூடி ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையில் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்த ஆர்வம் அதிகமாக ஞொய்யாஞ்ஜியின் காதலி அன்பு மேலிட, காதல் பொங்க ஞொய்யாஞ்ஜியிடம் வந்து "நிச்சய தாம்பூலத்திர்க்கு நீங்க எனக்கு "ரிங்" கொடுப்பீங்களா?" என்று கேட்டாள். உடனே நம்ம ஞொய்யாஞ்ஜி "தாராளமா தங்கமே.. உன்னோட ஃபோன் நம்பரை கொடு...." என்றார்.

ஞொய்யாஞ்ஜியை விட்டு கிளி பறந்து போயிடுத்து.

பட உதவி: darkiron.wordpress.com

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails