![]() |
ஸ்ரீரங்கம் ரெங்கன் அண்ணா |
இந்தப் பரம்பரையினர், மொகலாயர் படையெடுப்புக்கு முன் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் கோயில் நிர்வாகத்தில் சிறு பங்கு ஆற்றி வந்தவர்கள். படையெடுப்புக்கு பின் மீண்டும் சொந்த மாவட்டமான நெல்லைக்கே திரும்பிவிட்டனர். பழைய பெருமாள் தொடர்பினால், 'ரங்க ஸுப்ரமண்யம்' என்ற விநோதக் கலவைப் பெயரை, ஒவ்வொரு மூன்று தலைமுறையிலும், இந்தக் குடும்பத்தில் காணலாம்.
நாம் மேலே வர்ணித்த அந்தக் குழந்தைக்கு 'ரங்க ஸுப்ரமண்யம்' என்ற பெயரே, குல வழக்கத்தையொட்டி இடப்பட்டது. இதில் வியப்பான விஷயம், எந்தத் திருவரங்கரத்தில் பெரிய பெருமாளுக்கு தொண்டாற்றினார்களோ அதே திருவரங்கத்தில், போன மாதம் 10- ம் தேதி ( 10-02-2011), தனது 83- வது வயதில் ஸ்ரீரங்க ஸுப்ரமண்யம் இறைவனடி சேர்ந்தார்.
ரங்க ஸுப்ரமண்யம் பிறப்பதற்கு பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் புடார்ஜுன பாகவதர், பெரும் லட்சாதிபதியாக இருந்தார் என்பது, விதியின் வினோத விளையாட்டுகளில் புரிந்து கொள்ள முடியாத எத்தனையோ அம்சங்களில் ஒன்று. ரங்கூனில் நவரத்தின வியாபாரம் செய்து கொண்டிருந்தவர், முதலாம் உலக யுத்தத்தின் போது அங்கு நடத்தப்பட்ட குண்டு வீச்சில் சொத்தெல்லாம் இழந்து, கப்பலிலும் கால்நடையாகவும் நெல்லை திரும்பியிருந்தார். மூன்று குழந்தைகள் பிறந்த பின் மனைவியும் இள வயதில் இறக்கவே, 'தேவதாஸ்' ஆகாமல் உண்மையான தெய்வ தாஸனாகிப் போனார். 'இந்த உலகத்தில் அனைத்தும் நிலையற்றவை' என்று தோன்றிவிட்டது; இறைவனே கதி என்றானார். உஞ்சவ்ருத்தி, நாம ஜபம், மாலையில் கதா காலேக்ஷேபம் நிகழ்த்துவது என்றவர் வாழ்க்கை மாறிப்போனது.
தன் மூத்த பெண் உள்பட மூன்று குழந்தைகளையும் மதுரையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு கல்லூருக்கு திரும்பினார். பின் திருப்புடைமருதூர், கூநியூர், சேரன்மாதேவி என்று நினைத்த இடங்களுக்குகெல்லாம் ஜாகை மாறினார். பாகவத தர்மத்தில் நிலை பெற்று, அதில் கிடைத்த சொல்ப வருமானத்தில் வாழக்கை நடத்தி, பரம விரக்தராகவே இருந்தார். அவர் தனது பிள்ளைகளோடு வந்து சேர்ந்தது தனது எழுபதாவது வயதுக்கு மேல்தான். அதுவும் பிள்ளைகள் படு நிர்பத்தப்படுத்தியதால்!
நாம் நம் கதாநாயகனாகிய ரங்க ஸுப்ரமண்யத்திடம் வருவோம். தன் தாயின் முகம் தெரியாது, ஃபோட்டோ கூட எடுத்ததில்லை. மதுரையில், ஒன்றுவிட்ட சகோதரியால் சொகுசாகத்தான் வளர்க்கப்பட்டார். மீனாக்ஷியும், சொக்கனாதருமே தாய் தந்தையாய் ஆனார்கள். இளமையிலேயே சந்தித்த துக்கங்கள், ரங்க ஸுப்ரமண்யத்தையும் ஆன்மீக மார்க்கத்தில் திருப்பிவிட்டது. தனது 12-வது வயதில், 'ஸ்ரீராம் பஜன் மண்டல்' என்றொரு அமைப்பைத் தொடங்கி, நாம் ஸங்கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தார். மிக வசீகரமான குரல் வளத்தை அவருக்குக் கொடுத்திருந்தான் இறைவன். கர்னாடக சங்கீதமும் பயின்றார். 12 வயதுப் பையன் நடத்திய பஜனை கோஷ்டியில், வயதில் பெரியவர்களும் வந்து ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.
ஆங்காங்கே நாம ஸங்கீர்த்தனம் நடத்தினார். பாண்டியன் வங்கியில் உத்தியோகம் கிடைத்தது. அவரது நாம ஸங்கீர்த்தன நிகழ்ச்சிகளை ஊக்குவித்து அவ்வப்போது லீவும் கொடுத்த அதிகாரி வங்கியில் வாய்த்ததும் இறையருளே.
ரங்க ஸுப்ரமண்யத்துக்கு நாம ஸங்கீர்த்தனத்தையே சமுதாய சேவையாகவும் பயன்படுத்தும் எண்ணமிருந்தது. அதனால் தனது கோஷ்டியோடு, முறையான அனுமதி பெற்று, அவ்வப்போது சிறைச்சாலைகளுக்குச் சென்று, அங்குள்ள கைதிகளுக்காக மனமுருகப் பாடுவார். இந்த நிலையில் அலமேலு என்ற பெண்ணோடு திருமணமும் நடந்தது.
பின்னாட்களில் அலமேலு அம்மாள், தன் பிள்ளைகளிடம் இப்படி விளையாட்டாக சொல்வது வழக்கம். "கல்யாணம் ஆன புதிதில் உங்கப்பா அடிக்கடி ஜெயிலுக்கு நாம சங்கீர்த்தனம் பண்ணப் போய்விடுவார். அந்த நேரத்தில் உங்கப்பாவ தேடிக் கொண்டு யாராவது வந்து, "ரங்கன் இல்லையா?" என்பார்கள். அவர்களிடம் 'எங்காத்துக்காரர் ஜெயிலுக்கு போயிருக்கார்" என்று சொல்லி அதிர வைப்பேன்; பிறகு விளக்குவேன்".
விரைவிலேயே புதுக்கோட்டை ஸ்ரீகோபால க்ருஷ்ண பாகவதரின் கருணைக்கு பாத்திரமானார் ரங்க ஸுப்ரமண்யம். வருடந்தோறும் பாகவதர் பத்து நாட்களுக்கு நடத்திக்கொண்டிருந்த 'நரசிம்ம ஜெயந்தி' உற்சவத்தில் அலுக்காமல், சலிக்காமல் பாடுவார். ஐம்பதுகளின் இறுதியில் மதுரையில் பார்த்து வந்த வங்கி வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு சென்னை எண்ணூரில் குடியேறி 'எண்ணூர் ஃபவுண்டரீஸ்' கம்பெனியில் சேர்ந்தார். ஒரு சில வருடங்களிலேயே எண்ணூரை விட்டு வெளியேறி மயிலாப்பூரில் ஜாகை பிடித்தார். இங்கே நாம ஸங்கீர்த்தனத்துக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. திருக்கோவலூர் ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் திருவருளுக்கு பாத்திரமானார். பட்டி தொட்டியெல்லாம் பஜனை செய்தார். விரைவிலேயே ரங்க ஸுப்ரமண்ய பாகவதர், 'ரங்கண்ணா' என்று நாம சங்கீர்த்தன உலகில் பிரபலமானார். அவரது குரல் வளமும், நாமாவளி பாடுவதில் புகுத்திய புதிய, புதிய யுக்திகளும் பிருந்தாவனத்து ஸ்ரீ புருஷோத்தம கோஸ்வாமி, சுவாமி அபேதானந்தா உள்பட பலரையும் கவர - பல மஹான்களின் திருவருளில் திளைத்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் மஹாராஷ்டிரத்தில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கன், ரங்கண்ணாவின் உள்ளத்தில் அடையப் புகுந்தான். அந்நாட்களில் 'பாகவத பாத பாம்ஸு' ஸ்ரீ.டி.வி. நாராயண சாஸ்திரிகள், தமிழகமெங்கும் அபங்க (மராட்டிய மொழியில் அமைந்துள்ள பாண்டுரங்கனைப் பற்றிய கிருதிகள்) பஜனையைப் பரப்பி, பலரை பாண்டுரங்க விட்டலனின் பக்தர்களாக்கிக் கொண்டிருந்தார். அவரது நாம ஸங்கீர்த்தனங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் ரங்கண்ணாவுக்கு கிடைத்தது. 1969/70-ல் ஸ்ரீ நாராயண சாஸ்திரிகளின் பெரும் கோஷ்டியோடு பண்டரிபுரம் சென்றார் ரங்கண்ணா. அன்று முதல் பாண்டுரங்கனே அவரது இதய தெய்வமாக ஆனார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர், இறைவனோடு இரண்டறக் கலந்தார். உடனே தனது நாம ஸங்கீர்த்தன நண்பர்களோடு சேர்ந்து, 'ஸ்ரீ கோபால கிருஷ்ண பஜனை மண்டலி' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார் ரங்கண்ணா. ஸ்ரீ கோபால க்ருஷ்ண பாகவதர் அவர்களின் புத்திரர் ஸ்ரீ சஞ்சீவி பாகவதரும் பெரும் மஹான். இவர், தனது தந்தை நடத்திய நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தை விடாது நடத்தினார்; தனது தந்தை நின்ற பாகவத தர்ம நெறியில் தானும் நெறி பிசகாது நின்றார். பத்து நாட்கள் உற்சவம்! பல்லாயிரம் பேருக்கு அன்ன தானம்! பாத்தார் ரங்கண்ணா! தனக்கு பஜனையில் கிடைத்த சம்பாவனையில் போக்குவரத்து, சாப்பாடு செலவு போக மீதிப் பணத்தையெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு துவக்கி போட்டு வைத்தார். நரசிம்ம ஜெயந்திக்கு முன்னால் அந்தத் தொகையை எடுத்து, நரசிம்ம ஜெயந்தி அன்னதானத்துக்கு சமர்ப்பித்துவிடுவார்.
பஜனை உலகில் ரங்கண்ணாவுக்கு இருந்த 'டிமாண்டுக்கு' அவர் நினைத்திருந்தால் பெரும் பணக்காரர் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் தனது வருமானத்தையெல்லாம் குரு கைங்கர்யத்துக்காகவே செலவழித்தார். அவருக்காக அவர் வாங்கியது ஒரேயொரு 'ஹெர்குலிஸ்' சைக்கிள் மட்டுமே!
மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்து, மூச்சுக்கு மூச்சு, 'விட்டலா! விட்டலா!' என்றே வாழ்ந்த அந்தப் பெரியவரின் அந்திம காலமும், அவரது வாழ்ந்த வாழ்வுக்கு ஏற்றதுபோலவே இருந்தது. பேத்திகள் சுற்றி நின்று அபங்கங்கள் பாட, ஒரு மஹாத்மா காதில் மொபைல் வழியே, 'ராம க்ருஷ்ண ஹரி! வாஸுதேவ ஹரி! பாண்டுரங்க ஹரி! என்று 'கர்ண மந்திரம்' சொல்ல - பின்னர் சுற்றத்தார் அனைவரும் உரத்த குரலில் 'ராம க்ருஷ்ண ஹரி' என்று உச்சரிக்க, திருநாமங்களை கேட்டபடி, உறங்கச் செல்லும் குழந்தைபோல கண் மூடினார் ரங்கண்ணா. குரு வாரம்! உத்தராயணம்! ரத சப்தமி! 10/02/11 அன்று மாலை 7.50 மணி! மறுநாள் பீஷ்மாஷ்டமி! கொள்ளிடக் கரையில் திருமங்கை மன்னன் படித்துறையில் தஹனம்! காவிரி கரையில் 13 நாள் காரியம்! கொடுத்து வைத்தவர்.
நாம சங்கீர்த்தன உலகத்துக்கு ரங்கண்ணா அறிமுகப்படுத்திய அபங்கங்கள் எத்தனையெத்தனை! தானே இயற்றி மெட்டமைத்து புழக்கத்தில் விட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட நாமாவளிகள்! அவரது தாக்கத்தில்தான் இன்று பல பாகவதர்கள் பாடிக்கொண்டிருகின்றனர் என்பதே உண்மை. ஆஸ்திரேலிய, அமேரிக்கா அரபு நாடுகள் என்று பல்வேறு வெளிநாடுகளில் ரங்கண்ணா மெட்டமைத்த அபங்கங்களையும், அவர் இயற்றி இசையமைத்த நாமாவளிகளையும் இங்கிருந்து போகும் பல பாகவதர்கள் பாடிப் பரவசப்படுத்துகின்றனர். ஆனால் மிகப் பலருக்கு இவையெல்லாம் 'ரங்கண்ணாவின் contribution to the Nama Sankirtana world' என்பது தெரிந்திருக்குமா என்பது கூட சந்தேகமே! மஹான்கள் புகழை விரும்பாத புனிதர்கள் அல்லவா?
பின்குறிப்பு: இது எனது நண்பர் திரு.சிவகுமார் அவர்களின் தந்தையார் ரங்க ஸுப்ரமண்ய பாகவதரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு. ரெங்கண்ணாவோடு நெருங்கி பழகிய ஒருவர் எழுதியதின் சுருக்கம் இது. என் வார்த்தை சேஷ்டைகள் இதில் துளிக்கூட இல்லை. இறைவனடி சேர்ந்த ஒரு பெரியமனிதருக்கு இதுவே கூட நான் செலுத்தும் நேர்மையான அஞ்சலியாக இருக்கலாம் அல்லவா?
-