Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

Saturday, May 9, 2015

பரமபத சோபன படம்

பரமபத சோபன படத்திலிருக்கும் சின்ன பாம்பு போல நெளிந்து சென்றால் கோப்லி வீடு. பால முருகன் கோயில் பக்கத்துத் தெரு. அப்பு, ஸ்ரீராம், ரமேஷ் என்று ஏற்கனவே சில கனhttps://www.facebook.com/photo.php?fbid=10152486349092545&set=a.499151987544.257845.553282544&type=1

வான்கள் ஆஜராகியிருந்தார்கள். மன்னை அப்புவைப் பற்றி என்னுடைய இந்த நண்பர்கள் குழாம் அறியும். புதிய ஸ்நேகிதர்கள் கீழ்காணும் லிங்க்கில் காண்க:

”நம்ம செட்லயே அப்புக்குதான் முதல்ல மேரேஜ் ஆச்சு, அவன் தான் முதல்ல தாத்தாவாகவும் ஆகப் போறான்...” என்றான் ஸ்ரீராம். ”வர்ற ஜூன்ல பேரனோ.. பேத்தியோ...” என்று பெருமிதமானான் அப்பு. “அதானேடா லாஜிக்..” என்றேன் நான் ஸ்ரீராமைப் பார்த்து. குழந்தைகள் சுற்றிலும் அமர்ந்திருக்க ஸ்ரீராம் தாடிக்குள்ளிருந்து அர்த்தபுஷ்டியாகச் சிரித்தான். நான் கொஞ்சம் சுதாரித்து “ஓ.. வாரியர் சொல்றா மாதிரி.. கட்டில் நாம விலைகொடுத்து வாங்கலாம்.. தொட்டில் இறைவன் தருவது... நீ அப்படி வரியோ?” என்று உரக்கச் சமாதானம் சொன்னேன். அதற்கும் சிரித்தான் ஸ்ரீராம்.

ரமேஷும் கோப்லியும் முதுமையை அண்ட விடாமல் இளமையோடிருந்தார்கள். பல வருடங்கள் தெருவில் விளையாடிய கிரிக்கெட் பற்றி நிறைய பேசினோம். அந்தக் கிரிக்கெட்டை மையமாக வைத்து நிகழ்ந்த சம்பவங்களை ஆனந்தமாக அசை போட்டோம். மதில்கட்டையும், ராமர் கோயிலும், ம்யூச்சுவல் ஸ்கூல் க்ரௌண்டும், கமலாம்மாவும், மழவராயநல்லூர் ஹெட்மாஸ்டர் ரெங்கராஜன் சாரும், என் சாரதா பாட்டியும் பேச்சுக்குள்ளே வந்து சில நிமிடங்கள் வாழ்ந்துவிட்டுப் போனார்கள். ஸ்தூல சரீரமாக சென்னையில் இருந்தாலும் சூட்சுமமாக மன்னையில் உலவினோம். ஒரு மணி நேரம் ஒரு நிமிஷத்தில் சரேலென்று கரைந்து போனது.

இன்னொரு நாள் காஃபி டிஃபனில் ஆரம்பித்து டின்னரில் பிரிவோம் என்று சங்கல்பம் செய்துகொண்டு கிளம்பினேன். பரமபத சோபன படத்தைப் போல நண்பர்களின் வாழ்வு. ஏணிக்கு ப்ரயாசைப்பட்டு.. பாம்பில் கடிபட்டு இறங்கி.... தாயம் போட்டு... மறு ஆட்டம் ஆடி... பன்னிரெண்டு போட்டு.. கட்டம் கட்டமாக நகர்ந்து..... முன்னேறி.. சறுக்கி....ஏறி... வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.

இதை குளிரக் குளிர மன்னை ஹரித்ராநதி வடகரை மதில்கட்டையில் உட்கார்ந்து டைப்பிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் உலகத்தின் பல மூலையிலிருந்து படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails