Showing posts with label பேப்பரில் பேர். Show all posts
Showing posts with label பேப்பரில் பேர். Show all posts

Friday, March 18, 2016

அண்ணே... ஒரு வெளம்பரம்.... பேப்பரில் பேர்....

அண்ணே... ஒரு வெளம்பரம்.... என்னடா வெளம்பரம்.. நீ வாங்குற அஞ்சு பத்து லைக் பிச்சைக்கு இது தேவையா.... மொமண்ட்.....
===========================================================

காலையில் கலாக்ஷேத்ராவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் போது Sekar Ramamurthyமொபைலினார். “கங்க்ராட்ஸ் ஆர்விஎஸ்” என்று ஆரம்பித்ததும் சுற்றிலும் வளர்ந்திருந்த அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து பைனாகுலரில் என்னுடைய லெக் க்ளான்ஸ் பார்த்துவிட்டு (பார்க்க காலையில் என் நேரக்கோட்டில் இணைத்திருந்த படம்) சிலாகிக்கிறாரோ என்று கூச்சத்துடன் “தாங்க்ஸ் சார்..” என்று வழிந்துவிட்டு எதற்காக என்று கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். “தினமணி கலாரசிகன்ல உங்க பேர் வந்திருக்கு... வாழ்த்துகள்..” என்று மனம் திறந்து பாராட்டினார். தினமணியை நளினி சாஸ்திரி சார் எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிந்தது.
உங்களுக்காக ஈபேப்பர் இணைப்பை ஈ ஆளு இங்கின இணைக்கும்.... 
smile emoticon

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails