Wednesday, November 17, 2010

மன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்

வருஷம்-16 ரிலீஸ் ஆகி தாய்க்குலங்கள் குழந்தை குட்டிகளுடனும் மற்றும் இளவட்ட காதலர்களின் பேராதரவோடும் மெயின் ரோடு வரைக்கும் இருக்க அணைத்துக்கொண்டு வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பார்க்கும் கூட்டமாக சாந்தி தியேட்டரில் அமோகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு மொத்தம் மூன்று காட்சி. மதியம் ரெண்டு மணிக்கு வெட்டிப்பொழுது போக்குவோர்க்கு மாட்னி, சாயந்திரம் ஆறு மணிக்கு குடும்ப இஸ்திரிகளுக்கு முதல் ஆட்டம், இரவு ஒன்பதரைக்கு எங்களைப் போல தண்ணீ தெளிச்சு விட்ட கேஸ்களுக்கு இரண்டாம் ஆட்டம். அன்றைக்கு ராத்திரியும் ஒரு சினிமா ஆப்பரேட்டரின் கர்ம சிரத்தையுடன் 'ஆந்தை' ராஜா இரண்டாம் ஆட்டம் வ.16 பார்க்க கிளம்பினான். (ஆந்தை பற்றிய குறிப்புகள் வேறு ஒரு பதிவில் பதியப்படும்) "என்னடா டெய்லி இந்தப் படம் பார்க்கிறியே எதுவும் வேண்டுதலா?" என்ற நண்பர்களின் விசாரணைக் கேள்விக்கு அப்போது அவன் கொடுத்த விளக்கம் கேட்டு ரெண்டு பேர் அவனை மிதியடியை கழட்டி எடுத்துக் கொண்டு அடிக்க கிளம்பிவிட்டார்கள். ஒரு அரைமணி கரகாட்டக்காரன் வண்டி தள்ளும் கவுண்டமணி செந்திலாரை நினைத்து நினைத்து அடிப்பது போல் சுற்றி சுற்றி விரட்டினார்கள். என்னவென்று மதிலிலிருந்து அவனை தனியாகத் தள்ளிக் கொண்டு போய் விசாரித்தால் சொன்னான்  "இல்லைடா.. படம் பேர் வருஷம் 16 அதனால பதினாறு தடவை பார்க்கலாம்ன்னு.." என்று இழுத்தானே பார்க்கலாம். "நல்லவேளை உனக்கு நூறாவது நாள் படம் பிடிக்கலை.. அப்படி பிடிச்சுருந்தா உன்னாலையே தியேட்டர் ஓனர் லாபம் பார்த்திருப்பான்.." என்ற ஸ்ரீராமின் கிண்டலுக்கு லாவனியாக "அப்ப ஆயிரத்தில் ஒருவன் பிடிச்சிருந்தா.." என்றான் இன்னொருவன்.


காலையில் பெரும்பாலான மன்னை கொட்டாய்களில் "பக்தி" படம் போடுவார்கள். காலைக் காட்சி என்பது கட்டிளம் காளையர்க்கு என்பது போய் பல்லு போய், வீட்டில் சொல்லு போய் திண்ணையில் எழுந்திருக்காமல் படுத்திருக்கும் காலத்தில் இருப்பவர்கள் கூட வரிசையில் முதல் ஆளாய் நின்று செருப்பு அறுந்துபோக தியேட்டருக்குள் நுழைவார்கள். இவர்களை கண்ணுற்ற ஆப்பரேட்டருக்கே படம் போடுவதற்கு மூட் அவுட் ஆகிவிடும். ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக ஒரு மணியிலிருந்து ஒன்னரை மணி டாக்குமண்டரி படம் போல ஓடும். இப்படத்தின் 'ஆட்ட' நுணுக்கங்கள் தெரிந்த சில விவரமான 'கலா'ரசிகர்கள் மிகச் சரியான தருணத்தில் உள் நுழைந்து வெளியே வந்து விடுவார்கள். யார் கண்ணிலும் படமால் ஓரமாக உட்கார்ந்து கன்னம் சிவக்கும் வெட்கத்துடன் படம் பார்ப்பார்கள். சாந்தி திரையரங்கில் ஆங்கிலம், லக்ஷ்மி தியேட்டரில் மலையாளம் என்று மொழிவாரியாக பிரித்து இப்படங்கள் வெளியிடப்படும். ஆங்கிலப் பிரியர்களுக்கு சாந்தியும் சேரநாட்டில் நாட்டமுடையவர்களுக்கு லக்ஷ்மியும் தாகம் தணிக்கும் ஆதர்ஷ கொட்டாய்கள். முதல் நாள் முதல் ஷோ கடைசி வரிசையில் யாருக்கும் தெரியாமல் பார்ப்போரும் உண்டு. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பிரமீளா, அபிலாஷா (அந்த காலத்தில்) போன்ற முன்னணிகளின் சிறப்பு திரைப்படங்கள் பிரத்யேக காலை காட்சியாக ரிலீஸ் செய்யப்படும்.

night time
தியேட்டருக்கு செல்லும் பாதையின் இரவு நேரத் தோற்றம்?


காளவாக்கரை போகும் வழியில் யானை விழுந்தான் குளத்தின் கரையில் இருப்பது விஜயா தியேட்டர். இதிலும் 'அந்த' சமாச்சார படங்கள் திரையிடப்படும். ரஜினியின் மனிதன் திரைப்படம் பார்த்தது ஒரு வரலாறு. எப்போதும் இரவுக்காட்சிகள் தான் எங்களுக்கு இஷ்டம். சைக்கிளில் டபுள்ஸ் திரிபில்ஸ் என்று இரண்டு மூன்று பேராக ஜோடி சேர்ந்து தியேட்டரில் போய் களமிறங்குவோம். ஒரு படையாக கிளம்பி அதே போல் விஜயா சென்றடைந்தோம். ஸ்ரீராம் வாமன ரூபம். ஆனால் அவனுடைய வாய் விஸ்வரூபம். மிக நன்றாக நகைச்சுவையோடு கோர்த்து கோர்த்து பேசுவான். ஐந்து ரூபாய் டிக்கெட்தான் கிடைத்தது. நம்பரில்லா சீட்டுகள். நபரில்லாமல் இருந்தால் உட்கார்ந்துகொள்ளலாம். படம் ஆரம்பிப்பது வரையில் சீட்டை கையில் கெட்டியாக பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கவேண்டும். அபான வாயு வெளியேற்றக் கூட லேசாக ப்ருஷ்ட்டத்தை தூக்க முடியாது. சீட்டைப் பிடித்து விடுவார்கள். படம் ஓட ஆரம்பித்துவிட்டால் அப்புறம் எல்லாம் சுபம். இரண்டாம் ஆட்டத்திற்கு எப்போதுமே சொற்ப மகளிர் கூட்டம்தான் கூடும். பெண்கள் ஆண்கள் தனித்தும் கலந்தும் உட்காருவதற்கு ஏதுவாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

தியேட்டரின் உச்சாணி கொம்பில் கட்டியிருந்த "விஜயா" கூம்பு ஸ்பீக்கர் "மாங்குயிலே பூங்குயிலே" பாடுவதை நிறுத்தினால் படம் ஓட ஆரம்பித்துவிட்டது என்று உலகத்திற்கு உணர்த்துவார்கள். சைக்கிள்களை கீற்றுக்கொட்டகை ஷெட்டில் விட்டு ஐம்பது பைசா டோக்கென்களை வாங்கிக் கொண்டோம். அரையடிக்கு அரையடி இருக்கும் மரணத்தின் டிக்கெட் நுழைவாயிலுக்கு ஸ்ரீராமனை அனுப்பினோம். குள்ளமாக இருப்பதால் பெரிய அண்ணாக்களின் இருதொடைகளுக்குள் நுழைந்து வெளியே வந்து வாங்கிவிடுவான். நம் ஜனம் ஒரே சமயத்தில் நான்கு கை கவுண்ட்டருக்குள் விட்டு டிக்கெட் கொடுப்பவரை திணறடிக்கும். எந்தக் கை, எந்தக் குரல், எவ்வளவு டிக்கெட் என்று நினைவு வைத்துக்கொண்டு வெண்டிங் மிஷின் போல டிக்கெட் கொடுக்க வேண்டும். ஏதோ சொர்க்கத்திர்க்கு டிக்கெட் வாங்கியவன் போல வெற்றிப் புன்னகையில் கவுண்ட்டரை விட்டு வெளியே வந்தான் ஸ்ரீராம். ஒரு நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடி இருக்கைகளை கப்பென்று பிடித்துக்கொண்டோம். ஆயிரம் அடிக்கு மேலே அறுந்த நூலேனியைப் பற்றிக் கொண்டு தொங்குவது போல வைராக்கியத்துடன் கால்களை பரப்பியும், கால் மேல் கால் போட்டுக்கொண்டும் ஆக்கிரமித்தோம். படம் ஆரம்பிக்க ஐந்து நிமிடம் முன் குளிர்காலம் உடம்பை பாடாய் படுத்தியதால் இயற்க்கை அழைப்பிற்கு ஸ்ரீராம் வெளியே சென்றான்.

உட்கார்ந்த ரோவின் கடைசி சீட் அவனுது. நாங்கள் ஒருவருக்கொருவர் உலகம் மறந்து அரட்டைக் கச்சேரி செய்துகொண்டிருந்தோம். அப்போது ஒருவர் பூலோகம் மேலோகம் தெரியாமல் வாயை திறந்தால் வழியும் வரை சரக்கு அடித்துவிட்டு ஸ்ரீராம் இருக்கையில் வந்து பொத்தென்று சரிந்துவிட்டார். திரையில் படம் ஆரம்பிக்கும் முன் இங்கே கிளைமாக்ஸ் ஆரம்பித்தது. ஸ்ரீராம் வந்தால் இந்தாளை எப்படி எழுப்புவது என்ற சிக்கலான கேள்வி. அவன் போன வேலையை திருப்தியாக முடித்துக்கொண்டு வந்து பார்த்தால் அங்கே ஒரு மன்னை நகரின் மகா குடி மகன். ஸ்ரீராமும் நாங்களும் எடுத்து சொன்னோம், பணிந்து சொன்னோம், கெஞ்சி கேட்டோம் ம்.ஹூம் பலனில்லை. "இவர் என்ன கூறுகிறார் என்றால்..." என்று ஹிந்தியில் பேசிய விவசாயிக்கு தமிழ் குரலில் பேசிய டாக்குமெண்டரி திரையில் ஓட ஆரம்பித்துவிட்டது. இன்னும் இரண்டு நிமிடங்களில் படம் தான். "டேய்.. எழுந்துருடா..." என்று ஒரு சிம்ம கர்ஜனையுடன் ஸ்ரீராம் கூச்சலிட ஆரம்பித்தான். அவன் போட்ட காட்டுக் கத்தலில் ஸ்மரணை வந்த அந்த மகானுபாவன் தியேட்டர் நாற அவன் வாயைத் திறந்து "எழ்ன்ன சொழ்ல நீ யாழ்ர்டா.." என்று கேட்க அதற்க்கு ஸ்ரீராம் "மனிதன்..." என்று ரஜினி ஸ்டைலில் ரஜினி ராகத்தில் பாடி சொன்னான். ஸ்ரீராம் ஜாதக விசேஷம் சொன்ன வாய் மூடும் முன் பொளேர்ன்னு ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்தது. உடனே எங்கள் படை எழுந்தது. டூப் இல்லாமல் ஒரு சண்டைக் காட்சி அங்கே ஆரம்பமானது. தியேட்டர் மனேஜர் பஞ்சாயத்துக்கு வந்து பார்த்தபோது என்னை உத்துப் பார்த்து "xxxxx பையனா நீ.." என்று என் கை குலுக்கி குசலம் விசாரித்ததும் அடித்தவனுக்கு போதை தெளிந்தது. பிடரியில் ரெண்டு தட்டு தட்டி வேறு இடத்தில் கொண்டுபோய் உட்காரவைத்தார். படம் முடியும் வரை திரையை விட அதிக நேரம் அந்த குடிகாரனைத் தான் பார்த்தான் ஸ்ரீராம். சினிமா பார்க்கவும் ப்ராப்தி வேணுமோன்னோ.

பஸ்ஸ்டாண்டை ஒட்டி இருக்கும் தியேட்டர் செண்பகா டாக்கீஸ். பச்சை கலர் இரும்பு பலகையில் வெள்ளையில் எழுதியிருக்கும். இப்போது அந்த தியேட்டர் உயிரோடில்லை என்று நினைக்கிறேன். அங்கு தரை டிக்கெட் உண்டு. தரை டிக்கெட்டின் இரண்டு பக்கங்களிலும் மூங்கிலால் துளி போன்று சட்டம் அடித்து சிகப்பு கலர் இரும்பு வாளிகளில் "தீ" என்று எழுதி ஆற்று மணல் நிரப்பி வைத்திருப்பார்கள். உயரம் குறைவானவர்கள் மணலை சிறுகுன்றாக குவித்து அதன் மேல் அமர்ந்து சினிமா பார்ப்பார்கள். பக்கத்து கிராமங்களில் இருந்து வந்தவர்கள் பேருந்தின் ஹாரன் சத்தம் கேட்டு அவர்கள் பஸ் கிளம்பினால் கிளைமாக்ஸ் கூட பார்க்காமல் பின்னால் தட்டிக்கொண்டு போய்விடுவர். இந்த திருத் தியேட்டரில் எப்போதும் நல்ல படங்களையே வெளியிடுவர். கண்டிப்பாக கெட்ட காரிய படங்கள் எதுவும் திரையிடப்பட மாட்டா. இதில் நான் பார்த்த திருப் படம் "சம்பூர்ண ராமாயணம்".

இப்படி சாந்தி, லக்ஷ்மி, விஜயா, செண்பகா என்று பொம்பளை ராஜ்ஜியமாக இருந்த தியேட்டேர் கும்பலுக்கு போட்டியாக ஆம்பளை சிங்கமாக வந்த கொட்டகை தான் சாமி. சாமி தியேட்டரிலிருந்து நேரே போய் இடது கை பக்கம் பஸ் ஸ்டாண்ட் போவதற்கு திரும்பினால் வலதுகைப் பக்கத்தில் ஐந்தாவதாக இருப்பது சாமி. வந்த புதிதில் சக்கை போடு போட்டது.  நல்ல வசூல். எல்லாம் புதுப் படங்கள். சாமியில் பார்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் சினிமாத் தவம் இருந்தவர்களும் உண்டு. சாமி தியேட்டர் இரண்டாம் மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் வாங்கினால் கட்டாயம் ஒன்றாம் சங்கதியின் நாற்றம் மூக்கை துளைக்கும். இடைவேளையின் போது அந்த துர்கந்தத்தோடு கோன் ஐஸ் க்ரீம் வாங்கி சாபிடுவது அலாதியான ஒன்று. அதையெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும். கல்யாணம் ஆன புதிதில் பட்டணத்து பெண்டாட்டியை அழைத்துக்கொண்டு முதல்வன் படம் சாமி தியேட்டரில் தான் பார்த்தேன். முதல் வகுப்பு டிக்கெட் என்று பெருமையாக சொல்லிக்கொண்டே காதலர்களின் வரிசை என்று பெருமையாக அழைக்கப்படும், மேலிருந்து முதல் வரிசைக் கோடியில் காலரை தூக்கி விட்டு பெருமையாக உட்காரவைத்தேன். இரண்டே நிமிடங்களில் கொஞ்சம் நெளிந்தவள் சீட்டுக்கு அடியில் இருந்து கருப்பாக பெரிய உடைக்காத உளுத்தம் பருப்பு சைசுக்கு ஒன்றை எடுத்து என் கையில் கொடுத்தாள். உயிருள்ள மூட்டைப் பூச்சி. அடுத்த முறை கையை துழாவி இரண்டு பிரி சனல் எடுத்து திரித்து என் கையில் திணித்து "குஷன் சீட்டு..." என்று சொல்லி சிரித்தாள்.

இரவுக்காலத்தின் இந்த அற்புதத்தை படம் பிடித்த பெருமைக்குரியவர் இங்கே http://picasaweb.google.com/abhishek.voip

-

60 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

"வைர விழாவுக்கு" வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நம்மூரு படமா அது?

புவனேஸ்வரி ராமநாதன் said...

பரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

தியேட்டர் அனுபவங்கள் நன்று. நெய்வேலியில் அதற்குக் குடுப்பினை இல்லை. ஒரே தியேட்டர் தான் இருந்தது – அமராவதி தியேட்டர். பல வருடங்களுக்குப் பிறகு சில தியேட்டர்கள் வந்தாலும் பழைய படங்கள் தான் போடுவார்கள்.

சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

படிக்கிறபோ ரொம்ப சுவாரசியமா இருக்கு!

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
வாழ்த்துக்கு நன்றி. ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நம்மூரு படம் இல்லை. வாழ்த்துக்கு நன்றி. ;-)

பொன் மாலை பொழுது said...

சுவாரஸ்யாமா இருக்கு. பெரும்பாலும் அணைவருக்கும் இந்த வயதுகளில் சினிமா அனுபவங்கள் இப்படித்தான் இருக்கிறது.ஆனாலும் நாங்கள் ஆடிய ஆட்டம்? படீச்சுரம், தாராசுரம், கும்பகோணம், சுவாமிமலை என்று சுத்துவட்டாரத்தில் செகண்ட் ஷோ ,சைக்கிள் என்று ஒரு மந்தையாக சென்று ஒரு தியேட்டர் விடாமல் படம் பார்த்ததுண்டு.

அம்பி, அந்த தியேட்டருக்கு செல்லும் பாதை இரவுநேரப்படம் சத்தியமா மன்னார்குடியா?
படம் பிரமாதமா இருக்கு.
--

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஆறுதல் தந்த வெற்றிக்கு வாழ்த்து சொன்னமைக்கு நன்றி. ;-)

RVS said...

@எஸ்.கே
நன்றி ;-)

இளங்கோ said...

"சவாலில்" வென்றதற்கு வாழ்த்துக்கள் அண்ணா. :)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
அது மன்னார்குடி இல்லை. ஆனா பாதை அப்படித்தான் இருக்கும்.. 99 % ஒத்துப் போனப் படம். ;-)

RVS said...

@இளங்கோ
நன்றி இளங்கோ ;-)

Madhavan Srinivasagopalan said...

1) அப்பா சாமி.. விஜயசாந்தி ஜெம்பகலக்ஷ்மி அனுபவத்த நல்லா சொல்லீட்டீங்கப்பு..

2) சிறுகதை போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

3)//சாமி தியேட்டரிலிருந்து நேரே போய் இடது கை பக்கம் பஸ் ஸ்டாண்ட் போவதற்கு திரும்பினால் வலதுகைப் பக்கத்தில் ஐந்தாவதாக இருப்பது சாமி//

முதலாவது 'சாமி' should be 'சாந்தி', ரைட்?

RVS said...

@Madhavan
//1) அப்பா சாமி.. விஜயசாந்தி ஜெம்பகலக்ஷ்மி அனுபவத்த நல்லா சொல்லீட்டீங்கப்பு..//

தேங்க்சு..

//2) சிறுகதை போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//

நன்றி ... ;-)

//3)//சாமி தியேட்டரிலிருந்து நேரே போய் இடது கை பக்கம் பஸ் ஸ்டாண்ட் போவதற்கு திரும்பினால் வலதுகைப் பக்கத்தில் ஐந்தாவதாக இருப்பது சாமி//

முதலாவது 'சாமி' should be 'சாந்தி', ரைட்? //
ரொம்ப கரெக்ட்டு.. இப்ப பதிவுல மாத்தறேன்.. நன்றி ;-)

பத்மநாபன் said...

வைரம் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....

.வ.16..பக்தி..கோன் ஐஸ்... முட்டைக்கடி என்று நான் ஸ்டாப்பாக கொட்டாய் நகைச்சுவைகளை வெளாசித்தள்ளிவிட்டீர்கள்....

RVS said...

@பத்மநாபன்
வாழ்த்துக்கும் சினிமாக் கொட்டாய் பதிவை ரசித்ததற்கும் நன்றி ;-)

Anonymous said...

பரிசுக்கு வாழ்த்துக்கள் அண்ணே..
தியேட்டர் மேட்டர் சூப்பர் :)

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி ;-)

அப்பாதுரை said...

ரிசல்ட் வந்து பாசாயாச்சா? வெரி குட். வெரி குட். வாழ்த்துக்கள்.
இதையெல்லாம் பளிச்னு பெரிசா பேனர் போட்டு வெளியிட வேண்டமோ? அவனவன் அம்பது அறுபது வருசம் மூச்சு விட்டதுக்கே தங்க விழா வைர விழானு பேனர் போடறான். hearty congratulations!

அப்பாதுரை said...

மன்னார்குடி போட்டோவாக்கும்னு நானும் அசந்துட்டேங்க! மொபசல் சினிமா அரங்கு அனுபவத்தை நல்லா சொல்லியிருக்கீங்க. மூட்டைப்பூச்சி? யக்!
பல்லாவரம் ஜனதா தியேடரில் எத்தனை 'டாகுமென்டரி' பாத்திருக்கோம்?! ஹ்ம்ம்ம்.

(சொற்களை எழுதி குறுக்கே அடித்திருக்கும் மகத்துவம் என்ன, மன்னார்குடி சுவாமி?)

RVS said...

@அப்பாதுரை
இதயப்பூர்வமான வாழ்த்துக்கு நன்றி ;-)

RVS said...

@அப்பாதுரை
அந்த தண்ணீ தெளிச்சு விட்ட கேஸ் "எங்களைப் போல" இல்லை என்று அர்த்தம்.

அந்த டிக்கெட் கவுண்டர் மரணத்தின் நுழைவாயில் போல இருந்தது என்று அர்த்தம்.

எழுதி அடிச்சா.. அப்படி சொல்ல வந்து இல்லைன்னு சொல்றேன்னு அர்த்தம்..

கடைசி வரி ஏதாவது புரிந்ததா? ;-)

அப்பாதுரை said...

எப்டியெல்லாம் யோசிக்றீங்கப்பா!
>>>எழுதி அடிச்சா.. அப்படி சொல்ல வந்து இல்லைன்னு சொல்றேன்னு அர்த்தம்..

கடைசி வரி? 'குஷன் சீட்' சணலைச் சொல்றீங்களா? வால் மட்டும் நுழையலைனு நெனக்கறேன்.

sriram said...

//ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக ஒரு மணியிலிருந்து ஒன்னரை மணி டாக்குமண்டரி படம் போல ஓடும். இப்படத்தின் 'ஆட்ட' நுணுக்கங்கள் தெரிந்த சில விவரமான 'கலா'ரசிகர்கள் மிகச் சரியான தருணத்தில் உள் நுழைந்து வெளியே வந்து விடுவார்கள்.//

தக்குடு பத்திதானே சொல்றீங்க?? ரொம்ப சரியா சொன்னீங்க, தக்குடு மாதிரி கலா ரசிகர்கள்னு சொல்லியிருக்கலாம்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

RVS said...

@sriram
ஆமாம்....ஆமாம்...ஸ்ரீராம்... தக்குடுக்கு பிடிச்ச சிலுக்கு பாட்டுக்கூட போட்ருக்கேன்.. சுசீலாம்மா பிறந்தநாள் பதிவில்..

RVS said...

@அப்பாதுரை
//வால் மட்டும் நுழையலைனு நெனக்கறேன்.//
புரியலைங்கோ... ;-)

அப்பாதுரை said...

டீச்சர் பாடம் சொல்லிக் கொடுக்கைல பையன் கூரையைப் பாத்துட்டிருந்தானாம். கூரைல ஒரு எலி சின்ன பொந்துக்குள்ள நுழைஞ்சிட்டிருந்துச்சாம். பையன் ஙேனு எங்கியோ முழிச்சிட்டிருக்குறதைப் பாத்த டீச்சர் பையனுக்கு மண்டைல ஏறிடுச்சானு கேக்க நினைச்சு, "என்னப்பா எல்லாம் நுழைஞ்சுச்சா?"னு கேட்டாராம். பையன் "வால் மட்டும் நுழையல"னு எலியைப் பாத்துக்கிட்டே பதில் சொன்னானாம். டீச்சர் ஏதோ நெனச்சு கேள்வி கேட்க, பையன் எதையோ புரிஞ்சுகிட்டு பதில் சொன்ன கதை.

டீச்சர் நீங்க. பையன் நான்.
>>>கடைசி வரி ஏதாவது புரிந்ததா? ;-)

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்!வைரம் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்....
தியேட்டர் அனுபவங்களை சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்.
அழகான மலரும் நினைவுகள் இது!

ஹேமா said...

நல்ல கதைதான்.அதுதான் பரிசு தந்திருக்காங்க.விரும்பிப் படித்தேன்.வாழ்த்துகள் ஆர்.வி.எஸ் !

ஸ்ரீராம். said...

தியேட்டர் அனுபவங்கள் சுவாரஸ்யம்.

வைர விழா வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

RVS said...

@அப்பாதுரை
நான் அந்த கமெண்ட்டின் கடைசி வரி சொன்னேன். "வால்" நுழைந்த கதை நல்லா இருந்தது. யாரு டீச்சர்... யாரு பையன்... நல்ல கதையா இருக்குதே!!! ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
போட்டி நடக்குதுன்னு நீங்க சொல்லி நான் எழுதின கதை அது.. வாழ்த்துக்கு நன்றி. ;-)

RVS said...

@மோகன்ஜி
வாழ்த்துக்கு நன்றிண்ணா... ;-)

RVS said...

@ஹேமா
வாழ்த்துக்கும் ரசித்ததற்கும் நன்றி ஹேமா... ;-)

பத்மநாபன் said...

’’வால் மட்டும் நுழையலை’’ அந்த கால பள்ளிக்கூட வாத்தியார்களின் பிரபல நக்கல்..

இப்ப நிலைமை, பசங்க பாடத்தில சந்தேகம் கேட்டா ,வாத்தியார்களே ‘’ வால் மட்டும் நுழையலை’’ ன்னு சொல்லற அளவுக்கு டைவர்சனோட இருக்காங்க..

NaSo said...

சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள் RVS!!

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி வாஸ்தவம்தான்.. ;-)

RVS said...

@நாகராஜசோழன் MA
வாழ்த்துக்கு நன்றி எம்.எல்.ஏ ;-)

Unknown said...

சிரித்து, ரசித்துப் படித்தேன் :)
லட்சுமியில்தான் என் முதல் 'கலைப்பட' அனுபவம்! மழு ன்னு ஒரு அருமையான கம்யூனிச சிந்தனைப் படம் (உண்மையில்!!) பாத்துட்டு நாலு நாள் காய்ச்சல் வந்து படுத்தது வேற கதை!! லட்சுமிக்கு கல்கின்னு ஒரு பேர் இருக்காம்.

சாந்தியில் ஒரே ஒரு படம் ஃபாஸ்ட் அன்ட் ஃபுயூரியஸ், சாமி, செண்பகா, விஜயாவில் படம் பார்த்ததில்லை!

இப்போ சாந்தி மற்றும் சாமி மட்டும்தான் இருக்குன்னு நெனைக்கிறேன்...

RVS said...

@தஞ்சாவூரான்
//இப்போ சாந்தி மற்றும் சாமி மட்டும்தான் இருக்குன்னு நெனைக்கிறேன்...//
கரெக்டுதான்.. மன்னைக்கு தியேட்டர் பஞ்சம்.. ;-)

எல் கே said...

hahaha

RVS said...

@LK
:-)

அப்பாதுரை said...

அந்தக் காலமா? விட்டா ஆதிவாசின்னுவீங்க போலிருக்குதே? ப்ரஸ்டிஜே போயிறும் போலிருக்குதே பத்மநாபன்?
>>>அந்த கால பள்ளிக்கூட வாத்தியார்களின்

பத்மா said...

வாழ்த்துக்கள் சார் .ரொம்ப சந்தோஷம்

RVS said...

@பத்மா
Thank You!!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்களோட மன்னை தியெட்டர் அனுபவத்தைப் பார்க்கும் போது, எனக்கு ஆங்கரையில் டூரிங்க் டாக்கீஸில் 'யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க..என் காலம் வெல்லும் வென்ற பின்னே, வாங்கடா வாங்க' என்று உணர்ச்சி வசப் பட்டு சிவாஜி பாடுவாரே..அது ஞாபகம் வந்து விடும்..(படம் பேர் நினைவில் இல்லை. பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள், RVS.)

balutanjore said...

dear rvs

ippothan vandhen

congrats

(adu enna phone pannina PESAKKOODATHU bayamuruthal?

balu vellore

R. Gopi said...

பதிவு சூப்பர். அந்தப் போட்டோ சூப்பரோ சூப்பர்

Unknown said...

தருணத்தில் உள் நுழைந்து வெளியே வந்து விடுவார்கள். யார் கண்ணிலும் படமால் ஓரமாக உட்கார்ந்து கன்னம் சிவக்கும் வெட்கத்துடன் படம் பார்ப்பார்கள்.

அப்படி போடுங்க

RVS said...

@ஆர்.ராமமூர்த்தி
நன்றி சார்!

RVS said...

@balutanjore

Thank you!!

RVS said...

@Gopi Ramamoorthy
ரசித்தமைக்கு நன்றி ;-)

RVS said...

@விக்கி உலகம்
கரெக்ட்டா இல்லையா? இதை அனுபவித்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். சரியா? ;-) ;-)

பத்மநாபன் said...

//ப்ரஸ்டிஜே போயிறும் போலிருக்குதே பத்மநாபன்?// எத்தன நாளைக்கு இழுத்துக்கட்ட முடியும் அப்பாஜி..

அப்பாதுரை said...

மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?

Unknown said...

उंगा ब्लोग वासिता पिरागुथान
नाममा ओररू पट्ठी ठेरिउत्हू अन्ने

Unknown said...

அண்ணே வாழ்த்தக்கள்
உங்கள் படம் சுப்பர் செம போடோஸ்
தென் வாழ்த்த வயதில்லை
சந்தோசமும் வணக்கங்களும்
மிக அழகான கட்டுரை
உங்கள் எழுத்து நடை மன்னார்குடியை கண்முன்னே கொண்டு வந்துவிட்டது

CS. Mohan Kumar said...

சாமி தியேட்டர் எனக்கு புதுசு. (அது திறந்தப்பவே சென்னை வந்துட்டேன்னு நினைக்கிறேன்) மற்ற தியேட்டர் பற்றி படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. விஜயா முன்பு எங்கள் மாமா தியேட்டர். இங்கு எங்களுக்கு பாக்ஸில் பிரீ சீட்டு. செண்பகா பற்றி எழுதியது தியேட்டரை கண் முன் கொண்டு வந்தது

RVS said...

@மோகன் குமார்
தெக்குவீதி ராஜாவைத் தெரியுமா? ;-)))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails