Tuesday, November 23, 2010

பாகுகன்?

அவன் ஒரு பயங்கர சூதாடி. எதிர்ப்படும் எதையும் வைத்து ஆடுவான். அப்படித்தான் அன்றும் சூதில் அனைத்தையும் வைத்து ஆடினான். மனைவி மக்களை தவிர அனைத்தையும் மொத்தமாக இழந்தான். அவனது மனைவி தங்களின் குழந்தைகளின் நிலை காண சகிக்காமல் தன் தந்தை தேசத்திற்கு அவர்களை பத்திரமாக அனுப்பிவைத்தாள். சூதாடிகள் காலநேரவர்த்தமானங்களுக்கு அப்பார்ப்பட்டவர்கள். ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாவற்றையும் இழந்து விட்டு தேசத்தை துறந்து வெறுங்கையோடு வீதியில் நடக்கலானான். பார் புகழும் சக்கரவர்த்தியாக இருந்த கணவன் கட்டிய துணியுடன் தெருவில் போவதைப் பார்த்து நெஞ்சம் பதைத்த அவளும் அவனுடன் அப்பொழுதே நடையை கட்டினாள்.

"வேண்டாம். நீ என்னுடன் வராதே" என்றான்.
"வுஹும்.. மாட்டேன். உங்களுடன் தான் வருவேன்"
"நீ உன் தந்தையிடம் போய் சேர். நலமாய் வாழ்வாய்" என்று குரல் கம்ம வேண்டினான்.
அவன் சொல் பேச்சு கேட்காமல் அவனைப் பின் தொடர்ந்தாள். உடம்பில் தெம்பு இருக்கும் வரை காட்டில் வெகுதூரம் நடந்தே பிரயாணப்பட்டார்கள். அடர்ந்த காட்டில் ஒரு இடத்தில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று இருவரும் அமர்ந்தனர். அப்போது பக்கத்தில் நெடிது வளர்ந்திருந்த ஒரு மரத்தின் கிளையில் ஒரு அதிசயக் குருவிக்கூட்டத்தை கண்டான். வாடிய அவன் முகம் பிரகாசமடைந்தது. அங்கே உட்கார்ந்திருந்த குருவிகள் அனைத்தும் தங்கத்தில் தகதகவென ஜொலித்தது. குருவியின் தங்க ரெக்கைகள் தன்னுடைய வறுமையையும் அதை தீயில் வாட்டி எடுத்து சாப்பிட்டால் தன்னுடைய பசியையும் போக்கிக்கொள்ளலாம் என்றெண்ணி  இடுப்பில் தான் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை உருவி அந்தக் குருவிகளைப் பிடிப்பதற்காக அதன் மேல் எறிந்தான். உடனே அந்த வஸ்திரத்தோடு மேலே எழும்பி பறந்த அந்த குருவிகள் ஆச்சர்யமாக அவனைப் பார்த்து பேசின...
"ஏய்.. மூடா.. உனக்கு இப்போது ஏழரைச் சனி நடக்கிறது. உன்னிடம் இந்த உயர்ந்த வஸ்திரங்கள் கூட இருக்க்கக்கூடாது என்பது விதி. அதற்காகவே நாங்கள் தங்க உரு எடுத்து வந்தோம். " என்று கூறி அந்தத் துணியுடன் பறந்து சென்றன.

மிகவும் நொந்து போன அவன் விதியை எண்ணியவாரே கால் போன திக்கில் காட்டில் மீண்டும் நடக்கலானான். அவளும் அவனை நிழலெனப் பின் தொடர்ந்தாள். மிகவும் சோர்ந்து போய் இருவரும் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பாழடைந்த மண்டபத்தை கண்டனர். அதில் தங்கி சற்று இளைப்பாறலாம் என்று உள்ளே நுழைந்தனர்.  அந்த நிலைமையிலும் அவன் அவளிடம் "இங்கே பார். அந்தோ செல்லும் அந்த பாதை உன் தந்தை தேசத்திற்கு செல்கிறது. போய் பிழைத்துக்கொள்" என்றான்.
"ராஜ்ஜியம் போய், நம் பிள்ளைகள் போய், உங்கள் வஸ்திரம் போய், ஒன்றுமே இல்லாத உங்களைப் போய் எப்படி நான் விட்டு விட்டு போவேன்" என்று கதறினாள் அவள். மேலும் "நீங்களும் என்னோடு வாருங்கள். நாம் என் தந்தையிடம் போவோம். உங்களை தன் சொந்த மகன் போல நடத்துவார்" என்று அழைத்தாள்.
"உனக்கு ஞாபகம் இருக்கிறதா. உன் பிறந்த வீட்டில் நடந்த ஒரு திருமண வைபவத்திற்காக நாம் சென்றது. பத்தாயிரம் குதிரைகள் முன்னாலும் பின்னாலும் அணிவகுப்பாக வர அலங்காரமாக போனோம். அப்படிச் சென்ற நாம் இப்போது எப்படி ஆடைகூட இல்லாமால் உன் தந்தை தேசத்திற்கு வரமுடியும்? நீ மட்டும் போ. நம் பிள்ளைகளை பார்த்துக்கொண்டு சந்தோஷமாக இரு." என்று துக்கம் தொண்டையை அடைக்க சொன்னான் அவன்.

bagugan

பசி, களைப்பு ரெண்டும் சேர்ந்து இருவருக்கும் தூக்கம் வந்தது. தன்னுடைய சேலையின் தலைப்பை கணவனுக்கு கீழே விரித்து அவளும் அவனருகில் படுத்துக்கொண்டாள். கணவன் பக்கத்தில் இருக்கும் அரவணைப்பில் படுத்த சில கணங்களில் தூங்கிப் போனாள். அவனுக்கு தூக்கம் வரவில்லை. தனக்கு விரித்த அளவுவுக்கு உள்ள புடவையை அப்படியே கத்தரித்து தனது இடையில் சுற்றிக் கொண்டு அவளை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டான். ஒரு ஐந்தாறு மைல் சென்றதும் மீண்டும் அவள் நினைவு வர அந்த பாழும் மண்டபத்திற்கு திரும்பவும் ஓடி வந்தான். இன்னமும் அப்படியே நித்திரை கலையாமல் படுத்துக் கொண்டிருந்தாள்.  கொஞ்ச நேரம் அவள் அருகில் மண்டிபோட்டு விக்கி விக்கி அழுதான். கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் அவளை விட்டு ஓட்டம் பிடித்தான்.

நடு இரவில் கண் விழித்துப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. சேலையின் பாதியை நறுக்கி எடுத்துக் கொண்டு பர்த்தா பிடித்த ஓட்டம் அவளை வாய் திறந்து ஒப்பாரி வைக்க விட்டது. நன்றாக ஒரு குரல் அழுது தீர்த்த பின் மனச் சோர்வோடு தனியாக கால்விட்ட திக்கில் நடந்து ஒரு தேசத்தை அடைந்து அங்கு ஒரு பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்து கொண்டாள். கணவன் எப்படி இருப்பானோ, எங்கு இருக்கிறானோ, என்ன சாப்பிடுகிறானோ என்று வருந்தி வேலை மட்டும் செய்துவிட்டு சாப்பிடக்கூட முடியாமல் காலத்தை சபித்தவாறே பிடித்து தள்ளினாள் அவள்.

அவளை நடுக்காட்டில் தவிக்க விட்டு ஓடிய கணவன் செல்லும் வழியெங்கும் அவள் நினைவாகவே காடுகளில் திரிந்தான். நீலோத்பல மலர்கள் மழை நீரில் மறைந்ததைப் பார்த்தும் அழகிய அவள் கண்களை நினைவு படுத்தும் மலர்களை கூட என்னைக் காண விடாமல் இந்த தெய்வம் செய்கிறதே என்றும் முழு வெண்மதியை மேகங்கள் மறைப்பதை கண்டு அவள் முகமொத்த நிலவினைக் கூட காணவிடாமல் செய்கிறதே என்றும் புலம்பினான். இப்படி அழுது புலம்பியவண்ணம் சென்றுகொண்டிருந்தவன் காதில் "யாராவது காப்பாற்றுங்களேன்... உதவி..உதவி.." என்ற ஒரு அபயக் குரல் கேட்டது. குரல் வந்த திசையில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.  அதில் கார்கோடகன் என்ற பாம்பு சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. இவன் ராஜா ஆகையால் வீரதீரத்துடன் பாய்ந்து சென்று கார்கோடகனை மீட்டான். கார்கோடகன் "என்னை கொஞ்சம் தூரம் தூக்கிக் கொண்டு போய் விடேன்" என்று கெஞ்சிற்று. அவனை தூக்கிக் கொண்டு பத்தடி போவதற்குள் கார்கோடகன் காப்பாற்றியவனை கடித்துவிட்டான். கடித்ததில் ராஜ சரீரம் போய், உடம்பெங்கும் கருப்பாகி, கை கால்கள் சிறுத்துப் போய், முடி செம்பட்டையாகி, பார்க்க விகாரமாகிப் போனான். "ஏன் என்னை இப்படி செய்தாய்?" என்று கேள்விக்கு கார்கோடகன் "இந்த ராஜ சரீரத்துடன் உன்னால் எங்கும் வேலை பார்க்க முடியாது. இப்போது உனக்கு கஷ்ட காலம் நடக்கிறது. இதிலிருந்து நீ விடுபடும் போது இப்போது நான் தரும் இந்த பட்டு வஸ்த்திரங்களை அணிந்து கொள். மீண்டும் ராஜ தேஜஸ் பெறுவாய்" என்று வாழ்த்திவிட்டு விடைபெற்றான் கார்கோடகன்.

அப்படியே நடந்து அயோத்தி நகரைச் சென்றடைந்தான். அங்கே ருதுபர்ணன் என்ற ராஜா அரசாண்டான். இவன் அவனிடம் போய் வேலை கேட்டான்.  இவனுடைய ரூபத்தை கண்டு வேலை ஒன்றும் இல்லை போ என்று விரட்டினான் அந்த ராஜா. எனக்கு சமைக்க தெரியும் என்று சொல்லி விதவிதமாக பட்சணம் செய்து காண்பித்தான். அதை வாங்கி ருசித்துப் பார்த்த ருதுபர்ணன் உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று வேலைக்கு வைத்துக்கொண்டான்.  அப்புறம் அவனுக்கு தேரோட்டிக் காண்பித்தான். இந்த உலகத்தில் இப்படி ஒரு தேரோட்டியா என்று வியந்து அவனை ரொம்ப பாராட்டி சீரும் சிறப்பாக வைத்துக்கொண்டான்.

இங்கே வேறு ஒரு நாட்டு அரண்மனையில் வேலை பார்த்துவந்தாள் அந்த பத்தினி. விதர்ப்ப நாட்டில் தகப்பன் வீட்டில் பிள்ளைகள், எங்கோ புருஷன் என்று காலத்தை கழித்துவந்தாள் அவள். அப்பா அம்மா இல்லாமல் தவித்த பிள்ளைகளுக்காக தன் மகளையும் மாப்பிள்ளையையும் கண்டுபிடிப்பதர்க்காக அவள் தகப்பன் நிறைய பிராமணர்களுக்கு காசு கொடுத்து ஊர் ஊராக சென்று தேடச்சொனான். அப்படி ஒரு பிராமணன் இவள் வேலை பார்க்கும் அரண்மனைக்கு வந்தான். இவள் அன்னம் பரிமாறுகையில் அடையாளம் கண்டுகொண்டு தேம்பி அழுதான். பதிலுக்கு இவளும் அழ இதை அந்த அரண்மனை இளவரசி தன் தாயிடம் போய் சொல்லிற்று. அவள் ஓடி வந்து அந்த பிராமணனை பார்த்து "ஏனப்பா இந்தப் பெண்ணை பார்த்து அழுகிறாள். பதிலுக்கு அவளும் அழுகிறாளே என்ன விஷயம்?" என்று வினவினாள்.  அந்தப் பிராமணன் அவள் யார் என்று சொன்னான். அதை உறுதி செய்ய அவள் புருவங்களுக்கு இடையில் இருந்த குங்குமத்தை அழித்துப் பார்த்தாள் அந்த ராணி. ஆச்சர்யமடைந்தாள். இரு புருவங்களுக்கு மத்தியில் ப்ரம்மா பிரத்தேயகமாக சிருஷ்டித்த சிகப்பு மச்சம் இருந்தது. அவள் யாரென்று அறிந்துகொண்டாள். தக்க மரியாதையோடு அவளது தகப்பனது விதர்ப்ப தேசத்திற்கு மேளதாளத்தோடு மரியாதை செய்து அவளை அனுப்பி வைத்தாள்.

தகப்பன் தேசம் சென்றடைந்த அவள் தன் கணவனைத் தேடும் பணியில் அதே பாணியில் பல பிராம்மணர்களை பல தேசங்களுக்கு அனுப்பினாள். அவர்களிடம் "உன்னையே நம்பி இருந்த பத்தினியை தவிக்க விட்டாயே... இது தர்மமா.. இது சத்தியமா..." என்ற கேள்வியை எல்லா இடத்திலும் கேட்கச் சொன்னாள். "யார் பதில் சொல்கிறார்களோ என்னிடம் வந்து சொல்லுங்கள்"  என்று சொல்லியனுப்பினாள். பல தேசத்தில் பதில் கிடைக்காமல் அயோத்தியில் ருதுபர்ணன் அரண்மனையில் விருந்துண்டவன் வெளியில் வந்து சொன்னதும் அங்கே குதிரை லாயத்தில் இருந்தவன் அந்த கேள்விக்கு "எவ்வளவு கஷ்டத்தையும் பதிவிரதைகள் பொறுத்துக்கொள்வார்கள், கஷ்ட காலம் நீங்கி கணவன் வந்ததும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்று பதில் சொன்னான். அந்தப் பிராமணன் நேரே வந்து இதுபோல் ஒரு குதிரை லாயக்காரன் சொன்னதாகச் சொன்னார். அவளுக்கு சந்தேகம் வந்து என்ன செய்வது என்று தன் தாயை கேட்டாள். அதற்க்கு தாய் "உனக்கு சுயம்வரம் " என்று சொல்லி அந்த தேசத்து ராஜாவை கூப்பிடுவோம். உன் பர்த்தா அங்கிருந்தால் நிச்சயம் வருவான் என்று சொல்லி சுயம்வர செய்தி சொல்லி அனுப்பினாள்.

அயோத்தியில் இருந்து விதர்ப்ப தேசம் நூறு யோஜனை தூரம் இருந்தது. ருதுபர்ணன் பாகுகனை(அதுதான் நம்ம ஹீரோவோட வேலைப்பார்க்குமிடம் பெயர்) தேரோட்டச் சொல்லி சுயம்வரத்துக்கு விரைந்தான். மறுநாள் காலையில் சுயம்வரம் என்று கேள்விபட்டதும் ஒரு பத்து வினாடிகள் அப்படியே உறைந்து போனான் பாகுகன். "ஏன் இப்படி மலைத்து நின்றுவிட்டாய்?" என்ற கேள்விக்கு "எவ்வளவு மணியில் போகலாம் என்று யோசித்தேன்" என்று சொல்லிவிட்டான். பறந்து செல்கிறது ரதம். அதைவிட தன் மனைவிக்கு சுயம்வரம் என்ற செய்தியில் அவனது மனம் பறந்தது. விதர்ப்ப தேசத்தை அடைந்தனர். அங்கு ஒன்றும் விழாக்கோலமே இல்லை. ருதுபர்ணன் துணுக்குற்றான். பாகுகன் குதிரையை லாயத்தில் கட்டிவிட்டு ஓய்வெடுக்க போய்விட்டான்.

தாய் வீட்டில் இருக்கும் பாகுகன் மனைவி சேடிப் பெண்ணிடம் அந்தப் பிராமணர்களிடம் சொல்லி விட்ட கேள்வியை சொல்லி அந்த குதிரைக்காரனிடம் கேட்கச் சொன்னாள். அவனும் அதே பதிலை சொன்னான். இருந்தாலும் அவனது உருவம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அடுத்து சேடிப்பெண்ணிடம் ஈர விறகை அவனிடம் கொடுத்து சமைக்கச் சொன்னாள். ஈர விறகு அவன் அடுப்பில் வைத்ததும் பற்றிக்கொண்டது. இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அக்னி தேவன் அவனுக்களித்த வரம் அது. இருந்தாலும் அவன் தோற்றம் அப்படி இருந்தது. மூன்றாவதாக தன் இரு பிள்ளைகளை அவன் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகச் சொன்னாள். அவர்களை கண்டதும் இருக்க கட்டி உச்சிமோந்து ஒரு மணி அழுது தீர்த்துவிட்டான். சேடிப்பெண் அவனிடம் ஏன் அப்படி செய்தாய் என்று கேட்டாள். எனக்கும் இதுபோல் இரு குழந்தைகள் உள்ளது என்று சொல்லிவிட்டான். இதை வந்து சொன்னதும் உறுதியாக வந்திருப்பது தனது கணவன் என்று கண்டுபிடித்துவிட்டாள். இருந்தாலும் அந்த தோற்றம்.. அவனை சுயம்வரம் காணப் போகும் இளவரசி கூப்பிடுகிறாள் என்று கூட்டிவா என்றாள்.

வேண்டாவெறுப்பாக பட்டாடையும் பகட்டுமாக தன்னை விட்டு இன்னொரு மனம் புரிய இருப்பவளை பார்ப்பதா என்று எரிச்சலுடன் அங்கே வந்த பாகுகன் அதிர்ச்சியடைந்தான். அவளை எந்தக் கோலத்தில் நடு காட்டில் விட்டு விட்டு சென்றானோ அதே கோலம் கலையாமல் நின்றால் அவள். அப்படியே உடைந்து போனான். நின்று நிலைதடுமாறி ஓவென்று அழுதான். கடைசியாக கார்கோடகன் கொடுத்த பட்டு வஸ்த்திரத்தை எடுத்து அணிந்துகொண்டான். ராஜ தேஜஸ் வரப்பெற்றான். அனைவரும் இணைந்து சந்தோஷமாக வாழந்தனர்.


பின் குறிப்பு: இது ஒரு பெருங்கதை. நான் என்னால் ஆனவரைக்கும் சுருக்கியிருக்கிறேன்.  இதில் ஒரு கேள்வி இருக்கிறது. யார் அந்த பாகுகன்? அவன் மனைவி யார்? பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். சரியான விடைகளை தாங்கிய பின்னூட்டங்களை கடைசியாக வெளியிடுகிறேன். நன்றி.

பட உதவி: ராஜா ரவி வர்மா

-

33 comments:

தமிழ் உதயம் said...

உங்கள் கேள்விக்கு பதில் தெரியாது. ஆனால் கதையை விரும்பி படித்தேன். நன்றாக சுருக்கி அழகாக அமைத்திருந்தீர்கள்.

ரமேஷ் said...

நளன், தமயந்தி

அமைதி அப்பா said...

சார், இந்த மாதிரி விஷயத்துல நான் பூஜ்ஜியம். அதனால, வரல விளையாட்டுக்கு(கேள்வி,பதில்):-))))

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

balutanjore said...

DEAR RVS

KATHAI ELLAM IRUKKATTUM

ENAKKU VADAI UNDA ILLAIYA?

RATHRI ROMBA KANN MUZHI VENDAM

BALU VELLORE

R. Gopi said...

நள தமயந்தி

ராஜா ரவி வர்மாவின் அந்த ஓவியம் என்னிடம் பெரிய சைசில் உள்ளது. அது போக இன்னும் நிறைய வாங்கி வைத்திருக்கிறேன்!

பத்மநாபன் said...

பஞ்ச பாண்டவர்களில் ஒரு பாண்டவரையும் திரெளபதியுமாக நினைவூட்டும் விதமாக கதை இருந்தது ... சுபமாக முடிந்தது சுகம்.. சுருக்கியும் அதிகமாகவே இருந்தாலும் படிக்க ஆரம்பித்தவுடன் நிறுத்த முடியாத மாதிரி எழுத்து நடை இருந்தது... விடைப்பக்கம் போகுமளவுக்கு இதிகாசஞானம் குறைவுதான். படித்ததை வைத்து முயல்கிறேன்.

பத்மநாபன் said...

பஞ்ச பாண்டவர்களில் ஒரு பாண்டவரையும் திரெளபதியுமாக நினைவூட்டும் விதமாக கதை இருந்தது ... சுபமாக முடிந்தது சுகம்.. சுருக்கியும் அதிகமாகவே இருந்தாலும் படிக்க ஆரம்பித்தவுடன் நிறுத்த முடியாத மாதிரி எழுத்து நடை இருந்தது... விடைப்பக்கம் போகுமளவுக்கு இதிகாசஞானம் குறைவுதான். படித்ததை வைத்து முயல்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

படத்த பாத்த உடனேயே எனக்கு புரிஞ்சிடுச்சு... இருந்தாலும் கதையப் படிச்ச ஒடனே கன்பர்ம் ஆயிடிச்சி..

தமிழாசிரியர் திரு. பன்னீர்செல்வம் நடத்திய தமிழ் செய்யுள் இப்படி வரும்..
"அஞ்சல் மட அன்னமே, உந்தன் அணி நடையும்,
வஞ்சி அணியாள்ல மணி நடையும், காணப் பிடித்ததுகான்,
களிவண்டு, மானப் பிடித்தார் மண்"

சரியாய கமா, போடவில்லை..

அது 'நள- தமயந்தி' கதை. ஹீரோ 'நள மகாராஜா'. நீரோயின் - 'தமயந்தி'
"இந்த கதைய கேட்டாலே 'சனி' தோஷம் ரொம்ப படுத்தாதான்", எங்கம்மா சொல்லுவாங்க.

நல்லா எழுதி இருக்கீங்க.. வழக்கம்போல

ஹேமா said...

கஸ்டமான கேள்வி.எத்தனையோ சரித்திரக்கதைகளின் ஜோடிகள்.
அரிச்சந்திரனும் மனைவியும்.
நள தமயந்தி.
கோவலன் கண்ணகி
சாவித்திரி ஜோடி....இப்பிடி இப்பிடி !

Anonymous said...

அந்த ஹீரோ நளன் அவரது மனைவி தமயந்தி.
சின்ன வயசில கேட்ட கதை அண்ணே :)

Anonymous said...

Bhagugan = Nalan
His Wife - Damayanthi

There is one more bit of information - Bhagugan requested ritubarnan to teach him tricks in dice game so that he could take him in one day to the vidharba.

During the journey, while crossing a forest, Ritubarnan counts number of leaves in a mango tree and nuber of leaves fell down in fraction of sec., and seeing this, Nalan stopped the chariot at once with a condition that if and only if Ritubarnan teaches him the tricks, he could resume again.

Nala learns the trick and after gaining back the queen, he conquers the kingdom thrugh dice game.

This is the story told by a rishi to Yudhishtra for a query - "is there any king in the world who sufferred like me?".

Raghu

In fact I go through many sites to get stories for my son - who is 11 now an dstill needs a wake up story (opposite to bed time story).

Anonymous said...

I forgot to mention the identification route - Nalan uses Varuna's boon to get water and fire for cooking. This is narrated by the Brahmin to Damayanthi. She tests him again at Vidharbha kingdom and then quizzes about his changed shape etc.,

Raghu

RVS said...

@Raghu
I know you will respond to this question. Regarding the trick Nala learned from Rithubarnan, already the stories was run into pages. So, I cut that one. Thank you for your responses and feedback.

RVS said...

@தமிழ் உதயம்
நன்றி ;-) விடைகள் பின்னூட்டத்தில் உள்ளது. ;-)

RVS said...

@ரமேஷ்
கரீட்டு.... ;-)

RVS said...

@அமைதி அப்பா
பரிசுக்கு வாழ்த்தியமைக்கு நன்றி. விடைகள் பின்னூட்டத்தில் இருக்கு ... ;-)

RVS said...

@balutanjore
ரொம்ப நன்றி சார்! இந்த ராக்கோழித்தனம் காலேஜ் படிக்கற நாள்லேர்ந்து வந்தது... முயற்சி பண்றேன்.. ;-)

RVS said...

@Gopi Ramamoorthy
ரொம்ப சரி! வேற என்னென்ன ரவி வர்மா ஓவியங்கள் வைத்திருக்கிறீர்கள். முடிந்தால் சின்ன சைசில் பகிரவும்.. ;-)

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி நடையை பாராட்டியதற்கு நன்றி. நள தமயந்தி.. கதை.. மாதவன் நடித்த நள தமயந்தி போஸ்டர் பார்த்தேன். எழுதினேன். ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
மிகச் சரி! முடிந்தால் அந்த சுலோகம் வெளியிடுகிறேன். ;-)

RVS said...

@ஹேமா
நள தமயந்தி கதை ஹேமா.. ;-)

RVS said...

@Balaji saravana
தம்பி நீ விஷயாதி.. ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

கதை அழகா சொல்லியிருக்கீங்க.

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றி ;-)

Chitra said...

nice story. :-)

Kannan said...

Vadyare,

I love your writings, Everyday i am waiting for your posts. Superub,

Thanks

Kannan
Dubai

RVS said...

@Chitra

Thank You! ;-)

RVS said...

@Kannan

மிக்க நன்றி தலைவா!!! ;-)

இளங்கோ said...

அப்படா... எல்லோரும் விடையை முன்னாடியே சொல்லிட்டாங்க :)

RVS said...

@இளங்கோ
;-)

அப்பாதுரை said...

நள தமயந்தியா? சரியா தெரியலிங்க. பாகுகன்னதும் அனிமேசன் கேரக்டரைப் பத்தின கதைனு நெனச்சேன்... அருமையா இருக்கு. 'பிரம்ம மச்சம்' interesting.

அப்பாதுரை said...

comment மொதல்ல படிச்சிருக்கணும்..

எல் கே said...

ippathan padichen. startingaleye therinjathu nalan thamayanthinu

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails