Tuesday, March 8, 2011

ஸ்திரீகள் தினம்!

கவிஞர்களும் கவிதாயினிகளும் சகஜமாக உலவும் இந்த பதிவுலகத்தில் என்னுடைய இந்தச்  செயல் கொஞ்சம் அதிகப்ப்ரசங்கித்தனமானது தான். இருந்தாலும்... இது மகளிர் தின சிறப்பு கவிதை. கவிதை மாதிரி.... கீழ் கண்ட தலைப்பை ஒரு முறைக்கு இரு முறை படித்துவிட்டு மேலே படிப்பதற்கு கீழே செல்லவும்... விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல..

கவிதை ஜாக்கிரதை!


ஓவியம்: ராஜா ரவிவர்மாவின் கைவண்ணம்சேலையில் தொட்டில்  கட்டி  
சாலை வேலை பார்க்கும் அம்மாவுக்கும்

கலர் புடவை கட்டி
காக்கி சட்டை போட்டு
ஆட்டோ ஓட்டும் அம்மணிக்கும்

பத்து செங்கல்லை தூக்கும் சித்தாளாய்
வேலை பார்க்கும் பெரியாளுக்கும்

நாலு வீடு பத்து பாத்திரம் தேய்த்து
நாலு எழுத்து படிக்க அனுப்பும் தாயம்மாவுக்கும்


கல் கணவனிடமும்  புல் புருஷனிடமும்  
குப்பை கொட்டும் குணவதிகளுக்கும்

அந்நியனாய் அயல் தேசம் சென்ற புதல்வனிடம்  
கண்ணியமான பாசத்திற்காக ஏங்குபவளுக்கும் 

உயிரை ஒருவனுக்கு கொடுத்து உடம்பை 
மற்றவனுக்கு கொடுத்தவளுக்கும்

வறுமையில் தன்னை தொலைத்து கரு அறையில்
சிவப்பில் வாழும் 'அவளு'க்கும்

குடும்பத்தை பேண பஸ் பயண
கூட்டத்தில் இடிபடுபவளுக்கும்

காதலிப்பவளுக்கும்
காதலித்து கைவிடப்பட்டவளுக்கும்

நேரிலும்  நிழலிலும்,
விண்ணிலும் மண்ணிலும்
இக பர சுகமளிப்பவளுக்கும்

என் சிரம் தாழ்ந்த
மனம் கனிந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்.
இது கவிதை அல்ல கவிதை மாதிரி

இந்த அதிர்ச்சியிலிருந்து நீங்கள் மீள்வதற்கு.....

மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள்...

மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்...


பின் குறிப்பு: ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலேர்ந்து இந்த 'கவிதை' மட்டும் விட்டு வைத்திருந்தேன். இன்றைக்கு அந்த குறையும் நிவர்த்தி செய்தாயிற்று. இனிமேல் பல பேர் என்னை "எப்போ கவிதை?" என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  இப்பதிவின் உப தலைப்பே இது எப்படி என்று கூறுமே.... 
ஆற அமர எழுதவதற்கு நேரமின்மையால் இது ஒரு மீள் பதிவு... அலுவலில் ஆணிகள் அதிகம்... இது சென்ற வருடத்து மகளிர் தினத்துக்காக எழுதியது. 

-

34 comments:

இளங்கோ said...

//இனிமேல் பல பேர் என்னை "எப்போ கவிதை?" என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்//
நல்லாத்தான் இருக்குது, நீங்க எழுதுங்க.. :)

எல் கே said...

கவிஞர் ஆர்வீஎஸ் அவர்களே பிடியுங்கள் பொற்கிழியை .

சரி, பெட்டி தட்டும் பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லலியா ??

இதற்க்கு பேர்தான் சந்தர்ப்பவாதமா ??

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா அடுத்தது கவிதையா! சரி சரி – மகளிர் தினம் ஸ்பெஷல்… ஓகே..

உங்கள் அழைப்பை ஏற்று நேற்று பெயர்க் காரணம் பதிவு செய்து விட்டேன். படித்து தங்கள் மேலான கருத்தினைச் சொல்லுங்களேன்!!! :)

Anonymous said...

ரைட்டு! கவிதையிலும் மட்டை சுழற்ற இன்னொரு பேட்ஸ்மென் வந்தாச்சு! ”மன்னை பிரபந்தம்” கொஞ்சத்த அப்படியே கவிதையிலும் சொல்லுங்க அண்ணே! ;)

Chitra said...

புல்லரிக்க வைச்சிட்டீங்க.... தைரியமாக தொடருங்க.... :-)

Madhavan Srinivasagopalan said...

// "எப்போ கவிதை?" //

இந்தக் கவிதைய படிச்சாச்சு..
அப்பா. அப்பா.. இனிமே நீங்க கவிதைய எழுதவேணாம்..
(கேக்கவே மாட்டோம்ல..)

மோகன்ஜி said...

கவிக்கோ ஆர்வீஎஸ்! மன்னைக்குயிலே !
'சிக்'கென எழுதும் சிக்லெட் கவிஞரே!
நும் மகளிர்தின கவிதைமதுவை மாந்தி மயக்கமுற்றோம்.தெளிவிக்க இன்னொரு கவிதை யாப்பீரா புலவரே?

raji said...

அதிர்ச்சிதான்.இன்ப அதிர்ச்சி.நீங்கள் இதை இனியும் தொடரலாமே.

என்ன ஒரு விஷயமென்றால்
கவிதை மட்டும் போட்டு விட்டு அப்படியே விட்டிருக்கலாம்.
வீடியோக்கள் தனி பதிவா போட்டிருக்கலாம்.

அப்படி செஞ்சுருந்தா கவிதைக்கு impact என கூறுவார்களே
அது இன்னும் கூடுதலாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து

இதையும் படிக்கவும்

http://suharaji.blogspot.com/2011/03/blog-post_08.html

தக்குடு said...

RVS அண்ணா, பொம்ணாட்டிகள் தினத்துக்கு நீங்க எதாவது பண்ணாம இருக்கமாட்டேள்னு எனக்கு தெரியும்...:)))

அப்புறம், இன்னொரு விஷயம், கலக்கலா இருக்கு! இங்க தான் நீங்க நிக்கறேள்! அங்க தான் உக்காரரேள்!னு நிறையா பேர் நல்ல உசுப்பேத்தி விடறானு நம்பிண்டு கவிதை பக்கம் எல்லாம் போகாதீங்கோ! அவ்ளோதான் நான் சொல்லுவேன்!..:)

Unknown said...

அருமையா இருக்குங்க கவிதை.ஆல்ரவுண்டரா இருக்கீங்களே? இனிமே கவிதையிலும் கலக்கிடுவீங்க..வாழ்த்துக்கள்.எனக்கு பிடிச்ச்ச மனதில் உறுதி வேண்டும் பட பாடல்களைப் போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றி.
//எல் கே said...

கவிஞர் ஆர்வீஎஸ் அவர்களே பிடியுங்கள் பொற்கிழியை .

சரி, பெட்டி தட்டும் பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லலியா ??

இதற்க்கு பேர்தான் சந்தர்ப்பவாதமா ??
//
ஆமா அதையேதான் நானும் கேட்கறேன்???

எல் கே said...

//கவிதை பக்கம் எல்லாம் போகாதீங்கோ! அவ்ளோதான் நான் சொல்லுவேன்!..://

dont hear what thakkudu saying

Vidhya Chandrasekaran said...

Be careful.

நான் என்னை சொன்னேன்:)))))

Vidhya Chandrasekaran said...

Be careful.

நான் என்னை சொன்னேன்:)))))

Sivakumar said...

தங்கள் வலைப்பூவிற்கான
இணைப்பு சில நாட்களாக என் கணினியில் வேலை செய்யவில்லை. இன்றுதான் வர முடிந்தது. ஆண்கள் தினம் என்னைக்கு வருமோ..சர்வேசா!

ADHI VENKAT said...

ஆஹா! கவிதை ரொம்ப நல்லாயிருக்கு. தொடருங்கள்.

முடிந்த போது படித்து பார்க்கவும்.
http://kovai2delhi.blogspot.com/2011/03/blog-post.html

பொன் மாலை பொழுது said...

ஸ்திரீகள் தினம்! இன்னாய்யா இத்து?
மகளிர் தினம் - இது எப்டீகீது?? அக்காங் !!
மூணு நாளா நம்ம பொட்டிக்கி வாந்தி பேதியாயி ஒரே பேஜாரா பூட்சி நைனா. இப்பத்தா அல்லான் நினுகித்து .அத்தான் வர்ல கண்ணு.

இராஜராஜேஸ்வரி said...

ஸ்திரீகள் தின கவிதை நல்லாவே இருக்கு.
சர்வதேச பெண்கள் தினத்திற்கும் வருகை தாருங்கள்.

RVS said...

@இளங்கோ
தெம்பூட்டிய தம்பிக்கு நன்றி. எழுதி கிழிச்சுடறேன்.. ;-)

RVS said...

@எல் கே
எங்கே பொற்கிழி..எங்கே..எங்கே... (பரக்காவெட்டி போல பறக்காதையா.. ) ;-))))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஒன்னையும் விட்டு வைக்க கூடாது.. மவனே...எல்லோரும் அலறிகிட்டு ஓடனும்.. ;-))))

RVS said...

@Balaji saravana
மன்னை பிரபந்தம்... டைட்டில் அசத்தல் தம்பி.. ட்ரை பண்றேன்... இப்படி உசுப்பி விடறதை பார்த்துட்டு யாராவது உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறாங்க.. ;-)))

RVS said...

@Chitra
ஊக்கத்திற்கு நன்றிங்க... ;-)))

RVS said...

@Madhavan Srinivasagopalan
பயப்படதப்பா.. ஒரு மிரட்டல் தான்.. ;-))

RVS said...

@மோகன்ஜி
அண்ணா..
ஏதோ வசன நடையில எழுதறேன்.. பரவாயில்லைன்னு சொல்றீங்கன்னு எடுத்துக்கறேன்..ஊக்கத்திற்கு நன்றி.. ;-)))

RVS said...

@raji
அதிர்ச்சியில அப்படியே உறைஞ்சு போயிட்டீங்களா... படுத்தறதுன்னு முடிவு பண்ணியாச்சு.. எப்படியிருந்தால் என்ன.. ஹி..ஹி.. ;-))

RVS said...

@தக்குடு said...
//கலக்கலா இருக்கு!இங்க தான் நீங்க நிக்கறேள்! அங்க தான் உக்காரரேள்!னு நிறையா பேர் நல்ல உசுப்பேத்தி விடறானு நம்பிண்டு கவிதை பக்கம் எல்லாம் போகாதீங்கோ! அவ்ளோதான் நான் சொல்லுவேன்!..:)//
ரொம்ப ரொம்ப ரசித்தேன்... சிரிச்சு மாளலை.. ;-))

RVS said...

@ஜிஜி
ஆல்ரவுண்டர் தான்.. ஊர் பூர சுத்தினா ஆல்ரவுண்டர் தானே..
//கணநேரம் விலகாமல் கணினி இயக்கம் கண்மணிகளுக்கும்...//
சேர்த்தாச்சு போதுமா...

RVS said...

@எல் கே
சரி..சரி...சரி.. ;-))))

RVS said...

@வித்யா
நிஜமாவே சொல்றேன்.. இந்தக் கமெண்ட்டை ரொம்ப ரொம்ப ரசித்தேன். ;-)))
பார்த்துக்கொண்டே இருக்கும் போது குபுக்கென்று சிரித்துவிட்டேன்.

RVS said...

@! சிவகுமார் !
அதானே பார்த்தேன்.. ரொம்ப நாளா காணுமேன்னு.. ஆண்கள் தினம்.. நாமளே ஒரு நாள் வச்சு கொண்டாடவேண்டியது தான்.. என்ன சொல்றீங்க..;-)

RVS said...

@கோவை2தில்லி
பாராட்டியதற்கு நன்றி சிஸ்டர். ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
எல்லோரும் மகளிர் தினம் அப்படின்னாங்க.. அதான் ஒரு சேஞ்சுக்கு ஸ்திரீகள் தினம்.. வேற ஒன்னும் இல்லை மாணிக்கம்.. பொட்டியை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.. ;-)))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்கு நன்றி.. வந்து பார்த்தேன்.. உங்க சைட்ல அப்படி ஒன்னும் இல்லையே.. ;-)))

இராஜராஜேஸ்வரி said...

சர்வதேச பெண்கள் தினம் இல்லையா????

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails