Friday, April 8, 2011

கிராமத்து தேவதை - இறுதி அத்தியாயம்

முன்கதை சுருக்கம்.
ஆற்றங்கரை ஓரம் அரச மர நிழலில் இந்தக் கதை ஆரம்பித்தது. 
எழில்-சிவா என்ற ஜோடி இந்த பாகத்தில் லவ்வினார்கள்.
மேற்படி ஜோடியின் காதலுக்கு வில்லனாக ஒரு அவதாரம் இங்கே தோன்றியது.

*********************** இறுதி அத்தியாயம் **********************

அரிவாள் உருவும் ஓசை காதை கரகரவென்று அறுக்க கழுத்தை திருப்பினான் பாலு. பண்ணையாள் பரமன் முண்டாசுடன் முண்டா தட்டி ஐயனார் போல கையில் வீச்சருவாளுடன் வீசுவதற்கு தயாராய் நின்றுகொண்டிருந்தான். அவன் ஆறங்குல மீசை அரையங்குலம் துடித்தது. பிசாசு உலவும் இரவு நேரங்களில் மது, மவுக்கும் துவுக்கும் நடுவில் கால் போட்டது போன்ற லாஹிரி வஸ்த்து சப்ளைகளில் பாலுவின் தேவை அறிந்து அவன் மனம் நோகாமல் அந்த இச்சைகளை நிறைவேற்றி வைப்பவன். குடியிரவுகளில் முதல் கோப்பைக்கு காலுக்கு கீழேயும் மூன்றாம் கோப்பைக்கு எதிர் சேரில் அட்டானிக்கால் போட்டும் ஆறாம் கோப்பைக்கு "ழேய் பாழு.." என்று இடுப்பிலிருந்து வேஷ்டி நழுவ எழுந்திருந்து தோளில் கைபோட்டும் உரிமையுடன் கட்டி அழைப்பவன். பரமன் பாலுவுக்கு பாங்கான வேலையாள் ரூபத்தில் இருக்கும் கையாள்.
"டேய்.. எங்க கிளம்பிட்ட.."
"தம்பி.. இதைக் கேட்டுட்டு என்ன சும்மா இருக்க சொல்றீங்களா.." என்று பரம விசுவாசத்துடன் கேட்டான் பரமன்.
"என்ன பண்ண போரே!"
"அந்தப் பயல ரெண்டு கூரா வகுந்துடறேன்.."
"உம்... நீ போய் வெட்ற வரைக்கும் அவன் கை பூப்பறிக்க போகுமா?"
"என்ன தம்பி இப்படி கேட்டுப்புட்டீங்க. இந்தப் பரமன் அருவாளுடன் ஓங்கின கையை கால்,கை, தலை பார்க்காம கீல இறங்கினதில்லை." என்று ஆவேசப்பட்டான்.
"ச்சே.ச்சே.. இப்ப இதுக்கு நாம அருவாள் தூக்கறது சரிப்படாது" என்று விஷமமாக உள்ளர்த்தத்தோடு பார்த்தான் பாலு. எஜமானன் ஏதோ புதுத் திட்டம் தீட்டியிருக்கிறான் என்று அந்த பார்வையிலேயே புரிந்து கொண்டான் பரமன்.

"க்கும்.." என்று ஒரு தொண்டை செருமலுடன் வேஷ்டி மேல் ஜான் அகல பச்சை பெல்ட்டை சுற்றி கட்டியவாறே நிலை வாசலை தாண்டி வெளியே வந்தார் தங்கராஜ். மாமா டவுனுக்கு கிளம்புகிறார். வெளியே வரும் போது கனைப்பது மகன் பாலுவுக்கு சிக்னல். திண்ணையில் உட்கார்ந்து பீடி சிகரெட்டு பிடித்துக்கொண்டிருந்தால் நான் வரும்போதாவது ஓரமாக ஒதுங்கிக்கொள் என்பதற்காக. அவனிடம் தன் சுயமரியாதையை தக்க வைத்துக்கொள்வதர்க்காக மிகவும் பிரயத்தனப்பட்டார். பரமன் கண்ணிமைக்கும் நேரத்தில் கையிரண்டையும் பின்னால் கட்டி அருவாளை மறைத்துக்கொண்டான்.
"ஏலே.. பாலு.. டிபன் திங்க வரலையா." என்று கடமையாய் வீட்டினுள் அழைத்தாள் அவனைப் பெற்ற புண்ணியவதி. புல்லட் அடியில் படுத்திருந்த ராஜபாளையம் காதை தூக்கி எஜமானனை நிமிர்ந்து பார்த்துவிட்டு திண்ணையில் ஏறி வாலை சுருட்டிப் படுத்துக்கொண்டது.

"பரமா மத்தியானம் சாப்பாட்டை லாட்ஜுக்கு கொண்டு வந்துடு" என்று உத்தரவு பிறப்பித்து ராஜா மோஸ்தர் செருப்பணிந்த காலால் ஓங்கி உதைத்து புல்லட்டை உயிர்ப்பித்தார். உதைத்தபோது விலகிய வேஷ்டியை இழுத்து கசங்காமல் முன்னே சொருகிக்கொண்டார். வெள்ளைக் கதர் சட்டையின் மொடமொடப்பு "விஷ்..விஷ்" என்று காற்றைக் கிழிக்க தெரு திரும்பி வண்டியை முடுக்கி பறந்தார். டவுனில் சேக்காளி கருப்பனின் P.K.R லாட்ஜ்ஜில் ரூம் நம்பர் 101-ல் தான் நித்யமும் பகல் முழுவதும் வாசம். சாயந்திரம் ஆறேழு மணிக்குமேல் டவுன் ரத்னா ஸ்வீட்ஸ் கடையில் ஸ்பெஷல் தூள் பக்கோடா வாங்கிக்கொண்டு வீடு வந்து சேருவார். டி.வி, நாடகம், சினிமா, பாட்டு போன்ற கேளிக்கைகைகளை அவர் சிறுவயதிலாவது அனுபவித்து இருப்பாரா என்பது சந்தேகம்தான். அவருக்கு எப்போதும் பேச்சுதான் மூச்சு. அதுவும் ஒன்றுக்கும் உதவாத அரசியல் பேச்சு.

அந்த வாரம் முழுவதும் இயற்கைக்கு எந்த பங்கமும் இல்லாமல் சூரியனின் உதயமும், அஸ்தமனமும் சுமூகமாக நடந்தது. பாலு வழக்கம் போல இரவுகளில் மூக்கு முட்டக் குடித்து வாந்தி எடுத்து திண்ணை விளிம்பில் மல்லாக்க படுத்து மட்டையானான். டவுனில் பல ரகசிய இடங்களில் எழில்-சிவா காதலர் சந்திப்பு நடந்தது. காதலும் திருமணமும் பற்றி பாப்பையா வைத்து பட்டிமன்றம் போடும் அளவிற்கு இருவரும் காரசாரமாக விவாதித்தார்கள். தினமும் தங்கராஜ் மாமா தவறாமல் P.K.R போய் வந்தார்.  பெரிய பண்ணையில் நாலு வேலி நாற்று நட்டார்கள். சிறிய பண்ணையில் இரண்டு வேலி களை பறித்தார்கள். ஊரில் சிலர் வயலுக்கு உரமிட்டார்கள். பலர் திருப்தியாக மூக்கைப் பிடிக்க சாப்பிட்டார்கள். எல்லோரும் தூங்கினார்கள். ஆனால் சாப்பிடுவதும், தூங்குவதும் எழிலுக்கு மட்டும் வெறுத்தது. சாப்பாடு வேப்பங்காயாக கசந்தது. முகம் பறித்து மூன்று நாள் ஆன ரோஜாப் பூ போல வாடியது. கவலையினால் கண் மூடாமல் கனவுகளில் மட்டுமே தூங்கினாள்.

பாலு எந்த நேரமும் குடித்துவிட்டு வீட்டு வந்து நடு வீதியில் நின்று ரகளை செய்யலாம். அப்பாவின் காதுகளுக்கு விஷயம் எட்டலாம். வீட்டில் நம் காதல் அம்பலம் ஆகி அமர்க்களப்படலாம். "நீ ஓடிப்போனா ஓடுகாலி தங்கச்சிய எவன்டீ கட்டிப்பான்" என்று தன்னை சுவற்றில் முட்டி மூக்கை உறுஞ்சி அழுதுகொண்டே அம்மா கேள்வி கேட்கலாம். சகோதரப் பாசத்தில் அம்மா போய் தன் அண்ணன் தங்கராஜிடம் அவர் பிள்ளையை மாப்பிள்ளையாய் கேட்கலாம். அந்தக் கேடுகேட்டவனும் வெட்கம் மானத்தை அடமானம் வைத்து விட்டு தனக்கு தாலி கட்டலாம். சிவா இளமையிலே சோக தாடி வளர்க்கலாம். குடித்து குடித்து தேவதாஸ் ஆகலாம். வாழ்வே மாயம் பாடலாம். ரோடில் புழுதியில் புரளலாம். 'ஃபுல்'லானாலும் புருஷன் என்று நமக்கிட்ட பத்தினி தர்மப்படி நாமும் பாலுவுடன் குடும்பம் நடத்தலாம். இதயம் செத்த சதைப் பிண்டமாக அவனோடு படுத்து ஆசைக்கும் ஆஸ்த்திக்கும் புள்ளை  குட்டி பெத்துப் போட்டு நடைப்பிணமாக வாழலாம். இப்படி பல 'லாம்.."களில் லயித்து இருந்தவளை
"ஏ எழில்" என்று தொட்டுக் கலைத்தாள் தமிழ்.
"........"
"ஏய் உன்னத்தான்டி.."
பதிலேதும் பேசாமல் தண்ணீருக்குள் முகம் பார்த்துக்கொண்டு அந்தச் சிறிய வாய்க்கால் கல்வெர்ட் மேல் உட்கார்ந்திருந்தவளை தோளைப் பிடித்து திருப்பினாள். கீழே வாய்க்கால் அவள் கண்களில் குளம்.
"எவ்ளோ நேரமா தேடிக்கிட்டு இருக்கோம். இங்க உக்காந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கே. இன்னிக்கி கடைசி நாள் திருவிழா. வா போயிட்டு வரலாம்."
வானத்தில் இவள் சோகம் தெரியாத முழுநிலா தள்ளி நிற்கும் மேகத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. கீழே வாய்க்காலில் தண்ணீர் சலசலத்து கும்மாளமடித்தது. வாய்க்கால் ஓர நாணல் அந்த கும்மாளத்துக்கு வளைந்து ஆடி டிஸ்கோ நடனம் ஆடியது. எதையும் ரசிக்க மனமில்லாமல் அரைமனதாய் அந்த ஆத்தாளை தரிசிக்க எழுந்தாள்.

*
அரை மைல் தூரத்திலேயே "டட..டம்...டட..டம்..." என்ற அந்த உடுக்கையடி விண்ணைப் பிளந்தது. தமிழகத்தின் பிரதான தாளம். கோயில் வாசல் அரசமரத்தடி ஊர் ஜனங்களின் ஆக்கிரமிப்பில் ஜேஜேவென்று இருந்தது. ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் காடா விளக்கில் தகர டப்பாக்குள் கட்டை சுற்றி ராஜா, ராணி மேல் வைத்து காலிக் கைலிகள் சூழ அஞ்சுக்கு பத்து, பத்துக்கு இருபது சூதாட்டம் கனஜரூராக நடந்தது. பத்து ரூபா அஞ்சு ரூபா பிளாஸ்டிக் சாமான்கள் கடையில் டீ வடிகட்டியும், சோப்பு டப்பாவும் விற்பனையில் முதலிடம் பிடித்தன. சைக்கிளில் கட்டிய ஜோக்கர் பொம்மையின் வயிற்றிலிருந்து ரப்பர் போல இழுத்து இழுத்து கடிகாரமும், தேளும் ஜவ்வு மிட்டாயில் செய்து குழந்தைகள் கையில் கட்டிக்கொண்டிருந்தார் மிட்டாயினால் கை ரோஸ் கலரான ஒரு முதியவர். குருவி காக்கா இதய வடிவ சிகப்பு பலூன்களும், குரங்கு வால் பலூனும் அமோகமாக விற்பனையாயின. பலூன் தனக்கு கிடைக்காத ஒரு பொடிப் பயல் "வீல்...வீல்" என்று அழுது அதகளப் படுத்திக் கொண்டிருந்தான். மரத்தடி தாண்டி இரவு இன்னிசை விருந்திற்கு "ஹலோ.ஹலோ." என்று மேடை மேலே நின்று அமைப்பாளர்கள் மைக் டெஸ்ட் செய்துகொண்டிருந்தார்கள். நாலு பெட்ரோமாக்ஸ் விளக்கு ஆற்றோரம் கரையில் வைத்து "புஸ்.புஸ்." என்று ஊதி ஒழுங்காக பற்றவைக்க சீர் செய்து கொண்டிருந்தார்கள். தீ மிதிக்கு இரண்டடி அகலம் இருபதடி நீளம் பள்ளம் வெட்டி தணல் போட்டிருந்தார்கள். ஐந்தாறு பேராய் அதனருகில் நின்று தீப்பொறி பறக்க விசிறிக் கொண்டிருந்தார்கள். பூசாரி சுறுசுறுப்பாய் கோயிலின் உள்ளே வெளியே காரணமின்றி எதற்கோ திரிந்தார்.  நண்பிகள் புடை சூழ எழிலும், தமிழும் திருவிழா கூட்டத்திர்க்குள் இரண்டற கலந்தார்கள்.

orchestra

சிவாவும் கதிரும் மைக் செட் கட்டிய இடத்திற்கு அருகில் நின்று ஊர்க் கதை பேசிக்கொண்டிருந்தார்கள். எழிலுக்கு முதுகு காட்டி சிவாவைப் பார்த்து நின்றுகொண்டிருந்த கதிருக்கு சிவா கண்ணில் எழில் வழிந்தது. கரடியாய் இருக்க விரும்பாமல் "நா வரேன்டா..." என்று பெருந்தன்மையாய் ஒதுங்கினான்.
"ஏய்.இங்க பாரேன்..." என்று எழிலின் கையைப் பிடித்து சட்டென்று இழுத்துக் கொண்டு ஆர்கெஸ்ட்ரா மேடை பக்கம் போனாள் தமிழ். போகும் வழியில் சற்றே திரும்பி சிவாவை பார்த்து அழகாகச் சிரித்தாள் தமிழ். இந்த திடீர் பளீர் புன்னகையால் சிவா ஒன்றும் புரியாமல் குழம்பினான். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அச்சுவெல்லக் கட்டி மொய்க்கும் சிற்றெறும்பு போல அதிகரித்தது. மாட்டுவண்டிகளும், சைக்கிள்களும், மோட்டார் சைக்கிள்களும் சாலையின் இருமருங்கும் சாரைசாரையாய் குவிந்தன. பட்டணத்து ஆர்க்கெஸ்ட்ரா இசைப் பிரியர்கள் அவ்வளவு பேரையும் காந்தம் போல இழுத்திருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு ஆத்தாள் புஷ்பாலங்காரத்தில் சிவனேன்னு இருந்தாள்.

"இன்னும் சரியாக அரை மணி நேரத்தில் ஸ்ருதியும் லயமும் ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிக்கப் போகிறது. அனைவரும் திரளாக வந்திருந்து இன்னிசையை ரசித்து ஆத்தாளின் அருளைப் பெற அழைக்கிறோம்" என்று புதிதாக முதன்முறை மைக் பிடித்த ஒருவன் ஆர்க்கெஸ்ட்ரா கேட்டால் அம்பாளின் அருளைப் பெறலாம் என்ற ரீதியில் தத்துபித்தென்று உளறினான்.

"இங்க கொஞ்சம் வரீங்களா..."
தனியாக தமிழ் மட்டும் வந்து சிவாவை ஒதுக்குப்புறமாக அழைத்தாள். மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல வாயைத் திறக்காமல் தமிழைப் பின்தொடர்ந்தான்.
ஆர்க்கெஸ்ட்ரா மேடை தாண்டி இருநூறு முன்னூறு அடிகளில் இருந்த ஒரு வளர்ந்த நெடிதுயர்ந்த தென்னைமரத்தின் பின்னால் அழைத்துச் சென்றாள். தென்னை மரத்தின் தலை மேலே நிலா காய்ந்தது. எழில் அங்கே தனக்காக காத்திருக்கிறாள் போலிருக்கிறது என்ற ஆசையில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு தமிழ் பின் சென்றான். தீ மிதி தொடங்கிவிட்டதற்கான அறிகுறியாய் உடுக்கடியும், பெண்கள் குலவை இடும் சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. மரத்திற்கு பின்னால் வந்ததும் ஒருவரையும் அங்கே காணாமல்
"என்ன?" என்று சந்தேகமாய்க் கேட்டான் சிவா.
"எனக்கு சுத்தி வளச்சு பேசத் தெரியாது. உங்க கிட்ட நேரடியாவே கேக்கறேன். நீங்க எழில லவ் பண்றீங்களா?" பொட்டில் சுட்டார்ப் போல டப்பென்று கேட்டாள் தமிழ்.
"ஆமாம்."
"கல்யாணம் கட்டிப்பீங்களா?"
"நிச்சயமா. அதிலென்ன சந்தேகம்"
"அதுக்கப்புறம் என்னையும் கட்டிப்பீங்களா?"
அதிர்ச்சியில் உறைந்தான் சிவா.
"எ....எ.....என்ன சொல்றீங்க?" கேட்க நா எழவில்லை.
"வார்த்தையில அதிர்ச்சி இருந்தாலும் மனசுக்குள்ள மகிழ்ச்சியா இருக்குல்ல... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா... இல்ல.."
"நீங்க என்ன சொல்றீங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.."


"புரியும்படியா சொல்றேன் கேட்டுக்குங்க. எங்க வீட்ல துரதிர்ஷ்டமா பொறந்த ரெண்டாவது பொண்ணு நான். எப்பவும் எனக்கு எழில் உபயோகப்படுத்தின பழைய பொருள் தான் கிடைக்கும். அப்பாவுக்கு அவங்க தங்கைகளுக்கு கல்யாணம் கட்டுன கடன் இருந்ததால ஒரே பணக் கஷ்டம். எனக்கு மனக் கஷ்டம். இதை சொல்ல வெக்கப்படலை. சில சமயம் அவளோட கரை படிஞ்ச ஜட்டி கூட உபயோகிச்சிருக்கேன். சின்ன வயசில இதைப்பத்தி எனக்கு மனசுல ஒன்னும் பெருசாப்படலை. ஆனா நாள் ஆக ஆக எனக்கு ரொம்ப வெறுப்பா வந்திச்சு. வாழ்க்கையில நமக்குன்னு புதுசா ஒண்ணும் கிடைக்காதான்னு ஏங்க ஆரம்பிச்சேன். என்னோட ஃபிரண்ட் கீதாவோட அண்ணன் கல்யாணத்துல உங்களைப் பார்த்துட்டு முதல் பார்வையிலேயே என் மனசை பறி கொடுத்தேன். உங்க கிட்ட என்னோட லவ்வ சொல்ல விடாம இந்த பாழாப் போற வெட்கம் இவ்வளவு நாளா தடுத்துச்சு. போன வாரம் ஒரு நாள் பஸ்சுக்கு போகும் போது எங்க மாமாப் பையன் உங்களோட லவ்வ என் கிட்ட போட்டு உடைச்சுட்டான்.  இனியும் தாமதிக்கக் கூடாதுன்னு நினச்சு டவுன்ல பஸ் ஸ்டாண்ட் முக்குல நான் உங்க கிட்ட என் காதலை சொல்ல வந்தப்ப எங்க அக்காகூட காதல் ரசம் சொட்ட சொட்ட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தீங்க. இதிலையும் நாம ரெண்டாவாதா அப்படின்னு நினைச்சு மனசுடைஞ்சு வெறுத்துப் போயிட்டேன். இப்ப சொல்றேன். நான் வாழ்ந்தா அது உங்க கூட தான். அப்படி இல்லைனா உங்க விருப்பம் போல எழில நீங்க கட்டிக்கலாம். அவ உயிரோட இருக்கிற வரைக்கும் நா உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுக்காக நா கிழவியா ஆகிறவரைக்கும் வெயிட் பண்றதுலையும் அர்த்தம் கிடையாது. இப்ப நினச்சா கூட எங்க மாமாகிட்ட உங்களை போட்டுக் கொடுத்து உங்க காதலுக்கு வேட்டு வைக்க முடியும். உங்களையும் காலி பண்ண முடியும். ஆனா நீங்க எனக்கு முழுசா வேணும். அதனால இவ்ளோ சொன்னதையும் மீறி நீங்க எழிலை கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா அக்கான்னு கூட பார்க்காம...என் கையாலையே அவளை...ஏதாவது செய்ய வேண்டி வரும்.." என்று இழுத்தவளை கண் கொட்டாமல் பார்த்தான் சிவா. கண்ணெதிரே கல்யாண பூதம் நிற்பது போன்று உணர்ந்தான்.

"என்னடா பதினொன்னாவது படிக்கிற சின்னப் பொண்ணு இப்படி பேசறாளேன்னு பார்க்கறீங்களா. காதலுக்கு கண் இல்லை. அக்காவும் இல்லை. இல்லைனா நான் பன்னெண்டாவது முடிச்சதும் நீங்களே பெருந்தன்மையா எங்க வீட்ல வந்து என்னை பொண்ணு கேளுங்க. அட்லீஸ்ட் என்னோட வாழ்க்கையில இந்தக் கல்யாணமாவது எனக்கு புதுசாக் கிடைக்கட்டும்" என்று முத்தாய்ப்பாக முடித்தாள் தமிழ்.

சிவாவிற்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. காதலில் காற்றில் அலையும் நூலறுந்த பட்டம் போல தவித்தான். இவ்வளவு உறுதியோடு இருக்கும் இந்தப் பெண் எதையும் செய்வாள் என்று எண்ணினான். சவம் போல நடந்து ஆர்கெஸ்ட்ரா மேடை சமீபம் அடைந்தான். நான்காவது வரிசையில் குத்த வைத்து முட்டிக்கு முகம் கொடுத்து உட்கார்ந்திருந்தாள் எழில்.
"வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ளே.." என்று ஜேசுதாஸ் கேட்டால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஒருவர் மேடையில் ராகமாக கத்திக் கொண்டிருந்தார். பக்கவாத்தியம் வாசிப்பதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டு  பத்து பேர் மேடையில் பிரசவ வேதனையில் வீற்றிருந்தனர். சங்கீதம் தெரிந்து பார்ப்பவர்கள் மரண அவஸ்த்தையில் இருந்தனர்.

இசை கேட்க மனம் இசையாமல் சிவா ஒத்தையாக அந்த ரோடில் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தான். தேவதையாக அக்காளும் பிரம்ம ராட்ஷசியாக தங்கையும் அவன் கண்ணுக்குள் காதல் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். "டம்.டம்.டம்." என்று ஆர்க்கெஸ்ட்ரா ஒலி தூரத்திலிருந்து மெலிதாக அவனை இடித்துக்கொண்டிருந்தது.

முற்றும்.
பட உதவி: http://www.travelblog.org/

-


48 comments:

பொன் மாலை பொழுது said...

சரி, அந்த புள்ள யார கண்ணாலம் கட்டிக்கினான்?
//தேவதையாக அக்காளும் பிரம்ம ராட்ஷசியாக தங்கையும் //

ரெண்டு பேத்தியுமா? .........செத்தான்.!
மைனரே ...இருந்தாலும் உமக்கு இந்த கிராதகத்தனம் ஆகாது ஒய்.

Chitra said...

சிவாவிற்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. காதலில் காற்றில் அலையும் நூலறுந்த பட்டம் போல தவித்தான். இவ்வளவு உறுதியோடு இருக்கும் இந்தப் பெண் எதையும் செய்வாள் என்று எண்ணினான். சவம் போல நடந்து ஆர்கெஸ்ட்ரா மேடை சமீபம் அடைந்தான். நான்காவது வரிசையில் குத்த வைத்து முட்டிக்கு முகம் கொடுத்து உட்கார்ந்திருந்தாள் எழில்.
"வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ளே.." என்று ஜேசுதாஸ் கேட்டால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஒருவர் மேடையில் ராகமாக கத்திக் கொண்டிருந்தார். பக்கவாத்தியம் வாசிப்பதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டு பத்து பேர் மேடையில் பிரசவ வேதனையில் வீற்றிருந்தனர். சங்கீதம் தெரிந்து பார்ப்பவர்கள் மரண அவஸ்த்தையில் இருந்தனர்.


.....சோகம், நகைச்சுவை எல்லாம் கலந்து கட்டி தூள் பண்ணி இருக்கீங்க.... அடுத்த கதை எப்போது?

Anonymous said...

//ஜேசுதாஸ் கேட்டால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஒருவர் மேடையில் ராகமாக கத்திக் கொண்டிருந்தார். //

ஜேசுதாஸ் பாடலை அவரைத்தவிர யார் பாடினாலும் பற்றிக்கொண்டு வரும்.

ஒரு பக்க கதைகளையும் அவ்வப்போது எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Anonymous said...

எதிர்பாராத முடிவு அண்ணே!!!
”வசந்தத்திற்காக ஏங்கிய இந்த கிராமத்து காளையின் மனது எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறது “ அப்படின்னு டைரக்டர் வாய்ஸ் பின்னால கேக்குற மாதிரி ஒரு ஃபீலிங்! ;)

Unknown said...

அதெலாம் ஒத்துக்கமுடியாது நீங்க அடுத்த போஸ்ட் போடுங்க எந்த போஸ்ட் சுபம் இல்லை

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மூணாவது பார்ட்டை எழுதினது நீங்கதானா ஆர்விஎஸ்?

படு பயங்கர வேகத்துல ஒரு வாரத்தை ஒரு பாரால சுருக்கி ஒரு திருவிழாக்காட்சியைச் சொருகி முடிவை நோக்கி கதை பாய்ந்தா மாதிரி ஒரு ஃபீலிங்.

ரெண்டாவதா உள்ள ஒரு குழந்தையோட மனசை ஒன் லைனா வெச்சு கதையை பெரிய முடிச்சுக்குக் கொண்டுபோய்ட்டீங்க.

கொஞ்சம் அப்நார்மலான முடிவுதான்.

A.R.ராஜகோபாலன் said...

அற்புதம்
அமர்க்களம்
அட்டகாசம்
எழிலான தமிழில் , தமிழும் எழிலும்
காத்திருக்கிறேன் அடுத்த தமிழ் விருந்துக்கு ...........

Anonymous said...

Chitra said...

//சிவாவிற்கு சொல்ல வார்த்தைகள் இல்லையா?//

யார் சொன்னது. இதோ...கீழே சொல்லி இருக்கிறேன்.

//அடுத்த கதை எப்போது?//

ஆர்.வி.எஸ். அடுத்ததாக பொன்னர் சங்கர் விமர்சனம் போடுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

தக்குடு said...

"கண்ண்ண்னா! லட்டு திங்க ஆசையா? ஒரே கல்லுல ரெண்டு லட்டு....:)" இறுதி பகுதி படிக்கும் போது இந்த விளம்பரம் தான் டிவில ஓடிண்டு இருந்தது மைனர்வாள்!!!....:))

Madhavan Srinivasagopalan said...

வர்ணனைகள் சிறப்பாக வந்துள்ளது..
ஏதோ ஒரு அவசரத்தில கதைய முடிச்ச மாதிரி தெரியுது..

காதலுக்கு நீங்க எதிரியா ?
ம்ம்ம்ம்... அப்புறம்.. நீங்க நல்லவரா... கெட்டவரா ?

சும்மா..

மாதேவி said...

"பிரம்ம ராட்ஷசியாக தங்கை”....

ம்...

அடுத்து என்ன கதை எழுதப்போகிறீர்கள் ?

இளங்கோ said...

ஒரு நாவலாவே கொண்டு போயிருக்கலாம் போல இருக்குதுங்க.
பொசுக்குனு முடிச்சுப் போட்டிங்க. :)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கதை நன்றாக வந்திருக்கிறது. முடிவு அந்த வச்சுக்கவா பாடலின் மூலம் மிக நாசூக்காக சொல்லப் பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

v
சிவாவிற்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. காதலில் காற்றில் அலையும் நூலறுந்த பட்டம் போல தவித்தான்.//
எங்களுக்கும் வார்த்தைகள் இல்லை. எதிர்பாராத முடிவு.

அப்பாதுரை said...

சுவாரசியமான கொக்கியோடு முடிவை எதிர்பார்க்கவில்லை.

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான யாரும் யூகித்திருக்க முடியாத முடிவு
நல்ல கிராமீய மணம் வீசும் கதை படித்த திருப்தி
தொடர வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

முற்றும் போட்டுட்டீங்களே அதுக்குள்ளே.

இடைவேளை விட்ட மாதிரி தான் இருக்கு.

( யாரடி மோகினியில் நயன்தாராவுக்கு தங்கையா வர்ற பொண்ணு மாதிரி இருப்பாளா தமிழ்? )

மோகன்ஜி said...

செல்லாது.. செல்லாது.. அதுக்குள்ள முடிச்சது செல்லாது.
உங்க க்ளைமாக்சை யூகம் பண்ண முடியலையே.. கைகுடுங்க மாப்ள!

வெங்கட் நாகராஜ் said...

யூகிக்க முடியாத முடிவு மைனரே. ஆனாலும் சீக்கிரம் முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் முடித்தமாதிரி இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

RVS said...

@கக்கு - மாணிக்கம்
யாரு யாரைக் கட்டிக்கனும்ன்னு நீங்களே முடி பண்ணிக்கோங்க மாணிக்கம். ;-))

RVS said...

@Chitra
நித்யமும் ஒரு கதை எழுதணும்ன்னு ஆசை தான். மக்களுக்கு புளிச்சுப் போய்டுமோன்னு பயமா இருக்கு. அதனால அடக்கி வாசிக்கறேன். ;-))
பாராட்டுக்கு நன்றிங்க..;-)

RVS said...

@! சிவகுமார் !
இவ்ளோ பெரிய கதை ரொம்.......ப நீ ஈஈ ளமா இருக்கா?
எழுதறேன் சிவா! அன்புக்கு நன்றி. ;-))

RVS said...

@Balaji saravana
நல்லா இருந்ததா? இதே போல ஒரு சிடியில நடக்கிற மாடர்ன் கதை ஒன்னு எழுதலாம்ன்னு இருக்கேன். பார்க்கலாம். நன்றி பாலாஜி. ;-)

RVS said...

@siva
சுபமா ஒன்னு எழுதிடறேன் சிவா! பொறுத்தருள்க. நன்றி ;-))

RVS said...

@சுந்தர்ஜி
ஜி! அப்நார்மல் தான்.. இருந்தாலும் முடிவு கொஞ்சம் வித்யாசமா வைக்கலாம்ன்னு.. நன்றி ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN
நன்றி கோப்லி ;-)

RVS said...

@! சிவகுமார் !
எம்மேல என்ன கோபம் உங்களுக்கு. பிரசாந்த் & பிரசாந்த் பார்த்து நான் நொந்து போணுமா? கத வேண்டாம்ன்னா நேரா சொல்லுங்க பாஸ். இத்தோட நிறுத்திகிடுவோம். ஹி..ஹி.. நன்றி சிவா ;-))

RVS said...

@தக்குடு
லட்டு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு கேள்வ!! ;-)))

RVS said...

@Madhavan Srinivasagopalan
அண்ணே! நானே காதலிச்சு கண்ணாலம் கட்டின ஆளு தான்.. ;-))

RVS said...

@மாதேவி
ஒரு மாடர்ன் கதை! கரு கொஞ்சம் டெவலப் ஆகட்டும். நன்றிங்க மாதேவி. ;-))

RVS said...

@இளங்கோ
கரெக்ட்டுதான் இளங்கோ. ரொம்ப இழுத்து சொன்னா மக்கள் மிரண்டுடுவாங்கலோன்னு பயந்துட்டேன். ;-))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
பாராட்டுக்கு நன்றிங்க மேடம். ரொம்ப நாள் கழிச்சு வரீங்க அடிக்கடி வந்து போங்க.. ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்கு நன்றிங்க.. ;-)

RVS said...

@அப்பாதுரை
சார்! ரசித்தமைக்கு ரொம்ப நன்றி. ;-))

RVS said...

@Ramani
தொடர்ந்து படிச்சு ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார்! ;-))

RVS said...

@சிவகுமாரன்
சிவா! நன்றிங்க.. ரசித்து படித்தமைக்கு ;-
))

RVS said...

@மோகன்ஜி
நன்றிங்க அண்ணா! ஏதோ ரொம்ப இலக்கியத் தரமா எழுத முடியலைன்னாலும் இது போல ஏதோ நூலு விட்டுகிட்டு இருக்கேன். ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல. ரொம்ப பெருசா எழுதினா எவ்ளோ பேர் படிப்பாங்கன்னு தெரியலை. அதான் சட்டு புட்டுன்னு முடிச்சு போட்டேன். ;-))

R.Gopi said...

தலைவா...

முழுப்பட கதையே இருக்கே... சினிமாவா எடுத்து விடலாம் போல இருக்கே...

RVS said...

நன்றிங்க கோபி! நீங்கெல்லாம் படம் எடுக்க ஆரமிச்சுட்டீங்க.. எனக்கு வசதி இல்லையே! என்ன பண்ணலாம். ;-))))

ADHI VENKAT said...

முடிவை யூகிக்க முடியலை! எப்படி வேணாலும் எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டீங்களே! நல்ல நடை. திருவிழா பற்றி அழகான் விளக்கங்கள்.

RVS said...

@கோவை2தில்லி
ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சகோ. ;-))

arulkumar said...

ஏதோ கதையை முடிக்க வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து அவசர கதியில் முடித்த மாதிரி ஒரு உணர்வு

RVS said...

@arulkumar
கரெக்ட்டா சொன்னீங்க அருள். ரொம்ப பெரிய நாவலா ப்ளாக்-ல எழுத முடியுமான்னு தெரியலை. தொடர்ந்து எவ்ளோ பேர் படிப்பாங்கன்னும் சொல்ல முடியாது. இது இன்னும் அட்லீஸ்ட் அஞ்சு பதிவு வரை நீண்டிருக்கலாம். கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி. அடிக்கடி வாங்க. ;-)))

பத்மநாபன் said...

முடிவான முடிவாக கதை முடிந்தாலும் ....சிவாவை பொறுத்தவரை பெருங்குழப்பம் .... வாத்தியார் ஓரு சில ( தொடர் ) கதைகளை இப்படி முடிப்பார் ... அவசரமா முடிக்காத மாதிரி முடிச்சுட்டாரே என அந்த கதையை மறந்த சுழலில் இருக்கும் பொழுது .... இன்னொரு கதை யை தொடங்கி முடிப்பார் உதாரணம் ... சிவந்த கைகள் ...கலைந்த பொய்கள் ...... ( ஏன் ...பிரிவோம் சிந்திப்போம் கூட அந்த பட்டியலில் கிடைத்த அற்புதம் ....நமக்கெல்லாம் அமெரிக்கா பார்க்கும் யோகம் )...

கதையை விட கிராம நடை அதிக மதிப்பெண்களை பெற்று தருகிறது .... வாழ்த்துக்கள் ....

RVS said...

@பத்மநாபன்
இன்னும் கொஞ்சம் இழுத்திருந்தால் கதை இன்னும் நன்றாக வந்திருக்கும் பத்துஜி! நாலு பதிவுக்கு மேல் இழுப்பதற்கு மனம் அஞ்சுகிறது. அடுத்த முறை இன்னும் செவ்வனே செய்ய முயல்கிறேன். முழுவதும் படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள் கோடி. ;-))

raji said...

இன்னும் ஒரு பதிவோ இரண்டு பதிவோ இழுத்தால் பொறுமை இழப்பார்களோ என நினைத்து
கதையின் கதியை துரித கதியாக்கி விட்டீர்களே சார்.ஆனாலும் நல்ல நடைதான்.
இருப்பினும் இனி நீளத்தைக் கருதி முடிக்காமல் கதையின் அழகை அப்படியே
தந்தால் சந்தோஷப்படுவேன்

RVS said...

@raji
அடுத்த கதையில் நிச்சயம் இது போல அவசர அவசரமாக முடிக்காமல் கதையின் போக்கிற்கு சென்று முடிக்கிறேன். நன்றி ராஜி. ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails