Thursday, July 7, 2011

ப்ரியமுள்ள ஷஷிக்கு

ப்ரியமுள்ள ஷஷிக்கு,

நான் பூரண நலம். நீயும் அங்கே நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். இந்த மடல் உன்னை வந்தடையும் போது எனக்கு இங்கே அண்டசராசரங்களுக்கும் இணையும் இணைப்பு. ச்சே. இணையும் என்றா சொன்னேன். ஸாரி. இணைய கனெக்ஷன் கிடைத்துவிடும். கிடைத்தால் மட்டும் என்ன உனக்கு ஒரு ஜங்க் மெயில் ஃபார்வர்ட் செய்ய முடியுமா அல்லது உன்னோடு உளமாற அரை மணி சாட் எனும் நவீன கடலைத் தான் போட முடியுமா? மெயில் ஐ.டி, கூகிள், யூடுயூப், ஃபேஸ்புக் என்று மிகச் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாத வனாந்தரத்தில் நீ வசிக்கிறாய் என்பது எவ்வளவு கேவலமாக இருக்கிறது தெரியுமா?

இங்கிருந்து உனக்கு நான் லெட்டர் எழுதி நாக்கால் எச்சில் படுத்தி ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்யும் போது நான் அடையும் அவமானங்களுக்கு அளவே இல்லை. கையால் எழுதி உனக்கு கடிதாசி போடுவதற்கு இங்கே அலுவலகத்தில் இருக்கும் காரியதரிசி என்னைப் பார்த்து கேவலமாக சிரிக்கிறாள்.  நான் ஏதோ கற்கால மனிதர்களோடு தொடர்பு வைத்திருப்பது போல "சார்! நீங்கள் ஏன் மசியும் தூரிகையும் கொண்டு ஒரு பேப்பிரஸ்ஸில் எழுதி அங்கே ராக்கெட் கூரியர் அனுப்பக்கூடாது" என்று  கேலி பேசுகிறாள்.

நாடுகளுக்கு மத்தியில் வலைப் போராட்டமும், சர்வர் போரும் இல்லாமல் இருந்திருந்தால் நம் எல்லோருக்கும் பூலோக வாழ்வு சுகமளித்திருக்கும். யு.எஸ். தனக்கு வேலை தரவில்லை என்று சைனாக்காரன் அவன் சர்வருக்கு உலை வைத்தால் அவன் உலகமெங்கும் அதையே எடுத்து பற்ற வைத்துவிட்டான். நாமெல்லாம் சோம்பேறியாக வேலை செய்யாமல் மெஷினிடம் சரணாகதி அடைந்து சொந்த மூளையை துரு பிடிக்க விட்டுவிட்டோம். முடிவைப் பார்த்தாயா.

மக்களை மண்ணோடு மண்ணாக்க இதோடு சேர்ந்து கொண்டது குளோபல் வார்மிங். வெய்யில் காலத்தில் அசுர மழை. மழைக் காலத்தில் கொளுத்தும் வெய்யில். கண்ணுக்கு எட்டாத ஓசோன் பாதுகாப்புப் படலத்தை வாகனம் ஓட்டியே நார்நாராய் கிழித்து விட்டார்கள். ஆளையே சுட்டுப் பொசுக்கும் வெய்யில், அறுபது நாள் தொடர் மழை, அடிக்கடி சுனாமியோடு தோள் சேர்த்து ஊருக்குள் விசிட் அடிக்கும் சமுத்திரராஜன் என்று இயற்கை சீற்றத்தால் அல்லோகலப்படுகிறது.

சரி அதை விடு, இன்னும் கொஞ்ச நாள் தானே இந்தக் கஷ்டம் எல்லாம். பேசி என்ன பிரயோஜனம். இந்த மாதம் ரேஷன் கடைக்கு சென்று வந்தாயா? தயவு செய்து உன் புள்ளையாண்டானை ரேஷன் கடைக்கு அனுப்பாதே! தறுதலை மின்சாரம் வாங்கி யாராவது அரைகுறை ஆடை சிகப்பழகிக்கு தானம் கொடுத்துவிடுவான். இந்த முறை மாதத்திற்கு ஐந்து கிலோ வாட் மின்சாரம் கூடுதலாக தருவார்கள் என்று எழுதியிருந்தாயே, கொடுத்தார்களா? ரேஷன் மின்சார பாட்டரிக்கு ஒரு சனல் பை இலவசம் என்று அறிவித்தார்களே. நிறைவேற்றினார்களா? இப்போது தெருவில் இரவு பனிரெண்டுக்கு மேல் மண்ணெண்ணெய் விளக்கு எரிகிறதா இல்லை திகுதிகுவென்று பற்றி எறியும் தீவிட்டு கொளுத்தி வைத்திருக்கிரர்களா?  சுத்தத் தண்டமான மாநகராட்சி. இனி எந்த ஆட்சியில் இதை திருந்தச் செய்வார்கள்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

பொது அங்காடியில் தண்ணீர் அளந்து ஊற்றும் போது லிட்டர் குவளை கீழே நூறு எம்.எல்லுக்கு தகரம் அடைக்காமல் இருக்கிறார்களா? அந்தக் காலத்தில் கிருஷ்ணாயில் என்றும் மண்ணெண்ணெய் என்றும் அடுப்பெரிக்க பயன்படும் எரிபொருளுக்கு அப்படித் திருட்டுத்தனம் செய்வார்களாம். தயவு செய்து சிந்தாமல் சிதறாமல் ஜாக்கிரதையாக எடுத்து வா. நல்ல தண்ணீர் கோயம்பேடு கள்ள மார்க்கெட்டில் அதிகப்படி விலைக்கு கிடைக்கிறதாம். அரசாங்க நீரேற்று மையத்தின் கடல் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது குளிப்பதற்கு ஓ.கே. தயவுசெய்து கூவத்தில் இருந்து பிரித்தெடுக்கும் எந்தத் தண்ணீரும் நமக்கு வேண்டாம். நமக்கு ஒத்துக்காது. காசுக்கு பார்த்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உன்னிடம் ஜோக்காக சொல்வேனே அந்த "சர்வ குxடி தீர்த்தம்". அது தான் அந்த நீர்!

ஷுலக்ஷி எப்படி இருக்கிறாள்? ஷுஷன் ஊர் சுற்றிக்கொண்டு போக்கிரிகளோடு அரட்டையடித்துக் கொண்டு  சௌக்கியமாக இருக்கிறானா? எல்லோரும் "ஷ்" "ஷி", "ஷா" என்று மாடர்னாக வாயில் பசை போல ஈஷிக்கொள்ளும் ஷகரத்தில் பெயர் வைத்து இப்போது "ஷ" என்றாலே அங்கே "உஷ்" என்கிறார்களாமே ஆட்சியாளர்கள். வருகைப் பதிவு எடுக்கும் போது மாணவச் செல்வங்களின் பெயர்களைக் கூப்பிட்டால் "ஷ்..ஷ்.." என்று பாம்பு சீறுவது போல ஓசை கேட்டது என்று ஊரார் ஒரு பள்ளிக்கு கம்பு எடுத்துக் கொண்டு அடிக்க ஓடினார்களாம். கேள்விப்பட்டேன். நேற்று தான் அங்கேயிருந்து ஒரு வாட்டசாட்டமான பயல் வேலைக்காக இங்கு வந்து இறங்கினான்.  தேறுவான் போல தெரிகிறது. நம் சுலக்ஷிக்கு பார்த்து முடித்துவிடலாம்.

இன்னொரு முக்கியமான சேதி. இங்கே பிளாஸ்டிக் பைகள் எடுத்து வந்தால் ஆயிரம் கசையடிகள் தருவார்களாம். ஆயிரம் ஆணி பதித்த இருப்பு பெல்ட்டால் ஆன கசை. நம்மூரில் இந்தப் பைகளின் ராட்சஷ உபயோகம் தானே இரண்டு வருடத்துக்கு முந்திய கடும் புயல்மழையில் உருவான வெள்ளத்தை பூமியில் தேங்க விடாமல் செய்தது. ரோடை துடைத்து மொழுகி விட்டது போல ஒரு பொட்டுத் தண்ணீர் தேங்காமல் அனைத்தும் கடலில் ஓடிப் போய் சங்கமமானது உனக்கு தெரியாததல்ல.

அப்புறம் வேறென்ன விஷயம். ஒரு கிரௌண்ட் விளை நிலம் கிடைக்குமா என்று புறநகர்ப் பகுதியில் பார்க்கச் சொன்னேனே! பார்த்தாயா? 'விவசாயி' என்ற பெருமைமிக்க சமூக அந்தஸ்து நமக்கு கிடைத்துவிட்டால் நாம் மிகவும் மகிழ்ச்சியாக காலம் தள்ளலாம். ஊரார் நம்மைப் போற்றுவர். தலை மேல் வைத்து கொண்டாடுவார்கள். பெரிய இடத்து சகவாசம் எல்லாம் கிடைக்கும். இப்படி நான் ஒரு இடம் நீ ஒரு இடம் என்று வாழ்க்கையில் திண்டாட வேண்டாம். கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி என்றாகி விடுவோம். ஷுஷனை அட்லீஸ்ட் ஒரு அக்ரிகல்ச்சுரல் டிப்ளமோ படிக்கச் சொல். நாற்று நடுவதில் இருந்து களை பறிப்பது கதிர் அறுப்பது வரை நடைமுறைப் பாடம் எடுக்கும் நல்ல இன்ஸ்டிடுயூட்டில் சேர்த்து விடு. குருவி போல சேர்த்த பணத்தை இதுபோல எதற்காவது உபயோகமாக செலவிடலாம். கம்ப்யூட்டர், மெக்கானிகல் என்று ஏதாவது ஒன்று தான் படிப்பேன் என்றால் அந்தத் தறுதலையை அப்படியே விரட்டி விட்டுவிடு. நான் ஒன்றும் அவனுக்கு சொல்வதற்கில்லை.

ஆறடி உயர ஆஜானுபாகு ஆளின் நடுவிரல் உயரமும் குழந்தையின் உள்ளங்கை அளவிற்கு அகலமாக இருக்கும் ஒரு ஆழாக்கு அரிசி எழுநூறு ரூபாய் இருபத்தைந்து பைசாவாம். இப்போது புழக்கத்தில் இருக்கும் பீட்ஸா சாப்பிட்டு செத்த நாக்குகளை அடக்கம் பண்ணிவிட்டு அந்தக் காலம் போல ஈயச் சொம்பு மைசூர் ரசம் வைத்து உள்ளங்கையில் வாங்கி "சர்..சர்.." என்று உறிஞ்சி குடிக்க வேண்டும் என்ற அவா எழுந்துள்ளது. இந்த பர்கர், பீட்சா, பாஸ்தா, ஹாட் டாக் போன்ற கொடிய அரக்கர்களை தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்றவேண்டும். இட்லி என்றவொரு பதார்த்தம் அவ்வளவு அருமையாக இருக்குமாம். இங்கே இருவர் பேசிக்கொண்டார்கள். இப்போது நான் சேர்ந்த இந்த அலுவல கான்டீனில் நாளைக் காலை ஸ்பெஷல் மெனுவில் இட்லி இடம் பெற்றிருக்கிறது. நாளை இட்லி சாப்பிடப் போகிறோம் என்று நினைத்தாலே இப்போதே நெஞ்சில் சந்தோஷம் பற்றிக்கொள்கிறது. கூடவே சாம்பாரும் ஊற்றுவார்களாம். உன்னைத்தான் நினைத்துக்கொண்டேன். ஸாரி!

உம். அப்புறம். ஒன்று கேட்க மறந்துவிட்டேனே! 'சுடுகோட்' வாங்கி மாட்டிக் கொண்டீர்களா? வெப்பம் எழுபது டிகிரி வரை செல்கிறதாமே! "நூதன முறையில் கொலை!" என்று தினமணியில் பெட்டி செய்தி ஒன்று படித்தேன். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறதே! தன்னை ஒரு பெண் காதலிக்கவில்லை என்று உயிரோடு  எரித்துவிட்டானாமே ஒரு மா பாவி. அதுவும் எப்படி. ஒரு பெரிய பித்தளை அண்டா அடிப்பாகம் விட்டமுள்ள பூதக்கண்ணாடியை நண்பகலில் மொட்டை மாடியில் இருந்து அந்தப் பெண் வீதியில் அழகுப் பரிசோதனைக் கூடத்திற்கு நடந்து செல்லும் போது சூடான சூரியக் கிரணங்களை ஒன்று திரட்டி குவித்து குழந்தைகள் விளையாட்டிற்கு பேப்பரை பொசுக்குவது போல அந்தப் பெண்ணை பொசுக்கி விட்டானாமே! ஐயகோ! என்ன கொடூரமான செயல். 

நம் நகரெங்கும் ரோடுக்கு மேலே சிலிகான் ரப்பர் கூரை போடும் மெகா ப்ராஜெக்ட் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதா? சென்றமுறை நான் அங்கு வந்திருந்த போது பந்தல் கால் நட ஒருவனுக்கும் கூரை வேய இன்னொருவனுக்கும் கூரைக்குள் சிறு சிறு ஏ.சி மாட்ட மூன்றாவமனுக்கும் என்று பிய்த்து பிரித்து பலருக்கு டெண்டர் கொடுத்திருந்தார்கள். அந்த வேலை உருப்படியாக முடிந்ததா? சைக்கிளுக்கு காற்றடித்து வைத்துக் கொள். திடீரென்று அவசரமாக உன் அப்பா அம்மாவை பார்க்க மயிலாப்பூரில் இருந்து மணப்பாக்கம் செல்ல உபயோகப்படும். ஐம்பது பைசா ரோடு வரி கட்டி சைக்கிள் உபயோகிக்கலாம். ரொம்ப ஈசி. அடுத்த வருடமாவது செல்போன் இணைப்புகளை ஏற்படுத்துவார்களா என்று தெரியவில்லை. ஈஸ்வரன் தான் காப்பாற்றவேண்டும். தன்னுடைய இரண்டு பங்களாக்களை விற்று ஒரு ப்ரஹஸ்பதி வீம்புக்கு ஒரு மாதம் "நான் பெட்ரோல் கார் ஒட்டுகிறேன் பார்" என்று பீத்திக்கொண்டு ஓட்டிவிட்டு திவாலாகி சாமான் செட்டோடு வீதிக்கு வந்துவிட்டதைப் பற்றி இங்கே வம்பு பேசி சிரிக்கிறார்கள். இந்த 2300ல் இப்படியும் சில மனிதர்களா!

ஏதோதோ எழுதிவிட்டேன். நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். சாவகாசமாக பதில் போடு. குட்டி எழுத்துக்களில் எழுது. அப்போதுதான் பக்கம் குறைவாக கடிதம் குறைந்த எடையில் இருக்கும். காசு குறைச்சலாக ஆகும். நான் இங்கே செட்டில் ஆனவுடன் நிச்சயம் உங்களை என்னுடன் அழைத்துக் கொள்கிறேன். பச்சைப் பசேல் மரங்களும், ஏரிகளும், குளங்களும் என்று இந்த இடம் நிஜமாகவே சொர்க்கபுரியாக இருக்கிறது.

அன்பு முத்தங்களுடனும் ப்ரேமையுடனும்,

ஷிவன்.
கேம்ப் செவ்வாய் கிரகம்.

current place

P.S: இத்துடன் இணைத்துள்ள படத்தில் இருக்கும் அந்த வானுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் தான் நான் பணிபுரிகிறேன்.அந்த முன்னால் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட அந்தக் கூரை வீட்டில் தான் நான் குடியிருக்கிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகள் இங்கேயும் இருக்கிறது. எல்லா இடத்திலும் மனிதர்கள் தானே வாழ்கிறார்கள். Men are from Mars, Women are from Venus என்று முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. 


To

திருமதி ஷஷி ஷிவன்,
டோர் நம்பர். 12 , காலனி நம்பர் 78 , ஸ்ட்ரீட் நம்பர் 46 ,  ஏரியா நம்பர் 65 , ஊர் நம்பர் 18 (பழைய பெயர்: மயிலாப்பூர் ), எட்டாவது நகரம், ஏழாவது நாடு, பரதக் கண்டம், மூன்றாவது கிரகம்.


பட உதவி: http://fantasyartdesign.com/
-

40 comments:

பத்மநாபன் said...

இந்த அறிபுனைக் கதை ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் , வெகு எதார்த்தமாக ஆவலையும் எதிர்பார்ப்பையும் சரிசமமாக குழைத்து வடித்த கதை... தெவிட்டா சுகமளித்தது.. வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

எதிர்காலத்தில் நடக்கும்போல.. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். அழ்கான கற்பனை வள்த்திற்கு வாழ்த்துக்கள்.

சமுத்ரா said...

Good one..

Yaathoramani.blogspot.com said...

பின் குறிப்பு:விலாசமும் விஷயங்களும் மிகத் தெளிவாக இருக்கிறது
கூடவே கடிதம் போய்ச் சேரவேண்டுமே என்கிற பயமும் இருக்கிறது
2020 ல் எல்லாம் ஊரப்பாக்கத்தில் வீடு இருக்க சென்னை போய்
வேலை பார்த்து வர சங்கடப்படுவார்களாம்.என்ன திமிர் என
ஒரு பக்கம் எண்ணம் வந்தாலும் நம் நிலைமையை நினைக்க
பொறாமையாகக் கூட இருக்கிறது.
செவ்வாய் தோஷம் என்றுதான் தீரப்போகிறதோ
நான் உன்னை சந்திக்கப் போகிறேனோ தெரியவில்லை
வாழ்த்துக்கள் வேறென்ன சொல்ல இருக்கு.

pudugaithendral said...

இப்படியும் நடக்கலாம்!!! அருமையான கற்பனை அதை வார்த்தைகளில் கொண்டு வந்தது மிக அழகு

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இருபத்தி அஞ்சு பைசா-ஐம்பது பைசாவுக்கெல்லாம் 2300ல் உயிர் கொடுத்து விட்டீரே ஆர்விஎஸ்?ரொம்ப அநியாயம்.

விவசாயத்துக்கு ஔவையார் கொடுத்தது போல வரப்புயர ஆலோசனை கொடுத்து வருடத்துக்கு ஒரு மாரியாவது பெய்ய வைத்தீர்.

ரொம்ப முற்போக்கான பின்நவீனத்துவப் பீடு நடை போட்ட “இலக்கியக்” கதை.(அப்பாத்துரையையும் போகனையும் இங்கே வரவைக்க)

ஸ்ரீராம். said...

ஷபாஷ்...

வெங்கட் நாகராஜ் said...

ஷ்.... உங்கள் அறிவியல் புனைவினை யாராவது செவ்வாய்க் கிரகவாசி படித்து விடப்போகிறார்கள்.... :)

நல்ல புனைவு மைனரே.... நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை...

geethasmbsvm6 said...

சரி, சரி, பதிலையும் வாங்கிப் போடுங்க. சீக்கிரம்.

geethasmbsvm6 said...

தொடர

A.R.ராஜகோபாலன் said...

//நாமெல்லாம் சோம்பேறியாக வேலை செய்யாமல் மெஷினிடம் சரணாகதி அடைந்து சொந்த மூளையை துரு பிடிக்க விட்டுவிட்டோம்.///



P.S: இத்துடன் இணைத்துள்ள படத்தில் இருக்கும் அந்த வானுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் தான் நான் பணிபுரிகிறேன்.அந்த முன்னால் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட அந்தக் கூரை வீட்டில் தான் நான் குடியிருக்கிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகள் இங்கேயும் இருக்கிறது. எல்லா இடத்திலும் மனிதர்கள் தானே வாழ்கிறார்கள். Men are from Mars, Women are from Venus என்று முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது.


To

திருமதி ஷஷி ஷிவன்,
டோர் நம்பர். 12 , காலனி நம்பர் 78 , ஸ்ட்ரீட் நம்பர் 46 , ஏரியா நம்பர் 65 , ஊர் நம்பர் 18 (பழைய பெயர்: மயிலாப்பூர் ), எட்டாவது நகரம், ஏழாவது நாடு, பரதக் கண்டம், மூன்றாவது கிரகம்.


எழுத்துக்களிலும் கூட
பிரமாண்டத்தை
பிரகடனப் படுத்திய
பதிவு வெங்கட்
இனி நீ
பதிவுலக ஷங்கர்

ADHI VENKAT said...

2300ல் பீட்ஸா, பர்கரை விட்டு விட்டு இட்லி , ஈயச் சொம்பில் மைசூர் ரசமா பிரமாதம். இப்படி நடந்தாலும் நடக்கலாம்.

நல்ல கற்பனை. பாராட்டுக்கள்.

bogan said...

ரொம்ப நாளாய் உங்கள் எழுத்தைப் பற்றிய இந்த கருத்தை சொல்லவேண்டுமென்று நினைத்தேன்.சுந்தர்ஜி கமன்ட் பார்த்ததும் தோன்றியது.நான் சமீப காலங்களில் படித்ததிலேயே பாசிடிவ் ஹ்யூமர் உங்கள் உடையது.என் நகைச்சுவையில் கொஞ்சம் விஷம் இருக்கும்.அப்பாதுரையோடது ரொம்ப டார்க் ஹ்யூமர் என்பது என் அபிப்பிராயம்.ஒரு கால கட்டத்தில் கல்கியில் கல்கி தேவன் போன்றவர்கள் இது போன்று எழுதிக் கொண்டிருந்தார்கள்.இன்றைய கல்கி பற்றி அதிகம் தெரியவில்லை.என் தீவிர இலக்கிய நண்பர் உங்களைப் படித்துவிட்டு எழுபதுகளில் வந்த டிபிகல் பிராமண நகைச்சுவை என்றார்.சரி என்றே தோன்றியது.சுஜாதா இந்த காலகட்டத்தில் தானே கிளம்பி மேல் வந்தார்?தொண்ணூறுகளுக்கு பிறகு உலகமே கொஞ்சம் கோணலாகப் போகத் தொடங்கி அதன் நகைச்சுவையும் அப்படியே ஒரு பக்கமாக சாய்ந்து நடக்க ஆரம்பித்துவிட்டது.இந்த சூழலில் நீங்கள் எழுதும் யாரையும் ரொம்பச் சீண்டாத மெலிய நகைச்சுவை ஆசுவாசமாக இருக்கிறது.

அந்த சுடுகோட் ஐடியா அற்புதம் !

இளங்கோ said...

கிரகம் தாண்டி கிரகம் போய் விட்டீர்கள்.. :)
இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்பட்டு, முற்காலத்தில் ஆர் வி எஸ் என்னும் பதிவர் எழுதி விட்டுப் போயிருக்கிறார் என்று அப்பொழுது பேசிக்கொள்வார்கள்.. :)

எல் கே said...

அருமை மைனரே. நல்ல கற்பனை

raji said...

//பொது அங்காடியில் தண்ணீர் அளந்து ஊற்றும் போது லிட்டர் குவளை கீழே நூறு எம்.எல்லுக்கு தகரம் அடைக்காமல் இருக்கிறார்களா? அந்தக் காலத்தில் கிருஷ்ணாயில் என்றும் மண்ணெண்ணெய் என்றும் அடுப்பெரிக்க பயன்படும் எரிபொருளுக்கு அப்படித் திருட்டுத்தனம் செய்வார்களாம். தயவு செய்து சிந்தாமல் சிதறாமல் ஜாக்கிரதையாக எடுத்து வா. நல்ல தண்ணீர் கோயம்பேடு கள்ள மார்க்கெட்டில் அதிகப்படி விலைக்கு கிடைக்கிறதாம். அரசாங்க நீரேற்று மையத்தின் கடல் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது குளிப்பதற்கு ஓ.கே. தயவுசெய்து கூவத்தில் இருந்து பிரித்தெடுக்கும் எந்தத் தண்ணீரும் நமக்கு வேண்டாம். நமக்கு ஒத்துக்காது. காசுக்கு பார்த்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உன்னிடம் ஜோக்காக சொல்வேனே அந்த "சர்வ குxடி தீர்த்தம்". அது தான் அந்த நீர்//

உண்மையில் இதை கற்பனை என்று எடுத்துக் கொள்ள முடியாது.இப்படி
மாறும் நிலைமை வெகு தூரத்தில் இல்லை என்பது கசப்பான உண்மை

ரிஷபன் said...

உங்க கற்பனை பிரமிக்க வைத்தது..
என்ன ஒரு சரளமான நடை.
நையாண்டியும் விஞ்ஞானமும் கை கோர்த்த ஜுகல்பந்தி

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! அசத்தி விட்டீர்கள்.. அண்மையில் நீங்கள் எழுதிய பதிவுகளில் இதற்கு கண்மூடிக் கொண்டு முதல் ரேங்க் தருவேன்.. HATS OFF! உங்க ஊர்ல ஏதாவது பிளாட் சகாயமா வேலைக்கு வருமா? பாருங்க. வாங்கிப் போட்டா கிடக்குமே!

சாய்ராம் கோபாலன் said...

//மோகன்ஜி said... ஆர்.வீ.எஸ்! அசத்தி விட்டீர்கள்.. அண்மையில் நீங்கள் எழுதிய பதிவுகளில் இதற்கு கண்மூடிக் கொண்டு முதல் ரேங்க் தருவேன்.. HATS OFF! உங்க ஊர்ல ஏதாவது பிளாட் சகாயமா வேலைக்கு வருமா? பாருங்க. வாங்கிப் போட்டா கிடக்குமே!//

DITTO.

"சர்வ குxடி தீர்த்தம்" - மேற்கோள் காட்டி இருப்பது எதார்த்தமாக அழகு

பிளாஸ்டிக் பேக், விளை நிலம், விவசாயி என்று சூப்பர் ஆர்.வி.எஸ்

மோகன்ஜி

ஜெ.ஜெ / மு.கா குடும்பத்துக்கு பிறகு தான் நமக்கு எல்லாம் ஒரு சதுர அடி கூட.

ஆசை தோசை அப்பளம் வடை.

மாதேவி said...

"செவ்வாய் கிரகவாசி" அருமையான விஞ்ஞான கற்பனை.

RVS said...

@பத்மநாபன்
மிக்க நன்றி பத்துஜி! ஒரு ஃப்ளோல எழுதினது. தமிழ்மணத்திற்காக தினமும் எழுதுகிறேன். நன்றி. ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம்! ;-)

RVS said...

@சமுத்ரா
Thank you! ;-)

RVS said...

@Ramani
இதுவும் நல்லாயிருக்கே சார்! நன்றி. ;-))

RVS said...

@புதுகைத் தென்றல்
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.. ;-))

RVS said...

@சுந்தர்ஜி
பத்து பைசா.. அஞ்சு பைசா... கூட வச்சு எழுதலாம்ன்னு இருந்தேன்.. தப்பிச்சீங்க ஜி ... ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
ஷரி! நன்றி ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஹி..ஹி.. நன்றி தலைநகரமே! ;-))

RVS said...

@geethasmbsvm6
நன்றிங்க மேடம்! இன்னொரு ப்ளாக் எழுத டைட்டில் கொடுத்ததுக்கு.. படிக்கற மக்கள் ஒத்துப்பாங்க.. ;-))))

RVS said...

@A.R.ராஜகோபாலன்
நண்பா! அன்புக்கு நன்றி.. ;-))

RVS said...

@கோவை2தில்லி
நடந்துரும்ன்னு நினைக்கிறேன்... நீங்க என்ன சொல்றீங்க சகோ.. ;-))

RVS said...

@bogan
நன்றிங்க...முடிந்தவரையில் நன்றாக எழுத முயல்கிறேன். மற்றவை உங்களைப் போன்றோர் தரும் ஊக்கத்தினால் விளைவது.. நன்றி.. ;-))

RVS said...

@இளங்கோ
பாராட்டுக்கு நன்றி இளங்கோ. ;-))

RVS said...

@எல் கே
நன்றி எல்.கே ;-))

RVS said...

@raji
மாறலாம்.. எவர் கண்டார்! ;-))
கருத்துக்கு நன்றி ராஜி. ;-)

RVS said...

@ரிஷபன்
பாராட்டுக்கு நன்றி சார்! ;-))

RVS said...

@மோகன்ஜி
நன்றி அண்ணா! நமக்கு இல்லாத இடமா... வாங்க வளைச்சிடலாம்... நான் நிலத்தைச் சொன்னேன்.. ;-))

RVS said...

@சாய்
பாராட்டுக்கு நன்றி சாய்! நீங்க வாங்க.. நான் வாங்கித் தரேன்.. செவ்வாய்ல.... ;-)

RVS said...

@மாதேவி
நன்றிங்க... ;-)

RVS said...

@Asakan

Thank You!!! ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails