Friday, February 4, 2011

'பக்கா' வாத்தியங்கள்

நந்தீஸ்வரர் மத்தளம்.
நாரதர் தம்பூரா.
சரஸ்வதி வீணை.
சிவனார் டமரு.
கிருஷ்ண பரமாத்மா புல்லாங்குழல்.

இப்படிக் கடவுளர் அனைவரும் வாத்தியம் இசைப்பவர்கள் தான். பக்க வாத்தியம் என்று தற்போது மேடையில் ஓரத்தில் உட்காரவைத்தாலும் அதில் சிறப்பாக கொடிகட்டி பறந்து அதை பக்கா வாத்தியமாக மாற்றியவர்கள் பலர். குறிப்பிட்டுச் சொல்லப் பலபேர் (பலபேர்) இருப்பதால் வித்வான்கள் பற்றி எழுதப்போவதில்லை. சங்கீதப் பதிவாக இதை விஸ்தரித்து எழுதவில்லை என்றாலும் இன்று நான் கேட்ட ஒரு வாத்திய கோஷம் என்னை இது எழுத உசுப்பிவிட்டது.கடம் - விக்கு விநாயக்ராம்

முதலில் இந்த வீடியோ. குடும்பமாக உட்கார்ந்து இசைக்கிறார்கள். கை விளையாடுகிறது.
கீழ்காணும் வீடியோவில் மேதை விக்குவின் கைப்பக்குவம் நன்கு விளங்குகிறது.

தட்டிக் கொடுக்கிறார்...
தடவிக் கொடுக்கிறார்...
குட்டுகிறார்...
குத்துகிறார்...
அடிக்கிறார்...
வாசிக்கிறார்..
நாலு தட்டு தட்டிவிட்டு நம்மையும் கையை தட்ட சொல்கிறார்...

இவர் செய்யும் வித்வத்தை ஜாகிர் ஹுசைன் ரசிப்பதை பார்ப்பது கூட ஒரு அழகுதான்.ஷஷாங்க் சுப்ரமண்யம் - வேங்குழல் நாதம்.

நீலமேக ஷ்யாமளானாக புல்லாங்குழல் ஊதுகிறார். தலையில் மயிலிறகு மிஸ்ஸிங் அவ்வளவுதான். அவர் ஊதும் காற்று அந்தத் துளைகளில் என்ன பாடுபட்டு நாதவெள்ளமாக வெளிவருகிறது? குழல் வாயால் ஊத பார்த்திருக்கிறேன், அதை அடித்துப் பார்த்திருக்கிறீர்களா? அற்புதம்.குன்னக்குடி வைத்தியநாதன்.

நெற்றியின் வலது கோடியிலிருந்து இடது கோடி வரை ஒரே பட்டையாய் திருநீறு. நடுவில் பழைய ஒரு ரூபாய் நாணயம் சைஸுக்கு குங்குமம். பளபளா என்று ஜிப்பா. ஒரு பட்டு வேஷ்டி. கருடாழ்வார் மூக்கு. காது இடிக்கும் வரை உதட்டை விரித்து ஒரு பெரீய்ய சிரிப்பு. சினிமா மெட்டுக்களை வயலினில் வாசித்து நிறைய இளைஞர்களை தான் பக்கம் திருப்பினார். வாசிக்கும் போது காண்பிக்கும் முகபாவங்கள் அற்புதம். அந்த பாவத்திலே நம்மை மெஸ்மரைஸ் செய்துவிடுவார். திருவையாற்றில் ஆராதனையின் போது நடுநாயகமாக உட்கார்ந்து தாளம் போடும் அழகே தனி. இறைவனடி சேர்ந்த வயலின் மேதையின் "இஞ்சி இடுப்பழகா" பிட்.

பண்டிட் ரவிஷங்கர் - சிதார் 

இதுதான் ஹிந்தியில 'சித்தாரு' என்று கமல்ஹாசன் கலாய்த்து பாடியதால் வீணைக்கும், சித்தாருக்கும் உருவ ஒற்றுமை தவிர்த்து வேறென்ன என்று பார்த்தால் வீணைக்கு நாலு தந்தி சித்தாருக்கு ஏழு தந்தி. மகள் அனுஷ்காவுடன் சேர்ந்து இசைத்த கச்சேரி. மீட்ட ஆரம்பித்து உள்ளே செல்ல செல்ல தன்னை மறந்து அவர் அனுபவித்து இசைப்பது கேட்காமலே இனிக்கிறது.


உமையாள்புரம் சிவராமன் - மிரு'தங்கம்'

செம்மங்குடியின் திருச்சி கச்சேரி. நடுவில் கண்ணில் அடிக்கும் ப்ளாஷ் லைட்டை அணைக்கச் சொல்கிறார். தனியாவர்த்தனம் வாசிக்கும் உமையாள்புரம் சிவராமனின் டெடிகேஷன். மலைக்க வைக்கிறார். வாசிப்பதை பார்த்துக் கொண்டிருக்கும்போது நமக்கு கைரெண்டும் உதறுகிறது.


வீணை எஸ். பாலச்சந்தர்
சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பியவர் என்பது இந்த "அமிர்தவர்ஷினியில்" தெரிகிறது. ஆனந்தாமிர்தகர்ஷினி அமிர்தவர்ஷினி என்று வீணை மீட்டும் போது இசை மழை பொழிகிறது. நேரம் செல்ல செல்ல விண்ணைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் அடைமழையாய் காதுகளை வந்தடைகிறது வீணைகானம். வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு என்ற பாரதியார் பாடல் சட்டென்று நினைவுக்கு வந்து பாடாய்ப் படுத்துகிறது.பின் குறிப்பு: ஆற அமர உட்கார்ந்து எழுதுவதற்கு நேரம் வாய்க்கவில்லை. சில இசை வாத்திய ஸி.டிக்கள் ரசித்துக் கொண்டிருப்பதால் இந்தப் பதிவு. இதற்கே கள்ளத்தனமாய் மூச்சு காட்டாமல் நேற்றிரவு விழித்திருந்து தொகுத்தேன். இப்போது வலையேற்றுகிறேன். நன்றி.

-

42 comments:

raji said...

இசைப் பதிவு அருமை
வீடியோக்களின் நாத வெள்ளம்
அற்புதம்

//இதற்கே கள்ளத்தனமாய் மூச்சு காட்டாமல் நேற்றிரவு விழித்திருந்து தொகுத்தேன். இப்போது வலையேற்றுகிறேன்//

கள்ளத்தனம்? வொய்?
தலை நிமிர அனுமதி கிடைக்கலையா?

RVS said...

@raji
ஆமாம். அதே.அதே.. (உண்மையை ஒப்புக்கொள்ளும் சிங்கம் நான் ) ;-)

பத்மநாபன் said...

பக்க வாத்தியங்களே முதன்மை வாத்தியங்களாய் தொகுத்த விதம் அருமை..இசையை அசைபோடுவதில் என்றும் முதன்மையாக இருக்கிறிர்கள்..வாழ்த்துகள்

//தலை நிமிர அனுமதி கிடைக்கலையா//உங்களை கலாய்க்கும் எனது பணியை சகோ ராஜி அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார் ..நன்றி..

ILA (a) இளா said...

அருமையான தொகுப்புங்க. நிறைய இது மாதிரி பகிர்ந்துக்குங்க..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எனக்கு இந்த ஏரியால அவ்ளோ விஷய ஞானம் இல்லிங்க... ஆன ரசிக்க பிடிக்கும்... கடவுள்களின் வாத்தியங்கள் பற்றிய குறிப்பு சூப்பர்

Chitra said...

எனக்கு classical music பற்றி அதிகம் தெரியாது... இந்த வீடியோ இணைப்புகள் ரசிக்கும் படி உள்ளன... பகிர்வுக்கு நன்றிங்க...

எல் கே said...

@ராஜி
நள்ளிரவில் கணினி முன் அமர்ந்தால் அடிதான் கிடைக்கும் ...

எல் கே said...

உமையாள்புரம் கேட்டேன். என்ன வாசிப்பு ? வாய்ப்பே இல்லை . நன்றி ஆர்வீஎஸ்

Anonymous said...

அருமையான தொகுப்பு அண்ணே! ஸ்பெஷல் தாங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

ஸ்ரீராம். said...

பக்கா பதிவு...

Madhavan Srinivasagopalan said...

அருமை.. அருமை.. சொந்தமா நல்லா யோசிச்சு (!) எழுதி இருக்கீங்க..

ADHI VENKAT said...

நல்ல தொகுப்பு. சமீபத்தில் பொதிகையில் விக்கு விநாயக்ராம், கத்ரி கோபால்நாத், ஜாகீர் ஹுசைன் இவர்கள் மூவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி பார்த்தோம். அருமையாக இருந்தது.

தக்குடு said...

மிகவும் ரசித்தேன் உங்கள் மிரு'தங்கத்தை'....:) விக்குவின் கைகளில் தாளம் விளையாடுகிறது. குழலும் சித்தாரும் அமைதியாக நான் கேட்கும் என்னுடைய அன்பு வாத்யங்கள். வீணை 'சிருங்கேரி சாரதையின்' வாத்யம் என்பதால் ஒரு சிறப்பு ஒட்டுதல் அதனுடன்..:)

இளங்கோ said...

ஆ.. திரும்பவும் மியுசிக்.. :)

//ஆற அமர உட்கார்ந்து எழுதுவதற்கு நேரம் வாய்க்கவில்லை. சில இசை வாத்திய ஸி.டிக்கள் ரசித்துக் கொண்டிருப்பதால் இந்தப் பதிவு.//
இதற்காக உங்களை விட்டு விடுகிறோம்.. :)

ரிஷபன் said...

இசை எனும் இன்ப வெள்ளம்.. வித்தியாசமாய் பக்கவாத்தியங்களும்.
கலக்கிட்டிங்க.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. நல்ல பக்க வாத்தியங்கள் இல்லையெனில் பாடகர்கள் பாடும் பாடலே சோர்ந்து போனது போல ஒரு உணர்வு வரும் எனக்கு. கர்னாடக சங்கீதம் தெரியாத எனக்கே இந்த உணர்வு இருந்தால்…. பகிர்வுக்கு மிக்க நன்றி.

சிவகுமாரன் said...

பகிர்வுக்கு நன்றி RVS
இசையை இன்னும் ரசிக்கக் கற்றுக்கொண்டேன் ராகமணி தயவால்.

\\இதற்கே கள்ளத்தனமாய் மூச்சு காட்டாமல் நேற்றிரவு விழித்திருந்து தொகுத்தேன்///

ஆமாங்க. இங்கேயும் திருட்டுத்தனமாய் விழித்து உட்கார்ந்து தான் வலை மேய வேண்டியிருக்கு. ( உங்களுக்கு ப்ளாக் போதை ஏறிப்போச்சு . ஏதாவது Rehabiliation centre க்கு கூட்டிப் போகணும் )

இராஜராஜேஸ்வரி said...

ஆமாங்க இசை என்னும் இன்ப் வெள்ளதில் நீந்தத்தான் வைத்துவிட்டீர்கள். வீடியோ கிளிப்பிங்ஸ் பார்த்தேன் .. கேட்டேன்..ரசித்தேன்.. நன்றி.

RVS said...

@பத்மநாபன்
வாழ்த்துக்கு நன்றி பத்துஜி. அந்த ஜி கூட சேர்ந்து என்னை ஓட்டறீங்களா? இருங்க கவனிச்சுக்கறேன்.. ;-);-);-);-)

RVS said...

@ILA(@)இளா
நன்றிங்க... அடிக்கடி வந்து போங்க பாஸ்! ;-)

RVS said...

@அப்பாவி தங்கமணி
வாழ்த்துக்கு நன்றிங்க.. இசை ஒரு சமுத்திரம்... எனக்கும் அதில் ஒரு துளிதான் தெரியும்.. நன்றி அப்பாவி! ;-)

RVS said...

@Chitra
எனக்கும் ஏதோ தான் தெரியும். ரசித்தமைக்கு நன்றி. ;-) ;-)

RVS said...

@எல் கே
கரெக்ட்டு பாஸ்!
@ராஜி - அனுபவஸ்தர் சொல்கிறார்.. கேட்டுக்கொள்ளவும். ;-);-);-)

RVS said...

@எல் கே
அவர் கை தாண்டவம் ஆடுது.. வாசிப்பது எவ்வளவு அழகு.. அடாடா.. ;-)

RVS said...

@Balaji saravana
ஸ்பெஷல் நன்றிறிறிறிறிறி...... தம்பி..... ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றி. பக்கா கமெண்ட்டு ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
என்னப்பா யோசிச்சு எழுத கிடக்கு இதில.. பிரியலை.. சொல்லேன்... ;-);-)

RVS said...

@கோவை2தில்லி
இசைச் சங்கமம் என்று இந்நாளில் நிறைய இதுபோல ஒளிபரப்புகிறார்கள். நன்றாக இருக்கிறது. நன்றி. ;-)

RVS said...

@தக்குடு
எனக்கு தெரியும்.. உங்களுக்கு நிச்சயம் 'குழல்' பிடிக்கும் என்று... ;-))))))))

RVS said...

@இளங்கோ
தம்பி ... மிரள வேண்டாம்.. அடுத்தது ஆண் சமுதாயத்தின் உயரிய விருதின் பெயர் கொண்ட பதிவு வெளிவருகிறது... ;-)

RVS said...

@ரிஷபன்
நன்றி ரிஷபன் சார்! உங்களோட லவ்வர்ஸ் டே அமர்க்களம். ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
எனக்கும் க.ச தெரியாது. ஏதோ ரசிக்கிறேன். ரசித்ததை பகர்கிறேன் தலைநகரமே.. நன்றி. ;-)

RVS said...

@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன். வாஸ்த்தவம் தான்.. வலை பார்க்கலைன்னா கை கால்லாம் உதறுது.. நீங்க ஏதாவது இதுக்கு வைத்தியம் செஞ்சுக்குரீங்களா? ;-);-);-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
இன்ப வெள்ளத்தில் நீந்தியமைக்கு நன்றி. வாழ்த்துக்கும் நன்றி. ;-)

மோகன்ஜி said...

அன்பு ஆர்.வீ.எஸ்! அற்புதமான பதிவு. இணைத்த அத்துணை கிளிப்பிங்கும் அருமை. உங்கள் ரசனைக்கு ஒரு சலாம். மாதத்துக்கு ஒரு இசைப் பதிவாவது போடுங்க பாஸ்.
கும்மியடிச்சு நாளாச்சே! போட்ருவோமா?
சொன்னா சுக்லாம் பரதரம் கொட்டிடலாம்.

RVS said...

@மோகன்ஜி
மலைக்கு போயிட்டு தெம்பா வந்துருக்கீங்க.. இசை வாழ்த்துக்கு நன்றி...
விஷ்ணும்.. சசிவர்ணம்.. சதுர்புஜம்... ப்ரசன்னவதனம்.. த்யாயேது (மூக்கை பிடிச்சு ரெண்டு கையையும் மூடி தொடையில் வச்சாச்சு... ) ;-);-)

மாதேவி said...

ரசித்தேன்.

சமுத்ரா said...

great collections..thanks

RVS said...

@மாதேவி
ரசித்தமைக்கு நன்றி. ;-)

RVS said...

@Samudra

Thank you!! ;-)

குறையொன்றுமில்லை. said...

இவர்கள் எல்லாருமே பிறவி மேதைகள்தான். என்ன ஒரு இசை. நல்ல அனுபவம்

RVS said...

@Lakshmi
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்! அடிக்கடி இந்தப் பக்கம் உங்க காத்து வீசட்டும். நன்றி ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails