ஆபிஸில் கூடை கூடையாய் ஆணி அடித்தும் பிடிங்கிக் கொண்டும் இருப்பதால் தற்போதைக்கு பதிவு ஏதும் பதிய முடியவில்லை. கீழே புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் போல முயன்று பார்க்கிறேன் "வேலை" ஆவேனா என்கிறது. வேலையில் ஆணியா அல்லது ஆணியில் வேலையா என்று தெரியவில்லை. எனக்கு எதிரே மலை போல் ஆணி அதை இச்சிறுவன் எப்படி ரசிக்கிறான் பாருங்கள்.
பின் குறிப்பு: ஆணி இல்லாதவர்கள் இதைப் பார்த்து ரசித்ததற்கு நன்றி. இது ஒரு வயதுப் பையனின் யோகா என்று வைத்துக்கொள்ளலாம், வயது போன காலத்தில் இதுபோன்று யாரும் முயற்ச்சிக்க வேண்டாம் என்றும் பின் விளைவுகளுக்கு இந்த வலைப்பூ பொறுப்பல்ல என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். முயற்ச்சிக்காததற்க்கு நன்றி!!
ஆணி பிடுங்குவதை பொறுத்து மன்னார்குடி டேஸ் வழக்கம்போல் நாளை வெளிவரலாம்.
-
41 comments:
நன்றி சசிகுமார். ஸோ உங்களுக்கு ஆபிசில் ஆணி இல்லை என்று தெளிவாகிறது. ;-) ;-) சும்மா விளையாட்டுக்கு... நன்றி.
சூப்பர்!
//எனக்கு எதிரே மலை போல் ஆணி அதை இச்சிறுவன் எப்படி ரசிக்கிறான் பாருங்கள்.//
Aani ? what's that.. is that the one comes between 'Vaikaasi' & 'Aadi' ?
ஆமாங்க, இந்த ஆணி அப்படின்னா என்னங்க?
ஆணி இருந்தாலும், இல்லன்னாலும் பதிவிடும் தலைவர் ஆர்விஎஸ் வாழ்க !!!
ஆணி பத்தலைன்னா சொல்லுங்க, இங்கேயும் கூடை கூடையா இருக்கு, அனுப்பி வைக்கிறேன்...
வெங்கட்.
நன்றி எஸ்.கே ;)
நன்றி தலைவருக்கும் தலைவர் இளங்கோ அவர்களே ;-)
அது ரெண்டு சுழி ன இது மூணு சுழி ண மாதவா.. ஆணியில் மாடிகிட்டது இன்னிக்கி என்னோட சுழி ;-);-)
@வெங்கட் நாகராஜ்
ஐயோ இன்னும் ஆணியா? எஸ்கேப் ;-) ;-)
ஆஅணியே புடுங்க மாட்டேன் போங்கய்யா என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போய் சந்தோஷமா தூங்குங்க ஏன் இந்த கஷ்டம் ப்ரோ
ஆபீசல் தான் ஆணி புடுங்கணும் சரி. வீட்ல ? பொட்டிதானே தட்டியாகனும்.டீ.விய கட்டிட்டு அழும் நபரும் இல்லை.
அப்புறம் என்ன அம்பி? எழுதுங்க. இல்லேன்னா கூட்டம் கானாபோயிடும் ஆமா!
ஆணினா என்ன?
ஆணியோ என்னவோ... ஒரு வருசத்துக்குள்ள 207 பதிவு அடிச்சிருக்கீங்க... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அடிங்க, பரவாயில்லை.
அப்புறம் பூவாவுக்கு என்ன பண்றது காயத்ரி. ;-) முடிஞ்ச வரைக்கும் ஆணி புடிங்கிட்டு இலக்கிய பணி ஆற்றவேண்டியது தான். ;-) ;-)
@கக்கு
தங்கள் உத்தரவு பிரபோ! அப்படியே ஆகட்டும். ;-) ;-)
அப்பாஜி! வேலை பார்க்கரதை ஆணி புடுங்குதல் என்று நல்ல தமிழ் சொற்களால் அழைப்போம். தமிழ் சுத்தமாக தெரிந்திருக்கவேண்டும் ஜி ;-) ;-)
பல இரவுகள் கண் முழித்து அடித்தது அந்த 207ம்..... அப்பாஜி ;-) ;-)
dear rvs
first choice is work and work only
apramthan ilakkiyapani
balu vellore
ஸ்மைலிக்கு பதில் ஸ்மைலி புடிங்க சித்ரா ;-)
@balutanjore
செய்யும் "தொழிலே" தெய்வம். ;-) ;-)
சேம் ஆணி! சேம் பிளட் !!
@மோகன்ஜி
ஜி .. நம்ம எல்லோருக்கும் ஆணி அடிச்சசுன்னா பதிவுலகில் இலக்கியப் பணி ஆற்றுவது யார்? ;-) ;-)
இன்னிக்கி சிவராத்திரியா முழிச்சிருந்து நாளைக்கு திரும்பவும் மன்னார்குடி டேஸ் விட வேண்டியதுதான். வேற வழியே இல்லை. ;-)
சூப்பர்...
எங்களுக்கும் ஆணி தான் ஆனா சமாளிக்கிரோமில்ல....
எங்களுக்கும் ஆணி தான் ஆனா சமாளிக்கிரோமில்ல....
//இது ஒரு வயதுப் பையனின் யோகா என்று வைத்துக்கொள்ளலாம், வயது போன காலத்தில் இதுபோன்று யாரும் முயற்ச்சிக்க வேண்டாம்//
இந்த சுட்டி பயல் போல் பண்ண, தலையையே தனியே பிச்சி வைச்சாத்தான் நமக்கு முடியும் சாமியோ !!
இப்படி குழந்தை குனிந்து "கொட்டையை" பார்த்தால் தம்பியோ / தங்கையோ பிறப்பார்கள் என்று ஐதீகம் (என் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள் - இப்படித்தான் எங்கள் வீட்டில் நாங்கள் ஐவரோ என்று எனக்கு சந்தேகம் வரும் !! நல்ல வேலை என் கடைசி தம்பி நிறுத்திக்கொண்டான் !!). அப்படி தன் பெரிய பிள்ளை பார்க்கிறான் என்று சொல்லியே "செய்வன திருந்த செய்து" எனக்கு மூத்தவன் போன வருடம் இரண்டாவது குழந்தை பெற்றான் !! (எனக்கே 44 வயது !!). பலே பலே !!
என் தந்தை வழி தாத்தாவுக்கு பத்து குழந்தைகள் !! அதுவும் அழகாக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் போதிய இடைவெளி விட்டு. கடைசி சித்தப்பா பிறக்கும்போது என் தாத்தா ஓய்வே பெற்றாகி விட்டது !! இப்படி தான் குனிந்து குனிந்து என் பெரியாப்பாக்களும், அத்தைகளும், சித்தாப்பாக்களும் பார்த்தார்களோ என்னவோ !! நல்ல வேலை கடைசி சித்தப்பா அதற்கு மேல் அப்பா / அப்பாவுக்கு "இதற்கும்" ஓய்வு வேண்டும் என்று விட்டுவிட்டார் போலும் !! என் தாத்தா பள்ளி வாத்தியார் (St. Xavier's ஸ்கூல், பாளையம்கோட்டை, திருநெல்வேலி), அதனால் நான் அடிக்கடி சொல்லுவேன் - "தாத்தா வேறே என்ன பண்ணுவார் பாவம் - அந்தக்காலத்தில் என்ன பொழுதுப்போக்கு, "Quarterly leave, Half Yearly leave, annual leave, அது போக பண்டிகை விடுமுறை போத குறைக்கு "ஆப்-பீரியட்" வேறு !!!. என் அலுவலக நண்பன் அம்மாவுக்கும் அவர்கள் கூட 13 siblings !! நான் உடனே அடித்து சொன்னேன் " உங்கள் அப்பா டீச்சர் தானே என்று" - அதே போல் அது உண்மையாக இருந்தது !!
என் தாத்தா தாமிரபரணி ஆற்றில் குளிக்க இறங்கினால் குளித்துககொண்டு இருக்கும் பெண்கள் "ஐயோ கிருஷ்ணசுவாமி ஆத்தில் இறங்கறார்" என்று அலறி அடித்து ஓடுவார்கள் என்று நாங்கள் கிண்டல் செய்வோம் !!
வேடிக்கையை பாருங்க...சில பதிவுகளுக்கு முன்பு எனது நண்பண் மன்னார்குடி மாளவனை பற்றி கேட்டேன் அவனை இன்று எனது கம்பெனியிலேயே ஒரு மீட்டிங்கில் பார்த்தேன்.Just for info.
இன்று கொஞ்சம் ஆணி அதிகம் தான்.
@வெறும்பய
ஆணி சமாளிக்கும் வெ.ப அன்பருக்கு....
எனக்கும் அது எப்படி என்று சொல்லித்தருவீர்களா?
முதல் வருகைக்கு நன்றி. அடிக்கடி வந்து இதுபோல் சில ட்ரிக் சொல்லித்தரவும். ;-) ;-);-)
@சாய்
இந்த தடவை ரொம்ப சின்னதா பதிவை முடிச்சுட்டோமே நினச்சேன். அந்த குறை நிவர்த்தி பண்ணியதற்கு நன்றி சாய்.
மடை திறந்த வெள்ளம் போல் ஹிலாரியஸ் சாய்.. நினைச்சு நினைச்சு சிரிச்சேன். ;-) ;-)
@வடுவூர் குமார்
//சில பதிவுகளுக்கு முன்பு எனது நண்பண் மன்னார்குடி மாளவனை பற்றி கேட்டேன் அவனை இன்று எனது கம்பெனியிலேயே ஒரு மீட்டிங்கில் பார்த்தேன்.//
இதைப் போய் வெளியில சொல்லுங்க. நாம ஏதாவது நினைச்சுக்கிட்டு ஆர்.வி.எஸ். ப்ளோக்ல போட்டா கட்டாயம் ரெண்டு நாளைக்குள்ள அது நடக்கும்ன்னு. ராசியான ப்ளாக்ன்னு நந்தி காதுல சொல்ற மாதிரி எல்லோரும் இங்க வந்து கமென்ட்டுவாங்க... ;-) ;-)
@அமுதா கிருஷ்ணா
வணக்கம். ரசித்ததற்கு நன்றி. இன்னும் பல வேடிக்கைகள் இருக்கும். ;-) ;-)
பார்த்து பார்த்து ஆணி அடிக்கிறாங்கன்னு உங்க கையில அடிச்சுடப் போறாங்க.. எங்களுக்கு ஆணி அடிச்ச மாதிரி பதிவுகள் கிடைக்காமல் போயிடப் போகுது.. ஆணியல்லாம் புடிங்கனதுக்கப்பரம் மேடு பள்ளத்தை உங்க பதிவைப் பூசி சரி செஞ்சுடுங்க RVS..
//RVS said...@சாய் இந்த தடவை ரொம்ப சின்னதா பதிவை முடிச்சுட்டோமே நினச்சேன். அந்த குறை நிவர்த்தி பண்ணியதற்கு நன்றி சாய். மடை திறந்த வெள்ளம் போல் ஹிலாரியஸ் சாய்.. நினைச்சு நினைச்சு சிரிச்சேன். ;-) ;-)//
எங்கள் குடும்பத்தின் கிளாசிக் ஜோக்ஸ் எடுத்துவிட்டால் சிரித்துக்கொண்டே இருக்கலாம். என் முதல் அல்லது பெரிய பெரியப்பா இப்போது 89 வயது. அவரிடம் இருக்கும் ஜோக்ஸ் கலக்ஷன் உட்கார்ந்து டைப் செய்யவேண்டும்.
சொல்ல மறந்துவிட்டனே - எல்லாம் செய்த என் தாத்தா 92 வருடங்கள் வாழ்ந்தார்.
கட்டாயமா ஆதிரா ;-)
@சாய்
ஜஸ்ட் 8 ரன்னுல செஞ்சுரி மிஸ்ஸு ;-)
சீக்கிரம் ஆணிகளை முடித்து விட்டு வாங்க.
@சை.கொ.ப
முடிஞ்ச வரைக்கும் வேகமா பிடிங்கிட்டு வரேன்
எனக்கு என்னவோ உங்களுக்கு ஆபீஸ் இருகுதுனே தோணல
dear rvs
inda TAMRABARANIyum puhundu vilaiyaduthe.
ellam THANNIyaledan(kaveri thanni t parani thanni).
balu vellore
எவ்வளவு ஆணி பிரச்சினையிலும் அசராமல் நம்மை மகிழ்வித்து வரும் ஆர்.வி.எஸ் வாழ்க..
சாய் அவர்கள் சித்தாந்தம் வெகு வேடிக்கை ... கு.க அதிகாரிகள் கவனிக்க வேண்டிய ஒன்று...குழந்தைகளை குமிய விடக்கூடாது போலிருக்கே....
@மனசாட்சியே நண்பன்
கரெக்ட்டு நீங்க சொல்றது. ஆபிஸ் எனக்கு மட்டும் இல்லை. எல்லோருக்கும் இருக்கு. நன்றி. (ச்சும்மா... லுளுலாய்க்கு....) ;-) ;-)
@balutanjore
அண்ணே... இந்தக் கமெண்டு புரியலையே... வேற பதிவுக்கு போட்டதா? ;-)
@பத்மநாபன்
சாய் அடிச்ச ரகளை தான் இந்த பதிவுக்கு மணிமகுடம். அண்ணே சிரிப்புவெடி வெடிச்சு தீபாவளியை இப்பவே ஆரம்பிச்சுட்டார். ;-)
Post a Comment