Monday, October 11, 2010

உரச... உரச...


urasa urasaமெயின் ரோடுக்கு வந்ததிலிருந்தே அந்த அன்பர் பின்னால் உறுமிக்கொண்டே வந்தார். இடதும் வலதுமாய் அவரது வண்டி அலைபாய்ந்தது. பில்லியனில் பல்லி போல முதுகோடு ஓட்டிக்கொண்டு ஒரு பச்சை சட்டை இளம் பெண் வேறு. ஆளும் வெடவெட வென்று பல்லி போலத்தான் இருந்தது. அவர் நடு ரோடில் பிரேக் டான்ஸ் அடித்து ஒட்டும் போது அந்த வாலிபரின் முதுக்கு மேலே அரை அடி போய் போய் திரும்பவும் பின் சீட்டில் லேன்ட் ஆனாள் அந்தப் பெண். கருப்பு ஹெல்மெட் போட்டு அதில் பின்பக்கம் மண்டை ஓடு போட்டிருந்தார். கோஸ்ட் ரைடர். அரை மணி அந்த வண்டியில் போனால் இடுப்பு இந்தப் பக்கம் கழண்டு வந்து விழுந்துவிடும் போலிருந்தது. வேகமாக போவது மட்டுமன்றி ஒரே பேய் ஆட்டம் வேறு நடுரோட்டில். 


ஃபளைஓவர் ஏறி இறங்கியதும் ஒரு சிக்னல். சற்று நேரம் ஆட்டத்திற்கு ஒய்வு கிடைத்தது அந்த அன்பருக்கும் அப்பெண்ணிர்க்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டார்கள். அவரை விட மெதுவாக வந்த நானும் இப்போது அதே சிக்னலில். பக்கத்தில் வீட்டம்மணி இருந்தாலும் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெதுவாக அந்தப் பெண்ணை எட்டிப் பார்த்தேன். ஒரு கருப்பு துணியால் முகத்தை முழுக்க மறைத்து ஒரு தீவிரவாதி போல இருந்தாள். முழுக்க நனைந்தப்புறம் முக்காடு எதற்கு? நன்றாக இப்படியும் அப்படியும் அசைந்து உட்கார்ந்து ஒரு இம்மியளவு கூட இருவருக்கும் இடையில் இடம் இல்லாமல் பார்த்துக்கொண்டாள். ஒரு காற்றுப்புகா தடுப்பை உருவாக்கினாள். அடுத்த கட்ட ஆட்டலுக்கு தயாரானாள். சிக்னல் விட்டவுடன் மறுபடியும் வண்டி சீறியது. வலது கோடிக்கும் இடது கோடிக்கும் ரோடை அளந்தது. ஒரு ஆட்டோக்காரர், ஒரு எல் போர்டு ஸ்கூட்டி, ஒரு தண்ணீர் வான் மூன்றையும் ஒருமுறை கை அழுந்த கால் அழுந்த முழு பிரேக் அழுத்த வைத்தார் நம்ம மரணக் கிணறு ஹீரோ.


மீண்டும் சிக்னல். நாமும் மீண்டும் எட்டிப் பிடித்தோம். அந்தப்புறமும் இந்தப்புறமும் ஒரு ரோபோ போல ஹெல்மெட் திரும்பியது. பின்னால் பச்சை சட்டை தேமேன்னு "பச்சக்கென்று" ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. இவ்விருவரையும் ஃபெவிகால் விளம்பரம் எடுப்போர் பார்த்தால் நிச்சயம் உபயோகித்துக் கொள்வார்கள். சற்று முன் பிரேக் அடித்த ஆட்டோக்காரர் பக்கத்தில் சென்று சென்னை பாணியில் கையை தூக்கி ஏதோ சொன்னார். எதையுமே சட்டை செய்யாமல் "டர்..டர்.." என்ற சத்தத்துடன் ஆக்ஸிலேட்டரை திருகி மீண்டும் முன் வீல் தூக்கி கிளப்பி பயணிக்க ஆரம்பித்தது. இன்னமும் சிக்னல் ரெட் காட்டிக்கொண்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் எல்லோருக்கும் பச்சை காட்டியது சிக்னல். துரத்தாமல் மிதமான வேகத்தில் வண்டி ஓட்டி போய் பிடித்தால் அடுத்த சிக்னலில் பாயக் காத்திருக்கும் கருப்பு புலி போல "டர்...டர்..." என்று உறுமி நின்றுகொண்டிருந்தது அந்த பல்சர். 


மீண்டும் மீண்டும் சிக்னல் ரேஸ் சிக்னல் ரேஸ் என்று தட்டி விளையாடிக்கொண்டிருந்தது அந்த பல்சர். அரை இன்ச் ஒரு இன்ச் இடைவெளியில் எல்லா வண்டியையும் முத்தம் கொடுக்கலாமா வேண்டாமா என்று உரசி உரசி ஓட்டிக்கொண்டு போன அந்த பந்தய அன்பர் கண்டதெல்லாம் ஒன்றுமில்லை. எப்படி ஓட்டினாலும் நாற்பதில் நாலு சக்கரத்தில் பின்னால் வந்த நானும் ஒவ்வொரு சிக்னலில் அவரோடு காத்திருக்க நேரிட்டது. இப்படி பைக்கோமேனியா பித்து பிடித்து சீன் போட்டு வண்டி ஓட்டும் ரகஸியம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். ஒருக்கால் பில்லியனில் பயணித்த அந்த பல்லிக்கு தெரிந்திருக்குமோ? யார் கண்டார்?


பின் குறிப்புப் பாடல்: இதுக்கெல்லாம் இவர் காரணமா இருக்குமோ? இல்லை ஒட்ரவங்களுக்கு இவர்ன்னு நினைப்பா?

இவங்களுக்கு எதிர் பாடல்: 
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசர வரையில... அப்படின்னு தல மாதிரி இந்த ஆளுங்களைப் பார்த்து பாட வேண்டியதுதான். ஆனா பாடகர்களின் 'தல' நம்ம எஸ்.பி.பி சும்மா பூந்து விளையாடியிருக்கும் இந்தப் பாட்டுல.. போதாததுக்கு தல கூட நடுப்பர தள தளன்னு நக்மா வேற கிளு கிளுன்னு ...
ஏம்பா... "உரச... உரச..." உன் கூட யாராவது வண்டி ஒட்டிக்கிட்டு வந்தா ஒரு பதிவு போடுவியா.. சே சுத்த மோசம். (அப்பா.. டைட்டில் வந்திருச்சு..முடிச்சுப்போம்)

பட உதவி: philip9876.com
--

67 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல "கவனிப்பு"

RVS said...

நல்ல "கமெண்டு" சை.கொ.ப. ;-)

இளங்கோ said...

// ஒருக்கால் பில்லியனில் பயணித்த அந்த பல்லிக்கு தெரிந்திருக்குமோ? //
Maybe :) .

RVS said...

கேட்ட கேள்விக்கு "மே பி" அப்படின்னு பதிலளித்த இளங்கோவிற்கு ஒரு "ஜே" போடுங்கப்பா... ;-)

Anonymous said...

அந்த பொண்ண பத்தி என்னா விவரிப்பு ;)..
நீங்க ரோட பார்த்து வண்டி ஓட்டலனு நல்லா தெரியுது அண்ணே! ஹி ஹி..

RVS said...

சாலையைப் பார்... சேலையை பார்க்காதே... அப்படின்னு விளம்பரம் போட்டவங்க... சுடிதாரையோ பேன்ட்டையோ பார்க்காதே அப்படின்னு விளம்பரப்படுத்தலையே பாலா... ரூல்ஸை மதிக்கறவன் நான்.. என்ன செய்வேன்.... ஹி ஹி.... ;);-)

எஸ்.கே said...

பைக்கோமேனியா நிறையபேர் கிட்ட இருக்கு! விபத்து நேரும்னு கூட நினைச்சு பார்க்க மாட்டேங்கிறாங்க! பாக்கிற நமக்கே பயமா இருக்கும்!

RVS said...

ஒரு அழகிய விபத்து பின்னால இருக்கும் போது அவசர விபத்தைப் பற்றிய பயம் இருக்காதோ எஸ்.கே!!! ;-)

அன்புடன் மலிக்கா said...

//நீங்க ரோட பார்த்து வண்டி ஓட்டலனு நல்லா தெரியுது அண்ணே.//

அதானே. நல்ல கவனிச்சி வண்டி ஓட்டியிருக்கீங்க..

RVS said...

உருப்படியா(?!) ஒரு வேலை செஞ்சிருக்கேன்... உடமாட்டேங்கிறீங்களே அன்புடன் மலிக்கா. புரட்டி புரட்டி அந்த பாய்ண்ட்லையே அடிக்கிறீங்களே... ;-)

ஹேமா said...

ஆர்.வி.எஸ் பத்திரமா இருந்துகோங்க !

RVS said...

சரிங்க ஹேமக்காவ்....... ;-) ;)

Madhavan Srinivasagopalan said...

அந்த பைக்கரும் பிளாக்கு எழுதினா..
கண்டிப்பாக கீழ்கண்ட வரிகள் வரக்கூடும்..
********************
'சாலைல நா என்னோட பல்சாருல போகச்சே.. ஒரு ஆளு, நாலு காலு சக்கர வாகனத்துல பின்னாலேயே வந்து-வந்து.. மொறைச்சு-மொறைச்சு .... வெறுப்பேத்தினாம் பாரு.. தாங்கலைடா சாமி..."
*******************
சும்மா. தமாசுக்குதான்

RVS said...

மாதவா... நல்ல தமாசு.... ;-) ;-)

முத்து said...

பக்கத்தில் வீட்டம்மணி இருந்தாலும் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெதுவாக அந்தப் பெண்ணை எட்டிப் பார்த்தேன். //////////////////


இருந்தாலும் உங்களுக்கு ஓவர் தையிரியம் தான்

RVS said...

முத்து... அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... ஹி ஹி... இது சொல்லும் போது பக்கத்தில் வீட்டம்மணி இல்லை.. ;-);-)

முத்து said...

முத்து... அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... ஹி ஹி... இது சொல்லும் போது பக்கத்தில் வீட்டம்மணி இல்லை.. ;-);-) ///////


அத நீங்க சொல்லி தான் தெரியனுமா இருந்து இருந்தால் என்ன பாட்டு பாடி இருப்பீங்க
விடுகதையா வாழ்கை விடை தெரிமோ......
அப்படி இல்ல பாடி இருப்பீங்க

RVS said...

முத்து புரிஞ்சு போச்சு.. ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க... ஆள பலி வாங்காம விடமாட்டீங்க போலிருக்கு... நா ஜகா வாங்கிக்கறேன்.. விடு ஜூட் அப்பீட்டு... ;-)

முத்து said...

யாருப்பா அங்கே ஆள் தப்பிச்சு ஓடுவதற்குள் கேட்டை இழுத்து மூடுங்கப்பா

RVS said...

இல்ல.. இல்ல... உட்ருங்க... முத்து நீங்கள் எங்கள் சொத்து... ஆளை ஏவி விடாதப்பு... கண்ணுல்ல ... ராஜால்ல .. செல்லம்ல.... ;-) ;-)

அப்பாதுரை said...

அப்படி இப்படி சுத்தி விசயத்துக்கு வந்துட்டீங்க.. நீங்க எழுதியிருக்குறதைப் படிக்கும் பொழுது உங்க பின்னால பச்சை சட்டை இல்லையேனு ஆதங்கம் பட்டது போல தெரியுதோ... சே சே இருக்காது.

Chitra said...

எங்கே டைட்டில் வராம போயிடுமோனு நினைச்சேன்.... ஹா,ஹா,ஹா,ஹா....

RVS said...

கண்ணு முன்னாடி நடந்ததை உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கேன் அப்பாஜி... கொஞ்சம் கூட மசாலா சேர்க்கலை... அந்த மாதிரி சகவாசம் நமக்கு ஒத்துக்காது. அலர்ஜி.

RVS said...

ஒரு வழியா டைட்டில் வந்துதுன்னு சிரிப்பா சித்ரா!!! ;--)

முத்து said...

அப்பாதுரை said...

அப்படி இப்படி சுத்தி விசயத்துக்கு வந்துட்டீங்க.. நீங்க எழுதியிருக்குறதைப் படிக்கும் பொழுது உங்க பின்னால பச்சை சட்டை இல்லையேனு ஆதங்கம் பட்டது போல தெரியுதோ... சே சே இருக்காது.////பப்ளிக்கில் இப்படியா உண்மையை சொல்லுறது பாருங்க எப்படி அழுவுராருன்னு

RVS said...

ஒரு பச்சப் புள்ளைய போட்டு வீதியில புரட்டி புரட்டி அடிக்குறீங்களே... உங்களுக்கெல்லாம் மனசாச்சியே இல்லையா..... போதுமடா சாமி...

மோகன்ஜி said...

'பச்சக்'பார்ட்டியும் , சடன்பிரேக் ஏகாம்பரமும் ஈஷிண்டு போனதை மசாலா சேர்க்காமல் அசால்டாய் எழுதிய ஆர்.வீ.எஸ்! நல்லாத்தான் பாத்திருக்கீக!
எல்லாம் கலி! பகவானே!!

முத்து said...

RVS said...

ஒரு பச்சப் புள்ளைய போட்டு வீதியில புரட்டி புரட்டி அடிக்குறீங்களே... உங்களுக்கெல்லாம் மனசாச்சியே இல்லையா..... போதுமடா சாமி...//////////இதோ பாருங்கப்பா இனி மேல் அவரை எதுவும் சொல்ல வேண்டாம்.RVS கவலை படாதீங்க பச்சை இல்லைன்னா என்ன அடுத்த தடவை சிகப்போ,ப்ளுவோ கிடைக்காமலா போக போகுது

RVS said...

ஈஷிண்டா.. ஈஷோ ஈஷு... ஈஸ்வரோ ரக்ஷித்து... மோகன்ஜி

RVS said...

தேங்க்ஸ் முத்து... கமென்டிய எல்லோருக்கும் நன்றி.. (அப்பாடி நன்றி கார்டு போட்டாச்சு.. எஸ்கேப்.......)

பொன் மாலை பொழுது said...

அய்ய !..... இத்தோடா..!!.......பச்ச கொயந்த ..!!!............இந்த புள்ளக்கி ஒண்ணுமே தெர்ல.
இன்னா கண்ணு? நொம்பதாம் பிளிம்மு காட்டிகினுகீர?
இன்னாத்துக்கு நீயி அந்த ...அத்து இன்னா ??....பல்லியோ ...பாம்போ....அத்த லுக்கு வுட்டுகினு
வர்ற ? வூட்டுகார அம்மாவுக்கு தெர்ஞ்சா நீயி பணால் தான் .ஆக்காங் !!!!

அப்பாதுரை said...

அப்படிப் போடுங்க முத்து. கவலைப்படாதீங்க RVS. "அடுத்த தடவை சிகப்போ,ப்ளுவோ கிடைக்காமலா போக போகுது?"

வானவில்லுக்கு எட்டு கலர்னு வேறே ஒரு மகான் சொல்லியிருக்காரு.. அதிலிருந்து ஒரு கலர் கிடைச்சாலும் கிடைக்கும் (கலர்னா வண்ணத்தை சொல்றேனுங்க.. நீங்க எதுனா பிகர்னு சொல்றதாவா நெனச்சீங்க? இல்லிங்க... உங்களுக்குத் தான் அலர்ஜினு சொல்லிட்டெங்களே)

அப்பாதுரை said...

கோஸ்ட் ரைடர்.
one of the most stylish movies in recent past. தமிழ்ல சங்கர் இன்னும் இதைக் காப்பியடிக்கலியே? அடுத்த சூபர் ஸ்டார் ப்ராஜக்டோ?

பத்மநாபன் said...

நன்றி கார்டு போட்டாலும் விட்ருவோமா நாங்க.....

மசாலா இல்லாமா ஆர்.வி.எஸ் படமெடுப்பாரா..கூடவே ரெண்டு பொருத்தமான பாட்டும் இருக்கணும்...

சீக்கிரம் நாலு காலுக்கு தாவீட்டோமோன்னு வருத்தம் தெரியுது.... பச்ச புள்ளை ..அது தான் பச்சை மேலயே கண்ணு...

RVS said...

சரியாச் சொன்னீங்க அப்பாஜி... வலையடிமை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மோகன்ஜி ஸ்வாமிகள் எட்டு கலர் பத்தி சொன்னதை சொல்றீங்களா.. ஏற்கனவே அவரும் பாலைவன பாபாவும் ஒரு "கூட்டு" முயற்சியா பல நாடுகளில் பக்தைகளுக்கு "மோகா" சீ....சீ.... "யோகா" சொல்லிக்கொடுக்கறாங்க... அவருக்கு தான் கலர் பத்தி நல்லாத் தெரியும்.

RVS said...

கக்கு.. உக்கும்.. ரொம்ப தான் மிரட்டாதப்பு... பாலைவனத்தில் "சேலை"களாக நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியாதா. ரொம்பவும் நக்கல் அடித்தால் அது பற்றி ஒரு சிறப்பு பதிவு போடப்படும். ஜாக்கிரதை! (அப்பாடி வில்லனை மிரட்டியாச்சு... )

RVS said...

சூப்பர் ஸ்டார் நடித்தால் அது காட்ஸ் ரைடர் (GOD'S RAIDER) அல்லது சூப்பர் ரைடர் அப்பாஜி!. இந்த முறை வாய்ப்பு கே.எஸ்.ரவிக்குமாருக்கு...

RVS said...

பத்துஜி ஒரு பச்சப் புள்ளைன்னு கூட பார்க்காம என்னையப் போட்டு இந்தக் காய்ச்சு காச்சரீங்களே.. இது நியாயமா... (என்னப்பா... சகல விதமாகவும் கேட்டாச்சு... வுட மாட்டாங்க போலிருக்கே.... இசகுபிசகா மாட்டிக்கிட்டோமோ... திக்கற்றவர்க்கு தெய்வமே கதி.... நிலைமை இப்படி இருக்கும்போது வலையடிமை ஸ்வாமிகளை முறைச்சிருக்க வேண்டாம்... அவரானும் ஏதாவது மேஜிக் செய்து காப்பாத்திருப்பார்... ஹும்.... விதி வலியது...)

முத்து said...

ஏன் சார் நன்றி கார்டு போட்டுட்டு பச்சை தான் எனக்கு புடிச்ச கலருன்னு பாட்டு பாட போறீங்களா

RVS said...

ரெண்டு கையை தூக்கிட்டு நின்னாலும் வந்து குத்தராங்கப்பா... நாட்ல அராஜகம் தலை தூக்கிடிச்சு... ஓட ஓட விரட்றாங்களே... முத்து நீங்க முத்துவா முரடன் முத்துவா... ;-) ;-)

அப்பாதுரை said...

கையத்தூக்கிட்டு பச்சைக்கிளி முத்துசரம்னு பாடுறீங்கனு நெனச்சுட்டோம்... அதான்.

முத்து said...

RVS said...

ரெண்டு கையை தூக்கிட்டு நின்னாலும் வந்து குத்தராங்கப்பா... நாட்ல அராஜகம் தலை தூக்கிடிச்சு... ஓட ஓட விரட்றாங்களே... முத்து நீங்க முத்துவா முரடன் முத்துவா... ;;-)//////////////
நான் அப்பவே நினைச்சேன் நீங்க எதிர் கட்சி ஆளா,அதான் நாட்ல அராஜகம் தலை தூக்கிடிச்சு அப்படின்னு சொல்லுறீங்க.எங்கள் பாசத் தலைவனின் ஆட்சியை குறை கூறிய குற்றத்திற்கு தானை தலைவனின் அழியா காவியமான பெண் சிங்கம் படத்தை நூறு முறை பார்க்க வேண்டும்

RVS said...

அப்பாஜி இல்ல...இல்ல .இல்ல ... இல்ல இல்ல to the power of infinity.

RVS said...

முத்து என்னை அரசியலுக்கு இழுக்குறீங்களா... நா வரவேண்டிய டயத்துக்கு கரெக்டா வருவேன்... இப்ப இல்ல.....

மோகன்ஜி said...

ஒரு பொட்டி ஆணியைப் புடிங்கிட்டு வர்றதுக்குள்ள என்னா கலாட்டா?
நான் பாட்டுக்கும் சிவனேன்னு வானவில் மேல பைனாக்குலர்ல பாத்துக்கிட்டு தானே குந்தியிருந்தேன்..
அப்பாஜி 'எட்டு'ன்னு பைனாக்குலரை, தட்டி இல்ல விட்டுட்டாரு?
என்னா டபுள் மீனிங்கு? ஒரு சாமியார் காதுல படும் படி! நாடு ரொம்பத்தான் கேட்டுப் போச்சு ?
பா.பாபா! நல்ல வேளை! கருப்பு ஹெல்மெட் போட்டிருந்தேனோ பொழச்சேன் !

RVS said...

அப்ப நீங்கதான் அந்த புல்லட் சாமியா.... மகா ஜனங்களே பார்த்துக்கோங்க... அந்தப் பச்சை சட்டையை பத்திக்கிட்டு போனது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வலையடிமை ஸ்வாமிகள் தானாம். அவரே கன்ஃபெஷன் கொடுத்துருக்காரு... மேலே பாருங்கோ..... (அப்பா நான் தப்பிச்சுட்டேன்...)

மோகன்ஜி said...

அப்பனே! ஆண்டவன் படைத்த எல்லா உயிர்களிடத்தும் யாம் உறைகிறோம் ! அதைத்தான் நான் சொல்ல வந்தது. மற்ற விவரங்கள் வேண்டுமென்றால் நீங்கள் என் வழக்குரைஞர் திரு.பா.பாபா வரும் வரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்..
//அந்தப் பச்சை சட்டையை பத்திக்கிட்டு போனது//

அந்த பச்சை சட்டை என் மேல்'பத்தி' (தீந்தமிழில் பக்தி என் அறிக!)கொண்டதால் யாம் ஆட்கொண்டோம்! மேலே... எதுக்கும் எமது..பா.பாபா வந்து விடட்டும்.. கேட்டை இழுத்து மூடுங்கள் அன்பர்களே..

RVS said...

எங்கப்பா அந்த பா.பாபா. சாமியாருக்கு வழக்குரைஞர் இல்லாமல் பேச வராதாம். பேச வராதா இல்லை பேசக் கூடாதான்னு தெரியலை. தொழிலுக்கு நல்லாத்தேன் நாலு லாங்குவேஜ் தெரிஞ்சுதான் வச்சுருக்காங்க கப்பு..
"பத்தியால் யான் உனை பலகாலம்.. " அப்படின்னு அறுபடை திருப்புகழ் வரிசையில நாங்களும் கேட்ருக்கோம்.
எல்லா பத்தியும் பச்சை சட்டை உங்க மேல வச்ச பத்தி மாதிரி ஆகுமா. பார்த்து பேசுங்க.. பச்சையோட ஆளுவந்து... ஏதாவது ஏடாகூடமா ஆயி.. எல்லா பத்திரிக்கைளும் உங்களை பத்தி "பத்தி பத்தியா" எழுதி வீட்ல வத்தி வச்சுரப் போறாங்க..
பத்த வச்சிட்டியே பரட்டை..... பத்து எங்க பரட்டை...........

அப்பாதுரை said...

ஜீவாத்மா பரமாத்மா வகை அத்வைத தத்துவங்களை எடுத்துச் சொல்றாரு மகான்.. அதைப் புரிஞ்சுக்காம நாம பச்சை சட்டைனு என்னவோ ஜொள் சமாசாரம் சொல்லிட்டிருக்கமே... அடடா..

பத்மநாபன் said...

மஹா கணம் பொருந்திய வலைமாமணி வலையடிமை ஸ்வாமிகள் , எந்த சூழலிலும் பத்திக்கிட்டு செல்லுபவர் அல்ல ..பத்தப்படுவாரே ஒழிய பத்திக்கிட்டு செல்லவே மாட்டார் ..இரு கண்ணாலும் பார்த்த ஜொக்கிரரே யார் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்? யார் பற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்? சரியாக பார்த்தீரோ இல்லை ஒரு ஸ்கூட்டீயை பார்த்தவுடன் பச்சையை விட்டு கலர் தாவிவிட்டீர்களோ

( குரு வலையப்பரே, இந்த சீடனுக்கு காணிக்கை சதவீதத்தைஉயர்த்துவீர்கள் என நம்புகிறேன்..வெங்கல ஜால்ரா அடித்து கை வேறு சுளிக்கிவிட்டது )

பத்மநாபன் said...

யானைக்கதை மாதிரி, கமெண்ட் கிராஸ் ஆயிருச்சு...

ஆனா என்ன? ஐம்பத எட்டியாச்சுல்ல.....

RVS said...

அப்பாதுரை சார்! நம்ம மகானுக்கு அணிமா, மஹிமா மாதிரி அஷ்ட மகா சித்திகளுக்கு ஒரு படி மேலே போய் நவ மஹா சித்தியான "க(ன்)னிமா" என்ற சித்தி கைவரப் பெற்றவர். இவர் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் க(ன்)னிகளுக்கு பத்தி பிச்சிகிட்டு கொட்டுமாம். அவர்தான் தன்னோட ஒரு அருளுரைல சொல்லியிருக்கார்.

RVS said...

பாலைவன பல்கலையில் சட்டம் படித்த சட்டநாத பத்மனாபரே,
பற்றில்லிலாமல் பற்றிக்கொண்டு இருப்பேன் என்று சொன்ன உமது கட்சிக்காரர் வலையடிமையிடம் போய் கேளும்.
"நானே கருப்பு ஹெல்மெட்டுடன் வந்தது.. எமது திருவிளையாடல்களுள் இதுவும் ஒன்று" என்ற ரேஞ்சுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர் அவரே.
ஜால்ரா தட்டுங்கள் திறக்கப்படும் என்று ஒருபோதும் நம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வலையடிமை சொல்லியிருக்கவே மாட்டார். கைக்கு ஒய்வு கொடுங்கள். தட்டியது போதும். அந்த கஜானா ஒரு போதும் திறக்காது? ஏன்னா அவருடைய காதுக்கு இனிஷியல் கே.

RVS said...

பத்து சார்! கமெண்ட்டு கணக்கைச் சொன்னீங்களா அல்லது உங்க வயசையா?

பத்மநாபன் said...

வலையப்பர் வளைந்து வந்ததைத்தான் சொன்னார் ..சிஷ்யகோடிகளும் ஒத்துக்கொள்கிறோம்..வளைத்தது யார் என்பது தான் கேள்வி...

சிஷ்யர்களுக்கு வளைந்து கொடுப்பதில் வலையப்பர் வல்லவர் என்பதை ஒரு தடவை தீட்சை எடுத்து தெரிந்துகொள்ளுங்கள்...என்ன பிரச்சினை யென்றால் ஒரு தடவை ஆசிரமத்திற்க்குள் நுழைந்து விட்டால் உங்களை வெளியேற்றுவது வெகு கஷ்டம்..அவ்வளவு ஜொக்கி விடுவீர்கள்....

வயசா...எங்க தாத்தாவிற்கே அவ்வளவாகவில்லை....

RVS said...

என்ன பத்து சார்! இந்தாங்க பிடிங்க... உங்களுக்கு ஒரு அரை டஜன் கேள்வி.

ஆணி அவ்வளவும் பிடிங்கியாயிற்றா?
இப்போது முழு நேர ஆசிரமப் பணியில் ஈடுபட்டிருக்கீர்களா?
வெங்கல ஜால்ரா அடித்து வலி கண்ட கையில் ஆசிரமத்தில் எந்த கிளி தைலம் தேச்சு விட்டது?
உங்கள் வலையடிமை ஆசிரமத்தில் நீங்கள் தான் "மோகா" கோச்சா?
மோகத்தில் (யோகத்தில் போல ) ஜொக்கி போய் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வரமுடியாமல் மயங்கிக் கிடக்கிறீர்களா?
நீங்கள் பட்டத்திற்கு வருவது எந்நாளோ?
போனஸ் கேள்வி:
நீங்கள் ஒரு வாலிபர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி. அதனால் தான் உங்களை வலையடிமை வளைத்து பிடித்துவிட்டதோ?

பத்மநாபன் said...

ஒரே ஒரு இரவு வனத்தை விட்டு வெளியே ..ஆணிக்கு திரும்பும் வழியே காத்திருப்பில்..

கிளிகள் எங்க தைலம் தேய்க்குது..கொத்தத்தான் செய்யும்...

எதாவது கேமரா வேலை செய்தால்தான் பட்டத்திற்கு வர முடியும் ..சுக்கிரன் பத்திரிக்கையொடும் சனி டீவி யோடும் பேச்சு வார்த்தை பேரம் படியும் பட்சத்தில் ...

ஆமாமாம், வாலிபர்..மார்க்கெண்டெய வாலிபர்...

Manisekaran said...

sir, signal signala follow panni, olunga veedu poi sentheengala...

anbudan
Mani

மோகன்ஜி said...

பக்த சிகாமணிகளே! போக்குவரத்தில் மக்கள் படும் கஷ்டம் அறியவே யாம் பல்சாரில் பவனி வந்தோம்.. 'ஹெல்மெட் போட்டது நல்லதாப் போச்சு' என்றுரைத்தது நீங்கள் புரிந்து கொண்டது போல் அல்ல. என் முகத்தை மக்கள் பார்த்து மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று 'அதை அணிந்தது நல்லதாயிற்று' என்றோம்!(ஷ்..பாபா.. நான் சரியாத்தானே பேசிகிட்டிருக்கேன்? )
எமக்கு எல்லா வண்ணமும் ஒன்றே என்றாலும்,பச்சை மேல் ஒரு மாத்திரையளவு அன்பு கூடுதலாய் உண்டு. 'பச்சை மா மலை போல் மேனி...'அவன் நிறமல்லவா!
ப.பாபா! அந்த அன்பர் அப்பாதுரையாரை நம் தனியிடத்துக்கு அழைத்து வரவும் ஆவன செய்வோம்..வெங்கல ஜால்ரா அடித்து கை வேறு சுளிக்கிவிட்டதா!அடடா! பாவம்.. வெள்ளி ஜால்ராவை என்ன செய்தீர்? விற்று விட்டீரா?
அப்பாதுரையாரை தங்கத்தில் ஒன்று செய்து தரச் சொல்லும்.. அவருக்கு ஆசி வழங்குவோம்.
பா.பாபா! உங்களுக்கில்லாததா!எடுத்துக் கொள்ளுங்கள்!உங்கள் வயது சர்ச்சையோடு அந்த வம்பரிடம் நிறுத்திக் கொள்ளும் என்வயது பற்றியெல்லாம் பேச வேண்டாம்.. காயகல்பம் உண்டவனல்லவா நான்? பல்சாரை சர்வீசுக்கு விடுங்கப்பா!

RVS said...

பத்திரமாக இருக்கிறேன் மணி. பாசமான கேள்விக்கு நன்றி.

RVS said...

நிறைய பாபாவுக்கு இருக்கு..அப்பா சாருக்கும் இருக்கு அவங்க முதெல்ல முடிக்கட்டும் அப்புறம் என்னோட கும்மி..

பத்மநாபன் said...

சரியாக பேசுவதாகத் தான் நான் சொல்லியாக வேண்டும் என்பது தானே நமக்குள்ள ஒப்பந்தம்... அதனால் தானே தூக்கமுடியாமல் தூக்கி ஜால்ரா அடித்து கொண்டிருக்கிறேன்.

வெள்ளி ஜால்ராவை சென்ற வார பல்சார் ஊர் உலாவிற்கு போக்குவரத்து சேவை புரிய வந்த குல்சா பார்ட்டிக்கு அன்பளித்து வீட்டிர்களே.

நாம் தான் ஆசி வழங்கியே ஆட்டையை போடுவதில் வல்லவர்களாச்சே... அப்பாஜி மாட்டுவாரா என்று பார்க்கிறேன்....

நாம் பதினாறு வயதோடு நிறுத்திய மார்க்கமான மார்க்கண்டயர்களாச்சே...

அடுத்த பயணத்திற்கு சர்விஸ் முடித்து பல்சாரும் ரெடி, ஜல்சாரும் ரெடி... இந்த தடவையாவது நாலுகால் பாய்ச்சல் காரரிடம் சிக்காமல் சேவை புரிந்து வாருங்கள்
( நல்லா தலைப்பை வெச்சாரு, உரச..உரச பத்திக்கிட்டே போகுது )

RVS said...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மோகன்ஸ்ரீ: "பச்சை மா மலை போல்..." மாதிரி தெரியலையே... " பச்சை நிறமே பச்சை நிறமே... இச்சை ஊட்டும் பச்சை நிறமே..." அப்படின்னு பாடிகிட்டே பின்னால போன மாதிரி தெரிஞ்சதா உங்க பிரதான சிஷ்யகேடி ஒருவர் பார்த்ததா தகவல்.

பா.பாபா: இன்னும் தூக்க முடியாமல் தூக்கி அப்படியானும் அந்த ஜால்ராவை தட்டி தொலையணுமா?. உமக்குத்தான் பல்சரிலிருந்து பச்சை சட்டை வரை எப்படி ரட்சிப்பது (சர்வீசுக்கு விடுவது) என்று பாடமாகிவிட்டதே, இன்னும் ஏன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ க்கு கமண்டலம் தூக்குகுறீர்.
அவர் ஜல்சாவிர்க்கு உபயோகித்த வெள்ளி ஜால்ராவுக்கு உம்மிடம் கணக்கு கேட்கிறார். கணக்குவழக்கு இல்லாமல் கொட்டமடிப்பதால் வந்த விளைவு இது. கணக்கு கேட்டபின்பும் அந்த கழகத்திற்குள் மானமுள்ள சந்நியாசி இருப்பானா? உம். கிளம்புங்கள். நீங்கள் புது ஆஸ்ரமம் தொடங்கவேண்டும். ரிப்பன் வெட்டி திறப்பு விழாவிற்கு நமீதா தயார்.
அவரிடமே நீங்கள் ஆரம்பிக்கலாம். (யாரப்பா அங்கே "களுக்" என்று சிரிப்பது. நான் "மோகா" கிளாசை சொன்னேன்!)

ஐயா அப்பாதுரைக்கு ஆசி வழங்கி கவுக்க ஏற்பாடா? பொதுவாக தீட்சைக்கு மகளிர் அணி தானே தேர்ந்தெடுப்பீர்கள். இதென்ன அதிசயம். அப்பாவை வளைக்கிறீர்கள். அந்நிய செலாவணிக்கு ஆகும் என்றா?

அப்பாதுரை said...

ஸ்ரீராம் என்னடான்னா ஆட்டோ வருமான்றாரு... மகான் தனியா வா கவனிச்சுக்குறேன்றாரு... வம்பாயிரும் போலிருக்கே வச்சு சாத்திருவாய்ங்களா?

அப்பாதுரை said...

அம்பது வயசுனா வாலிபமில்லையா? என்ன அனியாயமா இருக்கப்பா நாட்டுலே?!

அப்பாதுரை said...

ஹிஹிஹி.. அப்பாதுரை பின்னால ஒரு மகளிர் அணி வராதானு பாக்கத்தான்... என்ன சொல்றீக?

அப்பாதுரை said...

//கிளிகள் எங்க தைலம் தேய்க்குது..கொத்தத்தான் செய்யும்...

killer comment!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails