Friday, December 3, 2010

வஸ்த்ரகலா

samudrikaa

ஏதோ வழக்கம் போல் மூன்றாம்சுழியில் அதிகப்ப்ரசங்கித்தனமாய் பின்னூட்டம் எழுதப்போய் அது இந்த வஸ்த்ரகலாவில் முடிந்தது. எங்களது "ஆருயிர் அண்ணன்" "வலையுலக வெற்றிச் செல்வன்" "கலியுலக கதாவிலாசம்" அப்பாதுரை ஐயா அவர்களின் கட்டளையை சிரமேற்க்கொண்டு இப்பதிவை எழுதுவதற்கு முயல்கிறேன். எங்கள் "குருசாமி" "சரணகோஷப் பிரியன்" "தமிழ் அண்ணா" மோகன்ஜி ஐயப்பா அவர்களின் பின்னூட்டத்தில் அரைக்கண் மூடிய சாமியார்கள் பற்றிய ஒரு சிறு பொறி வார்த்தையை பொறுக்கிக்கொண்டு வழக்கம் போல் விளையாடினேன். "ஆனந்த வலையான்" "அரபிக்கடல் தாண்டிய அறிவுக்கடல்" "மதிப்பிர்க்குரிய உயர்திரு.ரசிகர்" பத்துஜி அவர்கள் என்னை யூத் என்றழைத்து கொஞ்சும்போது சில புடவைகள் பெயர்களை வீட்டில் விசாரித்து பதிவதாக கூறியிருந்தார். இப்படி மும்மூர்த்திகளின் விருப்பமாக மலர்கிறது இந்தப் பதிவு.

எனக்கு எப்போதுமே வீட்டு பெண்ணரசிகள் புடவை வாங்க கூப்பிட்டாலே குலை நடுங்கும். வெடவெடவென்று கை கால்கள் நடுங்க முதலில் போர்வை போர்த்தி குளிர்ஜுரம் வந்தது போல நடித்துப் பார்ப்பேன். "டேய்.. நடிகர் திலகம் வாடா.." என்று அதட்டி முதுகில் தட்டி கூப்பிட்டவுடன் வாலை சுருட்டிக்கொண்டு அடக்கமாக கிளம்பிவிடுவேன். யார் அப்படி அன்பாக என்னை உரிமையோடு அழைத்தது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்தப் பதிவை மேலே நீங்கள் நிச்சயம் படிக்க உங்கள் மனது விடாது. அப்படி பாசத்தோடு அழைப்பது எனது செல்ல.. செல்ல... அக்கா தான். ஒரு பெண்மணியுடன் நீங்கள் புடவைக் கடையில் நுழைந்தால் ஒரு சாதா புடவை எடுப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும். இரண்டு சேலை எடுக்கவேண்டும் என்றால் இரண்டு மணி நேரம். இப்படியே உங்கள் கணித அறிவைக் கொண்டு எவ்ளோ பேருடன் எவ்ளோ புடவை எடுக்கப் போனால் எவ்வளோ மணி நேரம் ஆகும் என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பதில் தெரிய சிரமப்படும் ஆமணக்கு மக்கள் எந்திரன் சிட்டியிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.

போன தீபாவளிக்கும் முதல் தீபாவளிக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் இதபோல பட்டுப் புடவை எடுக்க டி.நகர் செல்வது என்று வீட்டின் கண்மணிகள் முடிவெடுத்தன. வஸ்த்ரகலா, சாமுத்திரிகா என்று போத்தீசும், நகாசு, ப்ரைடல் செவென் என்று ஆர்.எம்.கெ.விகாரர்களும் அழகழகான பெண்களை தேர்ந்தெடுத்து விளம்பரங்களில் நடிக்க வைத்து டி.வி போட்டியில் அடிக்கடி போட்டு காண்பித்து பெண்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் அக்காதான் கச்சேரியை ஆரம்பித்தாள். கையை உசரக்க தூக்கி காண்பித்து "அதோ.. அந்த அரக்கு பார்டர்.. லெப்ட்ல மூனாவது" இதுதான் என் காதில் விழுந்த முதல் வார்த்தை. கொஞ்சம் இங்கேயும் அங்கேயும் குழுமியிருந்த பலவீட்டு குத்துவிளக்குகளை திரும்பி பார்த்துவிட்டு மறுபடி வந்து பார்த்தால் அலமாரியில் இருந்த அனைத்தும் மேஜை மேல்!

vastrakala


இப்போதெல்லாம் புடவைக் கடைகளில் சில பெண்களை கஸ்டமர்களோடு சேர்ந்து உறவாட விட்டிருக்கிறார்கள். ஒரு புடவையை விரித்து அதை மேலாக்கு போல மடித்து பார்டர் வெளியே தெரியும்படி சுருட்டி அவர்கள் மேல் போட்டு கண்ணாடி பார்க்க சொல்கிறார்கள். ட்ரயல். அவர்கள் போட்டிருக்கும் கண்ணாடிக்கும் மேனி கலருக்கும் புடவை மேட்ச் ஆகும் வரை தோளில் போட்டு போட்டு எடுக்கிறார்கள். ஒரு பெண் இடது மற்றும் வலது இரண்டு புறமும் இரண்டு பட்டுப் புடவையை போட்டுக்கொண்டு கண்ணாடி முன் ஒரு அரை மணி தவமாய் தவமிருந்து அழகு பார்த்தது. "சுமார்தான்" என்று என்னை மீறி கமென்ட் அடித்த நாக்கு ஏதோ நான் செய்த பூர்வஜன்ம புண்ணியத்தால் என் மனைவியிடம் அறுபடாமல் தப்பித்தது. இவர்கள் ஒவ்வொரு புடவையாக செலக்ட் செய்து என் தோளில் வேறு கிடத்தி விட்டு உலாத்தினார்கள். போன போக்கில் ஏதோ ஒரு பெண் நான் ஒரு மொபைல் ஸாரி ஸ்டாண்ட் என்று நினைத்து அவள் வாங்கின புடவையையும் என் மீது சார்த்திவிட்டாள்.

ஏற்கனவே இரண்டு மணி நேர மராத்தான் புடவை வாங்கும் வைபவத்தில் இருந்து நொந்து போன நான் "இந்தாம்மா.. இந்தப் புடவய ஏன் என் தோள்ல சார்த்த்திட்டு போறீங்க?" என்று குரலை உசத்தி கேட்ட பிறகு ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து "ஸாரி  சார்!!" என்று டெம்ப்ளேட் பதில் அளித்து என் மேலிருந்து உருவிக்கொண்டு போனாள். என்னுடைய இந்த கீழ்நிலையை, அவல நிலைமையை இவர்களிடம் எடுத்த்துக் கூறி என்னை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து நடந்த நிகழ்ச்சியை சொன்னேன். புடவை வாங்கும் உடலுழைப்புக்கு இடையில் சிரமபரிகாரம் செய்வது போல நால்வரும் சிரித்துவிட்டு "அங்க அந்த சேர்ல போய் உக்காருங்கோன்னா... எல்லாரையும் பார்த்துண்டே நின்னா இப்படித்தான் ஆகும்" என்று என் தர்மபத்தினி எனக்கு கிண்டல் பூசிய கட்டளையிட்டு உட்காரச்சொன்னாள்.  அந்தக் கணத்தில் இருந்து யாராவது புடவையை சுருட்டி அணிந்து பார்க்கும் போஸில் வந்தால் என் தோளிலிருந்து புடவையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அபாயக் கண்களோடு வெறித்து பார்க்க ஆரம்பித்தேன்.

புடவை எடுத்துப் போடும் ஊழியரிடம் சில தலையாய கேள்விகள் கேட்கப்படும். "சார் இது திருபுவனமா" என்று அக்கா கேட்டால் கூட வந்த பட்டுப் புடவை அபிமானிகள் "இது காஞ்சிபுரமா?" என்று கண்களை அகல விரித்து எதிர் கேள்வி கேட்டு அவரை சளைக்க அடிப்பார்கள். "நீங்க தர்மாவரம் விக்கறீங்க?" என்று ஏதோ அதைக் காண்பித்தால் அரைக் கண்ணால் கண்டுபிடித்து விடுகிறமாதிரி ஒரு கேள்வியை அள்ளி வீசுவார்கள். முன்பு காண்பித்த அதே சாரியில் இருந்து ஒரு புடவையை எடுத்து அவர்கள் எதிரி விசிறி பரப்பி "இது காசிப் பட்டு.. லேட்டஸ்ட்... இது தான் இப்ப ஃபாஸ்ட்டா மூவ் ஆவுது" என்று சொல்வார். பரத்திய புடவையை ஐந்தாறு பேராய் முந்தி, பார்டர், தலைப்பு, பாடி என்று அக்கக்காக அலசி பார்த்த பின் "கலர் இன்னும் கொஞ்சம் ப்ரைட்டா" என்று கேட்டு அந்த கடை ஊழியரை வேறு திசை திருப்புவார்கள்.

இதல்லாமல் வைரஊசி, பாலும்பழமும், கோச்சுமல்லி என்று பட்டுப்புடவை டிசைன் வகைதொகைகள் நிறைய உண்டு. புடவையின் உடம்பில் பட்டு ரேகையாக ஓடியிருந்தால் அது வைரஊசி, கலர் கலர் கட்டம் போட்டு பட்டு சுத்தியிருந்தால் அது பாலும்பழமும், கோச்சுமல்லி கேட்பதற்குள் அக்காவிற்கு கோபம் வந்து கோச்சுண்ட பிறகு அதன் அர்த்தம் தெரியவில்லை. ஒரு இரண்டு மூன்று மணிநேர சல்லடை அலசலுக்கு பிறகு கடைக்குள் நுழைந்ததும் காட்டிய சேலையை கையில் எடுத்து "ரொம்ப அழாயிருக்குல்ல..." என்று பேசி சிரித்து பில்லிர்க்கு அனுப்புவார்கள். நியூயார்க்கர் சஞ்சிகையின் மால்கம் கிலாடுவெல் தன்னுடைய BLINK என்ற புத்தகத்தில் கூறியுள்ளது போல "மனதில், மூளையில் நமக்கு முதன் முதலில் படும் எண்ணம்தான் தேர்வுதான் நம்முடைய இறுதி முடிவை நிர்ணயிக்கிறது".

பட உதவி மற்றும் குறிப்புகள்: துருதுரு அழகோடு சாமுத்ரிகா லக்ஷணத்துடன் அந்த பெயர் கொண்ட பட்டுப் புடவை கட்டி அழகுமயிலாக வருவது மீரா ஜாஸ்மின். அவர்கள் ஜொலித்த சைட் dailywomenswear.blogspot.com. வஸ்த்ர கலா பட்டு புடவையுடன் பாட்டியாக வலம் வருவது நம்ம ஹேமமாலினி. கண்டெடுத்த சைட்.sareetimes.com

பின் குறிப்பு: ஏதேனும் பிழை இருந்தாலோ, அறிந்தும் அறியாமல் தெரிந்தும் தெரியாமல் நான் செய்த சகல குற்றங்கள் அணைத்தையும் பொருத்தருள வேண்டுமாய் தாய்க்குலங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. (அப்பாடா.. இந்த கார்டு போட்டாச்சு.. இனிமே யாரும் திட்டமாட்டாங்க...)

-


45 comments:

பத்மநாபன் said...

///எனக்கு எப்போதுமே வீட்டு பெண்ணரசிகள் புடவை வாங்க கூப்பிட்டாலே குலை நடுங்கும். வெடவெடவென்று கை கால்கள் நடுங்க முதலில் போர்வை போர்த்தி குளிர்ஜுரம் வந்தது போல நடித்துப் பார்ப்பேன். // சக ரத்தம்.. எடுக்கற 2 புடவைக்கு சார்ட் லிஸ்ட்டிங்க்கு 50 புடவை தூக்கிட்டு திரியனுமே...

/// மனதில், மூளையில் நமக்கு முதன் முதலில் படும் எண்ணம்தான் தேர்வுதான் நம்முடைய இறுதி முடிவை நிர்ணயிக்கிறது" /// அது சரி தான்
ஆயிரம் புடவையை கலைச்ச பிறகு தான் அந்த ஞானம் வரும்...

ஹேமமாலினியும் யூத் தாங்க.....

Unknown said...

இப்படி பெண்களுக்கு ஓ போடறதினால், விளையாட்டா சொற், பொருட், எழுத்துப் பிழையை எல்லாம் எடுத்துரைக்க வந்தேன்:

1. //ச‌கல குற்றங்கள் அணைத்தையும் பொருத்தருள வேண்டுமாய் // அனைத்தையும் பொறுத்தருள வேண்டுமாய். பிழைகளப் படிச்சா, மன்னிப்பு கேட்கிற மாதிரியே இல்லை:-)

2. //கண்டெடுத்த சைட்.// சைட் கண்டெடுத்த சைட்னு இருந்திருக்கணுமோ? :‍-)

3. //"ரொம்ப அழாயிருக்குல்ல..." என்று பேசி சிரித்து பில்லிர்க்கு // புடவைகளோடு காத்திருந்து சோர்ந்து போயிருப்பீங்க, "ரொம்ப அழகாயிருக்குல்ல..." என்று பேசிச் சிரித்து, பில்லுக்கு....ன்னு இருந்திருக்கணும். நடையைக் கட்டுங்க, பில்லுக்குப் பணம் நீங்க தானே கொடுக்கணும்.

4. //என் தர்மபத்தினி எனக்கு கிண்டல் பூசிய கட்டளையிட்டு// கிண்டலையும் தாண்டி பூரிக்கட்டையெல்லாம் தெரியுதே அவங்க கேள்வியிலே?

5. //"வலையுலக வெற்றிச் செல்வன்" "கலியுலக கதாவிலாசம்" அப்பாதுரை ஐயா// //"குருசாமி" "சரணகோஷப் பிரியன்" "தமிழ் அண்ணா" மோகன்ஜி // இதெல்லாம் என்ன? இதைக் கிண்டல் செஞ்சா அவங்க எல்லாம் அடிக்க வரக்கூடும்... ஆனா, கெ.பி. கண்ணுக்கு வெறிச்செல்வன், கரகோஷப் பிரியன்னு தெரிஞ்சுது. கண்ணைக் கசக்கிட்டுப் படிச்சேன். ஒரு வரலாறுக்காக இங்கே சொல்லிக்கிறேன். அவ்வளவு தான். தப்புன்னா, இனி கமெண்டலை.

6. //அவர்கள் என்னை யூத் என்றழைத்து கொஞ்சும்போது சில புடவைகள் பெயர்களை வீட்டில் விசாரித்து பதிவதாக கூறியிருந்தார்.// இதப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லை;-) அனேகமா அப்பாதுரை விஸ்தரிக்கக் கூடும்.

Chitra said...

பரத்திய புடவையை ஐந்தாறு பேராய் முந்தி, பார்டர், தலைப்பு, பாடி என்று அக்கக்காக அலசி பார்த்த பின் "கலர் இன்னும் கொஞ்சம் ப்ரைட்டா" என்று கேட்டு அந்த கடை ஊழியரை வேறு திசை திருப்புவார்கள்.


....... கரெக்ட்டு!

அப்பாதுரை said...

இதான் வஸ்த்ரகலாவா? ஒரேயடியா எந்திரன் படம் மாதிரி எதிர்பார்ப்புகளை ஏத்தி விட்டு... ஹ்ம்ம்ம்... இதுவும் நல்லாத்தான் இருக்குலா.

சிரித்து நொந்தேன்
>>>"டேய்.. நடிகர் திலகம் வாடா.." என்று அதட்டி

எஸ்.கே said...

சிரிப்பதா
அனுதாபப்படுவதா
இதற்கு என்ன வரப்போகிறதோ என கவலைப்படுவதா!:-)

Unknown said...

சுவாரஸ்யமான வஸ்த்ரகலா...

RVS said...

@பத்மநாபன்
ஹேமமாலினியை யூத் சொன்ன வாய்தான் என்னையும் சொல்கிறது என்றால் எனக்கு அந்த யூத் பட்டமே தேவையில்லை. தேவையில்லை. தேவையில்லை என்பதை அறுதியிட்டுக் கூறுகிறேன். நன்றி ;-) (இத நாம ஒத்துக்கிட்டோம்ன்னா நமக்கு ஹேமா வயசு ஆவுதுன்னு கதை கட்டி விடுவாங்க... தப்பிச்சாச்சு..)

பத்மநாபன் said...

அட கோச்சுக்காதிங்க...அவங்கள பெரிய யூத் உங்களை இளைய யூத்துன்னு வச்சுக்கலாம் விளையாட்டுக்கு வாங்க ...

சந்திரபாபு பாட்டு மாதிரி , நீயும் யூத் ,நானும் யூத் நினைச்சு (மனசுல ) பார்த்தா எல்லாம் யூத்....

RVS said...

@கெக்கே பிக்குணி
தங்களின் கருத்துகளுக்கு இந்த தருமியின் பதில்கள்...

1. கடைசி பாரா சில செகண்டுகளில் அடித்து வலையேற்றப்பட்டது. (அப்படியே இருந்தாலும் எல்லாவற்றிற்கும் எனக்கு ஸ்பெல்லிங் தெரியாது. கணினி பாஷையின் சின்டாக்ஸ் நன்றாக கைகூடினாலும் அம்மா பாஷை நொண்டி அடிப்பது தெரிகிறது. எழுதிப் பழகுகிறேன். சான்றோர்களின் குட்டுகளில் கற்றுக் கொள்கிறேன். ;-)

2. சைட், ஃபிகர் போன்ற வார்த்தைகள் உபயோகம் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. கலர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ;-)))))))

3. பில்லிற்கு... இது கரெக்டோ...

4. வெளியிடங்களில் அடி விழாது என்கிற பேசிக் நாலேட்ஜ் எனக்கிருப்பதால் கொஞ்சம் தைரியமாக.......இதுபோல்......ஹி...ஹி

5. எனக்கு தப்பாவே தெரியலை. நீங்க தாராளமா கமெண்டலாம். நம்மால ஊரைக்கூட்டி பாராட்டு பத்திரம் படிக்க முடியாது.. அதான் சைட்லே (வெப்சைட்...) சொன்னேன். எப்போதுமே நாம தமிழக ரசிகர்கள். இதோட நிறுத்திக்கறேன்னு சந்தோஷப்படுங்க... பாலபிஷேகம் பண்றது... காவடி தூக்கறது... இதெல்லாம் பண்ணாம... ;-) ;-) ;-)

6. விஸ்தரிப்பார் அப்பாஜி... நானும் அவர்கிட்டேயே விட்டுடறேன்.

RVS said...

@Chitra

ரைட் ரைட்டு.... ;-)

RVS said...

@அப்பாதுரை
இன்னும் நிறைய இருந்தது.. அடி விழுமோன்னு, அன்னம் தண்ணி கிடைக்காதோன்னு ஒரு பயத்தில இவ்ளோதான். உசுப்பேத்தி விடாதீங்க அப்பாஜி!!!

RVS said...

@எஸ்.கே
இறைவன் இருக்க பயமேன். உங்களோட எச்சரிக்கைக்கு நன்றி எஸ்.கே!!! ;-) ;-)

RVS said...

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி செந்தில்!!

RVS said...

@பத்மநாபன்
//சந்திரபாபு பாட்டு மாதிரி , நீயும் யூத் ,நானும் யூத் நினைச்சு (மனசுல ) பார்த்தா எல்லாம் யூத்.... //
எவ்ளோ பெரிய தத்துவம்... ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க பத்துஜி. ஒத்துக்கறேன் நீங்களும் யூத் தான். (எல்லாம் இந்த சாயை சொல்லணும். சும்மா இல்லாம யூத்ன்னு சொல்லி எல்லாரையும் சொறிஞ்சி விட்டுட்டாரு..) ;-)

ஸ்ரீராம். said...

//"ஏதேனும் பிழை இருந்தாலோ, அறிந்தும் அறியாமல் தெரிந்தும் தெரியாமல் நான் செய்த சகல குற்றங்கள் அணைத்தையும் பொருத்தருள வேண்டுமாய்..."//

இந்த வேண்டுதல் தாய்க் குலத்துக்காய் இருப்பினும் பொதுவாய்ச் சொல்லப் போனால் மேலே எவர் கிரீன் ஹேமாவைப் பார்த்தபின் எதையும் பொருட் படுத்தத் தோன்றவில்லை...

RVS said...

@ஸ்ரீராம்.
எவர் கிரீன்? பேஷ்.. பேஷ்.. ரொம்ப நல்லா இருக்கு ;-) ;-)

வெங்கட் நாகராஜ் said...

இந்த சீசனில், வஸ்த்ரகலா, சாமுத்ரிகா போன்றவை கூட பட்டியாலா, ”மசக்கலி” ஆகியவை வேறு சேர்ந்துவிட்டது. இப்பல்லாம், புடவை வகை இல்லாமல் சுடிதார் பேர்கள் வேறு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. : ))

ADHI VENKAT said...

பொம்பளைங்க புடவை வாங்கும் விதத்தை இப்படி வாரியிருக்கீங்களே. ஆம்பிளைங்க மட்டும் என்ன எதையெடுத்தாலும் நன்றாக இல்லை என்பீர்கள். _ ஆதி.

RVS said...

@வெங்கட் நாகராஜ்
என் பசங்களுக்கு இந்த தீபாவளிக்கு மசக்கலி தான் வாங்கினேன். பொண்டாட்டிக்கு பாட்டியாலா.. (இப்படி பட்டியாலாவுக்கு பதில் பாட்டியாலா என்று சொல்லி நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டேன்... ) ;-)

எல் கே said...

ஹ்ம்ம் நீங்க ரொம்ப பழசா இருக்கேளே?? இப்பலாம் சுடி வாங்கவே ஒரு மணி நேரம் மேல ஆகுது . அப்புறம் இந்த புடவைக்கு கீழே குஞ்சம் கட்டனும், ஒரு மணில முடிச்சு தந்துருவான். வாங்கிட்டு வாங்கோன்னு சொல்லிடுவா. அதை விட்டுட்டீங்க

'பரிவை' சே.குமார் said...

உங்கள் நிலை சிரிப்பை வரவழைத்தாலும் சேலை வாங்கும் அனுபவம் கிடைத்த சந்தோஷம் இருக்குமல்லவா.

தக்குடு said...

ஹலோ அண்ணா, எல்லா பொம்ணாட்டிகளையும் சைட் அடிக்கலாம்னுதானே கடைக்கு போனேள்!! என்னவோ வேண்டாவெறுப்பா போன மாதிரி என்ன ஒரு நடிப்புடா சாமி!! உண்மைலயே நடிகர் திலகம் தான்!!..:PP எனக்கு புடவை பத்தி ஒன்னும் தெரியாது, அதனால மீராஜஸ்மினை மட்டும் தரிசனம் பண்ணிக்கறேன்....:)

இளங்கோ said...

//எல்லாரையும் பார்த்துண்டே நின்னா இப்படித்தான் ஆகும்//
Hehehehe :)

//மனதில், மூளையில் நமக்கு முதன் முதலில் படும் எண்ணம்தான் தேர்வுதான் நம்முடைய இறுதி முடிவை நிர்ணயிக்கிறது//
Final Touch - Super. :)

RVS said...

@கோவை2தில்லி
இப்படி எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு அடிக்க வரக்கூடாது என்றுதான் கடைசி பாராவை அவசரம் அவசரமாக சேர்த்தேன். அப்படியும் ஏற்கனவே கெ.பி ஒரு புடி புடிச்சுட்டாங்க... பரவாயில்லை நன்றிங்க ;-) ;-)

RVS said...

@LK
நம்மளை விட ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் ஆளு போலருக்கே.. முன்னாடியே டிப்ஸ் வாங்கியிருக்கலாம். நன்றி எல்.கே. ;-) ;-)

RVS said...

@சே.குமார்
அட்டகாசமான அமர்க்களமான அனுபவம். (ஆனா... எவ்வளவு முறை.. ) ;-)

RVS said...

@தக்குடுபாண்டி
சைட், பிகர் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. சைட் என்றால் வீடு கட்டும் இடம் என்றும் பிகர் என்றால் படம் என்றும் தான் தெரியும். உங்களை மாதிரி விவரமானவனா நான்? ;-) ;-)

RVS said...

@இளங்கோ
சிரிக்காதப்பா.. இன்று நான் நாளை நீ... ஒ.கே ;-) ;-)

இளங்கோ said...

நாளைக்கு ஏன் போறீங்க.. இப்பவே அப்படித்தான் :)

balutanjore said...

dear rvs

patiala we know

what is masakali?

can somebody elaborate?

balu vellore

மோகன்ஜி said...

ஒருமுறை கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன்.. டிசம்பர் மாசம்.. வழக்கம் போல் காவி வேட்டி.. ஸ்வாமி சரணம்.
எதிர் சீட்டில் ஒரு இளம்ஜோடி. கையில் இருந்த புத்தகத்திலிருந்து கண்ணெடுத்த போது அந்தப் பெண் என்னைப் பற்றி ஏதோ கணவனிடம் கிசுகிசுத்தாள் போலும். அவன் என்னைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிப்பதைப் பார்த்தேன்.
அசடு வழிந்தான்.
"any thing wrong?"இது நான்.

"ஸாரி சார்". மென்று விழுங்கினான்..
தப்பாக எடுத்துக் கொண்டு விட்டேன் இன்று நினைத்தானோ என்னவோ...
"அது லூசுங்க! உங்க காவிவேட்டியின் அரக்கு பார்டர் இவ பொடவை பார்டரை விட பெரிசா இருக்காம்! வேற ஒண்ணும் தப்பா சொல்லல்லை. ஸாரி சாமி!"
வாய் விட்டு சிரித்தேன் !
கெக்கே பிக்குணி சார்! உங்க கமெண்டுகள் சுவாரஸ்யம்!

தினேஷ்குமார் said...

என்ன சார் இதுக்கே இப்படி உக்காந்துட்டீங்க தீபாவளிக்கு முந்திய வாரம் இங்க பஹ்ரைன்ல உள்ள ஷாபிங் சென்டருக்கு போனோம் நானும் என் நண்பர் ஒருவரும் நான் போன அரை மணி நேரத்துல ரெண்டு ஷர்ட் ரெண்டு பேன்ட் எடுத்துட்டேன் நண்பர் பார்த்தா ஹையோ என்ன சொல்றதுனே எனக்கு தெரியல சார் ஒரு மூன்று மணிநேர போராட்டத்திற்குப்பிறகு ஒரு ஷர்ட் பேன்ட் எடுத்தார் பாருங்க நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன் சார் நான் அவர் பண்ண அட்டூழியத்துல

சிவராம்குமார் said...

வஸ்த்ரகலா பட்டில்லை எந்த பட்டு கட்டினாலும் மீரா ஜாஸ்மின் அழகா இருக்கும்... அதை பார்த்து நம்ம ஆளுங்களும் வஸ்த்ர கலா தான் கட்டுவேன்னா என்ன பண்றது!!!

RVS said...

@இளங்கோ
சமத்து.. சக்கரைக் கட்டி.. (உண்மையை ஒத்துக்கொண்டதற்கு.. ) ;-)

RVS said...

@balutanjore
விலாவாரியா விசாரித்து பதில் போடறேன்.. ;-)

RVS said...

@மோகன்ஜி
மோகன் அண்ணா குன்னக்குடி கூட அப்படித்தான் கரை வேஷ்டி கட்டியிருப்பார். ஒரு முழத்துக்கு பார்டர் போட்ட வேஷ்டி.. அப்புறம் பட்டுபுடவைல சட்டை தச்சு போட்டுண்ட்ருப்பார்!! ;-)

RVS said...

@dineshkumar
இது என்ன தாய்க்குலங்களுக்கு ஆதரவான பின்னூட்டமா!! கில்லாடி சார் நீங்க! அந்த நண்பரோட போட்டோ ஒன்னை பதிவுல போடுங்களேன். பார்ப்போம்.. ;-)

RVS said...

@சிவா என்கிற சிவராம்குமார்
அப்படி அடம் பண்ணினா.. நாம தான் பட்டு வஸ்தரத்துக்கு தகுந்த கலா பார்க்க முடியுமா? (கேள்வி எப்பூடி.. ';-) )

எல் கே said...

//நாம தான் பட்டு வஸ்தரத்துக்கு தகுந்த கலா பார்க்க முடியுமா//

அப்படி ஒரு ஆசை இருக்கா ?? உங்க thangskku ஒரு மெயில் அனுப்பனும்

தக்குடு said...

//அன்னம் தண்ணி கிடைக்காதோன்னு ஒரு பயத்தில இவ்ளோதான்// பயத்தோடையே இவ்ளோ ஆட்டம்னா, உங்களுக்கு பயம் மட்டும் இல்லைனா என்னா ஆட்டம் ஆடுவேள்? அடுத்த தடவை இந்தியா வரும் போது அக்காவை பாத்து பேசாம ரிட்டன் ப்ளைட் ஏறர்தா இல்லை. எனக்கும் அக்கவுண்ட்ஸ்ல வரும் பிகரைதான் தெரியும், சைட் கூட அப்பிடிதான்...:P

அப்பாதுரை said...

ஹா... இப்பத்தான் பார்த்தேன்.. என்னதிது, என்னை வச்சு மாவரைக்கறேள்? காமெடி பண்றேளா கெபி? நீங்களும் சேந்து கல்லுப்பைப் போடறேளே RVS?

புடவைக்கு பெயரா? என்ன ஆச்சரியம் - (ஜீபூம்பா ஸ்டைல்). காஞ்சிபுரம் பெனாரெஸ் எல்லாம் அந்தந்த ஊர்ல தயாரான புடவைங்களனதால அப்படிப் பெயர் வந்தது (i think); இப்ப வஸ்த்ரகலானு புடவை பேரா? பலே பலே. மீரா ஜேஸ்மின் - what a beautiful name! இது புடவை பேரா, ஆள் பேரா?

உங்களை யூத்னு கொஞ்சினாரா - விவரமா சொல்லுங்க.. சட்டுனு ஒரு வரில கதைச்சுருக்கம் சொல்லிட்டீங்களே? அப்புறம் நான் எங்க விஸ்தரிக்கிறது?

(புடவை கட்டினவங்களை கட்டி ரொம்ப ரொம்போ நாளாச்சுங்க - அத்தோட நிறுத்திக்கறேன் :)

வஸ்த்ரகலானா ஏதோ எசகுபிசகான சமாசாரம்னு நெனச்சேன் - சுங்கிடி கதையாயிடுச்சே?

RVS said...

@LK
ரொம்ப டெரரான கேள்வி கேட்குறீங்களே... மிரட்டாதீங்க.. நான் ரொம்ப பாவம்.. ;-)

RVS said...

@தக்குடுபாண்டி
அவசியம் நீ வந்து அக்காவைப் பார்க்கனும். இப்படியாவது நாலு பேர் அவாளுக்கு எடுத்த்துச் சொல்ல மாட்டாளான்னு எதிர் பார்த்துண்டு காத்துண்டு இருக்கேன். ரொம்ப நன்னி!! க்ஷேமமா இருப்பேடா கோந்தே..!!! ;-) (எப்டி.. வாயுள்ள புள்ளை புழைக்கும் ) ;-)

RVS said...

@அப்பாதுரை
அப்பாஜி!! கொஞ்சம் வேலை இருக்கு.. வந்து விலாவாரியா சொல்றேன்.. ;-)

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_07.html

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails