Saturday, December 4, 2010

பாடல் சாகசம் த்ரில்

ஆங்கிலேயர்கள் பாடிய பாடல்:
இங்க்லீஷ்காரர்கள் ஒரு ஐம்பது பேராய் சேர்ந்து பாடும் இந்தப் பாடல் நம்ம ஆஸ்கார் தமிழன் போட்டது. கேட்டுப் பாருங்களேன். அசத்தல் ரகம். அந்தக் குண்டு பெண்மணி ஆர்கெஸ்ட்ரா நடத்தும் விதம் அலாதியானது. வலது ஓரத்தில் ஒரு பெண் ஆடி ஆடி பாடுது.சாகசம் - ஓட்டுதல்:
அதலபாதாளத்தில் விழுந்துவிடாமல் இந்த டிரைவர் அண்ணன் என்னா ஸ்டைலா வண்டியை ஒடித்து திருப்புகிறார். நம்ம அரைபாடி மணல் லாரிக்காரர்களின் கவனத்திற்கு. ரெண்டு வண்டி போற அளவுக்கு இருக்கிற கேப்லையே நம்ம ஆளுங்க வண்டி உரசி தீப்பிடித்து விடுமோன்னு பயந்துகிட்டு ஜன்னல் எட்டி எட்டி பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்த ஆளுக்கு யாராவது ஒரு மெடல் கொடுங்கப்பா..சாகசம் - ஆத்துதல்: 
இது நிஜமாகவே ஒரு சாகசம். Liquid Engineering. கட்டஞ்சாயை அந்தரத்தில் தூக்கி எறிந்து அந்த பிளாஸ்டிக் மக்கிர்க்கும் டீ கிளாஸிர்க்கும் எறிந்து பிடிக்கும் லாவகம் உலகின் எந்த மூலையில் உள்ள சர்க்கஸ் கம்பெனிகாரனுக்கு கூட முடியாது. தீ.வி.பி படிக்கும் நளபாகர்கள் டீ போடும் விற்ப்பனர்கள் யாராவது முடிந்தால் முயற்சி செய்யலாம். கிளாஸ் உடைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல..விளம்பரம்:
ஒரு காமடி ஃபெஸ்டிவல் விளம்பரம். பொண்ணுங்க பின்னாடி உட்கார்ந்து ஏன் சினிமாவோ டிராமாவோ பார்க்ககூடாதுன்னு ஒரு அறிவுரை வழங்கும் அளவிற்கு எடுத்திருக்காங்க. அது கொண்டை ஊசியா அல்லது கொலை ஊசியான்னு தெரியலை. கண்ணு ஜாக்கிரதை...த்ரில்:  
கும்பலா மக்களை உட்கார வச்சு ரோலர் கோஸ்டர்ல போறா மாதிரி ராட்டினம் சுத்தி காமிச்சிருக்கார் இந்த பைலட். நிச்சயம் உயிர் பிழைத்த அவ்ளோ பெரும் அவரை தோல் மேல் தூக்கி வைத்துக் கொண்டு "அண்ணனுக்கு ஜே.. பைலட்டுக்கு ஜே..." என்று கொடாடி மகிழ்ந்திருப்பர். பைலேட்டுடா!!!உலகமகா த்ரில்:
நிச்சயம் இதை பார்த்த போது எல்லா மக்களும் சீட்டு நுனிக்கு வந்து கீழேயே மயங்கி உழுந்துட்டாங்கலாம். ரசிச்ச எல்லோருக்கும் குப்புறக்க விழுந்து பள்ளு மோரை எல்லாம் அடி. ஒரே ரத்த விளாறு. ஜாக்கிரதையா சீட்டை கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும்படி அறிவுத்தப்படுகிறார்கள். வயதானவர்களும் வயது வந்தவர்களும் கட்டாயம் ஒரு ஆம்பிளை சிங்கம் துணையுடன் பார்க்கவும்.முதல்ல ஒரு பாடல் பார்த்தீங்களா. அது வேற்றுமொழிக்காரர்கள் நம் மொழிப் பாடலைப் பாடுவது. இங்கே கீழே நம் பச்சைத் தமிழன் ஆப்பரிக்க மொழியில் பாடுவது. இசை எப்படி தன்னுள் பிரவாகமாக ஓடுகிறது என்று கையை சொரிந்தெல்லாம் காண்பிக்கிறார் மனுஷன். மேல பார்த்த அந்தத் தெலுங்கு பட கிளைமாக்ஸ் காட்சிக்கு நிகரானது இதுவும். அதே எச்சரிக்கைகளை படித்து ஜாக்கிரதையாக பின்பற்றவும். பின் குறிப்பு:
கடைசியாக பார்த்த பின்னர் எதுவும் எழுதுவதற்கு மூடு வரவில்லை. இத்தோட இதை முடித்துக்கொள்கிறேன்.

-

58 comments:

எல் கே said...

எதுவும் பார்க்கலை. காணொளிகள் காண அலுவலகத்தில் தடை

ஹேமா said...

ஒவ்வொரு காணொளியும் ரசிக்கக்கூடியதாகவே இருக்கு.
கடைசி காணோளி....அப்பப்பா!

இளங்கோ said...

All are super.

//கடைசியாக பார்த்த பின்னர் எதுவும் எழுதுவதற்கு மூடு வரவில்லை//
Im not seeing the last one. Thanks for pre-awareness. :)

எஸ்.கே said...

அசத்தல்!

ADHI VENKAT said...

இதையெல்லாம் பார்த்த பின்னர் எனக்கும் என்ன எழுதுவதென்றே தோன்றவில்லை. கொண்டை ஊசி பார்த்தவுடன் வயிறே கலங்கி விட்டது. டீ ஆற்றுவது சூப்பர்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மாயவரத் தமிழனின் ஆப்பிரிக்க மியூசிக்க பாத்து அசந்துட்டீங்களா? கூட இருக்குறவர் நல்லாத்தான் கேள்வி கேக்குறார்.

தினேஷ்குமார் said...

பின் குறிப்பு:
கடைசியாக பார்த்த பின்னர் எதுவும் எழுதுவதற்கு மூடு வரவில்லை. இத்தோட இதை முடித்துக்கொள்கிறேன்.

-

தினேஷ்குமார் said...

சாகசம் - ஓட்டுதல்:

நல்ல பகிர்வு சார் என்ன சிங்கத்த கூப்பிடாமா சிங்கமா பார்த்தேன் சார் ஆனா கடைசிலதான் ஒன்னும் சொல்ல முடியாம செய்வென வச்ச மாதிரி ஆகிடுச்சு

balutanjore said...

dear rvs

tr supero super

eppadi ellam yosikkaranga parunga

balu vellore

RVS said...

@LK
ஸாரி எல்.கே ;-(

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! ஏதோ ஒரு உற்சாகத்துல கடைசி காணொலியிலிருந்து நான் பதிவை பார்க்கத் திறந்தேனா!

"நானெங்கே? என் குதிரைஎங்கே ? கையில் இருந்த வாள் எங்கே? இங்கே
ஓடிக் கொண்டிருந்த நதி எங்கே? காலுக்கு கீழ் இருந்த நிலமெங்கே..."

இத்தனை நேரம் நான் பிறாண்டிக் கொண்டிருந்தேனே .. அந்தப் பாய் எங்கே! எங்கே?

Anonymous said...

ஹ.. எல்லாமே பெண்டாஸ்டிக் அண்ணே :)

Matangi Mawley said...

:) ella videos-ume jor...--- eye balss-- yew!! :( but enjoyable! aanaa- intha kadeseela vantha discovery channel mattum .. paakka konjam bayamaa irunthathu! :D

ஸ்ரீராம். said...

ஒரொரு காணொளியும் பஃபர் ஆகி வர்றத்துக்குள்ள எனக்குப் பொறுமையே போய் விட்டாலும்.கடைசிக் காணொளி பார்த்து மிரண்டு போய் கடைசியில் அந்த ஆஸ்கார் ஃபீலிங்கில் கண்கலங்கிப் போனேன்.

Aathira mullai said...

RVS அந்தக் கடைசிப் பதிவு போட்டதற்குப் பதில் எங்களை ஆஃப்ரிக்கன் காட்டுக்கே அனுப்பி இருக்கலாம்!!

எத்தனை நாளா திட்டம் இப்படி கொலை பண்ண?
மற்ற அனைத்தும் ஆங்கிலப் பாடல் உட்பட சூப்பர்.....

பத்மநாபன் said...

காவிரி ஆறும் பாட்டை ....பஜனப்பாடலா மாத்தி அமர்கள படுத்திட்டாங்க ..

சாகச டிரைவர் ..சைக்கிள் கேப்ல ஆட்டோ ஒட்டும் நம்மூர் ஒட்டுனர்களிடம் ட்ரைனிங் எடுத்திருப்பாரு போல.

கொண்டை ஊசியா கடப்பாறையா...ரணகளம்....

விமானத்திற்கு கடல் குளியல் ஆசை ஜோர்.....

கத்திய காட்டி மிரட்டுவாங்க ..இப்படி ஹெலிக்காப்டர் மிரட்டல் ..அதுல ஜீப் வச்சு ஸ்கட் விட்டது தெலுங்கு படத்துல தான் சாத்தியம்..

கக்கிகா காகக்குக்ம்...ஹும்..ஆ...ஹும் ஆ..... இதுல கிண்டல் என்னனா? ஆஸ்கர் ஏன் இன்னமும் கொடுக்கலைன்னு ? கேட்டாரு பாருங்க......

சிவராம்குமார் said...

நல்ல ரசிச்சு பார்க்கும் போதே திடீர்னு மனச அறுக்குற சோகமாய் ஒரு முடிவை வெக்கிற நம்ம டைரக்டர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் RVS :-) முடியலை!!! நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா!!!

வெங்கட் நாகராஜ் said...

அண்ணா, என்ன இது, நல்ல நல்ல வீடியோவா போட்டு காமிச்சுட்டு, கடைசில இது என்ன சின்னக்குழந்தைகளை பயமுறுத்தற மாதிரி ஆஸ்கர் வாங்க பேராசைப்படும் கரடி வீடியோ? பயந்து நடுங்கிக்கிட்டே தட்டச்சறேன் தெரியுமா? : ))))))

RVS said...

@ஹேமா
வாழ்க்கைன்னா நாலும் இருக்கத்தான் செய்யும்... பயந்தா முடியுமா....;-)

RVS said...

@இளங்கோ
நீங்க சுதாரிப்பான ஆளு தம்பி.. தப்பிச்சுடுவீங்கன்னு தெரியும்.. அலெர்ட் போடாம அடுத்த முறை மடக்கறேன்.. ;-)

RVS said...

@எஸ்.கே
நன்றி எஸ்.கே. ;-)

RVS said...

@கோவை2தில்லி
கொண்டையில் ஊசி வைத்த கொலைபாதகி.. நல்ல ஜோக். ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
மாயவரத்தை இணைச்சு கமெண்ட் போட்டீங்க பாருங்க.. அங்கதான் இருக்கு உங்க ஊரு டச். நன்றி ;-)

RVS said...

@dineshkumar
சிங்கம்லே.. சிங்கிளாத்தான் பார்ப்பேன் அப்படின்னு அடம் பண்ணியிருக்கீங்க.. அதுக்குதான் அவ்வளவு முன்னேற்ப்பாடா சொன்னேன். பாருங்க இளங்கோ தம்பி எஸ்கேப் ஆயிடுச்சு.. (கீழே விழுந்தாலும் மீசையில் நோ மண் கேஸ்.) ;-)

RVS said...

@மோகன்ஜி
அண்ணா.. பின்னூட்டத்தின் அறிவொளி நீங்கள்.. பாயை பிராண்ட வைத்துவிட்டாரே.. சோச்சோ.. ஸாரி....;-)

RVS said...

@balutanjore
TR ரொம்ப பிடிச்ச நடிகரோ.. யாராவது அவருக்கு ஆப்ரிக்காவிற்கு டிக்கெட் எடுத்துக் கொடுங்களேன்.. ;-) ;-) சும்மா சோக்குக்கு.. ;-)

RVS said...

@Balaji saravana
வாரக் கடைசிக்கான ஸ்பெஷல் பதிவு இது.. என்ஜாய்!! ;-)

RVS said...

@Matangi Mawley
அப்படி பயப்படக் கூடாதுன்னுதான் ஆத்தில் இருக்கும் ஏதாவது சிங்கத்தை துணைக்கு வச்சுண்டு பார்க்க சொன்னேன்!!! ;-) ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
பிராட்பேண்ட் ஆக்சிலரேட்டேர்ஸ் நிறையா இருக்கு. இறக்கி உபயோகித்து பாருங்களேன்.. யுடுயுப் பிரச்சனை தீருதான்னு பார்ப்போம். TR ரைப் பார்த்து அகல பேண்டே பயப்படுது பாருங்க.. ;-) ;-)

RVS said...

@ஆதிரா
ஆதிரா!! அவர் கூடவே ஆப்பிரிக்கா போணுமா.. இல்லை தனியாவா? அவர் தனியாப் போனாலும் சமாளிப்பேன் என்று சவால் விடுகிறார்... ;-) ;-)

RVS said...

@பத்மநாபன்
//கக்கிகா காகக்குக்ம்...ஹும்..ஆ...ஹும் ஆ..... இதுல கிண்டல் என்னனா? ஆஸ்கர் ஏன் இன்னமும் கொடுக்கலைன்னு ? கேட்டாரு பாருங்க......//
கேட்டவர் கேள்வியின் நாயகன்... கேட்டது கேள்வியின் உச்சக்கட்டம். நாடி நரம்பெல்லாம் அவருக்கு இசைரத்தம் ஓடுது.. சரியா.... ;-)

RVS said...

@சிவா என்கிற சிவராம்குமார்
//RVS :-) முடியலை!!! நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா!!!//
இன்னொரு நாயகன் பார்க்க ஆசையா? என்னாலையும் முடியலை.. ;-) ;-) ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
சிங்கம் கரடியைப் பார்த்து பயப்படக் கூடாது.. நாம தான் மத்தவங்களுக்கு தெகிரியம் சொல்லணும்.. நாமலே இடிஞ்சி போய்ட்டா அப்புறம் மத்தவங்களுக்கு யார் ஆறுதல் சொல்வா.. (இது எப்படி இருக்கு.. ) ;-) ;-) ;-)

Aathira mullai said...

காசிக்குப் போனாலும்... கதையா?

அப்படி நான் என்னதான் பாவம் பண்ணீனேன்?
ஒரு மார்க்கமாத்தான் கெளம்பி இருக்கீங்க..(இது டி.ஆரை.)

RVS said...

@ஆதிரா
பயப்படாதீங்க.. கூடவே ஒரு நிஜ கரடியை பிடிச்சு அனுப்பிடுவோம்.. மரத்தை சுத்தி ரெண்டு கையாளும் அனிமல் கரடி & மனிதக் கரடி கட்டிக்கொண்டு சுத்தி சுத்தி வரட்டும்... பின்னணியில் ஹரிணி பாடிய "சுத்தி சுத்தி வந்தீங்க...." பாடலைப் போட்ருவோம்... அமர்க்களமா இருக்கும் என்ன? ;-)

எல் கே said...

தூங்கப் போறதுக்கு முன்னாடி இந்த வீடியோலாம் பார்க்கலாம்னு வந்தேன்... ஆனா... என் இந்தக் கொலை வெறி :(

அப்பாதுரை said...

டி ராஜேந்தரை ஆப்ரிகாவில் விடுவதாயிருந்தால் ஒன் வே டிகட் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த ஹெலிகாப்டர், ஜீப் சீன பாத்ததில் இருந்து எனக்கு லைட்டா காய்ச்சல் வர மாறி இருக்கு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அசத்தல்!

RVS said...

@LK
தூங்குவதற்கு முன் பார்க்க வேண்டாம் என்று டிஸ்க்கி போட்டிருக்கவேண்டும். தவறு என்னுடையது தான். மன்னிக்கவும். ;-)

RVS said...

@அப்பாதுரை
சூப்பர்!! Modus of Operandi என்னான்னு சொல்லணும்... ;-)

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
ஹீரோவுக்கு முன் எதுவுமே சாதாரணம்... இது தான் தெலுங்கு பட ஃபார்முலா.. மனசை திடப்படுத்திக்கோங்க.. ;-) என்ன ரொம்ப நாளா காணோம்.. ;-(

RVS said...

@வெறும்பய
நன்றி வெ.ப. ;-) அடிக்கடி வந்து போங்க.. ;-)

Aathira mullai said...

//டி ராஜேந்தரை ஆப்ரிகாவில் விடுவதாயிருந்தால் ஒன் வே டிகட் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.//

கூடவே இந்தப் பதிவு போட்டவரையும் சேர்த்து அனுப்ப நான் டிக்கட் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்..

இதுல் டூயட் வேறயாம்.. என்ன ஆசை.. இந்தக் கரடிக்காதலுக்கு ஹரிணியோட ’சுத்திச் சுத்தி வந்தீக’ பாட்டு வேறயாம்..

இதுக்கே இவரை ஆப்பிரிக்கா வனத்தில் கொண்டு போயி விட்டுடலாம்..

ச்ச்சுசுசும்ம்ம்ம்ம்ம்ம்மா.....

RVS said...

@ஆதிரா
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்... அந்தப் பாடல் பி.ஜி.எம்மோட தெவிட்டாத தெள்ளமுதாக காதில் விழுந்தது.. ஒரு தமிழன் புகழ் உலககெங்கும் பரவ வேண்டாமா... ஆதிரா... நாங்க கரடிக்கே தலை வாரி விடரவங்க.. நோ ப்ரோப்ளம்... அடுத்த பிளைட்ட புடிச்சு இல்லைன்னா கால் நடையாவாது TR வீட்டுக்கு தலைதெறிக்க ஓடி வந்துருவார்... ஓ.கே ;-)

அப்பாதுரை said...

ஆதிரா, எனக்கு இது தோணலை பாருங்க. அட்டகாசம் போங்க!

ஒண்ணு செய்வோம்.. ஸ்விட்சர்லேந்துக்கு டிகெட் வாங்கிக் கொடுத்து நைசா ஆப்ரிகாவில இறக்கி விட்டுறுவோம்.

அப்பாதுரை said...

TR தலைதெறிக்க ஓடுவதைப் பார்க்க ஆசை. இந்த உம்சிகா ஜிம்சிகா ஊகா ஊகா எல்லாம் எத்தனை வினாடிகள் செல்லுபடியாகுதுனு பாக்க கொள்ளை ஆசை வந்துடுச்சு.

அவரு விடியோ போட்ட காரணத்துக்காக உங்களையும் அவசியம் க்க்க்ம்ம்ம் ஸ்விட்சர்லேந்து அனுப்பி பாராட்டு விழா நடத்த ஆசை. உங்க வசதி எப்படி?

அப்பாதுரை said...

ப்ளேன் ஹோட்டல் விடியோ ட்ரிக் மூவி. பெர்ஸ்பெக்டிவிலிருந்தே தெரியுதே? (இதுல தமிழ்ச் சொல் எத்தனை?)

RVS said...

@அப்பாதுரை & ஆதிரா
என்னவொரு வில்(லி)லத்தனம்!!! ஒரு வீடியோ போட்டதற்கு நாடு கடத்தல்... அப்படி ஊர்ல நடக்காததையா போட்டுட்டோம். சரி ஒரு கண்டிஷன்.. என்னை அனுப்பறதா இருந்தா இன்னும் ரெண்டு பேரையும் கூட அனுப்புங்க.. புண்ணியமா போகும்.. அந்த இருவர்... உங்களுக்கே தெரியுமே.. ஒருத்தர் மோல ஆரமிச்சி ஜில முடியும் பெயர் கொண்டவர்.. இன்னொருவர் 10ஜி... (இதென்ன.. 2ஜி மாதிரி இருக்கே... ) ஓ.கே...
அப்படி அனுப்பினா.. வயர்லெஸ் இன்டர்நெட் கொண்டு போய் ஆப்பரிக்க காட்டிலேர்ந்து லைவ் ரிலே பண்ணுவேன்.. என் அட்டகாசம் அங்கிருந்தும் தொடரும்.. ஜாக்கிரதை!!!

RVS said...

@அப்பாதுரை
// தெரியுதே? (இதுல தமிழ்ச் சொல் எத்தனை?)//
மொத்தம் ஐந்து

பத்மநாபன் said...

வசமா மாட்டிகிட்டு வழித்துணைக்கு எங்களை கூப்பிடறிங்களா...ஒத்து நைனா....பேசாம இனி போடமாட்டேன் சொல்லிட்டு ஜாமின்ல வெளிய வரப்பாருங்க.

அது சரி ...என்ன பெரிய வள்ளல் மாதிரி ஐந்து சொல் இருக்குன்னு சொல்றிங்க... ..ப்ளேன், ஹோட்டல் எல்லாம் பஸ் மாதிரி தமிழ்ச்சொல் ஆயிடுச்சா.... ஆதிரா நெசமாவே வண்டி ஏத்தி விடப்போறாங்க.....

RVS said...

@பத்மநாபன்
அவர் கேட்ட கேள்வியையும் சேர்த்து ஐந்துன்னா.. அதான் அதையும் போட்டு ஐந்துன்னு சொன்னேன்.

இரக்கமே இல்லையா.. சரி.. வெள்ளைக் கொடி பிடித்துவிட்டேன்.. என்னோடு கானகம் வர மாட்டார்களாம்... அப்பாவிற்கும் ஆதிராவிர்க்கும் வெற்றி... கொண்டாடுங்கள்..
(போதுமா.. மகிழ்ச்சியா... எண்டு கார்டு போட்டாச்சு... )

பத்மநாபன் said...

சப்பை கட்டும் சரியா வர்ல...இனி துணிவே துணை.....

Aathira mullai said...

//என்னவொரு வில்(லி)லத்தனம்!!! ஒரு வீடியோ போட்டதற்கு நாடு கடத்தல்...//

வீடியோ போட்டா பரவாயில்லை.வலைத்தளத்தை சிறுத்தை, கரடி எல்லாத்தையும் உலவ/உறும விட்டா!!!

தப்பிச்சிட்டீங்க... வெள்ளைக்கொடி உங்களைக் காப்பாத்திடுச்சி. வெள்ளைக் கொடிக்கு நாங்க என்றும் தொல்லை தர மாட்டோம்.. இனி துணிவோட அடுத்த பக்கத்துக்குப் போங்க RVS. அங்கே வருவோம்ல..

RVS said...

@பத்மநாபன்
//சப்பை கட்டும் சரியா வர்ல...//
ஐந்து சொற்களுக்கா இல்லை சரண்டர் ஆனாதர்க்கா? ;-)

RVS said...

@ஆதிரா
என்னே உங்கள் கருணை! நன்றி ;-)

(சரியான நேரம் வரட்டும்.. அன்னிக்கி வச்சுக்கறேன் கச்சேரியை.. இது மனதிற்குள் சொன்னது.. உங்கள் காதில் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ;-) ;-) )

balutanjore said...

dear rvs

namma jpr englipis pechu youtubele irukku

parthirukkireergala

balu vellore

மோகன்ஜி said...

ஆஹா! நான் வீடியோவப் பாத்துட்டு கொஞ்சம் குணாவா மாறி, மீண்டும் மோகனாகறத்துக்குள்ள இவ்வளவு அமர்க்களம் ஆயிருச்சா!
அப்பாஜி! ஆதிரா! ஆர்.வீ.எஸ் க்கு ஆள் இல்லன்னு பாத்தீங்களா?
நாங்க இருக்கோம்ல?

ஆர்.வீ.எஸ் ! நேற்று ஒரு தெலுங்கு நண்பர். எழுத்தாளர் வந்திருந்தார்!உங்க தீ.வி.பி ஸ்க்ரீன் ஓபனா இருந்துச்சி ! நம்ம வீடியோவைக் காமிச்சேன்! இன்று காலேஜூக்கு அவர் வரவில்லை. ரொம்ப ஜுரமாம்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails