இந்த சங்கீத சீசனில் கர்நாடக இசையை அக்கக்காக பிரித்து மேய்வது என்று சபதம் எடுத்துவிட்டேன். அதற்கு இடையூறாக இருப்பது இரண்டுதான். ஒன்று முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெட்ட வெட்ட முளைக்கும் ராட்சஷன் தலைபோல துருத்தி துருத்தி எனை துரத்தும் ஆபீஸ் ஆணிகள். ஒன்றா... இரண்டா ஓராயிரம். இரண்டாவது ட்ராபிக் இல்லாத சென்னை ரோடுகள். ஆமாம்.. வாகன சமுத்திரத்தில் இன்ச் இன்ச்சாக ஊர்ந்து செல்லும்போது நிறைய பலதரப்பட்ட பாடல்கள் கேட்கலாம். இப்போது நிறைய இடங்கள் காலி. நிர்ஜனமான சாலைகள். ஏனென்றால் ஆணி பிடுங்கிவிட்டு வீட்டுக்கு செல்லும் போது அர்த்த ராத்திரி ஆகிவிடுகிறது. அப்படியும் பல காலத்திற்கு முன் என் இதயத்தை கொள்ளை கொண்ட பாடல்கள் என்னால் பிரத்யேகமாகப் எரிக்கப்பட்ட(Burn process) எல்லா குறுந்தகடுகளையும் தூசி தட்டி எடுத்து ஒவ்வொன்றாக தினமும் போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
பெண்கள் பெயரில் உள்ள ராகங்களின் பெயர்கள் மட்டும் தான் உங்களுக்கு தெரியும் என்று பலரும் என் புகழ் பாடியதால்....... கீழே உள்ள ராகங்களின் பெயர்களும் ஞான் அறிங்ஞு... ரிபீட் பெயர்கள் மட்டுமே..
ராகத்தில் சிறந்த ராகமெது... கல்யாணியா... காம்போதியா...
அகத்தை குளிரச் செய்யும் அழகான தோடியா..
ஆட்டத்திற்கே உகந்த நாட்டைக் குறிஞ்சியா..
பாவத்தோடு பாட பைரவியா...
மனம் பாங்காய் உருக வைக்கும் ரஞ்சனியா...
கலகலப்பாய் பாட கரஹரப்ப்ரியாவா...
கருணையே உருவான காமவர்த்தினியா...
பஹுதாரியா.... சுத்தசாவேரியா....
பஞ்சமம் இல்லாத ஹிந்தோளமா...
தேவமநோஹரியா.... தேவகாந்தாரியா..
தேனினும் இனிக்கும் கானடாவா.....
சிந்தை குளிர வைக்கும் சிம்மேந்த்ர மத்யமமா...
சந்தோஷத்தை தரும் சங்கராபரணமா...
காவேரி போல் ஓடும் சாவேரியா....
மனக் களைப்பை நீங்க வல்ல காபியா...
பன்னிசைத்துப் பாட ஷண்முகப்ரியாவா....
படுத்துறங்கச் செய்யும் நீலாம்பரியா...
அதிகாரமாய்ப் பாட அடானாவா...
அகிலமெல்லாம் மயங்கும் ஆனந்தபைரவியா...
தாபம் அகல ஒரு தன்யாசியா...
தரணியைக் காக்க நல் தர்பாரோ...
சரச சல்லாபத்திர்க்கே சாரங்காவா..
ஷ்யாமளனை எழுப்ப பூபாளமா..
பாங்காகப் பாட ஓர் பாகேஸ்வரியா..
சாந்தமாய்ப் பாட ஷாமாவா...
சிருங்காரமான சிந்துபைரவியா..
மங்களம் பாட ஓர் மத்யமாவதியா...
மீண்டும் இதுவும் ஒரு நித்யஷ்ரீ(ஸ்ரீமான் தக்குடுவின் ஸ்பெல்லிங்) அக்காவின் பாடல் தான். எந்த ராகம் சிறந்த ராகம் என்று யாருக்கேனும் சந்தேகம் இருப்பின் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். உங்கள் ஐயம் அறவே அகன்றுவிடும். இதுவா அதுவா என்று எல்லா ராகங்களின் பெயர்களையும் ராகத்தோடு பாடிவிட்டு கடைசியில் ஒரு கைத் தட்டலுக்குப் பின் விடை கூறுகிறார் நித்யஸ்ரீ. கேளுங்கள்.
நான் பாடாமலே உங்களைப் படுத்துவது என்று முடிவாகிவிட்டபின் இதையும் எழுதாமல் விடுவதில்லை என்று தீர்மானம் செய்து விட்டேன். ஸ ரி க ம ப த நி என்ற ஸ்வரங்களை சில பறவைகள் விலங்குகளின் குரல்களுக்கு ஒப்புமைப் படுத்துவார்கள். அப்படி வகைதொகை பிரித்தவைகள் காற்றுவாக்கில் கேட்டவைகளை மீண்டும் ஒருமுறை எனக்கு தெரிந்த சங்கீதக் கண்மணிகளிடம்(அம்மா, பாரியாள், அக்கா...) கலந்தாலோசித்தவைகளை கீழே தருகிறேன்.
- ஸ - ஷட்ஜமம்- மயில்
- ரி - ரிஷபம் - வானம்பாடி
- க - காந்தாரம் - ஆடு
- ம - மத்யமம் - புறா
- ப - பஞ்சமம் - குயில்
- த - தைவதம் - குதிரை
- நி - நிஷாதம் - யானை
இதேபோல ராகத்திற்கு ஒரு இஷ்ட தெய்வம் என்று நிறைய இருக்கிறது.
பலப்பல ராகங்களை ராகாமிர்தமாக நித்யஸ்ரீ பாடியதை கேட்ட நாம் நிச்சயம் இதையும் கேட்க வேண்டும். பாலையா ஒரு நாட்டின் அரசனுக்கு நிகரான சிம்மாசனத்தில் அமர்ந்து இளையராஜா ரஹ்மான் ஆர்க்கேஸ்ட்ரா போல ஒரு ரெண்டு டஜன் பக்கவாத்திய கலைஞர்களுடன் பாண்டியன் தர்பாரில் ஸ்டைலாக பாடும்.. பி.எம்.கேவின் அற்புதமான பாடல், கே.வி.மகாதேவன் இசையில் ஒரு நாள் போதுமா... இன்றொரு நாள் போதுமா... அபாரமான அசத்தல்...அசத்தல்... கானடா என் பாட்டு தேனடா.. இசை தெய்வம் நானடா..
அசையும் பொருள் நிற்கவும், நின்ற பொருள் அசையவும் செய்யும் மஹாதேவனால்தான் இவரை அடக்க முடிந்தது.
பின் குறிப்பு: இசை பற்றி பின்னூட்டமிட்டு மீண்டும் மீண்டும் என்னை சீண்டிப் பார்த்தால் இந்த சீசன் முழுவதும் நீங்கள் இசையடி பட்டு துன்பப்பட நேரிடும். அப்புறம் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..."ன்னு தன்னந்தனியாக பாடித் திரியவேண்டியதுதான். நன்றி.
பட உதவி: http://www.globalragas.com/
-
48 comments:
நித்யஷ்ரீயின் (அதே ஸ்பெல்லிங்!)இந்தப் பாடலை இப்போதுதான் முதன் முதலாகக் கேட்கிறேன்.ஆனாலும் ராகங்களை அசைய வைத்து அவர்அசையாமல் இருப்பது ஒரு குறைதான்.
nice one! keep it up!
ம்.. கிளப்புங்கள் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?!
சங்கீத சீசனில் சங்கீதப் பதிவுகள்..
எங்கயோ போய்ட்டிங்க..ஆர்.வி.எஸ்.
சங்கித சீசனில் , ராகங்களை வைத்து ஒரு பாட்டு.. அதும் நித்யஷ்ரீயின் (நானும் விட வில்லை )இனிய குரலில்..
ரசிகன்யா ..என சொல்ல வைக்கிறது..
அற்புதம்! நித்யஸ்ரீயின் குரலில் என்னை மறந்தேன் சில நிமிடங்கள். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. பதிவில் ஏன் ரிஷபத்தையும், காந்தாரத்தையும் மாற்றி எழுதி விட்டீர்கள். பாட்டை கேட்டுக் கொண்டே பதிவை எழுதினீர்களா?! :)
வீட்டில்தான் கேட்க முடியும். கேட்டுப் பிறகு சொல்லுகிறேன்
ஹூம்ம்ம்.
ரார வேணு கோபாலாவோட என் இசைப் பயணம் முடிஞ்சுருச்சு. இல்லாங்காட்டி க்ளோனிங் பண்ணி கச்சேரி பண்ற அளவுக்கு பிஸியா இருப்பேனாக்கும்:)
நித்யஸ்ரீ குரலில் இதற்கு முன் கேட்டிராத பாடல். பகிர்வுக்கு நன்றி ஆர்.வி.எஸ்.
திருவிளையாடல் பாடல் அற்புதமான பகிர்வு. மிக்க நன்றி.
முடல் முறையாக கேட்கும் பாடல். அசையாது அமர வைத்துவிட்டது. பிச்சி ஒதறிட்டாங்க.. எப்படி புடிச்சீங்க..
//இசை பற்றி பின்னூட்டமிட்டு மீண்டும் மீண்டும் என்னை சீண்டிப் பார்த்தால் இந்த சீசன் முழுவதும் நீங்கள் இசையடி பட்டு துன்பப்பட நேரிடும். //
அது நல்ல தெரிஞ்சு போச்சு...
//அப்புறம் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..."ன்னு தன்னந்தனியாக பாடித் திரியவேண்டியதுதான்//
அப்பவும் பாட்டுத்தானா..!!!!
மிகவும் ரசித்த பதிவு.. தேன் மழையில் நனைந்த காதுகள் இனிமையாகச் சொல்லும் நன்றிகள் இது..
ஒரு கேள்வி.. பலமுரளிகிருஷ்ணான்னு சொன்னதும் நினைவு வருகிறது. அவர் பாடிய அஷ்டபதிகள் கேட்டுள்ளீர்களா?
நல்ல பகிர்வு. ”ஒரு நாள் போதுமா ” சிறந்த பாடல். இது வரை கேட்காத நித்யஸ்ரீ யின் பாடலும் அருமை.
அம்பி ஒரு சங்கீத விற்பன்னர்தான்.
அதுசரி, நளின காந்தி, அமிர்த வர்ஷினி இவையெல்லாம் எங்கே அம்பி??
//இசை பற்றி பின்னூட்டமிட்டு மீண்டும் மீண்டும் என்னை சீண்டிப் பார்த்தால் இந்த சீசன் முழுவதும் நீங்கள் இசையடி பட்டு துன்பப்பட நேரிடும்.//
இப்போ நல்லா இருக்குன்னு சொல்லலாமா, வேண்டாமா.. Thinking :) :)...
//ஆட்டத்திற்கே உகந்த நாட்டைக் குறிஞ்சியா//
ராகத்தில் சிறந்தது நாட்டைக்குறிஞ்சி என்று அன்றே "கவலையை தீர்ப்பது நாட்டியக் கலையே.." பாட்டில் தியாகராஜ பாகவதர் பாடினாரே.. ஹரிதாஸா, சிவகவியா? நினைவில்லை. ஒருநாள் போதுமா என்று டி எஸ் பாலையா பாடும்போது அழகாக நடிப்பார்.
உங்கள் ராக ஆராய்ச்சிக்கு என் பாராட்டுக்கள்.
சகாதேவன்
@ஸ்ரீராம்.
அந்த ஸ்பெல்லிங்கும் அந்தம்மாவின் பாட்டு ஸ்பெல்லும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இது என்னோட இசைப் பெட்டகத்தில் இருந்து எடுத்தேன். யூட்டியில் கிடைக்கவில்லை. ;-)
@Samudra
Thank You! ;-)
@Balaji saravana
யாருக்கும் காது கிழியாமல் இருந்தால் சரி.. ;-) கருத்துக்கு நன்றி பாலாஜி ;-)
இதனை ராகம் இருக்கறது இன்னிக்குதான் தெரியும்.
ஹலோ, போஸ்டை படிச்சா போஸ்டை பத்தியும், போஸ்ட் போட்ட மன்னார்குடி வித்துவான்(வித்யா அக்கா சிரிக்காதீங்கோ, எனக்கும் சிரிப்பு வருது)பத்தியும் பேசனும், அதை விட்டுட்டு எல்லாரும் தக்குடுவோட தலையை எதுக்கு உருட்டறேள்?..:))
அண்ணா, ஒன்னு கவனிச்சேளா? நீங்க போட்ட இந்த லிஸ்ட்லையும் பொம்ணாட்டிகள் ராகம் தான் 99% இருக்கு. கனடா-ல 'டா' இருந்தாலும் ஸ்வர சஞ்சாரத்துல பாத்தேள்னா பொம்ணாட்டியாட்டமா தான் இருக்கும்!
ஐயோ ஆர்.வி.எஸ். சங்கீத சீசன் வரை உங்கள் ப்ளாக் வரக்கூடாது போலிருக்கே.
எனக்கு கர்நாடக சங்கீதம் என்றால் வாந்தியும் பேதியும் தான் வரும் !!
ஆளை விடுங்க
@பத்மநாபன்
ரசிகமணியின் வாயால் ரசிகன் பட்டம்.. வஷிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி. நன்றி ;-)
@meenakshi
மாத்திட்டேன்.. அடிக்கும் போது பாட்டை பிலாக்குப் பார்த்துண்டே எழுதினேன். அதான். நன்றி ;-) ரசித்ததற்கு நன்றி. ;-) இதுபோல் கைவசம் இன்னும் நிறைய சரக்கு இருக்கு. ;-)
@எல் கே
வீட்ல கேட்டுட்டீங்க போலருக்கு.. எப்படி இருந்தது? சூப்பர் ரைட்டா? ;-)
dear rvs
attakasamai irukkirathu
dhayavu seithu thodarungal
(indha season mudiyum varai)
(aduthathay thiruvaiyaru season varugirathu)
nandri
balu vellore
@வித்யா
கீதம் வரைக்கும் வந்து எங்க விட்டுட்டீங்க.. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கலாமே.. ;-)
@வெங்கட் நாகராஜ்
இந்த மாதிரி பல பாடல்கள் நம்ம பெட்டகத்தில் இருக்கு.. அப்பப்போ அவுத்து உடறேன்.. ;-)
@ஆதிரா
ரசித்தமைக்கு நன்றி ;-)
பி.எம்.கே தில்லானாவில் வல்லவர். கேட்டா அசந்துருவீங்க.. பிருகாக்கள் பறக்கும்.. வாயாலேயே மிருதங்கம் வாசிப்பார்.. ;-)
@கோவை2தில்லி
நன்றிங்க... வாஷிங் மிஷின் அம்மா எப்படி இருக்காங்க? ;-)
@கக்கு - மாணிக்கம்
நன்றி மாணிக்கம்.. இன்னும் நிறைய இருக்கு.. சங்கீத சாகரம்.. ;-)
@இளங்கோ
அட்டகாசமான Thinking... Hypothetical Question கேட்டுட்டேனோ? ;-) நன்றி இளங்கோ.. ;-)
@சகாதேவன்
தங்களுடைய கருத்துக்கு நன்றி. அரதப் பழைய படங்களின் பாடல்கள் ஞாபகம் இல்லை. உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க சார்!! ;-)
@தக்குடுபாண்டி
கல்லிடை பாகவதருக்கு மன்னார்குடி வித்துவானின் வணக்கங்கள். எவ்ளோ சொன்னாலும் அடங்க மறுத்தால் ஒரு அடங்காபிடாரியை கட்டி வைப்போம் ஜாக்கிரதை. பத்துஜி இவருக்கு உரிமம் வழங்கும் போது அது போல் வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ;-)
@சாய்
மிரளாதீங்க சாய்! கொஞ்சம் ஆளை உள்ள இழுத்துடுச்சு.. அதான் தொடர்ந்து இந்த மாதிரி... சாரி! ;-)
@balutanjore
நன்றி சார்! நிச்சயம் இன்னும் கொஞ்சம் தொடருவேன்.. பிடிச்சு இழுக்குது.. பார்ப்போம் எவ்ளோ தூரம் போறதுன்னு.. ;-)
//ஒரு அடங்காபிடாரியை கட்டி வைப்போம் ஜாக்கிரதை.//
ஒய் டென்சன் ஆர்.வி.எஸ்...தக்குடுக்கொழந்தை அப்படி என்ன தப்பா சொல்லிடுச்சு...சிரிப்பு வந்தா சிரிக்க கூடாதுன்னு சொன்னா என்னர்த்தம்... பி ரிலாக்ஸ்.. அப்படித்தான்னு ஒத்துகிட்டு இன்னமும் ரெண்டு மூனு விட்டுப் போன ராகாக்கள் பெயரையும் சொல்லிடுங்க...
பாலமுரளிகிருஷ்ணாவின் மென்மையான குரலில் அந்த அஷ்டபதிகள் அவ்வளவு இனிமையாக இருக்கும் RVS. நான் அடிக்கடி கேட்கும் கேசட் அது. அதனால்தான் சொன்னேன்.
//RVS said... @சாய் மிரளாதீங்க சாய்! கொஞ்சம் ஆளை உள்ள இழுத்துடுச்சு.. அதான் தொடர்ந்து இந்த மாதிரி... சாரி! ;-)//
எதுக்கு சாரி, நீங்கள் எழுதுங்கள். பிடித்தவர்கள் பலர் இருக்கும்போது என்னை போல் ஒன்று ரெண்டு இருக்கும். அதற்காக குறைக்கவேன்டாம் .
நித்யஸ்ரீயின் பாடல் அருமை.இந்தப் பாடலை இப்போதுதான் முதன் முதலாகக் கேட்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
RVS சார். உங்களை ரசிகமணி நம்ம தளத்துக்கு அழைத்திருக்கிறார், பஞ்சாயத்து ஒன்றுக்கு தீர்ப்பு வழங்க. சொம்பு ரெடி. ஆலமரந்தான் இல்லை.
"நாட்டாமை ...தீர்ப்பை மாத்தி சொல்லு" என்றெல்லாம் வம்பு பண்ண மாட்டோம். வரும்போது சின்னப் பஞ்சாயத்து தக்குடுவையும் அழைச்சுக்கிட்டு வாங்க.
நித்யஸ்ரீ ரசிகர் மன்ற தலைவரின் பாடல் பகிர்வு நன்று.
நல்லா இருக்குது.
என்ன இது எப்போதும் காலையில் எழுந்தவுடன் இந்த ப்ளாக் படிக்கற பழக்கம் எனும் துணைவியாரையும் இழுத்து பார்க்க வைத்தது நித்யஸ்ரீயின் பாட்டு.
இந்த மாதிரி தமிழ் பாட்டுக்களை தொகுத்து ஒரு பதிவாகவே போடலாம்.
நன்றி.
ரகு
@பத்மநாபன்
சரி ஜி. டென்ஷன் ஆகலை. தக்குடு பொல்லாது... என்னமா கலாய்க்கறது.. ;-)
@ஆதிரா
சரிங்க.. கேட்ருப்பேன்.. இல்லைனா கேட்டுடறேன்.. நன்றி ;-)
@சாய்
O.K Sai. ;-)
@ஜிஜி
நன்றி ஜி.ஜி. உங்கள் பதிவுக்கு வந்தேன். கமெண்ட்ட நேரம் இல்லை. ;-)
@சிவகுமாரன்
வந்து பஞ்சாயத்து பண்ணியாச்சு.. சரியா... ;-)
@புவனேஸ்வரி ராமநாதன்
என்னது ரசிகர் மன்றத் தலைவனா.. தக்குடுக்கு கோவம் வந்துடும்.. மெல்லப் பேசுங்கள்.. ;-)
@ரகு
ஹா.ஹா.. எல்லார் வீட்லேயும் அதே கதி தானா.. நன்றி சார்! ;-)
பறவைக்குரலின் ஒப்பீடு எனக்கு புதுசு....... பகிர்விற்க்கு நன்றி...
Post a Comment