ரெண்டு நாளா கடையை பெரிய நவ்தால் பூட்டு போட்டு மூடியாச்சு. டன் டன்னா வேலையை முதுகுல ஏத்தி பாரம் சுமக்க வச்சுட்டாங்க. வேலைப் பளு. ஏற்கனவே நாம கம்பெனிக்கு பில்லர் மாதிரி. இப்ப TMT பார் வச்சு கட்டின சொக்கப் பில்லர். மேற்கண்ட இரு வாசகங்கள் எனதருமை தங்கமணியின் சமீப கால திருவாசகங்கள். பின்னாடி குண்டலினி பாயும் ஏரியா முழுக்க ஒரே வலி. பதிவுலகத்தில் இருந்து ஆர்.வி.எஸ். ராஜினாமானா அப்படின்னு யாராவது புரளி கிளப்பி விட்டுடப்போறாங்கன்னு அப்பப்ப ப்ளாக் வந்து தலையை காட்டிட்டு போனாலும் முழுமூச்சோட உட்கார்ந்து காவியமோ எழுத்தோவியமோ படைக்க முடியலை. ரசிகப் பெருமக்களுக்கு ஒரு ஸாரி. நேத்து ராத்திரி மேய்தலில்.. நெட் மேய்தலில் கிடைத்த வீடியோ இது.
புகைப்படம் எடுக்கும் ஒரு பத்திரிகை புகைப்படக்காரியை வைத்து சொல்லப்பட்ட அதி அற்புதமான கருத்துள்ள படம். ஐந்து நிமிடத்தில் சக்கை போடு போட்டிருக்கிறார்கள். முதல் ஒரு நிமிடம் அப்பெண்ணின் முகத்தை மட்டுமே காண்பித்து சூழலை உருவாக்கிவிட்டு பின்பு கதையின் கருவில் புகுந்திருக்கிறார்கள். நடித்த அத்துணை பேருமே அசத்தியிருக்கிறார்கள்.
பார்த்தாச்சா!! நீங்களும் அந்தாம்மாவுடன் சேர்ந்து கண்ணீர் சிந்தினீர்களா?
******************
எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அக்கா மாலா கம்பெனியினர் இந்த கிறிஸ்துமஸ் திருநாளிற்கு வெளியிட்ட ஒரு விளம்பரம்.. கிறிஸ்துமஸ் வாழ்த்தாக இவுலகிர்க்கு....
நன்றி. ;-)
-
39 comments:
நல்லாயிருக்கு RVS.
Happy Christmas
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி சார்
கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
@கக்கு - மாணிக்கம்
நன்றி மாணிக்கம்.
உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)
@dineshkumar
நன்றி தினேஷ்... கவித ஒவ்வொன்னா எழுதுங்க.... ஒரு நாளைக்கு ரெண்டு மூணு எழுதினா நாங்கெல்லாம் எப்படி படிக்கறது... உங்களுக்கும் கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு தலை கிறிஸ்துமஸ் கொண்டாட வாழ்த்துக்கள். ;-)
@மாணவன்
நன்றி.. முதல் வருகை... உங்களோட ஃப்ரோபைல் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். கலாமுக்கு ஒரு சலாம். உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)
படமோ பாட்டோ கேட்கணும்னா நடு ராத்திரியில தான் முடியும் ... எனவே முதலில் உங்களுக்கும் சக ரசிகமணிகளுக்கும் கிறிஸ்த்மஸ் வாழ்த்துக்கள் சொல்லிட்டு
அப்பிட்கிறேன்.
அதி அற்புதமான காணொளி ,இசை,காட்சி எல்லாம் ஒரு முழு நீள படத்திற்கு உண்டான நேர்த்தி .செய்தி மிகவும் வலுவானது ,எனக்கு இந்த சந்தேகம் உண்டு ,ஏன் சில இடங்களில் பத்திரிக்கை காரர்கள் மனிதத்தை மறந்து -உயிரை காக்கும் வாய்ப்பை தவற விட்டு இதை செய்கிறார்கள் என்று .பகிர்ந்தமைக்கு நன்றி
நல்ல படமொன்றை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் அண்ணா.
படம் கலங்க வைத்து விட்டது.
Happy Christamas...
சிவாஜி (அசல் அசல்) ஒரு படத்தில் சேன்டா க்லாஸ் வேஷம் போட்டு ஒரு பாட்டு பாடுவாரே.. அதைப் பிடிச்சு போடுவீங்கன்னு நெனச்சேன். ஹ்ம்ம்ம்.. கொறஞ்ச பட்சம் டிஆர் விடியோவாவது போட்டிருக்கலாம்..
அத்தனை பிக்கல் பிடுங்கல் நடுவில் பதிவெழுதத் துணியும் உங்கள் commitment பிரமிக்க வைக்கிறது.
முதல் வீடியோ பிரமாதம்..
புத்தாண்டு வாழ்த்துக்கள் RVS.
வீடியோ சிந்திக்க வைத்தது ....
Nice Sir.. very noice the 1st video was! :) thanks for sharing... Merry christmas to u too!
//ரெண்டு நாளா கடையை பெரிய நவ்தால் பூட்டு போட்டு மூடியாச்சு. டன் டன்னா வேலையை முதுகுல ஏத்தி பாரம் சுமக்க வச்சுட்டாங்க. வேலைப் பளு. ஏற்கனவே நாம கம்பெனிக்கு பில்லர் மாதிரி. இப்ப TMT பார் வச்சு கட்டின சொக்கப் பில்லர். மேற்கண்ட இரு வாசகங்கள் எனதருமை தங்கமணியின் சமீப கால திருவாசகங்கள். பின்னாடி குண்டலினி பாயும் ஏரியா முழுக்க ஒரே வலி. பதிவுலகத்தில் இருந்து ஆர்.வி.எஸ். ராஜினாமானா அப்படின்னு யாராவது புரளி கிளப்பி விட்டுடப்போறாங்க//
******
ஹா...ஹா...ஹா...
வி.ஆர்.எஸ். சார்...
சமீபத்துல படிச்சதுலயே அட்டகாசமான வரிகள் இவை தான்..
நகைச்சுவை வழிந்தோடுகிறது... அதுவும் ஒரு வார்த்தை எழுதியிருக்கீங்க பாருங்க... சான்ஸே இல்ல (இப்ப TMT பார் வச்சு கட்டின சொக்கப் பில்லர்).....
இதுக்காகவே உங்களை எவ்ளோ பாராட்டினாலும் தகும்...
கலக்குங்க பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
மன்மதன் அம்பு விமர்சனம் எழுதலியா?
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் .
Moment of Truth: Thanks for sharing.
ஆர்.வி.எஸ்.ஐ பாக்காட்டி வெங்காயக் இல்லாத சாப்பாடு மாதிரி சப்புனு இருக்கு..
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#
உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
கண்களில் நீர் வழிந்ததை மறைக்க முடியவில்லை செத்தவள் தமிழ்ச் சிறுமி அல்ல என்ற போது துக்கம் தொண்டையை அடித்ததை என்ன வென்று சொல்ல?
கிருஸ்துமஸ் புதுவருட வாழ்த்துக்கள்.
@பத்மநாபன்
நன்றி பத்துஜி. அந்த வீடியோவை தவறாம பாருங்க.. நிச்சயம் அட்டகாசமான ஒன்று.. ;-)
@dr suneel krishnan
வணக்கம் டாக்டர். ரசித்தமைக்கு நன்றி. ;-)
@இளங்கோ
மனிதாபிமானம் என்பது பல இடங்களில் சுயமுன்னேற்றத்திர்க்காக செத்து விடுகிறது என்பதை காட்டும் அதி அற்புதமான படம். நெஞ்சில் கொஞ்சம் ஈரம் இருக்கும் அந்தப் பெண் விருது வாங்க மறுத்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. சரிதானே....
உங்களுக்கும் என் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். நன்றி ;-)
@அப்பாதுரை
சிவாஜி.. ரொம்ப ஓல்ட் எனக்கு.. ;-)
டி.ஆரை ஒரு ரெண்டு போஸ்ட்டுக்கு நான் யூஸ் பண்ணினா.. எல்லா போஸ்ட்டுக்கும் வேணும்ன்னு நீங்க அடிக்ட் ஆவீங்கன்னு நான் நினைக்கவேயில்லை.. ;-)
எதையுமே நான் கொஞ்சம் ஓவர் டூ பண்ணுவேன்னு என்னை சுற்றி இருப்பவர்கள் சொல்வார்கள்.. ;-)
@ஸ்ரீராம்.
நன்றி ;-)
@சைவகொத்துப்பரோட்டா
உங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)
@எல் கே
ஆமாம் எல்.கே. ;-)
@Matangi Mawley
Thank you. Wish you the same. ;-)
@R.Gopi
மிக்க நன்றி. உங்கள் பாராட்டுக்கள் என்னை இன்னும் ராப்பகலாக உட்கார்ந்து எழுதத் தூண்டும். நன்றி ;-)
@சே.குமார்
நன்றி குமார். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். ;-)
@சர்பத்
Thank You!! ;-)
@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
தன்யனானேன் மூவார் முத்தே. ;-)
@எம் அப்துல் காதர்
எடுத்துக்கறேன் சார்! நன்றி ;-)
@Pugalendhi
அநியாகமாக சாகும் உயிர்க்கு இனமேது மதமேது... அதுவும் சின்னச்சிறு சிறுமி.. பார்த்து முடித்து எனக்கு ரொம்ப நேரம் வலித்தது புகழ். ;-(
@மாதேவி
நன்றி தங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள். ;-)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஆர்.வி.எஸ்.
முதல் காணொளி ரசித்தேன் !
RVS,
முதல் படம் கலங்க வைத்து விட்டது. நான் நினைத்த முடிவு இருந்தாலும் - ஐந்து நிமிடத்தில் அழகு.
அப்பாதுரை சிவாஜியை சொல்லுகின்றாரா - அவர் சொல்லும் பாடலில் சிவாஜியை தூக்கி சாப்பிட்டவர் பாடகர் டி.எம்.எஸ் - "கிங்கிணி கிங்கிணி என மாதா கோவில் மணியோசை" என்ற தவப்புதல்வன் பாடல். மாலைக்கண் நோயால் தடுக்கி விழுந்தவுடன் துக்கத்துடன் பாடுவது இன்னும் அருமை.
- சாய்
அந்த ஐந்து நிமிடப் படம் உண்மையிலேயே கலங்க வைத்துவிட்டது.
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment