Sunday, March 27, 2011

மாறுதல் செய்வோம்

எங்களோட தீவுல நாங்க ஃபுட்பால் பார்க்க ரொம்ப பிரியப்படுவோம். ஆனா பாருங்க யாருமே ஒரு தடவை கூட வெளையாண்டதில்லை. நாங்க இருக்கிற மிதக்கும் தீவுல ஒரு பொட்டு நிலம் கூட கிடையாது. எல்லா இடமுமே தண்ணிதான்.  இங்க நாங்க வெளையாடற ஒரே விளையாட்டு படகுப் போட்டி தான். அப்புறம் பெருசுங்கெல்லாம் சேர்ந்து புடிச்ச மீன்ல எது பெரிசு, எது ரொம்ப வெயிட் அதிகம் போன்ற அக்கப்போர் பேச்செல்லாம் தான்.

marudhal seivom

நாங்கெல்லாம் சேர்ந்து ஒரு கால்பந்து டீம் அமைக்கனும்ன்னு ஒரு நாள் எங்க கோஷ்டியில ஒரு பையனுக்கு ஐடியா ஒன்னு தோணிச்சு. எங்க கிராமத்து ஜனங்கெல்லாம் இதை பார்த்து "இது என்ன கொடுமை?"ன்னு எண்ணி சிரிச்சாங்க." போட் கடைக்கார  போன்மீ இதைப் பார்த்துட்டு "டேய்.. பசங்களா என்ன பண்றீங்க.. கும்பலா நின்னு தையாதக்கான்னு ஆடி மீனையெல்லாம் மிரட்டி வேற பக்கம் விரட்டுறீங்க..."ன்னு சொல்லி சத்தம் போட்டாரு. அதுக்கு எங்க க்ரூப்ல இருந்த நண்பன் பன்யாத் "மாமா.. நாங்க புட்பால் டீம் ஆரம்பிக்க போறோம். எதிர்காலத்துல நாங்கதான் உலக சாம்பியன்"ன்னு சந்தோஷமா கூச்சலிட்டு சாலஞ்ச் பண்ணினான். நாங்கெல்லாம் கூட நின்னு கோரஸாக ஆரவாரித்தோம். பதிலுக்கு போன்மீ "ஹே..ஹி. உங்களை சுத்தி என்ன இருக்கு பார்த்தீங்களா? நீங்கெல்லாம் எங்க இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியுதா?"ன்னு சொல்லி கெக்கெக்கேன்னு எக்காளமா சிரிச்சாரு. 

அவரு சொன்னதும் ரைட்டுதான். நாங்க பயிற்சி செய்ய எங்களை சுத்தி மைதானம் ஏது. எங்களுக்குள்ள ஒரே எண்ணமா ஒரு புட் பால் டீம் இருந்திச்சு. ஆனா ப்ராக்டீஸ் பண்ண மைதானம் இல்லை. எல்லோரும் அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டோம். நண்பன் குண்டன் பில்லி ஆவேசமா நாம உடனடியா ஒரு பிச் தயார் பண்ணனும்ன்னு எந்திரிச்சி வீராவேசமா பேசினான். உடனே நாங்க எங்க மிதக்கும் கிராமத்தை சுத்தி இருக்கிற இடங்கள்ள இருந்து பழைய மரங்களை சேகரிக்க ஆரமிச்சோம். பழைய இத்துப்போன மீன்பிடி படகுகளை ஒன்னு சேர்த்து, அங்கங்க சுத்தி திரிந்து கொண்டு வந்த மரக்கட்டைகளை வச்சு ஸ்கூல் விட்டு வந்தப்புறம் கர்ம ஸ்ரத்தையாக ஆத்மசுத்தியுடன் பிச் தயாரிச்சோம். 

நீண்ட நாளைய கடும் உழைப்புக்கு அப்புறம் எங்களுக்கான ஒரு பிச் தயாரானது. ஓடி ஆடும் போதும் அந்த பிச் தண்ணியில நிக்கரதுனால தள்ளாடும், ஒரு கட்டை மேலேயும் இன்னொரு கட்டை கீழேயும் சமம் இல்லாமல் மேடுபள்ளமாக இருக்கும், ஏன் இன்னும் சில இடத்ல சின்னப் பசங்களா நாங்க அடிச்ச ஆணி துருத்திக்கிட்டு இருக்கும். அடிக்கடி பந்து தண்ணிக்குள்ள போய் நீச்சலடிக்க விழுந்துடும். பின்னாலையே நாங்களும் போய் தொபுகடீர்ன்னு விழுவோம். அதனால பிச் எப்போதும் தண்ணியா சொதசொதன்னு இருக்கும். வழுக்கும் வேற. பிச் ரொம்ப சின்னதா இருந்ததால எங்களோட ஃபுட்வொர்க் ரொம்ப பிரமாதமா அமைஞ்சு போச்சு. "ஹே..நீங்கெல்லாம் சாம்பியன் ஆவ முடியாதுப்பா..."ன்னு போட் கடைக்கார போன்மீ வயித்தை பிடிச்சுகிட்டு விழுந்து விழுந்து சிரிச்சாரு.

ஒரு நாள் நம்ம குண்டன் பில்லி கையில ஒரு நோட்டீஸ தூக்கி விசிறிகிட்டே ஓடிவந்தான். அது டவுனுல நடக்கப்போற "பங்கா கப்"ங்கற ஒரு நாள் கால்பந்து போட்டியின் அறிவிப்பு. இதைப் பார்த்தவுடனே எங்களுக்குள்ள பல பேர் பல விதமா பேசிக்கிட்டாங்க. "நம்மால கலந்துக்க முடியுமா? நமக்கு தகுதி இருக்கா"ன்னு ஆழமா யோசிச்சோம். கலந்து பேசினோம். கடைசியில போட்டியில கலந்துக்கறதுன்னு தீர்மானம் பண்ணினோம்.

போட்டியில கலந்துகிட்டு விளையாடறதுன்னு முடிவு பண்ணின பிறகு நாங்க டவுனுக்கு புறப்படற வேளையில போட் கடை பான்மீ "தம்பிகளா! உங்களோட ட்ரெஸ்ஸ பார்த்தா விளையாடப் போற மாதிரி தெரியலை.. இந்தாங்க இதை போட்டுக்கிட்டு போங்க..."ன்னு கையில ஒரு நீல கலர் டி-ஷர்ட்டை ஆட்டிக்கிட்டு அவரோட வழக்கமான சிரிப்பு இல்லாமல் எங்களை உற்சாகப்படுத்தும் வகையில பேசி சிரிச்சாரு. அப்பத்தான் எங்களுக்கு தெரிஞ்சுது, இவ்ளோநாள் நாங்க ப்ராக்டீஸ் பண்றதை எங்க ஊர் முழுக்க கவனமா பார்த்திருக்கு. எங்களுக்கு ஊக்கமா டிரஸ், ஷூ எல்லாம் ஊர்ல வாங்கி கொடுத்தாங்க. இன்னும் கொஞ்சம் பேர் எங்களோட மேட்ச் பாக்கறதுக்கு எங்க கூடவே டவுனுக்கும் வந்தாங்க.

மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னால எங்களுக்கு ஒரே பதட்டமா இருந்தது. ஆனா கொஞ்சம் கொஞ்சமா விளையாட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நாங்க எங்களைப் பத்தி நினைச்சதை விட நல்லாத்தான் விளையாடறோம்ன்னு தோணிச்சு. அந்தப் பழைய கட்டு மரத் தோனியிலும், பழைய தட்டுமுட்டு மரத்திலும் தயாரிச்ச பிச்ல விளையாண்டது எங்களது திறமையை நல்லா செழுமையா வளர்த்திருந்தது. அவ்வளவு குட்டியோண்டு இடத்தில விளையாண்டதினால டவுன் மைதானத்தில இருந்த  அவ்ளோ பெரிய கோல் போஸ்ட்ல எங்களுக்கு ரொம்ப சுலபமா கோல் அடிக்க முடிஞ்சுது. ஊர் மக்கள் ஆச்சர்யத்தக்க வகையில நாங்கள் செமி பைனல் வரைக்கும் முன்னேறி வந்துட்டோம்.

செமி பைனல் மிகவும் மோசமா துவங்கிச்சு. ஒரே காட்டு மழை அடிச்சு பெஞ்சுது. எங்களோட ஷூக்குள்ளலாம் ஒரே தண்ணீ. எங்களோட போட்டிபோட்ட டீம் முதல் அரையில் ரெண்டு கோல் போட்டு முன்னனியில இருந்தாங்க. நாங்கெல்லாம் மனசுடைஞ்சு நொந்து போய்ட்டோம். எப்படி இந்த கேம்ல ஜெயிக்கரதுன்னு தெரியலை. அந்த மோசமான முதல் அரை மணிக்கு பிறகு நாங்க ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். எங்களோட தண்ணீ பூந்த ஷூவை கழற்றி வீசினோம். வெறும் காலோடு விளையாட ஆரம்பித்தோம். சொன்னா நம்பமாட்டீங்க.. ரொம்ப நல்லா ஓட முடிஞ்சுது. எங்க ஊர்ல நாங்க விளையாண்டதே இப்படித்தானே. அதனால எங்களுக்கு ரொம்ப சுலபமா இருந்திச்சு. பதிலுக்கு அசராம நாங்களும் முயற்சி பண்ணி ரெண்டு கோல் தட்டிட்டோம். ஆனா, கடைசி நிமிஷத்ல அவங்க அடிச்ச ஒரு கோல்னால ஜெயிச்சுட்டாங்க. நாங்க ரொம்ப சோகமாயிட்டோம். இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்தது எங்களுக்கு சந்தோஷம்தான். எங்க ஊரே எங்களை பார்த்து ரொம்ப பெருமைப்பட்டுச்சு.  போன்மீ காலரியிலேர்ந்து "எலே.. நீங்கதான் டாப்பு..."ன்னு மகிழ்ச்சியா கத்தி மெச்சினாறு. எங்களுக்கு ரொம்ப உச்சி குளுந்துபோச்சு.

அப்புறம் ஃபுட்பால் தான் எங்க பான்யீ கிராமத்தின் முதன்மை பொழுதுபோக்கா மாறிச்சு. வழவழன்னு ஆணி குத்தாத சமமா இருக்கிற பிச்செல்லாம் தயார் பண்ணினோம்.
(இது Panyee FC -என்ற தாய்லாந்து நாட்டின் முன்னணி கால்பந்து அணியின் உண்மைக் கதை)

கீழே இருப்பது நான் இவ்வளவு நேரம் மேலே தமிழில் குதறி(உளறி) வைத்ததின் வீடியோ.


நன்றி.

நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு என்று ஒரு பின்னூட்டமாவது வரும் என்ற நம்பிக்கையில்...

பின் குறிப்பு: போன்மீ, பன்யாத் போன்ற தாய்லாந்து பேர்லாம் நான் சூட்டியது.

-

41 comments:

BalajiVenkat said...

வடை எனக்கு

அப்பாதுரை said...

ஆச்சரியமா இருக்கு - எப்படியெல்லாம் adapt செய்கிறோம் என்பதைப் பார்க்கும் போது.

RVS said...

@BalajiVenkat
ஆமாம்!! உங்களுக்கே! ;-)))

RVS said...

@அப்பாதுரை
எனக்கு புல்லரிச்சு போச்சு அப்பாஜி! அதான் இப்படி ஒரு பதிவா ரிலீஸ் பண்ணினேன். ;-)

அது ஒரு கனாக் காலம் said...

இது ஒரு பொக்கிஷப் பதிவு

இராஜராஜேஸ்வரி said...

தனம்பிக்கை ஊட்டும் பதிவுதான். பாதகங்களே சாதகங்களாக்.

vimalanperali said...

மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது சார்.இப்படியிருக்கிறதே என நம்பிக்கை செத்து விடாமல் கையூன்றி எழுந்த் வந்தவர்களின் நம்பிக்கை சரித்திரத்தில் இதுவும் ஒன்றாய்/நல்ல பதிவு நன்றி.

பொன் மாலை பொழுது said...

Very good posting RVS. I like it.

சிவகுமாரன் said...

சத்தியமாய் RVS .
உத்வேகமூட்டும் பதிவு.
அதிலும் நான் கால்பந்து ரசிகன். இந்த கிளப் ஆட்டத்தை ஒருமுறை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல் ரசித்திருக்க்றேன் .அருமை. நன்றிகள் பல

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... உண்மை கதையா? ரெம்ப நல்லா எழுதி இருக்கீங்க... நிச்சியம் தன்னம்பிக்கை தரும் கதை தான்...:)

Chitra said...

நன்றி.

நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு :-)

Chitra said...

உண்மையிலேயே ரொம்ப நல்ல பகிர்வுங்க.

RVS said...

@அது ஒரு கனாக் காலம்
ஆமாங்க.. இல்லைன்னு சொல்றவங்க மத்தியில..... பாராட்டத்தக்க முயற்சி... ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ஆமாம்.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. ;-)))

RVS said...

@விமலன்
ஆமாம் சார்! பார்த்தவுடன் எனக்கும் இதுதான் தோன்றியது. கருத்துக்கு நன்றி. ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
Thank you! நீங்க இன்னும் நடிகை கதையை படிச்சு முடிக்கலை மாணிக்கம். ;-)

RVS said...

@சிவகுமாரன்
நன்றி சிவா! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம். ;-))

RVS said...

@அப்பாவி தங்கமணி
நன்றி அப்பாவி. திடீர்னு அபூர்வமா நம்ம பக்கம் இதுபோல பதிவு விழுந்துரும்.. ;-))

RVS said...

@Chitra
நன்றிங்க சித்ரா! ;-))

சக்தி கல்வி மையம் said...

மிகவும் பயனுள்ள பதிவு...

பத்மநாபன் said...

மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம் ...அழகா தமிழ்ப்படுத்தி பதிவுச்சாதனை எற்படுத்தியுள்ளீர்கள்...

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
கருத்துக்கு நன்றி கருன்! ;-)

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி! என்ன ரோம்..............ப பிசியா? ;-)))

Madhavan Srinivasagopalan said...

வித்தியாசமாகத் தகவல் தறீங்க.. நன்றி..

இளங்கோ said...

:)

எல் கே said...

செம இன்ட்ரஸ்டிங் . எனக்கு அப்டேட் வரது இல்லை. உடனடியாக கவனிக்கவும்

ஸ்ரீராம். said...

பதிவு ஊட்டும் தன்னம்பிக்கை நல்ல நன்றி....

அமைதி அப்பா said...

தன்னம்பிக்கை அளிக்கும் பதிவு. உங்களுக்கு மட்டும் எப்படித்தான், இந்த மாதிரி காட்சிகள் கண்ணில் படுகிறதோ?!
பாராட்டுக்கள்.

மோகன்ஜி said...

என் பிரிய ஆர்.வீ.எஸ்! உள்ளேன் ஐயா! மிக அற்புதமாய் நம்பிக்கையை பதித்திருக்கிறீர்கள். எனக்கு ரொம்ப பேச நேரம் இல்லை. இதன் பின்னாடியே ஒரு நடிகை எனக்காக காத்திருக்கிறாள். படிக்காம விட்டதை பாராட்டாமல் எனக்கைக் காத்திருக்கிறாள். பார்த்து விட்டு வந்து பேசுறேன் பிரபோ!

பத்மநாபன் said...

//பத்துஜி! என்ன ரோம்..............ப பிசியா? ;-))//
நிறுவன மாற்றம் ,கொஞ்சம் பிசி படுத்தியுள்ளது...கூடவே வலை வாய்ப்பும் சேர்ந்து படுத்துகிறது...

raji said...

//நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு என்று ஒரு பின்னூட்டமாவது வரும் என்ற நம்பிக்கையில்...//

வாழ்க்கையில உயரத்தை தொட தன்னம்பிக்கை மட்டும் போதாது.
அந்த தன்னம்பிக்கையை செயலாக்கும் கடும் உழைப்பும் முயற்சியும் தேவை
என்பதையும் சேர்த்து உணர வைக்கும் ஒரு அசாதாரணமான பதிவு.

உண்மையில் இந்த தன்னம்பிக்கை பதிவிற்கே தாங்கள் எவ்வளவு
உழைக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் உணர்வோம்.

hats off sir

Sivakumar said...

'பிச்'சி உதறிட்டீங்க!

RVS said...

@Madhavan Srinivasagopalan
நன்றிங்க மாதவன்! ;-)

RVS said...

@இளங்கோ
;-);-);-);-);-);-)

RVS said...

@எல் கே
Thanks. அப்டேட் விவகாரம் என்னன்னு தெரியலை.. இங்க எல்லாம் ஒழுங்காத்தான் இருக்கு. ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
அசத்தல் கமென்ட் ஸ்ரீராம். ரசித்தேன். நன்றி. ;-)

RVS said...

@அமைதி அப்பா
நன்றி அ.அ. ;-))
நீங்கள் எல்லாப் பதிவுகளும் இப்படி போடுவீங்க.. நான் வருஷத்ல ஒன்னு இப்படி.... ;-))

RVS said...

@மோகன்ஜி
ஜி! ரொம்ப நாளா காணோமேன்னு ஒரு கவலை எனக்கு..
கருத்துக்கு நன்றி.
நடிகை காத்திருக்கிறாள்! டைட்டில் நல்லா இருக்கு.. ;-))

RVS said...

@பத்மநாபன்
ஓ.கே ஜி!! நன்றி ;-))

RVS said...

@raji
கருத்துக்கு நன்றி ராஜி! ரொம்ப பிடித்திருந்தது... அதான் என்னோட சொந்த தமிழில் தட்டச்சினேன். ;-))

RVS said...

@! சிவகுமார் !
கமெண்ட்ல என்னை 'நச்' சிட்டீங்க... ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails