Thursday, June 30, 2011

உரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்றுநறுக் - 3 
நிச்சயதார்த்ததிற்கு பிறகு.....
அவள்: அப்பாடி... இதுக்கு தான் ரொம்பநாளா நான் தவம் கிடந்தேன்.


அவன்: நீ என்னை பிரிந்துவிடுவாயா?

அவள்:  ச்சே.ச்சே.. கிடையவே கிடையாது 

அவன்: நீ என்னை விரும்புகிறாயா? 

அவள்: நிச்சயமாக. செய்தேன், செய்கிறேன். இன்னமும் செய்வேன்

அவன்: நீ என்னை ஏமாற்றினாயா? 

அவள்: ச்சே.ச்சே. அதற்கு நான் செத்தே போய்விடுவேன்.. 

அவன்: எனக்கு ஒரு உம்மா கொடுப்பாயா

அவள்: நிச்சயமாக. அது எனக்கு பேரின்பம். 

அவன்: நீ என்னை ஹிம்சிப்பாயா? 

அவள்: ச்சே.ச்சே. நான் அதுபோல ஆள் இல்லை... 

அவன்: நான் உன்னை நம்பலாமா? 

அவள்: உம். 

அவன்: ஹோ டார்லிங்.. 


திருமணத்திற்கு பிறகு அவளும் அவனும் என்ன பேசிக்கொண்டார்கள்?

கடைசியில் பார்க்கவும்..

******
போன பதிவில் உங்கள் ரசிகனைப் பார்த்தோம். இந்தப் பதிவில் ஒரு ரசிகன் இருக்கிறார். பர்மிங்க்ஹாமில் இருக்கும் புதுச்சேரிக்காரர். காதல் ரசிகன் என்று முத்தாய்ப்பாக சொல்லலாம். சின்ன சின்ன தப்புப் பண்ணுவேன் என்று ப்ளாக் சுயவிவரத்தில் சொல்கிறார். அதுவே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஈர்க்கிறது. துரையின் லேட்டஸ்ட் பொய்க்கால் காதலி.

கரந்தையில் பேராசிரியராக இருக்கிறார் ஹரணி. ஹரணி பக்கங்கள் என்ற வலைப்பூவில் தமிழேற்றுகிறார். தூய தமிழில் அழகாக எழுதுகிறார். என்றைக்காவது அத்தி பூத்த்தார்ப்போல நான் நன்றாக எழுதினால் வந்து நல்லாயிருக்கு என்று கருத்துரைப்பார். கடிதம் எழுதுவது பற்றி மடலேறுதல் என்று இவர் எழுதிய பதிவு, அந்தக்காலத்தில் கடிதாசி போட்ட எல்லோருக்கும் உரைக்கும். 

ஆதிரா ஒரு தமிழ் டாக்டர். தமிழுக்கு டாக்டர் இல்லை பைந்தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் பற்றி இருப்பவைகளை அந்தந்த வரிகளை மேற்கோள் காட்டி ஔஷதக் கட்டுரைகள் எழுதும் டாக்டர். அவை எல்லாம் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளியாவது சிறப்பு. நெல்லிக்கனியின் விசேஷ மருத்துவக் குணங்கள் பற்றி தேவலோக அமுதத்துளி என்று எழுதிய பதிவு இங்கே.

சிமுலேஷன் படைப்புகள் என்று எழுதுகிறார் சுந்தரராமன். நிறைய இபாவின் நூல்களை படித்து நூல்நயம் எழுதுகிறார். சில புதிய புத்தகங்கள் என் போன்ற புழுக்களின் கண்களுக்கு தென்படுகிறது. பத்து பதினைந்து சைட் வைத்திருக்கிறார். வலையுலக வலைப்பூ கிருஷ்ணன் போலிருக்கிறது. கர்நாடக சங்கீதம் கரைத்துக் குடித்திருப்பார் போல தெரிகிறது. சினிமாப் பாடல்களில் கர்நாடக சங்கீத மெட்டுக்கள் பற்றி புஸ்தகம் வெளியிட்டிருக்கிறார்.

ரேகா ராகவன் ஒரு பக்க கதை எழுதும் வித்தகர். நிறைய அவரது சிறுகதைகளை பார்த்து வியந்திருக்கிறேன். இருநூறு முன்னூறு வார்த்தைகளில் சாகசமாய் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். ஒரு மாதிரி இண்டர்வியு இங்கே. 

நானும் ஒரு நாள் இலக்கியவாதி ஆகவேண்டும் என்ற பெருந்தீ குபுகுபுவென்று உள்ளே பற்றி எரிகிறது. கீழே இருக்கும் பெரும் பேனாக்காரர்களின் எழுத்துக்களை படித்தால் மனதில் அச்சமும் ஐயமும் எழுகிறது. இரும்படிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலை என்றாலும்... பாழாய்ப் போன மனது கேட்காமல் அவ்வப்போது நான் சைட் அடிக்கும் திருத் தளம்.
 உலக இலக்கியம். என்ற வலைத்தளத்தினில் இந்த இலக்கியச் சேவை புரியும் "அழியாச் சுடர்கள்" ராம் புகழ் இணையதள வரலாற்றில் மங்காப் புகழ் பெற்றிருக்கும்.

******
தி.பிறகு..

திருமணத்திற்கு பிறகு ஆதர்ஷ தம்பதிகளாக இவர்கள் இருவரும் அன்னியோன்யமாக சம்பாஷித்தது கீழிருந்து மேல்.


-

13 comments:

ஸ்ரீராம். said...

எனக்கு புதிய பக்கங்கள். அங்கு போய்ப் பார்த்தால் ஒன்று பத்மநாபன் கமெண்ட் இருக்கும் அல்லது எல்கே கமெண்ட் இருக்கும்!

இராஜராஜேஸ்வரி said...

தொகுப்புகளும், ஆதர்ஷ தம்பதியரும் அருமை. பாராட்டுக்கள்.

பத்மநாபன் said...

ஆர் .வி .எஸ் எனும் விளையாட்டு பிள்ளைக்குள்ளே இவ்வளவு பெரிய அறிவுஜீவி திமிர திமிர ஒளிஞ்சு இருக்கிறாரா ? இனி பார்த்து நடந்துக்கணும் ...
ஸ்ரீ ... ... எல் .கே சரி ரௌண்டு மாஸ்டர் ... நான் ரொம்ப லிமிடெட் சிக்கி சிக்கி மெதுவா சுத்துவேன் ....

RVS said...

@ஸ்ரீராம்.
கரெக்க்டுதான்... ஆனால் இருவருமே சூஸி... ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம்! ;-)

RVS said...

@பத்மநாபன்
அந்த டயலாக்க வச்சு முடிவு பண்ணிடாதீங்கண்ணா!! அது மெயில்ல வந்தது.. நான் டிஸ்கி போட மறந்துட்டேன்.. நன்றி. ;-))

Madhavan Srinivasagopalan said...

மேலிருந்து கீழ் -- ஒக்கே.
கீழிருந்து மேல் சூப்பர்

Simulation said...

ஆர்.வி.எஸ், தன்யனானேன். - சிமுலேஷன்

RVS said...

@Madhavan Srinivasagopalan

Thanks Madhavaa! ;-))

RVS said...

@Simulation

It is my pleasure to introduce you!! Thank you. ;-))

Unknown said...

உரையாடல்

மேலிருந்தது கீழ்
கீழிரிருந்து மேல்
விண்டது, கண்டதா? கொண்டதா?

அறிந்திட ஆவல்!

புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்

Ramprasath said...

நன்றி ஆர்விஎஸ்

Aathira mullai said...

ஜூன் 2011ல் எழுதிய பதிவுக்கு இப்போது கருத்தா என்று கேட்காதீர்கள் RVS. என் கண்களில் பட்டது இப்போதுதானே. எதையோ தேட கண்ணில் பட்டது இது. என்னைப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். ம்ம்ம் அந்தக் காலம்... அந்த நட்புக் காலம்.... அந்த மகிழ்வான நட்புக் காலம் மீண்டும் எப்போது வரும்???

நன்றி RVS

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails