Sunday, January 1, 2012

நலந்தானா...


தலைப்பிலிருந்து ஆரம்பித்தால் அடுத்த வரி உடலும் உள்ளமும் நலந்தானா. இந்த ப்ளாக் சரித்திரத்தில் இவ்வளவு நாள் கடையை மூடிவிட்டு நான் வனாந்திரம் சென்றதில்லை. சிட்டுக்குருவி தலையில் எட்டு மூட்டை அரிசியை ஏற்றிவிட்டாற் போல இருபது நாட்களாக வேலை அதிகம். வீட்டில் இருக்கும் ஒரே ஒரு அடாசு கணினிக்கு ஒன்பது பேர் இழுபறி போட்டி. ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுந்தும் ஆசுவாசமாய் உட்கார்ந்து எழுத நேரம் வாய்க்கவில்லை. மிக்ஸர், ஓமப்பொடி வகையறா ”வாய்மூடா” தீனியைக் கொரிப்பது போல இந்த ஃபேஸ்புக் வேறு பிசாசாய் பிடித்துக்கொண்டது.

அவ்வப்போது மனதில் எழும் எண்ணங்களையும், க்ஷேம லாபங்களையும் ஓரிரு வரிகளில் சுளுவாக முகப்புஸ்தக சுவரில் கிறுக்கி நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள ”உரித்த வாழைப்பழம்” சாப்பிடும் சௌகரியத்தில் இருப்பதால் பிறவிச் சோம்பேறியான நான் அங்கேயே கொட்டாய் போட்டு குடியிருந்துவிட்டேன். 2012-ல் நிறைய எழுத வேண்டும் என்று சத்தியப் பிரமாணம் எடுத்திருக்கிறேன். பயப்படவேண்டாம். உங்களுக்கும் எனக்கும் ஆண்டவன் துணையிருப்பார்.

சென்ற ஆண்டும் பம்பரமாக சுற்றி பல வேலைகள் பார்க்கவேண்டியதாயிற்று. வழக்கம் போல வீட்டிலும், ஆபீஸிலும் என்னை ஸகித்துக்கொண்டவர்களுக்கு ஒரு தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். வருஷாரம்பத்தில் இன்னென்ன இப்படியிப்படி செய்யவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்தாலும் ஜெட் வேகத்தில் காலம் இறக்கை கட்டிப் பறக்க நிறைய மனோரதங்களை செயல்படுத்த முடியவில்லை. சென்னையில் இருபுறமும் ஆவேசமாகக் கட்டியணைத்து வரும் வண்டிகளுக்கு முத்தமிடாமல் சென்றுவருவது கம்பி மேல் நடக்கிற காரியம். 2011-ல் அந்த கழைக்கூத்தை செம்மையாக நிறைவேற்றியது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

செடன் ஜாதிக் கார் வாங்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறியது. மாருதி கம்பெனிக்காரர்கள் மூலைக்கு ஒரு சர்வீஸ் செண்டர் ஓப்பன் செய்தும், இந்திய ரோடுகளின் தர நுட்பங்கள்  அறிந்தவர்கள் என்பதாலும் அவர்களிடமே டிசையர் வாங்கி என் டிசையரை பூர்த்திசெய்துகொண்டேன்.

சென்ற ஆண்டின் இறுதியில் சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றது இன்னும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. முகப்புஸ்தக நண்பர்கள் பழக்கம் அதிகரித்திருக்கிறது. புத்தகப் புழுவாக இருப்பவர்களின் சங்காத்தம் கிடைத்திருக்கிறது.

இதற்கு மேல் எழுத இப்போது நேரமில்லை. பிரம்மமுஹூர்த்ததில் எழுந்து மாங்காடு காமாக்ஷி தரிசனம். இப்போது கண்ணைச் சுழற்றுகிறது. இந்த வருடத்தில் நிறையவும் நிறைவாகவும் எழுத முயல்கிறேன். கருத்துரைத்து ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் நெஞ்சுக்கினியவர்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

WISH YOU A HAPPY & PROSPEROUS
NEW YEAR


பின் குறிப்பு: இப்பதிவின் பூர்வாங்கத்தில் இருப்பது அடியேன் கிளிக்கிய 2011-ன் கட்டக் கடைசி சூரிய அஸ்தமன வானம். ”தானே” புயலடித்து ஓய்ந்து எட்டிப் பார்த்த நீலவானத்தை வரிக்குதிரையாக்கிய மேகக் கூட்டம்.

கடைசி பட உதவி: http://www.stunningmesh.com

-

48 comments:

இராஜராஜேஸ்வரி said...

”தானே” புயலடித்து ஓய்ந்து எட்டிப் பார்த்த நீலவானத்தை வரிக்குதிரையாக்கிய மேகக் கூட்டம்.

அருமையாகத்தானே இருக்கிறது!..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு, தொடர்ந்து எழுதுங்கள்,

பத்மநாபன் said...

இனிய நல்வாழ்த்துகள் ஆர்.வி எஸ் ... ஆம் முகப்புத்தகத்தில் எல்லா விஷயங்களையும் போட்டு தாக்கு தாக்குகிறிர்கள் ... வலைபூவிலும் கலக்கு கலக்கி பரிசுகளை அள்ளியுள்ளீர்கள்... இவ்வருடமும் தாக்கி கலக்க வாழ்த்துகள் ....

Matangi Mawley said...

நீங்கள் க்ளிக்கிய புகைப்படம் அருமை!! 2012 வில்-- post மழை பொழியட்டும்!!
wish you and your family a very Happy New year! :)

பொன் மாலை பொழுது said...

மன்னார் குடி மைனர் வாள் , எப்படி இருக்கீங்க? நீண்ட நாலா காணோம் என்றிருந்தேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

very good.. we all welcome you sir

Yaathoramani.blogspot.com said...

தங்கள் தீர்மானம் எங்களுக்கு மகிழ்வூட்டுகிறது
தொடர்ந்து பதிவுகள் தர வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 2

அப்பாதுரை said...

வாங்க.. வாங்க.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல் கே said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

புத்தாண்டு வாழ்த்துகள்.
தொடர்ந்து கலக்குங்க.....

சத்ரியன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2011-ன் கடைசி அந்திப்பொழுதையும் படம் பைடிச்சிட்டீங்களா?ம், வானம் இன்னும் சிவக்கும் போது எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்குமோ?

’உடான்ஸ்’ பரிசை தட்டி வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் :-)

படம் ஜூப்பரா இருக்கு.

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம். உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@ராம்ஜி_யாஹூ
நன்றி! :-)

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! :-)

RVS said...

@Matangi Mawley

போஸ்ட் மழை பொழிய வாழ்த்தியமைக்கு நன்றி மாதங்கி! உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
புத்தாண்டு வாழ்த்துகள். உங்களையும் ரொம்ப நாளா காணோமே மாணிக்கம். :-)

RVS said...

@சங்கர் நாராயண் @ Cable Sankar
Thank you Sir! :-)

RVS said...

@Ramani
வாழ்த்துக்கு நன்றி சார். உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@அப்பாதுரை
தலைவரே! புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தியா விஜயம் எப்போது? :-)

RVS said...

@எல் கே
நன்றி எல்.கே! புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@கோவை2தில்லி
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சகோ! :-)
உங்களுக்கும், நண்பர் நாகராஜிர்க்கும் மற்றும் குழந்தைக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@சத்ரியன்
வாழ்த்துகளுக்கு நன்றி! இது ஸ்ட்ரீட் ஃபோட்டோகிராபி. ரோட்டில போயிக்கிட்டு இருந்தப்ப க்ளிக்கியது. அந்த வரிவரி மேகத்திற்காக ப்ரதர். :-)

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க சாரல். உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

Unknown said...

மன்னை மைனர் வாழ்
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

குரு said...

புத்தாண்டு வாழ்த்துகள் சார்

Anonymous said...

போட்டோ க்ளிக் அருமை. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

Anonymous said...

RVS said...
@சங்கர் நாராயண் @ Cable Sankar
Thank you Sir! :-)

என்னது கேபிள்..சாரா? இந்த வருஷம்தான் 1st Year அரியர்ஸ் எழுதப்போராறு.

ஹ ர ணி said...

பயப்படவேண்டாம். உங்களுக்கும் எனக்கும் ஆண்டவன் துணையிருப்பார்.

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு ஆர்விஎஸ். ரசித்தேன்.

2011-ல் அந்த கழைக்கூத்தை செம்மையாக நிறைவேற்றியது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

சுவையான சொல்லர்ட்சி. அருமை.
முகப்புஸ்தக

முகநுர்ல் என்றும் எழுதலாம். வேண்டுகோள்தான் இது.

தக்குடு said...

உங்களை மாதிரி லகடுகள் எல்லாம் சோம்பல் பட்டுண்டு மூஞ்சி புஸ்தகத்துல இருக்கர்தால அது மேல ஒரு கோபவம் எனக்கு உண்டு. இந்த வருஷமாவது மாதவியோடையே எப்போதும் ஜல்சா பண்ணிண்டு இருக்காம கண்ணகியோட வாழ்க்கை நடத்தர வழியை பாருங்கோ!!

குறிப்பு - நான் சொன்னது ப்ளாக்கை பத்தி மட்டுமே! :P

A.R.ராஜகோபாலன் said...

நலம் நாடுவதும் நலமே வெங்கட்
ராஜபாட்டை ராஜகம்பீரமாய் தொடங்கட்டும்

வெங்கட் நாகராஜ் said...

படமும் பகிர்வும் நன்று...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மைனரே.....

வெங்கட்
புது தில்லி

மைனரே, நாகராஜன் என்பது என் தந்தை பெயர். அதைத் தான் பதிவின் பெயரில் உபயோகித்துள்ளேன்.

இளங்கோ said...

Happy new year Anna..

ஸ்ரீராம். said...

மீண்டு(ம்) வந்தாச்சா...புத்தாண்டு வாழ்த்துகள்....

RVS said...

@siva sankar
புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துகள். :-)

RVS said...

@Guru
உங்களுக்கும் எனது வாழ்த்துகள். நன்றி. :-)

RVS said...

@! சிவகுமார் !
வாழ்த்துக்கு நன்றி! கேபிளை சார் என்று விளிக்கக்கூடாதா? தெரியாதுங்க... :-))

RVS said...

@ஹ ர ணி
முகநூல்.... நன்றாகத்தான் இருக்கிறது. தமிழுக்கு தடையேது. நன்றி. உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார்! :-)

RVS said...

@தக்குடு
சரிங்க... அப்படியே ஆகட்டும். இப்போதைக்கு வேற எதுவும் சொல்லலை... :-))))

RVS said...

@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி! உனக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். :-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஓ.கே. தல. புத்தாண்டு வாழ்த்துகள். :-))

RVS said...

@இளங்கோ
யாரது இளங்கோவா? இந்தியாவில தான் இருக்கீங்களா? புத்தாண்டு வாழ்த்துகள்.. :-))))))

RVS said...

@ஸ்ரீராம்

நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள். :-)

RVS said...

@Rathnavel
நன்றி சார்! உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள். :-)

Madhavan Srinivasagopalan said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

என்னவோ தெரியல.. இப்பலாம் பிலாகுல எழுதுறதுக்கு அவ்வளவா ஈடுபாடு கொறஞ்சிடுத்து எனக்கு..

RVS said...

@Madhavan Srinivasagopalan
வாழ்த்துகள் மாதவா! :-)

Vetirmagal said...

சேவை ரம்னாவைப் பார்த்த பிறகு, இமவம் ஒரு வட மாநில இனிப்பாக இருக்கலாம் என்று நினைத்தேன்!

beautiful picture.

Vetirmagal said...

OOPs.. spelling mistake.சேவை ரத்னா என்று படியுங்கள், ப்ளீஶ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails