Saturday, March 12, 2011

ஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை - III

நீங்க இந்தப்பக்கம் புச்சா வாரீயளா.. நேற்றைக்கும் முந்தா நாளிலும் நடந்த கதைகளை ஒரு தடவ எட்டிப் பார்த்துட்டு வந்துருங்களேன். தொடர கொஞ்சம் ஈசியா இருக்கும்.

**************************** அத்தியாயம் மூன்று***************************

நம்ம கிட்டு ஏமாந்த சோனகிரியாகக் கூடாது! தன்னால் ஆனதை நிச்சயம் செய்யவேண்டும் என்று வைராக்கியமாக உறுதிபூண்டார். "சரி.. மதி.. நான் வரேன்.." என்று புன்னகையோடு சௌஜன்யமாக அவனிடம் சொல்லிக்கொண்டு விரக்தியில் வீட்டுக்கு திரும்பினார் சந்தானம். அவருடைய வயசான காலின் கிழட்டு மிதியில் அந்தப் பழைய சைக்கிள் க்ரீச் என்று சந்தர்ப்பத்துக்கேற்ற முகாரி ராகம் பாடியது. இன்னொரு ரமா அந்தத் தெருவில் உருவாகக் கூடாது என்று தீர்மானமாக எண்ணினார். இந்த இடத்தில் ஒரு சின்ன கருப்பு-வெள்ளைக் காட்சியை வாசகப் பெருமக்களுக்கு ஓட்டிக் காட்டியே ஆகவேண்டும். சந்தானம் சாரின் முதல் பெண் ரமா படிக்கும் எல்லா வகுப்பிலும் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் துடிப்பான முதன்மை மாணவி. எடுப்பான பளிச்சென்ற உருண்டையான முகம். கர்ப்பகாலத்தில் குங்குமப்பூ சேர்க்காமலேயே கௌரி மாமிக்கு காஷ்மீர் தக்காளி போல பிறந்தவள். லிப்ஸ்டிக் தேவைப்படாத செவ்வரி ஓடிய உதடுகள். ஹை ஹீல்ஸ் போடாமலேயே சராசரிக்கும் சற்று அதிகமான உயரம். கைகள் துருதுரு, கண்கள் குறுகுறு, கால்கள் பரபரவென்று சர்வ லட்சணம் பொருந்திய பெண்ணுக்கு பெண்ணே இச்சை கொள்ளும், பிரம்மன் அளவெடுத்து தைத்த அழகு தேவதை அவள்.

கல்லூரியில் அவளுடைய இம்மிர்க்கும் உம்மிர்க்கும் சேவகம் செய்ய நிறைய ஆண்கள் தயாராக காத்திருந்தார்கள். ஆனால் படிக்கும் போது பாதை தவறிய வெள்ளாடு ஆகிவிட்டாள். ஷேக்ஸ்பியரின் பதமான elopedக்கு அர்த்தம் தெரிந்து கொண்டபோது கச்சலாக இருக்கும் பீடி சிகரெட் விற்கும் ஒரு நடைபாதை பொட்டிக்கடைக்காரனை ஒருநாள் பகலோடு பகலாக ஓஓஓ....டிப் போய் கலியாணம் செய்துகொண்டாள். துயரத்தில் வாடிய சந்தானம் சாரை வெகுநாட்கள் ஊரில் துக்கம் விஜாரித்தார்கள். "அவ என் பொண்ணே இல்லே! அந்த ஓடுகாலிய அப்பவே தல முழுகிட்டேன்." என்று கண்டந்துண்டமாக அறுத்துச் சொன்னவுடன் தான் ஊரார் அந்தப் பேச்சை கைவிட்டார்கள். கடைத்தெரு தாண்டி ஆளே இல்லாத ரோட்டில் "பப்பபாம்..பாம்..பப்பாம்" என்று காற்றையும் காதையும் ஒருசேரக் கிழித்த டவுன் பஸ் ஹாரன் அவரைப் பழங்கால நினைவுகளிலிருந்து நிகழ்காலத்திற்கு மீட்டெடுத்தது. புழுதிப் புயலில் கிளம்பிய தூசி கண்களில் விழ கசக்கிகொண்டார். கண் கலங்கியது.

manikkoonduவெள்ளைக்கார துரைமார்கள் காலத்து பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு நான்கு என்று நேரம் காட்டியது. பஞ்சாயத்து ஆட்களின் ஒரே உருப்புடியான காரியம் அந்த கடிகாரத்தை சரியாக ஓட விடுவதுதான். எல்லா மீட்டிங்கிலும் பெருமையாக இவர்கள் மார் தட்டிக் கொள்ளும் ஒப்பற்ற சாதனை பஸ் ஸ்டாண்ட் கடியாரத்தை நிற்காமல் சுழல விடுவது ஒன்றுதான். கான்வென்ட் விட்டு பிள்ளைகள் சந்தோஷமாக வீடு திரும்பினார்கள். மணியடித்து ஜாக்கிரதையாக ஓரமாக சைக்கிளை உருட்டினார் சந்தானம். பிள்ளைகளுக்கு பதிலாக புஸ்தக மூட்டைகளை சுமந்து பணியாற்றி தியாக சீலர்களாக சில அம்மாக்கள் தெருவோரத்தில் எந்த மணிக்கும் அசங்காமல் ஆடியபடி சென்றுகொண்டிருந்தார்கள். சூரியன் நாள் பூராவும் அசராமல் உழைத்து அயர்ந்து விட்டான். தன் கிரணங்கள் ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு அடுத்த தேசத்துக்கு தன் நடையை கட்டினான்.

"கௌரீ..." என்று வாயார கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் சந்தானம். வள்ளுவனின் வாசுகியாய் ஓடோடி வந்தாள் மாமி. "ஏன்னா கூப்டேளா!!" என்று ஈரக் கையை முந்தானையில் துடைத்துக்கொண்டே கேட்டாள்.
"உன்னண்ட ஒன்னு சொல்லணும்..."
"என்ன?"
"இல்ல.. எனக்கு தாங்கலே... அதான் யார்ட்டயாவது சொல்லிப்பிடனும்ன்னு..."
"என்னாச்சு.. யாருக்கும் உடம்பு சரிப்படலையா?"
"இல்ல."
"வேறென்ன?"
"பெத்தவாளுக்கு இவா செய்யற கைம்மாறு இருக்கே ......"
"என்ன ..யாரு.. சரியா சொல்லித்தொலையுங்கோளேன்.. அடுப்புல பால் காயறது.. பொங்கிக்கொட்டிடப் போறது. லோக க்ஷேமத்துக்கு கவலைபடரத்துக்கு உங்களை விட்டா இந்தூர்ல ஆள் யாரு.." சகட்டுமேனிக்கு பேசினாள் மாமி.
"நம்ம விஜி இல்ல.."
"ஆமாம்.. உங்க சிநேகிதர் கிட்டு பொண்ணு...  இருக்கா.. என்னாச்சு அவளுக்கு.."
"ஃபைனான்ஸ் மதியை.. ஏதோ.. கசமுசா போலருக்கு..."
"வாய வச்சுண்டு சும்மா இருங்கோ. ஏதாவது தத்துபித்துன்னு பேசாதீங்கோ.. அவாத்ள சண்டைக்கு வந்துடப்போறா.."
"இல்லடி. நான் நேர்ல பார்த்தேன். அவன் காலையில ஃபயர் எஞ்சின் மாதிரி ரோட்ல மணியடிச்சுன்டே போறான் இந்தப் பொண்ணு பார்த்து பகபகன்னு சிரிக்கறது, அது கம்ப்யூட்டர் கிளாஸ் எடுக்க நடந்து போறது இவன் மோப்பம் பிடிச்சுண்டு பின்னாலையே சைக்கிள்ள போறான் அப்புறம் அந்தப் பொண் பாடம் எடுக்கற இடத்துக்கே போய் கீழே மரத்தடில உட்கார்ந்து காத்துக்கிடக்கான்..."
"ஓ.ஹோ. இதான் சங்கதியா? இன்னிக்கி பூரா உங்களுக்கு இந்த சி.ஐ.டி வேலையா... அதான் கடத்தெரு போய்ட்டு வர இவ்ளோ நாழியா?" என்று பொரிந்தாள் மாமி.
"ச்சே.ச்சே.. போடி அசடு.. சந்தர்ப்பமா அமைஞ்சது... கண்ணாலப் பார்த்தேன். மனசு ஆடிடுத்து.. கிட்டு நிச்சயமா தாங்கமாட்டான் இதை.. குழந்தை டி அவன். இந்தப் பொண்ணும் ஏமாந்துபோய் நம்ப ரமா மாதிரி ஆயிடுத்துன்னா... பைசாக்கு பிரயோஜனம் இல்லாதவனை கட்டிண்டு இடுப்புல ஒன்னை ஏந்திண்டு கையில ஒன்னை பிடிச்சுண்டு.... இப்பக் கிடந்து ஒரு வாய் சோத்துக்கு கஷ்டப்படறாளே..இன்னொரு அப்பனுக்கு இந்த கதி வேண்டாம்டி.. ஈஸ்வரா.. " என்று குரல் தழுதழுத்தார் சந்தானம்.

மாமிக்கு அதற்கு மேல் பேச திராணியில்லை. பொலபொலவென்று உதிர்ந்த கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டு விடுவிடுவென்று சமையல்கட்டிற்கு சென்றுவிட்டாள்.

சந்தானம் சார் பஞ்சபாத்திரம் உத்திரிணியை எடுத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் சந்தியாவந்தனம் செய்யப் போய்விட்டார். துளசி மாடம் முன்னால் குந்தி உட்கார்ந்து மந்திரத்திற்கு கையை அசைத்து வாயால் முனுமுனுத்தாரே தவிர மனசெங்கும் ஒரு வித தீராத சோகம் ஆக்கிரமித்திருந்தது. அந்திச் சூரியன் மறைந்து லேசாக இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. பெண்ணைப் பற்றிய வேண்டாத நினைவுகள் வந்துப் படுத்தின. தோளில் அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு பூணூலின் பிரம்ம முடிச்சை கட்டை விரலிடிக்கில் இடுக்கிக்கொண்டு "ஓம்.. பூர்பவத்ஸுவா..." என்று காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது கௌரி மாமி பின்னால் வந்து "காப்பி ரெடி" என்று தண்ணீர்த் தொட்டி மேலே கொண்டு வந்து டம்ப்ளரை வைத்து டபராவால் மூடினாள்.

சந்தியை முடித்துவிட்டு காபியை குடித்தார். காலையில் கிட்டுவாத்தில் ருஜித்த காப்பி இப்போது கசந்தது. ஒரு சமயம் ருஜித்தது மறுசமயம் வெறுப்பது, வெறுப்பது மீண்டும் ருஜிப்பது இதுதானே இந்த உலகத்தின் வாழ்க்கை சுவாரஸ்யம். கௌரி மாமி சி.ஐ.டி என்று சொன்னது மண்டைக்குள் உரைத்தது. எழுந்து சட்டையை போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினார் சந்தானம். மாமி கூடத்திலிருந்து ஓடிவந்து
"போம்போது எங்கேன்னு கேக்கப்படாது..." என்று இழுத்துக்கொண்டே கேட்காமல் கேட்டாள்.
"மனசு சரியில்லை... சித்த கைலாச நாதர் கோயில் வரைக்கும் போயிட்டு வரேன்..." என்று வீதியை பார்த்து சொல்லிவிட்டு மெதுவாகக் கிளம்பினார். இந்தமுறை சைக்கிள் க்ரீச்சிட்டது  பூனையின் அபஸ்வரமான அழுகை போலவே இருந்தது.

கோயில் மதிலையொட்டி தேர்முட்டிக்கு அருகில் எதையெடுத்தாலும் பத்து ரூபாய் சாமான்கள், காய்கறி, வளையல், நடுநிசி புரோட்டாக்கடை, பண்ணைப் பால் என்று நிறைய சாயந்திரக் கடை போட்டிருந்தார்கள். நாலைந்து பேர் நின்று பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் நாலூருக்கு கேட்கும் படி "சூர்....சூர்..." உறிஞ்சி சூடான மசாலா பால் அருந்திக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் இருந்து வெறும் நிழல்களாய் தெரிந்தார்கள். சந்தானம் சார் சைக்கிளை விட்டிறங்கி தள்ளிக்கொண்டு கோயிலை நோக்கி பல யோசனைகளில் காலாற நடந்து சென்றுகொண்டிருந்தார். கிழவி ஒருத்தி கோபுரவாசலில் தள்ளாத வயதில் நெற்றிநிறைய குங்குமத்துடன் தீர்க்கசுமங்கலியாக பூ விற்றுக்கொண்டிருந்தாள். கோயிலுக்கு வரும் அடியார்களுக்கு செருப்புக்கு டோக்கென் கொடுத்து பாத சேவை புரிந்துகொண்டிருந்தான் அரை நிஜார் சிறுவன் ஒருவன். கோயில் காற்று பூ வாசத்துடன் நுழைவாசலிலேயே ஆளைத் தூக்கியது. காற்றுக்கு ஒதுங்கிய வேஷ்டியை சரிசெய்துகொண்டு விட்டு முன்னால் பார்த்த  அவருக்கு பத்து தப்படியில் விஜியும் மதியும் ஒன்றாக...

ஸாரி! தொடரும்...

பின் குறிப்பு: இந்த முறை முடிக்கலாம் என்று வந்தபோது, ரமாவின் வாழ்க்கைக் குறிப்பு கொஞ்ச இடத்தை பிடித்துக்கொண்டது. ஆகையால் முடிக்க இயலவில்லை. கூடிய விரைவில் முடிக்கப் பார்க்கிறேன். 

பட உதவி: http://surimount.blogspot.com

-

40 comments:

எல் கே said...

ம் இவரோட வேலைக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா ? நல்ல நோக்கம்தான். அப்ப இவர் வில்லன் இல்லை . வில்லன் மதிதான்

RS said...

நன்னா போயிண்டிருக்கு, சந்தானம் சார் சைக்கிளும், கதையும்.

ஒவ்வொரு சிறு நிகழ்வும் அழகாக ரசித்து எழுதப்பட்டிருக்கு.

Sivakumar said...

சரளமான வார்த்தை நடை. நல்ல தொடர். அரசியல் பதிவை எதிர்பார்க்கிறேன்.

உங்கள் ப்ரோபைலில் சேர்க்கத் தவறியது:

//முந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது
தற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது//

நாளைய சாதனை: மாவட்ட அரசியலில் புகுந்து விளையாடுவது. வரும் தேர்தலில் முக்கிய புள்ளிக்கு எதிராக சூறாவளி பிரச்சாரம் செய்யப்போவது. ஆம் ஐ ரைட்?? ரைட்! ரைட்!

பொன் மாலை பொழுது said...

இன்னாமே நீயி ? வவுத்துல புளிய கரைக்காதே நைனா.......அந்த புள்ளைய நென்ச்சா பாவமாகீதுபா....


அதுசரி.......மைனரே ஒரு விண்ணப்பம். தங்கள் பக்கத்தில் இடதுபுறம் "சமீபத்தில் விளையாடியது " என்ற தலைப்பின் கீழ் பதிவுகளும் அதன் படங்களும் உள்ளன இதனைப்போல என் ப்ளாகிலும் பக்கத்தில் எப்படி அமைப்பது என்று சொல்லிதாருங்க R V S.
kakkoo.sattanathan@gmail.com

RVS said...

@எல் கே
ஹி..ஹி.. ஆமாம் எல்.கே. இன்னும் ஒரு எபிசோட்தான் நிச்சயம் முடிக்கறேன்.. ;-))

RVS said...

@RS
மிக்க நன்றிங்க... ரசித்து படிப்பதற்கு.. ;-))))

RVS said...

@! சிவகுமார் !
என்னை நிச்சயம் அடிவாங்க வைக்கணும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். ;-)))
எனக்காக உங்களுடைய எக்ஸ்ட்ரா ப்ரோபைல் வாசகங்களுக்கு நன்றி.. ;-)))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மாணிக்கம் பயப்படாதீங்க.. ஆனா முடிவு நீங்க எதிர்பார்க்கரா மாதிரியும் இருக்காது.. அதுக்கு எதிர்மறையாகவும் இருக்காது.. ஒரு மாதிரியாக இருக்கலாம்.. (அப்பாடி குழப்பியாச்சு...நிம்மதி..)
உங்கள் தேவையை மெயிலுக்கு அனுப்பியுள்ளேன். ;-))

பொன் மாலை பொழுது said...

I got and made it in my blog.
Thanks Dude!

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாகத்தான் போகிறது
எங்களையும் சந்தானத்தோடு கோயில் வாசலில்
ரொம்ப நேரம் நிற்க விடாது
சீக்கிரம் மட்டும் வாங்கோ
புண்ணியமாய் போகும்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

raji said...

கம்ப்ளெயின்ட் நம்பர் 1 : டாஷ் போர்ட்ல அப்டேட் ஆகலை
கம்ப்ளெயின்ட் நம்பர் 2: கக்கு-மாணிக்கம் சாருக்கு மட்டும்
ரகசியமா சொன்னதை அல்லாருக்கும்
சொல்லிப்புட்டா நாங்களும் கத்துகிற மாட்டோமாக்கும்.
அவர் என்ன மெயில்லயா கேட்டார்,' ப்ளாக்' ல தான
கேட்டார்.('யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக'
உங்க ரெண்டு பேருக்கும் இல்லையாக்கும்?)
கம்ப்ளெயின்ட் நம்பர் 3: ஏதோ புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்க நினைக்கறாப்ல
ஒரு தொடர்கதை போட்டா ஸன் டி வி சீரியல்
ரேஞ்சுக்கு இறக்கிப்புட்டீங்களே,நியாயமா?


இப்ப கமென்ட்டுக்கு வரேன்.நிஜமாவே ஒரு நொந்து போன தந்தையை கண் முன்னால
கொண்டு வந்துருக்கீங்க.ரமா கதைதான் முடிஞ்சது.விஜியையாவது காப்பாத்துவாரா?

மாதேவி said...

ம்...யார் ஏமாறப்போறா கிட்டுவா சந்தானமா...நாங்களா... ஹாஹா

அடுத்தபதிவில் பார்த்திடுவோம்...)

Anonymous said...

அண்ணே செம ரைட் அப்.. அது போறவரைக்கும் தானா போகட்டும் சட்டுன்னு பிரேக் போட்ட மாதிரி முடிச்சிடாதீங்க! :)

Madhavan Srinivasagopalan said...

முதலில் உங்கள் கதை சொல்லும் நேர்த்தி, சொல்லாடல், வர்ணனை..
அனைத்திற்கும் ஒரு சபாஷ்.

//இன்னொரு ரமா அந்தத் தெருவில் உருவாகக் கூடாது என்று தீர்மானமாக எண்ணினார். //

ஒரு பெற்றோரால் மட்டுமே இதான் அர்த்தத்தை உணர முடியும். காதல் காதல் என்று கதையில்ம் சினிமாவிலும் போற்றும் நாம், அது நம் வீட்டில் வரும் போதுதான் கசப்பாக இருக்கும். எனவே ஆரம்பம் முதலே நான் காதலை ஆதரிப்பதில்லை.
எந்த ஒரு பெற்றோரும் தனது மகன், மகள் வாழ்வில் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பார். அதனால் அவர்கள் பார்த்து வைக்கும் மாப்பிளை, பெண் கண்டிப்பாக நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு ஈட்டுத் தரவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக இருக்கும்.

கதையில் வரும் ரமா போல பின்னாளில் யாரும் கஷ்டப் பட வேண்டாமேன்பதாலே அவரின் செயல் இந்தக் காதலை தடுக்க வேண்டும் என்றிருப்பதாக நான் நினைக்கிறேன்.

எல்லாவற்றிகும் மேலே.. இனம் புரியாத வயதில் வரும் காதல் தொண்ணூறு சதம் நன்மை விளைவிப்பதாக இருக்காது என்பது நாடறிந்த உண்மை.

நடக்க நடக்க நாராயணன் செயல்.. தொடர்ந்து பார்ப்போம்..

MANO நாஞ்சில் மனோ said...

//அதுசரி.......மைனரே ஒரு விண்ணப்பம். தங்கள் பக்கத்தில் இடதுபுறம் "சமீபத்தில் விளையாடியது " என்ற தலைப்பின் கீழ் பதிவுகளும் அதன் படங்களும் உள்ளன இதனைப்போல என் ப்ளாகிலும் பக்கத்தில் எப்படி அமைப்பது என்று சொல்லிதாருங்க R V S. //

ஹே ஹே எனக்கும்.....
manaseytrmanasey525@gmail.com

Sai said...

ஆர் வீ எஸ் அண்ணா

இது என்ன கலாட்ட

கதை நல்ல இருக்கு. கிட்டு மாமா நெனைச்சா ரொம்ப பாவமா இருக்கு
சந்தானம் மாமா பேங்க் வேலையா ராஜினாமா பண்ணிட்டு பேசாம சிபிஐ அல்லது ரா போன்ற அமைப்பில் சேரலாம்
பார்க்கலாம். விஜி மற்றும் ஒரு ரமா வா அல்லது பாரதி கண்ட புதுமை பெண்ணா!!!!!

சிவகுமாரன் said...

\\கைகள் துருதுரு, கண்கள் குறுகுறு, கால்கள் பரபர//
--அழகு

\\ஒரு சமயம் ருஜித்தது மறுசமயம் வெறுப்பது, வெறுப்பது மீண்டும் ருஜிப்பது இதுதானே இந்த உலகத்தின் வாழ்க்கை சுவாரஸ்யம்.//

தத்துவம்

\\அவருக்கு பத்து தப்படியில் விஜியும் மதியும் ஒன்றாக...//

சஸ்பென்ஸ் .

சிறுகதை, நாவலாசிரியருக்கான சகல லட்சணங்களும் பொருந்தியிருக்கு RVS உங்களிடம் .

சாந்தி மாரியப்பன் said...

எல்லா பாகத்தையும் மொத்தமா படிச்சுட்டேன். கதை நல்லா போகுது, வலுக்கட்டாயமா முடிக்க வேண்டாமே.. :-))

இராஜராஜேஸ்வரி said...

காற்று பூ வாசத்துடன் நுழைவாசலிலேயே ஆளைத் தூக்கியது. //
What a pleasent smell!!

பொன் மாலை பொழுது said...

மைனரே அந்த உதவிக்கு ஒரு நன்றி சொல்லலாமேன்னு வந்தா நல்லா மாட்டிகிட்டேன் (மாட்டிகிட்டோம்)
ஒன்னு செய்யவா?
நீங்க சொல்லிய விளக்கத்தை ஒரு சின்ன பதிவா போடட்டுமா? எல்லாருக்கும் கிடச்ச மேரிக்கி இருக்கும். யாரும் வசை பாடவும் மாட்டார்கள்.
மன்னார்குடி மைனர்வாள் எஸ் சொல்லுங்க !

இளங்கோ said...

மழை வரும், மழை வரும் என்று வானிலை மையம் சொல்வது போல, முடிக்கிறேன் எனச் சொல்லி இன்னும் 'தொடரும்..' என்றே போடுகிறீர்கள்.. :)

தொடருங்க, நானும் கிளைமாக்ஸ் தெரியரவரை விடப் போறதில்லே :)

வெங்கட் நாகராஜ் said...

ம்.. ரமாவை காப்பாற்ற முடியவில்லை, இந்த கிட்டு மாமா பெண்ணையாவது காப்பாற்றுகிறாரா பார்க்கலாம்!

RVS said...

@கக்கு - மாணிக்கம்
இதெல்லாம் என் கிட்ட கேட்கவே வேண்டாம்!! தாரளமாக செய்யுங்க தல.. ;-))

RVS said...

@Ramani
நன்றி சார்! நிச்சயமா அடுத்த எபிசோட்ல முடிக்கறேன்.. ;-))

RVS said...

@raji
//கம்ப்ளெயின்ட் நம்பர் 1 : டாஷ் போர்ட்ல அப்டேட் ஆகலை//
யாரோ சூனியம் வச்சுட்டாங்க போலருக்கே.. நிறைய பேர் சொல்றாங்க.. நான் சொந்தமா டொமைன் வாங்கினது கனம் ப்ளோகாருக்கு பிடிக்கலை போலருக்கு..
//கம்ப்ளெயின்ட் நம்பர் 2: கக்கு-மாணிக்கம் சாருக்கு மட்டும்
ரகசியமா சொன்னதை அல்லாருக்கும்
சொல்லிப்புட்டா நாங்களும் கத்துகிற மாட்டோமாக்கும்.
அவர் என்ன மெயில்லயா கேட்டார்,' ப்ளாக்' ல தான
கேட்டார்.('யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக'
உங்க ரெண்டு பேருக்கும் இல்லையாக்கும்?) //
சாரிங்க மேடம். அவரே தன்னோட ப்ளோக்ல எழுதராரம்.. ப்ளீஸ் அங்கேர்ந்து படிச்சுக்கோங்க..
//கம்ப்ளெயின்ட் நம்பர் 3: ஏதோ புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்க நினைக்கறாப்ல
ஒரு தொடர்கதை போட்டா ஸன் டி வி சீரியல்
ரேஞ்சுக்கு இறக்கிப்புட்டீங்களே,நியாயமா?//
நிஜமாவே.. தங்கம், சித்தி, செல்வி இதெல்லாம் வெள்ளிக்கிழமைக்கு ஒரு 'நச்' பினிஷ் வைப்பாங்க.. அதுபோலத் தான் இருக்கு.

ஒரு வித்தியாசமான என்டிங் எழுதிகிட்டு இருக்கேன்.. அடுத்த முறை நிச்சயம் முடிக்கறேன்.. ;-))))

RVS said...

@மாதேவி
வாங்க.. கருத்துக்கு நன்றி மாதேவி.. யாருக்கும் ஏமாற்றம் இல்லாம முடிச்சுடுவோமா? ;-))))

RVS said...

@Balaji saravana
இல்ல தம்பி. அடுத்த பதிவுல நிச்சயம் முடிக்கறேன்.. மேட்டர் நிறைய இருக்கு.. வேற எதுவும் எழுத முடியலை.. ;-)))

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா.. உன்னோட ஆழ்ந்த கருத்துக்கு நன்றி. முடிவு அடுத்த பதிவுல... கண்டிப்பா வந்து படிச்சுட்டு கருத்து சொல்லுப்பா... ;-))))

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
அண்ணே! கக்கு-மாணிக்கனார் எழுதறார்.. அங்கே போய் எடுத்துக்கோங்களேன் ப்ளீஸ்.... ;-)))

RVS said...

@Sai
இன்னும் ஒரே ஒரு எபிசொட்... தெரிஞ்சு போய்டும். பாராட்டுக்கு நன்றி சாய் .. ;-))

RVS said...

@சிவகுமாரன்
பாராட்டுக்கு மிக்க நன்றி அருட்கவிஞரே!! ;-)))

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க மேடம்!
பாராட்டுக்கு நன்றி.. ;-)))
ரொம்ப ஜவ்வு மாதிரி இழுத்தா நீர்த்துப் போய்டும்ன்னு அடுத்த எபிசோட்ல முடிக்கறேன்! ;-))))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ரசித்தமைக்கு கோடி நன்றிகள்! ;-)))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
எல்லோரும் எனக்கு ப்ரியமானவர்கள் தான்!
நீங்களே உங்க பதிவில் போட்டு இந்த மண் பயனுறச் செய்யவும். நன்றி.. ;-)))

RVS said...

@இளங்கோ
நடக்கும் என்பார் நடக்காது.. நடக்காதென்பார் நடந்துவிடும்.... ;-))))
தம்பி காட் பிராமிசா அடுத்த பதிவுல முடிக்கறேன்! ;-))))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
பார்க்கலாம்..பார்க்கலாம்.. ;-)))

Yaathoramani.blogspot.com said...

கதை ரொம்ப நல்லாவே போகுது
நான் க தையைமுடிக்கச் சொல்லவில்லை
அதுவாக முடியும்போது முடியட்டும்
ஆர்வமாய் இருக்கிறோம்
பதிவை தாமதப்படுத்த வேண்டாம்
என்றுதான் கோரிக்கை வைக்கிறேன்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நலமாக உள்ளீர்களா RVS. மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த இடைவேளையில் வந்த
உங்களது சமீபத்திய பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன். தங்களது விசாரிப்பிற்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடச்சே! இந்த மதியால, நிம்மதியே போயிடுச்சே!

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நலமாக இருக்கிறேன்... ;-))
ரீஎன்ட்ரிக்கு வாழ்த்துக்கள்.. என்னாயிற்று?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails