Thursday, April 28, 2011

ஜானகி மந்திரம்!

ரொம்ப சீரியஸா நான் சயின்ஸ்ல சிலுத்துக்கிட்டு சிலிகான் காதலி எழுதிகிட்டு இருந்த போன வாரம் ஜானகியம்மாவின் பிறந்தநாள் வந்துட்டு போச்சு. எண்பதுகளில் கடைசியில் என்னுடைய கொப்புளிக்கும் இளம் பிராயத்தில் எஸ்.பி.பி யுடன் சேர்ந்து அவர் பாடிய பல டூயட்டுகள் நிறைய பேரை காதலிக்க வைத்தது. பல பேரை பித்தம் பிடிக்க வைத்தது.

என்னுடைய பள்ளி/கல்லூரி நாட்களில் நிறைய தாவணி போட்ட பெண்கள் வெள்ளித்திரையில் ராதா "ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு" என்று ஏங்கிப் பாடியது போல இந்தப் பாட்டை பாயில் படுத்து பாடிக்கொண்டு இன்பக் கனா பல கண்டார்கள். அப்படி பாடியவர்கள் பார்ப்பதற்கு ராதா போலும் இல்லை குரலிலும் ஜானகி போலும் இல்லை என்பது என் இளமைக்கு ஒரு வருத்தமான செய்தி தான்.

"இச்.இச்." என்று அனு கன்னத்தில் ரெண்டு வைத்து பாக்கியராஜ் தனது கட்டிலை ரோட்டுக்கு மேலே ஒரு இராப்பொழுதில் பறக்கவிட்டு இந்த பாட்டு சீனை ஆரம்பித்திருப்பார். படம் சின்ன வீடு. பாட்டு ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் தனது உடற்பயிற்சிகளை அவர்பாட்டுக்கு கடமையாய் செய்துகொண்டிருப்பார். இதில் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால் கூட ஆடும் அனுவிற்கு ஆடத்தெரிந்தால் கூட ஜோடியாக எக்செர்சைஸ் தான் கட்டாயமாக பண்ணவேண்டும். ஸ்டெப்ஸ் வைத்து பார்க்கும் போது புலியூர் சரோஜா அக்காவாகத்தான் இருக்கணும். அக்கா ஒரு ஃபிட்னெஸ் சென்ட்டர் வைத்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும். எஸ்.பி.பி வழக்கம் போல அற்புதமாக பாடி நமக்கும் ஒரு சின்ன வீடு செட் பண்ணும் ஆசையை கிளப்பியிருப்பார். ராஜாவின் ஆளை இழுக்கும் இசை. நடுநடுவே வரும் தக்.தக்..தக்.தக். ரசிக்கும் நமக்கு ஒரு அழகிய திக்.திக்.திக்.திக்.

பாவம். எவ்வளவு நல்லா நடிச்சாலும் வினீத் ஒரு ராசியில்லாத நடிகர் அப்படின்னு முத்திரை குத்தி ஓரங்கட்டி வைத்துவிட்டார்கள். வினீத் நடித்த ஆவாரம் பூ ஒரு அற்புதமான படம். ஏ படம் தான். ஆனாலும் ஒரு மனநிலை பிழன்றவனின் உள்ளத்தை ஓவியமாக காண்பித்த படம். வினீத் உடன் நடித்த நந்தினியும் மிக நன்றாக நடித்திருப்பார். என்னுடைய கல்லூரிக் காலங்களில் வந்த படம் இது. பாதி பேர் இதை இளமைக்கு விருந்தாக பார்த்தார்கள். இந்தப் படத்தில் ஜேசுதாஸ் பாடிய மந்திரம் இது மந்திரம் எனும் பாடல் இளையராஜாவின் ஒரு உன்னத படைப்பு. நன்றாக படமாக்கப் பட்டிருக்கும். இப்பதிவின் நாயகி ஜானகி ஆதலால் அம்மையாரும் எஸ்.பி.பி யும் சேர்ந்து பாடிய சாமிகிட்ட சொல்லிவச்சு..


சுகமான சுமையாக சௌந்தர்யாவை உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு கார்த்தி பாடுவதை நான் கல்லூரியில் பயிலும் காலத்தில் மெட்ராசுக்கு வந்த போது குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் கொசுக்கடியோடு தியேட்டர் ரொம்ப ரிலீஸ் ஆன ரெண்டாம் நாள் பார்த்தேன். படத்தில் ஆர்.வி.உதயகுமார் மாமா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், லவ்வர் செண்டிமெண்ட் என்று ஓராயிரம் செண்டிமெண்ட் வைத்து பொளந்து கட்டியிருப்பார். என்ன இருந்தாலும் மனதைரியத்தோடு அத்தனை கடியிலும் (கொசு..கொசு..) விடாப்பிடியாக கடைசி வரை அந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது யாரோ ஓடிவந்து எனக்கு 'ரசிகபூஷன்' விருது கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். உஹும்.. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் பாடிய நெஞ்சுக்குள்ள இன்னாரென்று ஒரு சூப்பெர்ப் ஹிட். எனக்கு இன்னொரு பேர் கார்த்திக் என்று இந்த பதிவு படிப்போர் அறிக. அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன் என்றும் அறிக.


ரஞ்சிதா சாமியாரிடம் மாட்டிக்கொள்வதற்கு வெகு காலத்திற்கு முன்பு நடித்த கர்ணா படத்தில் வரும் மலரே மௌனமாவும் நல்ல பாடல். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரிப் பெண் ஒருத்தி பேருந்து பயணத்தில் பெண்கள் பக்கத்தில் அமர்ந்து மௌனமாக வந்த போது என்னுடைய ஒரு அராத்து நண்பன் கட்டை குரலில் "மலரே... மௌனமா" என்று பாடியதும் அந்தப் பெண் அலறியடித்துக்கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விடுவிடுவென்று நடையை கட்டியது. பயத்தில் பத்து நாள் யாரிடமும் பேசியிருக்காது என்பது திண்ணம். இதை விட அவமானம் சைட் அடிக்கும் பிராயத்தில் ஒருத்தனுக்கு இருக்க முடியாது. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு அவன் ம.மௌ மௌனமாக பாடிக்கொண்டே இருந்தான். "மாப்ள நல்லவேளை கால்ல கிடக்கறதை கயட்டி அடிக்காம விட்டாளே!" என்று நாங்களும் ரொம்ப நாள் அவனை சத்தமாக ஓட்டிக்கொண்டிருந்தோம். பாடலில் ஜானகியம்மாவின் அந்த கொஞ்சல் ததும்பும் ஏற்ற இறக்கங்கள் ரஞ்சிதாவிற்கு நடிக்கும்(?!) போது நிச்சயம் பக்க பலமாக இருந்திருக்கும்.

அண்ணனும் தம்பியும் தன் மாமன் மகளை லவ்வும் படம் சின்னத் தம்பி பெரிய தம்பி. நதியா வழக்கம் போல இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த படம். இக்காலத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் கவனிக்கவும். சுடிதார், ஸ்கர்ட் போன்று அந்தக் காலத்தில் அதி நவீன உடைகள் அணிந்து நடித்து நதியா வளையல், நதியா புடவை, நதியா பொட்டு, நதியா ஸ்கர்ட்டு என்று சகலத்திர்க்கும் தன் பெயரை சார்த்திக்கொண்ட பெருமை பெற்றவர். நல்லவேளை எந்த கொலை வெறி ரசிகனும் பித்தம் தலைக்கேறி தன்னை பெற்றவர்களை நதியா அப்பா, நதியா அம்மா என்று அழைக்கவில்லை. குஷ்பு அலைக்கு முன்னர் நதியாவின் நதியலை தமிழக ரசிக நெஞ்சங்களை இழுத்துச் சென்றது.


நல்ல குளிரில் பிரபுவையும் ராதாவையும் ஓடவிட்டு எடுத்த இந்த பாடல் நம் செவிகளுக்கு ஒரு அற்புதமான விருந்து. கைராசிக்காரன் என்ற இந்தப் படம் ராசியாக போணியானதா என்று தெரியவில்லை ஆனால் இந்தப் பாடல் ஒரு அமிர்தம். ஒரு நூறு வயலின்கள் ஒரு சேர இழுஇழு என்று இழுக்கும் போது நாயகனும் நாயகியும் ஓடிவருவது முதல் டெம்போ. அப்புறம் எடுத்த வுடனேய அண்ணன் எஸ்.பி.பி. ஆரம்பிக்கும் நிலவொன்று கண்டேன்... அடாடா.. ஒரு ரெண்டு மூணு தடவை அந்த ஆரம்பத்தை மட்டும் கேட்டுவிட்டு தான் பாட்டிர்க்குள்ளேயே செல்வேன். கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம் என்று ஆரம்பிக்கும் ஜானகியின் குரல் குற்றாலமாக வரும்.

பின் குறிப்பு: சிலிகான் காதலி குறுந்தொடராக எழுதலாம் என்று நினைத்தேன். நீள்கிறது. அதனால் இந்தப் பதிவு அதற்கு ஒரு இடைவேளையாக இங்கே. அப்பாடி என்று நாலு பேர் பெருமூச்சு விடுவது கேட்கிறது. விடாது கருப்பாக உங்களை விடாது சிலிகான்.

பட உதவி: us.7digital.com
-

50 comments:

அமைதி அப்பா said...

நல்ல தொகுப்பு.

எல் கே said...

//ம் ஒரு சின்ன வீடு செட் பண்ணும் ஆசையை கிளப்பியிருப்பார். //

ஓஹோ இது வேற இருக்கா ?? அப்ப இந்த வாரம் வீட்டுக்கு வரவேண்டியதுதான்


//எனக்கு இன்னொரு பேர் கார்த்திக் என்று இந்த பதிவு படிப்போர் அறிக. அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன் என்றும் அறிக.//

அப்ப சவுந்தர்யா யாரு ??

எல் கே said...

நல்ல தேர்வுகள் மைனர்வாள்

Anonymous said...

லதா மங்கேஷ்கர், ஆஷா போஷ்லே போன்றவர்களை விட சிறந்த பாடகியான ஜானகிக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. தாகூர்...பாரதி. சபனா ஆஸ்மி....சரிதா. ராஜ்கபூர்....சிவாஜி. தெற்கு எப்போதும் ஒதுக்கப்பட்டே வருகிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே!

ஸ்ரீராம். said...

சாமிகிட்ட சொல்லி வச்சியும் நிலவொன்று கண்டேனும் லிஸ்ட்டுல டாப். (எனக்கு) பௌர்ணமி நிலவில் போன்ற ஒன்றிரெண்டாவது பழைய லிஸ்ட்லேருந்து தந்திருக்கப் படாதோ...அதுக்கு யூ ட்யூப் இணைப்பு கிடைக்காதோ...

Anonymous said...

நல்ல கலெக்சன் அண்ணா!

சக்தி கல்வி மையம் said...

பல அருமையான பாடல்களை நினைவுபடுத்தியதர்க்கு நன்றிகள்+பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

தேர்ந்தெடுத்த ஒவ்வொன்றும் நல்ல பாடல்கள் மைனர்வாள். அறிவியல் புனைவுக்கு நடுவில் கூட இது போல ஒரு பதிவு தேவையாகத் தான் இருக்கிறதா உங்களுக்கும்!

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
பொன் மாலை பொழுது said...

அம்மாடி....ஏழு வீடியோக்களா? நல்ல தொகுப்புத்தான். எல்லோருக்கும் இந்த பாடல்கள் தெரியும்தான். ஆனால் தற்கால இளசுகள் அதிகம் கேட்டறியாத ஜானகியின் ஒரு பாடல் ஒன்று உள்ளது. நடிபிசை புலவர் என்று அழைக்கப்பட்ட கே.ஆர். ராமசாமியுடன் சேர்ந்து பாடிய டுயட் அது. ஜானிகியின் குரலில் எப்போதுமே ஒரு இளமை இருக்கும். இந்த பாடலில் இது மிக அதிகம். கேட்க சுகமான பாடல். கண்டுபிடியுங்கள் மைனரே! அதன்வீடியோ கிடைத்தால் இணைப்பை தருகிறேன்.

Sivakumar said...

எல்லாரும் மைனர்...மைனர்னு சொல்றாங்களே. Why?

அமுதா கிருஷ்ணா said...

எல்லா பாடல்களும் அருமையான தொகுப்பு.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கலெக்ஷன்.. எல்லாத்தையும்விட ஆவாரம்பூதான் மணக்குது :-)

பத்மநாபன் said...

ஊத காத்தும் அடிச்சிருச்சு ---ராதா பாட்டு .

உடற்பயிற்சியோடு சிட்டுகுருவி பாட்டு

உப்புமுட்டையாக சவுந்தர்யா பாட்டு...எல்லாம் நம்ம செட்டு பாட்டாகவே இருக்கு . சூப்பர் தேர்வுகள்..இளைய ராஜா இசையில் ஜானகியம்மாவின் குரல் ஜனகரஞ்சகமாக இருக்கும்...இருந்தாலும் ஜானகியம்மாவின் என்னோட ஃபேவேரிட்டுகள்...எம்.எஸ்.வி..கே.வி.எம் இசையின் பாட்டுகள் தான்

இளங்கோ said...

ஹய்.. இன்டர்வெல் :)

ஜானகி அம்மாவுக்கு எனது வாழ்த்துக்களும்.

இளங்கோ said...

//எல் கே said...
அப்ப சவுந்தர்யா யாரு ?? //
பதில் அறிய ஆவல் :) :)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஜானகி மந்திரம் மயக்க வைக்கும் மோஹனம்.

நல்ல தேர்வு ஆர்விஎஸ்.

ரிஷபன் said...

நல்லாத்தான் இருக்கு

Angel said...

superb songs.
நதியா வளையல்,.....ஹி ஹி ஹி Me tooo.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||அப்புறம் எடுத்த வுடனேய அண்ணன் எஸ்.பி.பி. ஆரம்பிக்கும் நிலவொன்று கண்டேன்... அடாடா.. ஒரு ரெண்டு மூணு தடவை அந்த ஆரம்பத்தை மட்டும் கேட்டுவிட்டு தான் பாட்டிர்க்குள்ளேயே செல்வேன். ||

ஏன் முழுப்பாட்டையும் கேக்கறதுக்குள்ள பாட்டிலுக்குள்ள (!?) போகனும்னு இலங்கைத் தமிழ் அன்பர்கள் யாரும் ஏன் கேக்கல??

அவ்வவ்வவ்வவ்வவ்....

இராஜராஜேஸ்வரி said...

அனைத்துத் தொகுப்பும் அருமை.

மலர்வண்ணன் said...

நல்ல தேர்வுகள்..
ஒரு சிறு தவறு... "மலரின் துளியில் லயம்" பாடல் சித்ரா பாடியது..

தக்குடு said...

முதல் பாட்டே அமர்களமா இருக்கு அண்ணா, போன பதிவுல யாரோ ஒரு அப்பாவி உங்களை எதுக்கு எல்லாரும் மைனர்வாள்னு கூப்டரா?னு கேட்டு இருந்தாரே அவரை வந்து இதை பார்கசொல்லவும்..:P

Matangi Mawley said...

:) ... 'ooru sanam' and 'malare mounama'-- ennoda rombavum favourite songs... good collection! :)

RVS said...

@அமைதி அப்பா
நன்றி அமைதி அப்பா!

RVS said...

@எல் கே
அவசியம் வீட்டுக்கு வாங்க எல்.கே.

நான் கண்ணாலம் கட்டிக்கிட்டவ தான் என்னோட சௌந்தர்யா.. ;-))

RVS said...

@எல் கே
நன்றி எல்.கே.;-)

RVS said...

@! சிவகுமார் !
அப்பட்டமான உண்மை. எனக்கு நெ.பொ. ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
பழசு போட்ருக்கலாம்.. ஒரு தனி பதிவா கருப்பு வெள்ளை எல்லாத்தையும் போட்டுடலாம். நன்றி ஸ்ரீராம். ;-))

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி. ;-)

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி கருன். ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
அறிவியல் புனைவு ரொம்ப பெருசா ஆகும் போல இருக்கு... எனக்கு வேற Tight Schedule.. அதான் இந்த மாதிரி ஒன்னு இடையில விட்டேன். ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
பாட்டு கிடைச்சுது மாணிக்கம். அற்புதமான பாடல்.. ஜானுவின் இளமை கொஞ்சும் குரலில்.. நன்றி. ;-))

RVS said...

@! சிவகுமார் !
நான் இன்னும் மேஜர் ஆகாததினால் இருக்கலாம் சிவா.. ;-)))

RVS said...

@அமுதா கிருஷ்ணா
நன்றிங்க.. ';-)

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க.. ஆவாரம் பூவில எல்லாப் பாடலும் மணக்கும். ;-))

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி.
அடுத்ததா இந்தமாதிரி கருப்பு வெள்ளையில நிறைய போட்டு ஜமாய்ச்சுடலாம். நன்றி. ;-))

RVS said...

@இளங்கோ
இன்டர்வெல் அப்படின்னதும் சந்தோஷப்படும் இளங்கோவிற்கு...
பயங்கரமாக அடுத்தடுத்த எபிசோடுகள் வந்து உங்களை படுத்தும் என்று நினைவுப் படுத்துகிறேன்.
என்னுடன் குடும்பம் நடத்துவது ஒரு சௌந்தர்யாதான்.. பெயர் தான் வேறே! ;-))

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி! நல்ல வசீகரக் குரலுக்கு சொந்தக்காரி அந்தம்மா.. பாலுவுக்கு ஈடுகொடுத்து முனகல் பாடல்கள் பாடி அசத்துவார். ;-))

RVS said...

@ரிஷபன்
நன்றி சார்! ;-))

RVS said...

@angelin
அப்டியா! ரொம்ப சந்தோஷம்.. ;-))

RVS said...

@அறிவன்#11802717200764379909
ஏன்..ஏன்..ஏன்... ;-))))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம். ;-))

RVS said...

@மலர்வண்ணன்
இல்லையே!! எல்லாமும் ஜானகி பாடியதுதான்.. இல்லையா? ;-))

RVS said...

@தக்குடு
எனக்கு ஏன் மைனர் பட்டம்னு மைக் போட்டு எல்லோருக்கும் சொல்லுப்பா!
ரோம்.......ப.... நன்றி. ;-))

RVS said...

@Matangi Mawley

Thanks Matangi. ;-))

சிவகுமாரன் said...

சிலிகான் தொடரை முழுதுமாக இன்னும் படித்து முடிக்கவில்லை. இந்தப் பதிவு ரிலாக்ஸாக இருக்கிறது எங்களுக்கும். சுசிலா அம்மாவுக்கு பிறகு தமிழ் திரையிசையில் அசைக்க முடியா சக்தியாக திகழ்ந்தவர் ஜானகி.

அப்பாதுரை said...

பாக்யராஜ் உடற்பயிற்சி - கேள்விப்பட்டதில்லை. அசப்பில் அப்படித் தான் இருக்கிறது, நீங்கள் சொன்னபிறகு. ஹாஹா!

அப்பாதுரை said...

சிட்டுக்குருவி பாடல் வித்தியாசமான படமாக்கம் என்றே நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

கடைசிப் பாட்டு இப்போ தான் கேட்கிறேன்/பார்க்கிறேன். அவ்வளவு தூரம் ஓடி வந்த பின் ராதா ஏன் அழுகிறார்? கால் வலிக்கிறதா?

(இந்தப் பாட்டு முந்தைய பிரபு பாட்டின் ஸ்லோ மோஷன் போலிருக்குதெ?)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails