Friday, April 9, 2010

திருந்திய குடிகாரனும் பள்ளத்தில் விழுந்த காதலனும்

சமீபத்தில் நான் ரசித்த இரண்டு ஜோக்ஸை இங்கே தருகிறேன். ஒன்று சைவம் அடுத்தது  அசைவம். சைவமா அசைவமா அல்லது இரண்டுமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். வயதுக்கேற்ப தேர்வு செய்து படியுங்கள். இந்த ப்ளாக்ஐ படிப்பவர்கள் அனைவரும் பெரியமனிதர்கள் (வயதில், அறிவில், புத்திசாலித்தனத்தில்) ஆகையால் பிடித்ததை படிப்பது சரவணபவனில் உங்களுக்கு பிடித்த சாம்பார் இட்லி சாப்பிடுவதை போல. இது உங்கள் சாய்ஸ். அசைவத்தை படித்துவிட்டு எனக்கு ஜீரணம் ஆகவில்லை என்று கூறினால் அதற்க்கு நான் ஜவாப்தாரி அல்ல. 


சைவம் - திருந்திய குடிகாரன் 


ஒரு உயர்ந்த ரக பாரில் ஓரத்தில் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில் பீர் வாங்கி ஒருவர் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். அடித்த சரக்கு பத்தாமால் மீண்டும் ஒரு முறை எழுந்து சென்று சரக்கு ஊற்றித் தருபவரிடம் மூன்று கிளாஸ்களில் பீர் கேட்டார். சரக்கு ஊற்றித் தருபவர் சற்று நேரம் பார்த்துவிட்டு,

"ஸார், நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு கேக்கறேன், ஒவ்வொரு கிளாஸா வாங்கி குடிச்சா இன்னும் நல்ல இருக்குமே.நா கிளாஸ்ல ஊத்தும்போதே நுரை அடங்கி உள்ள போய்டுதே ஆனா நீங்க மூணு மூணு கிளாஸா வாங்கி குடிக்கிரீங்களே...இதில இதோட நிஜ டேஸ்டே இல்லாம போய்டுமே" என்றான்.

"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூனு பேர். அண்ணன் துபாய்ல இருக்கான், தம்பி கனடாவில இருக்கான், நான் இங்க லண்டன்ல இருக்கேன். சின்ன வயசிலேர்ந்தே நாங்க மூணு பேரும் ஒன்னாதான் சரக்கடிப்போம்.  நாங்க மூனு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா  பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூனு கிளாஸ்ல வாங்கி, மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணிருக்கோம். என் தம்பி அண்ணன் ரெண்டு பேருமே இதை செஞ்சுட்டுதான் குடிப்பாங்க. அதனாலதான்" என்றார் அந்த குடிமகன். ஆச்சர்யமாக பார்த்தான் அந்த 'சரக்கூற்றி '. (Bar tender)

இதேபோல  தினமும் அந்த பாருக்கு சென்று அமர்ந்து மூன்று மூன்று கிளாஸ்களில் பீர் வாங்கி மோர் போல குடித்து தன் தொப்பையை வளர்த்து வந்தார் அந்த அன்பர். ஒரு நன்னாளில், இரண்டு கோப்பையில் மட்டும் பீர் தரச்சொல்லி வாங்கி குடித்தார்.

இதைக்கண்ட சரக்கூற்றி சரக்கப்பன் மிகவும் சங்கடப்பட்டான். நேரே அவரிடம் சென்று "ரொம்ப ஸாரி ஸார், இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலை" என்று சோகராகம் பாடினான்.
"ஏம்ப்பா என்னாச்சு" என்றார் அந்த குடிமன்னர்.
"இல்லை எப்போதும் நீங்க உங்க பிரதர்ஸ் ஞாபகார்த்தமா மூனு கிளாஸ்ல வாங்கி  குடிப்பீங்க. உங்க பிரதர் யாராவது இறந்துவிட்டாங்க போலிருக்கு இன்னிக்கி இரண்டு கிளாஸ்ல  மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான்.

அந்த இரண்டு கிளாஸ் பீரையும் நிதானமாக சிப் பண்ணி குடித்துவிட்டு முழு போதையுடன் சொன்னான் அந்த சரக்கு மன்னன்
"யாருக்கும் எதுவும் ஆகலை, நேற்றையோடு நான்தான் குடியை நிறுத்திட்டேன்பா, அதான் என் பிரதர்ஸ்க்காக இரண்டு கிளாஸ் மட்டும்".

இதைகேட்ட சரக்கூற்றிக்கு போதை தெளிய ரெண்டு நாள் ஆனது. 

அசைவம் -  பள்ளத்தில் விழுந்த காதலன் ( 18+)


18 மற்றும் 20 வயதே பூர்த்தியான காதலர்கள் இருவர் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் மேற்கூரை திறந்த ஆடம்பரமான காரில் வேகமாக ஒரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்கள். "இன்னும் வேகமா போ... வேகமா போ..." என்று அந்த காதலி அவனை ரேஸ்  குதிரை போல் விரட்டியவண்ணம் இருந்தாள். செயல்களில் குறும்புத்தனம் கொப்பளித்த அந்த காதலன் "நான் இன்னும் வேகமாக போக வேண்டும் என்றால் நீ உன் மேலாடையை கழற்றி வெளியே வீசினால் நான் இன்னும் வேகமாக போவேன்" என்றான்.

காதலனின் ஆசை/கட்டளைக்கு இணங்க அவள் கணநேரத்தில் உடனே கழற்றி வெளியே வீசி எறிந்தாள். "இன்னும் வேகமா போ வேகமா போ..." என்று கத்தி குதித்து துள்ளி துள்ளி ஆடியபடி கேட்டாள். காதல் பித்து தலைக்கேறிப் போன அந்த காதலன் "இன்னும் வேகமாக போக நீ உன் அரையாடையையும் கழற்றி வீசினால் நான் போவேன்" என்றான். அதையும் செய்தாள் அந்த அன்பிற்கினியவள். அரையாடை மற்றும் மேலாடை இல்லாமல் இருந்த காதலியை கண்டு இன்னும் வேகம் (மோகம்?) பொங்க படு வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்.

கட்டற்ற வேகத்தில் சென்ற அந்த கார் தன் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. மிகவும் கஷ்டப்பட்டு அந்த காதலி காரிலிருந்து தப்பித்து வெளியே வந்தாள்.  காதலன் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்ட நிலையில் காதலியை "ஏய்! யாரையாவது போய் உடனே அழைத்துக்கொண்டு வந்து என்னை காப்பாற்று" என்றான். "போடா, உன்னால் நான் என் எல்லா துணிகளையும் கழற்றி வீசிவிட்டேன். நான் எப்படி சென்று யாரையாவது உதவிக்கு கூப்பிடுவேன்" என்று நாணி கோணினாள். "ஆபத்துக்கு பாபமில்லை, கீழே உன்னுடைய ஷூவைக் கொண்டு மூடிக்கொண்டு சென்று உதவி கேள்" என்று வலியால் துடித்துக்கொண்டு கேட்டான் அவன்.

காதலனைக் காப்பாற்ற தன்  மானம்  போனாலும்  பரவாயில்லை என்று  வேறு வழியில்லாமல் கீழே ஷூவால் மறைத்துக்கொண்டு உதவிக்கு ஓடினாள்.  ஏதிரே தென்பட்ட அந்த தீயணைப்பு படை வீரரிடம் ஷூ கையை எடுக்காமல், " ஐயா என் காதலன் இங்கே பள்ளத்தில் விழுந்துவிட்டான். வெளியே வர கொஞ்சம் உதவுங்கள். ப்ளீஸ்" என்றாள். அந்த வயதான தீயணைப்பு படை வீரர் செய்வதறியாது திகைத்து மூர்ச்சையுற்று கீழே சரிந்தார்.


2 comments:

... said...

சைவ ஜோக்.. குட்.. அடுத்தது, உவ்வே.. ச்சீ.. சீ.. இன்னம் கொஞ்சம் ஜோக்ஸ் இருந்தா ஜொள்ளுங்க‌

Madhavan Srinivasagopalan said...

ha ha ha......

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails