Saturday, September 18, 2010

யானைக் கும்மி

yaanaikummiமோகனமன்னனும், பான பத்மனாபரும் வெங்கோபப் புலவரும் கை கோர்த்து சேர்ந்து கட்டிய கும்மி இது. யானை மீது சத்தியம் படிக்காதோர், ஒரு முறை யானையை சேவித்து படித்துவிட்டு இங்கே தொடரலாம்.... கீழ் வரும் கதையில் தலை கால் புரியவில்லை என்று சொன்னால், படித்தால் புரியலாம், புரியாமலும் இருக்காலாம்... இப்ப என்ன சொல்ல வரே என்று கேட்பவர்களுக்கு.... ப்ளீஸ் விட்ருங்க... எனக்கே புரியலை...யா.மீ.ச. படித்தவர்களுக்கு... பார்ட் டூ விற்கு போய்டுவோம் வாருங்கள். இல்லையென்றால் படுத்தல் ஜாஸ்தியாகிவிடும்.
மோகன்ஜி சொன்னது… 
அடடா! ஆர்.வீ,எஸ் புலவர் தருமி நாகேஷ் மாதிரி இருப்பார்னு நெனைச்சேன்.ஆனா, நம்பியார் வேலயா இல்லை இருக்கு.. பாண பத்மனாபர் ரோலோ ராஜா பக்கத்துல இருக்கிற ஆர்.எஸ்.மனோகர் மாதிரி வேற இருக்கே.. இளவரசிய கணக்கு பண்ணி கூட்டிட்டு போறீங்களா.. போங்க போங்க. நானே அவளுக்கு செவ்வாய் தோஷமாயிருக்கே,மாப்பிள்ளையே கிடைக்கல்லேன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். பாணபத்மனாபர் தலையிலே கட்டிடலாம்னு வேற யோசிச்சிகிட்டு இருக்கிறப்போ.... என்ன பெத்த ராசா.. தானாவே வந்து பிரச்சினைய முடிச்சிட்டீங்களே. ஆனா இளவரசி கழுதைப் பாலில் இல்லே குளிப்பாள்? அடுத்த கன்சைன்மெண்ட் நூறு கழுதையை அனுப்பிட்டா போச்சு. 
எனக்கென்னவோ பாணபத்மனாபர் இளவரசிக்கும் ஒங்களுக்குமாவது விருந்து வைப்பார்னு தான் தோணுது.
சரி மாப்பிள்ளே! என் ராஜ்ஜியம் உங்களுக்குத் தான்! டேக் இட் !
(ஹய் ! தொரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது )  
17 செப்டெம்ப்ர், 2010 7:30 am

 


பத்மநாபன் சொன்னது… 
மோகனமன்னா, பெரிய உருவத்தை பிடித்து வருவது கூட தெரியாமால் கிராஸ் பண்ணிட்டனா.. என்.கண்பார்வை பகல்ல பசுமாடு, எருமமாடு தாண்டி யானையையும் தாண்டிருச்சா ... கொடுமை.... சோடா பாட்டிலை ஒடைச்சு ஜோப்புல வச்சுக்க வேண்டியது தான்..
மன்னா நீங்க கில்லாடி மன்னா... இளவரசியோடு உங்க தர்பாரையும் அந்த புன்னகை மன்ன புலவரிடம் கட்டி விட்டீர்களே .. பலே கில்லாடி மன்னா..
 
பட்டத்துக்கு வந்தபின் தான் தெரியும், ஒவ்வொரு ஓலையாக வரும் . நிங்க ஆணி குத்தி குத்தி எழுதிக்கொடுத்ததெல்லாம் வெளியே வரும் 
 
ஒரு கல்லால் அடித்து இரண்டு மாங்காய் விழுவதே அதிசயமாக இருந்ததே...நீங்கள் பார்த்தே பல மாங்காய்களை விழ வைக்கிறிர்களே..  
17 செப்டெம்ப்ர், 2010 10:45 am
 
பத்மநாபன் சொன்னது… 
கோடு கிடைத்தால் ரோடு போடும் வெங்கோப புலவரை பாராட்டி மகிழ்வோம்.. சில சமயம் வெங்கலபாத்திர கடையில் யானை புகுந்த மாதிரி ஆவதும் உண்டு... அது ஒரு புறம் இருக்கட்டும்...
 
மன்னா, புலவரின் இந்த கூற்றை மட்டும் ஏற்காதீர்...அவரின் உள் நோக்கம் புரிந்ததா... யானைக்கு ரிங்கா ரிங்கா ரோஸஸ் முதல் எல்லாம் கற்றுக் கொடுத்து மாலையை அவர் கழுத்தில் போட வைப்பாராம் ...அதுவரை தோட்டத்தில் நாம் பூப்பறித்து கொண்டு இருப்போமாம்... நல்லா இருக்குது கதை..
 
அரசே இந்த பாணரை மறக்க க்கூடாது...அந்தப்புரம் இந்தப்புரம் என்று மட்டுமில்லாமல் எல்லாபுறமும் மன்னரை மகிழ்வு குறையாமல் பார்த்துக் கொண்டோம் இதற்க்காகவே தனியாகவே ஒரு இலாக்காவை வைத்திருக்கிறோம்...அது மட்டுமா சோம,சுரா பானங்களோடு மன்னரை கீழிறங்கவிடாமல் மிதக்க வைத்துள்ளோம் ...இதற்க்கென்று சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளோம்.... இதற்குமேல் அரசவையின் புகழை பறை சாற்றாமல் தன்னடக்கத்தோடும் அவையடக்கத்தோடும் விட்டுவிடுகிறோம்....(தொடரும்)  
17 செப்டெம்ப்ர், 2010 8:17 am 
 


பத்மநாபன் சொன்னது… 
தானம்கொடுத்த யானையின் தந்தத்தையல்லவா தரம் பார்க்கிறார் புலவர் சங்கிலியை பதம் பார்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டு...
 
நூறுகிலோ சங்கிலியாம் மன்னிகளுக்கு...வாய்கூசாமல் சொல்கிறார் இந்த பொய்மொழிப்புலவர் ...எதோ தொன்னுத்தி ஒம்பத்தி சொச்சம் கிலோ எடையில் நான்கே நான்கு சேடிப்பெண்களை மட்டும் சங்கிலியை தாங்கி செல்ல அரசியாரோடு அனுப்பிவருகிறோம் நூறாம் நூறு.... சொர்ணம் பரிசு வேண்டும் என்று குறிப்பில் புலவர் உணர்த்துகிறார் மன்னா.... சொர்ணாக்காவை விட்டு வெளுத்தால் சரியாகிவிடும்.....
(பதிவிற்கு நல்லாவே மதம் பிடித்து விட்டது...வால்ப்பாறை கும்க்கி யானை வந்தால் தான் கட்டுப்படும் ) 
17 செப்டெம்ப்ர், 2010 8:21 am
 


RVS சொன்னது… 
 
மோகன்ஜி, பத்மநாபன் சார்... நல்ல சுதி ஏறுது..இப்ப பாருங்க கச்சேரியை... மோகன்ஜி உங்க ஜோக் அப்படியே தொங்கட்டும். இப்ப நா பூந்து கிழிக்கிறேன்.
 
சுரா, சோம பானங்கள் அரசருக்கு மட்டும் தானா.. எங்களுக்கும் நேற்று ரெண்டு வெண்கல அண்டா நிறைய கிடைத்தது. தேரடி வீதி தாண்டி சோமசுந்தரக் கடவுள் வீற்றிருக்கும் கோவில் அருகில் கீழ கோபுர வாசல் அருகே முகமூடி அணிந்த ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான். என் அடையாளங்களை கண்டுகொண்டு சமிஞ்ஞை செய்து அருகில் வரச்சொல்லி வயிறார ஊற்றினான். நாவார குடித்து இன்புற்றேன். பா.ப. நாபரே அவனிடம் என்னை கண்டுக்க சொன்னதற்கு நன்றி.
 
பிரதர், இரவு வேளைகளில் சரக்கு இல்லாமல் நான் திண்டாடக்கூடாது என்பதற்காக ரெண்டு அண்டா கொஞ்சம் ஓவர். (அந்தக் காலத்திலேயே தண்ணி அடித்தால் வாயில் பீட்டர் தானாக வருகிறது.) நான் குடிக்க கேட்டேன். குளிக்க அல்ல. பான(ண அல்ல) பத்மனாபரே நம் திட்டம் முப்போதும் முழு சுதியில் இருக்கும் இந்த மோகன மன்னனுக்கு விளங்கவேயில்லை. எனக்கு செவ்வாய் தோஷம் இருப்பதை கணித்து, அவளுக்கும் இருப்பது தெரிந்து என்னோடு கைகோர்ப்பதர்க்காக திட்டம் தீட்டியவரே நீர்தான். இதுபோல கல்யாண ஆலோசனை தருவதற்கு சன் டி.வி கல்யாண மாலை மோகனுக்கு கூட தெரியாது. இப்போது நன்றாக மன்னர் மன்னனை ஏற்றிவிட்டு நூறு கழுதைகள் வேறு சீதனமாக வாங்கி தருகிறீர்கள். உங்கள் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது. நான் எம்.என்.நம்பியாராம், நீங்கள் ஆர். எஸ். மனோகராம். இவர் என்ன எம்.ஜி.யாரா அல்லது சிவாஜியா. இவரோ ஒரு ஏ.வி.எம். ராஜன். ஆனால் இவர் பெண் தமன்னா எனும் தள தள தக்காளி மாதிரி இருக்கிறாள். ஓ.கே ஓ.கே... இதற்க்கு மேல் உங்களிடம் அந்த அழகோவியத்தை பற்றி பேசினால் அது ஆநாகரீகம். (இந்த சொல் வரப்போகும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளன் சுஜாதா எடுத்தாளப் போகும் சொல்). ஏனென்றால் மன்னன் சொன்னது போல் நீங்கள் சைடில் சிந்து பாடிய பைங்கிளி அவள். நானறிவேன் உங்கள் கள்ளத்தனத்தை.
 
அப்புறம் அந்த சொர்ணாக்கா மேட்டர். நேற்று அரசரிடம் என்னை தீர்த்துக்கட்ட என்று காரணம் சொல்லி அவளை இங்கு அனுப்பி வைத்தீர். அக்காவா அவள். அக்.க்.க்.க்கா. சொக்க வைக்கும் சொக்கி. அவளே ஒரு சொர்ணம். (ரொம்ப வழிஞ்சிட்டேனோ.) அவளோடு அந்த சொர்ண லோடும் வந்து சேர்ந்தது. ஒரு தேரின் அடியில் கஜானாவையே உங்களால் தான் அனுப்ப முடியும். அந்தத் தேர் என்ன வரும்காலத்தில் வரப்போகும் கே.பி.என் போன்ற வால்வோ பஸ்களுக்கு ஒரு முன்மாதிரி போன்று உள்ளதே. நீங்கள் சொன்னாற்போல் நகைக் கடை கானா.மூனா.சேனா.பானா செட்டியாரிடம் அனைத்தையும் சேர்த்துவிட்டேன். கல்யாணம் முடித்து அந்த மன்னனை சிறையில் அடைத்து நான் அரசுக்கட்டிலில் அமரும் நாளில் திரும்ப தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். எல்லாம் உங்கள் திட்டம் போன்றே நடக்கிறது.
 
நாளை மலர் மஞ்சத்தில் தூங்கப்போகும் நான் இன்று இந்த யானையின் நான்கு கால்களுக்கு நடுவில் தூங்குகிறேன். அது பிஸ் அடிக்கும் போது மூஞ்சியில் தெளிக்கும் அந்த தீர்த்தம் நாளை ராஜ சிம்மாசனத்தில் அமரப் போகும் போது பன்னீர் தெளிப்பது போல் உள்ளது. சரி. சரி... தேவயானை இந்த யானையை பார்க்க வருகிறது மற்றவை அடுத்த மடலில்...
 
அன்புடன் வெங்கோபப் புலவர் பாத்திரத்தில், அண்டாவில், குடத்தில்,சட்டியில் ஆர்.வி.எஸ்.
 
அப்பாடி!! பாண பத்மனாபரை என்னோடு சேர்த்தாயிற்று. இனிமேல் அந்த மோகனமன்னன் கதி அதோ கதிதான். அப்படி போடு அருவாளை.. சீ.சீ உடை வாளை.  
17 செப்டெம்ப்ர், 2010 10:21 am
 


மோகன்ஜி சொன்னது… 
ஆஹா! வெட்கம்.. வேதனை.. பாராளும் மன்னனை துப்பரவாக உருவிவிட்டார்களே!புலவரென வந்த நம்பியாரும், பக்கத்திலே இருந்த பா.பா எனும் ஆர் .எஸ்.மனோஹரும் சதி செய்து விட்டார்களே. ஒரு கலயம் சோமபானம் கூட மிச்சம் வைக்காமல் காய விட்டு விட்டார்களே.டாஸ்மாக்குக்கு கூட இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரைக் காத்திருக்க வேண்டுமே. டிக்கி வச்ச தேராமே? சப்ஜாடா பட்டியல் போட்டு பத்திகிட்டில்ல போய்ட்டாங்க. அதெல்லாம் கூட பரவாயில்லை.. புசுபுசுன்னு மீசைய வச்சுகிட்டு,"தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்"ன்னு நெஞ்சு நிமிர்த்தி நான் பாடியபோது,இவங்க ரெண்டுபேரும் 'அரசே! நீங்க வேற சிவாஜி வேற இல்லே'ன்னு உசுப்பேத்தி விட்டார்களே! போற போக்குல இப்போ ஏ.வீ.எம்.ராஜன் நீன்னு சொல்லிட்டாங்களே! மகமாயி !!கன்னமெல்லாம் கோபத்துல உப்புதே.. கழுதை எல்லாம் கூட கொடுத்து விட்டேனே. ஆ!சாய்ந்தது என் வெண் கொற்றக் குடை! தகர்ந்தது முரசம்! யாருப்பா அங்க ஸ்க்ரீன போடுய்யா! வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் வசனம் பேசிக்கிட்டிருக்கேன்.
 
சரி ! இப்போ ஸ்க்ரீனை இழுங்க!
 
"ஆடுவார் ஆட்டமும் பாடுவார் பாட்டுமாய் அன்னியர் களித்திருக்க, யாரது மண்ணிலே யாரது நாடகம்...." ஓ! வசனம் வேணாமா? விசனமா நிக்கணுமா? சரி டைரக்டர்! நேத்துல இருந்து அப்பிடி தானே இருக்கேன்.
 
பாணபத்மநாபரே! எங்கய்யா என் பொடி டப்பா? எல்லாம் எடுத்துகிட்டு போனீங்களே! சிம்மாசனத்துல அங்குசத்தை விட்டுட்டாய்யா போவீங்க? முதல் லைன்ல 'வெட்கம்'னு கோபமான வசனத்தோட சிம்மாசனத்துல தொப்புன்னு உட்கார்ந்தேன். அப்பா ஆர்.வீ.எஸ்."இப்போ நான் கிழிக்கிறேன்"ன்னு சொன்னது இதைத்தானா? ம் ..ம்..முடியல. 
 
எனக்கு எல்லாம் வெறுத்து போச்சு.சாமியாரா போகப் போறேன் .. தமிழ் நாடு வேணாம் பெங்களூர் பக்கமா செட்டிலாயிடப் போறேன்.கதவ திறங்கப்பா.புழுக்கமா இருக்கு!  
17 செப்டெம்ப்ர், 2010 12:10 pm
 
 


RVS சொன்னது… 
 
பான பத்மனாபரே! திட்டம் பலித்தது. அவர் எனக்கு பெண் தர வேண்டும் என்று நடுவில் பூந்து விளையாடுகிறீர்களே. மோகனமன்னனை ஆதரிப்பது போல் நடித்து என் பக்கம் நாட்டை திருப்புகிரீர். என்ன ஒரு மதி. அருமை. மன்னனாக இருந்தால் தலை மேல் மணிமுடி இருக்கலாமே தவிர அதைத் தவிர பாரமாக மூளை இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார் நமது பாசத்திற்குரிய மன்னர் மன்னர். அது சரி... நீங்கள் அனுப்பிய புறாத் தூது வந்தது. அட. அது என்ன நீங்கள் எதை செய்தாலும் வித்யாசமாகவே உள்ளது. புறா வரும் என்று ஆவலில் இருந்தபோது, கிளி போன்ற உங்கள் பக்கத்து வீட்டு "பருவக்கிளி ", "கன்னடத்து பைங்கிளி" சரோஜாவிடம் கொடுத்து விட்டீர்கள். அவள் ஆடி ஆடி நடந்து வரும் பொது நான் ஆ.ஆஆ...........டி விட்டேன். தேவயானை வேறு கண்கள் படபடக்க பார்க்கிறாள். சொர்ணாக்கா, சரோஜா என்று மன்மத பாணங்களாக அனுப்புகிறீர்கள். நல்ல சேட்டை. எங்கிருந்தோ ஒரு பாடத்தெரிந்த பாடகன் வேறு "மன்மதன் கோயில் மணி ஒலி கேட்டது...." என்று ராகம் பிடிக்கிறான். ரோடோரத்தில் இருக்கும் எனக்கே இவ்வளவு தாக்குதல் என்றால் ஒரு அரசன் இது போல் நிறைய படையெடுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சரி. சரி.. என்னை மன்னனாக உயர்த்துவதற்கு நீங்கள் அளிக்கும் பயிற்சி இது என்று நான் எண்ணிக்கொள்கிறேன். நன்றி. 
 


RVS சொன்னது… 
 
போன கமெண்ட்டின் தொடர்ச்சி..
 
மடலில் இருந்து விபரம் அறிந்தேன். மோகனமன்னன் வானப்ரஸ்தம் அல்லது சந்நியாசம் வாங்கப் போகிற விஷயம் மன மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறது. வானப் பிரஸ்தத்திலாவது அவர் நிம்மதியாக இருக்கட்டும். அவர் போன பின்னே நிறைய கடனோலை வரும் என்று அந்த தர்பாரில் சொன்னீர்களே.. அது கதை தானே... உண்மை என்றால் இப்போதாவது சொல்லுங்கள். என்னிடம் ஒரு அருமையான யோசனை உள்ளது. என்னவென்றால், நாட்டை வடக்கு தெற்காக இரண்டாக பிரித்துவிடுவோம். வடப் பக்கம் நீங்கள், இடப் பக்கம் நான். யாராவது உங்களிடம் வந்து மோகனன் வைத்த கடனை கேட்டால், அப்போ இருந்தது மோகனபுரி என்னும் ஒரே நாடு. இப்போது அந்த நாடு அன்னியர் படையெடுப்பில் அழிந்துவிட்டது. நான் பா.பா, இது பானபுரி. சரக்கிற்கு பஞ்சம் இல்லாத தேசம். தென் திசையில் இருப்பது வெண்புரி. இன்னபிற லாஹரி வஸ்த்துக்களுக்கு பெயர் பெற்ற தேசம். தங்கத்தையும், கஜானாவையும் தவிர உனக்கு என்ன விடுமோ எடுத்துக்கொள். இந்த மாதிரி வச்த்துக்களால் இவ்வையகமே உனக்கு சொர்க்கபுரியாக மாறிவிடும் என்று அவனை மந்திரித்து மயக்கிவிடலாம்
 
வந்துவிட்டாள் என் வருங்கால பாரியாள். இப்போதே தொந்தரவாக இருக்கிறது. அடிக்கடி வந்து யாருக்கு மடல் வருகிறீர்கள் என்று கேட்கிறாள். ராணி ஆன பின் அவளுக்கும் தெரியும் தொடுப்பு என்பது ராஜாக்களின் உடுப்பு மாதிரி என்று.
 
வானப் பிரஸ்த்தம் சென்ற மோகனமன்னனிடம் ஒரு கண் இருக்கட்டும். பொல்லாத மன்னவன் அவர். கூட ஒன்றிரண்டு பட்டத்து ராணிகளை அழைத்து சென்று அந்தப்புரத்தை காலி செய்துவிடுவார். பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நம்முடைய தனி அந்தப்புரம் அமைக்கும் வரையில் போரடிக்கும்.
 
அந்தப்புர ஆசை நாயகன் ஆகும் ஆசையில் ராஜா ஆகப் போகும் வெங்கோபப் புலவரான பாத்திரப் படைப்பில் ஆர்.வி.எஸ்.
 
சந்நியாசம் என்று சொன்னால் விடுவோமோ மோகனமன்னா.... பத்மனாபரே வாரும்... வந்து கலாயும் .... 
17 செப்டெம்ப்ர், 2010 6:11 pm
 
இரண்டாவது பாகம் முற்றிற்று.  
 
பான பத்மனாபருக்கு அரபு நாட்டில் ஆணி பிடுங்கும்.. ஸாரி... ஆணியால் ஆவணம் எழுதும் வேலை அதிகமாகவும் அவசரமாகவும் இருப்பதால்... இந்த இரண்டாவது பாகம் இதோடு முற்றிற்று. நிறைய கடைசி நேர காட்சி மாற்றங்களுடன் மூன்றாவது பாகம் நிச்சயம் உண்டு. படிப்பவர்கள் தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவும்!.  ஈஸ்வரோ ரக்ஷிது.

பட உதவி: infobarrel.com

16 comments:

பத்மநாபன் said...

சும்மா கலாய்க்க ஆரம்பிச்சது ...இவ்வளவு அட்டகாசமாக யானை ஊர்வலம் போய்ட்டே இருக்குது.... ஒட்டகம் மேச்சுட்டு இருந்த இந்த பாலைவனக்காரனையே, யானைக்கு அங்குசம் மாதிரி அன்பாலும் நகைச்சுவையாலும் கட்டிப்போட்டு அழைத்து ச்செல்லும் இருவருக்கும் யானையளவு நன்றி

Aathira mullai said...

ஒன்று புரியவில்லயே!!!!!!!!! இந்த யானைகளின் கும்மாளம் இப்படியே போய்க்கொண்டிருந்தால்.... நாங்கள் பின்னூட்டம் இட நுழையும் போது மதம் பிடித்த இந்த யானைகள் என்ன செய்யுமோ என்று அஞ்சி அஞ்சி...நுழைந்தேன்... அஞ்சியபடியே நடந்து விட்டது.........

RVS said...

ஆதிரா... யானையிடம் சிக்கிக்கொள்ளாமல் தப்பியதற்கு வாழ்த்துக்கள்

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

அரேபிய ஆசிரம வாசி பத்மநாபனை வானவில்லில் சந்திக்கிறேன்... ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி said...

கஜோஹம்! கஜோஹம் !! அப்பனே வேங்கோபா .. யானை மேல நம்ம மூணு பெரும் ஏறி உட்காரும் போது ஏதோ மாட வீதில மட்டும் ஒரு ரவுண்டு வரும்னு நெனைச்சா அது நாடு தேசமெல்லாம் திரியுதே. பாவம், ஆதிரா கூட இந்த அம்ர்களத்தைப் பற்றி அஞ்சி நடுங்கியிருக்காங்களே . பத்மநாபனை பார்த்தா பாவமா இருக்கு. ஒட்டகம் முதுகுல திமில் பிடிமானமா இருந்தா மாதிரி,யானை சவாரி இல்லையேன்னு திமிரிகிட்டே இருக்காரே என்ன செய்யலாம்? யானை முதுகு மேலேயே போர்ட் மீட்டிங் கூட்டிடலாமா?அஜெண்டா தயார் பண்ணும்...

RVS said...

அம்பாரி மேல அம்பானி மாதிரி மீட்டிங் வச்சுக்கலாம் மோகன்ஜி... கமெண்டு களை கட்டுது.. பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகுதுன்னு...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

பதிவுக்கு 'காமெண்டு' -- சரி..
'காமெண்டே' ஒரு பதிவா ?

--Creative thinking(idea to post this)

RVS said...

கமெண்டு போடறதே பதிவு மாதிரி ஆனதால... கமெண்டே பதிவாக இங்கே மாதவா...... ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி said...

'அம்பாரி மேல அம்பானி'. டைட்டில பதிவு பண்ணுங்க
பாஸ்.. என் பதிவில் யானைத்துரைக்கு வரவும். இன்னும் கொஞ்சம் வடம் புடிக்கலாமா?

சாய்ராம் கோபாலன் said...

அடாடா.

யானையோ, மனஷனோ. நம்மாளு விவரமப்பா. மோகன்ஜி போட்டோவில் இரண்டாய் இருந்த யானை ஆர்.வி.எஸ். போட்டோவில் குடும்பம் சேர்த்துவிட்டதே ? பலே பலே.

RVS said...

மூணு யானையை விவரமா கண்டுபிடித்த சாய்க்கு ஒரு "ஓ" போடுங்கப்பா... ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

பார்த்தேன்... ரசித்தேன்.. ஓ.கே.ன்னேன்.. மோகன்ஜி

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

Thank You தியாவின் பேனா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

பாத்திரக்கடையில என்ன இப்படி ஒரே சத்தம்?

அப்பாதுரை said...

ஆளாளுக்கு ஆனையப் போட்டு சாத்துறீங்க... எனக்கு ஒரு சோக்கு ஞாபகம் வருது. சோக்குனு முதல்லயே சொல்லிட்டேன்; அதனால சிரிச்சுடுங்க.

ஒரு சமயம் காட்டுல மிருகங்க தொகை எக்கச்சக்கமா ஆயிடவே, மிருகத் தலைங்க எல்லாம் சேந்து ஒரு குடும்பக்கட்டுப்பாட்டு திட்டம் கொணாந்தாங்களாம். 'ஆண் மிருகங்கள்ளாம் தங்களோட கருவிங்களைக் கழட்டிக் கொடுத்துடணும், சீசன் தொடங்கினதும் ஒரே ஒரு தடவை கருவியை வாங்கிட்டு விசயத்தைக் கவனிக்கலாம்; கவனிச்சதும் திரும்பக் கருவியைக் கொணாந்துறனும் அடுத்த சீசன் வரைக்கும் கருவி கிடையாது' அப்படீன்னு திட்டம். எல்லா மிருகங்களும் ஒத்துக்கிட்டு அவங்கவங்க கருவிங்களைக் கழட்டிக் கொடுத்துட்டு டோக்கன் வாங்கிக்கிட்டுப் போச்சாம்.

பொம்பள மிருகங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம். ஆம்பிள மிருகங்களைப் பாத்து கிண்டலும் நக்கலும் அடிச்சுதாம். குரங்கு ஆத்தா கொஞ்சம் எக்ஸ்ட்ரா நக்கல். குரங்கு ஐயா கிட்டே சும்மாவானும் வம்புக்குப் போவுமாம். "இன்னா செய்வே நீ? ஐயே.. உனுக்கு தான் ஒண்ணையுங் காணோமே நைனா... இந்தா நல்லா பாத்துக்க, எப்டிகுது கண்டுக்க.." அப்படீனு சீண்டிக்கிட்டே இருக்குமாம்.

குரங்கு ஐயா, "நேரம்டி நேரம்.. இரு..இரு, சீசன் வரட்டும் உன்னை கவனிச்சுக்குறேன்... கதற அடிக்குறேன் பாரு" அப்படீனு பொருமிச்சாம்.

"தோடா.. அப்படி இன்னா கதறடிப்பே? உன்த எத்தினி தபா பாத்துகிறேன்? சீசன்லயும் ஒரு தபா தானே? இன்னாத்த கிய்க்கப் போற? சொம்மா உதார் உடாத நைனா... இந்தா இன்னொரு தபா கண்டுக்க"னு காட்டிக்கிட்டே இன்னும் திமிரா பேசுமாம் குரங்காத்தா.

குரங்கய்யா பொறுமையா இருந்தாராம். "மப்புடி.. வக்கிறேண்டி ஆப்பு.. எப்படிக் கிய்க்கிறன் பாரு.. கைல இன்னா டோக்கன் கீது பார்"னு டகால்னு யானை டோக்கனை எடுத்துக் காட்டுனாராம். ஏன்னா அவரு சுகுரா கருவியைக் கழட்டிக் கொடுத்து டோக்கன் வாங்குறப்ப யானை டோக்கனைத் திருடிக்கிட்டு வந்துட்டாராம்.

RVS said...

"கருவி" ஜோக் சூப்பர் அப்பா சார். காட்டுல கழுதைக்கு அட்வைஸ் பண்ணின மைனா பத்திக் கூட இது மாதிரி ஒரு சோக்கு இருக்கு..... பின்னூட்டமா போடலாமா.. யாருப்பா அது... வெஜ் நான்வெஜ்ஜுன்னு குரல் வுடறது..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails